சிறப்பு கட்டுரை

விளக்கு பூஜை கோவை

கோவை ஸ்ரீவேணுகோபால கிருஷ்ண ஸ்வாமி திருக்கோயிலில், 24.9.10 அன்று, சக்தி விகடனும் நயஹாவும் இணைந்து வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சக்தி விகடன் நடத்தும் 44-வது திருவிளக்கு பூஜை இது!

''என் மகனோட கல்யாணம் சீரும் சிறப்புமா நடக்கணும்னு வேண்டிக்கிட்டேன். அதன்படியே நல்லபடியா கல்யாணம் முடிஞ்சுது. அதுக்குக் கடவுளுக்கு நன்றி சொல்லணும், இல்லியா?! இது நான் கலந்துக்கற 4-வது விளக்கு பூஜை. சக்தி விகடன் நடத்தற விளக்கு பூஜைல கலந்துக்கிட்டு, வழிபடுறதுதான் நன்றி சொல்ற வழி!'' - செல்வபுரம் வாசகி கமலா, நிறைந்த மனதுடன் தெரிவித்தார்.

வேடம்பட்டி வாசகி பரிமளாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ''இரண்டாவது முறையா கலந்துக்கறேன். முதல் முறை கலந்துக்கிட்டு, வீட்டுக்குப் போன அடுத்தடுத்த நாட்கள்ல நடந்தது எல்லாமே நல்ல விஷயங்கள். இந்த முறை அறிவிப்பைப் பார்த்ததுமே, என் தோழிகளுக்கும் போன் போட்டுச் சொல்லிட் டேன். இப்ப நான், 15 தோழிகளோட வந்திருக்கேன். எல்லாரும் நல்லாருக்கணும். அதான்...'' என்றார் குதூகலமாக!

ஸ்ரீரங்கம் வாசகி சந்திரா பூரிப்பில் இருந்தார் ''ஸ்ரீரங்கநாதர் திருவடியில் வாழறவ நான். சக்தி விகடன் நடத்தற பூஜைல கலந்துக்கணும்னு ஆசை! இந்த முறை, அந்த வேணுகோபால ஸ்வாமியே என்னை இங்கே வரவழைச்சுட்டார். பசங்களுக்குக் கல்யாணம் நடந்து, பேரன்- பேத்திகளைக் கொஞ்சணும். அதான் என் ஆசை'' என்றார் சந்திரா.

''ஒவ்வொரு முறை சக்தி விகடனையும் அதுல வர்ற விளக்கு பூஜை அறிவிப்பையும் படிக்கறப்ப, நாமளும் கலந்துக்கணுமேனு ஏக்கமா இருக்கும். அது ஏனோ தட்டிப் போய்க்கிட்டே இருந்துச்சு. ஸ்ரீகிருஷ்ணரோட அருளால, இந்த முறை நிறைவேறிடுச்சு!'' என்று கண்கள் மின்னச் சொல்கிறார், பெங்களூரு வாசகி ஜெயலட்சுமி. கணவரின் தொழில் சிறக்க, 4-வது முறையாகக் கலந்துகொள்கிறாராம் திருப்பூர் வாசகி புவனா. தெப்பக்குளம் வாசகி வேதா விஜயராகவன்,

''வி.ஏ.ஓ. எக்ஸாம்ல முதல் வகுப்புல பாஸாகணும்'' என்றார். பிரார்த்தனை நிறைவேறியதன் அடையாளமாக, கோவை வாசகி நிரஞ்சனி மஞ்சள், குங்குமம், சரடு ஆகியவற்றை வாசகியருக்கு வழங்கினார்.

பவானி வாசகி மகாலட்சுமி, ''இது நான் கலந்துக்கற 18-வது விளக்கு பூஜை. கடவுளோட அனுக்கிரகம் என் குழந்தைகளுக்குப் பரிபூரணமா கிடைக்கணும். எல்லாரும் நல்லாருக்கணும்'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார். அவருடைய மகன் ஸ்ரீநிவாசன், பூஜைக்கான சின்னச் சின்ன உதவிகளைச் செய்தது அவர்களுக்கு கூடுதல் சந்தோஷமாம்! இதே போல், சேவையில் ஈடுபட்டவர்கள் ஏராளம். 'சிறு துளி பெருவெள்ளம்' என்று சும்மாவா சொன்னார்கள்!

- ம. பிருந்தா, படங்கள் வெ. பாலாஜி