ஸ்தல வழிபாடு

ஆலயம் தேடுவோம்!

காடுகளையும் மலைகளையும் கடந்து, வனங்களையும் மக்களின் வசிப்பிடங்களையும் தாண்டி, தேசமெங்கும் சுற்றிவந்தார் வியாக்ரபாத முனிவர். மரத்தில் ஏறி வில்வ இலைகளைப் பறிப்பதற்கு வசதியாக, தனது கால்களைப் புலியின் கால்களாக்குங்கள் என்று வரம் கேட்டு, அதன்படியே மனித உருவுடனும் புலியின் கால்களுடனும் திகழ்ந்ததால், வியாக்ரபாதர் என்ற பெயர் அமைந்தது அவருக்கு.

வனப்பகுதி ஒன்றுக்கு வந்த வியாக்ரபாதர், சுற்றிலும் வில்வமரங்கள் சூழ்ந்திருந்ததைக் கண்டு, சிலிர்த்தார். 'இதுவே தவம் செய்ய உகந்த இடம்; யுகத்தின் முடிவில் ஊழிக்காலம் வரும் தருணத்தில், அத்தனை உயிர்களையும் சிவனார் தன்னுள் ஒடுக்கிக்கொண்டு, பிறிதொரு நேரத்தில் மீண்டும் பிறக்கச் செய்யும் அற்புதமான தலம் இதுவே' என்பதை உணர்ந்தார்.

கருணாமூர்த்தியின் கருணை நிலவும் இந்தப் புண்ணிய பூமியில் தங்கி தவமிருப்பது எனத் தீர்மானித்தார், வியாக்ரபாதர். எல்லையில்லாப் பேரானந்தத்தில் திளைத்த மனத்துடன், அந்த வனம் முழுக்கச் சுற்றி வந்தார். மரங்களில் ஏறி, வில்வத்தைப் பறித்து வந்து, குளிரக் குளிர லிங்கத்துக்கு அர்ச்சனை செய்து, இறை நினைப்பிலேயே கரைந்தார். 'இதுவே ஊழிக்காலம்; என்னை, இந்தச் சிறியவனை உனக்குள் ஒடுக்கிக் கொள்; எந்தச் சிந்தனைகளுமற்று, என்னைப் பள்ளிகொள்ளச் செய்' எனப் பிரார்த்தித்தார். அதில் மகிழ்ந்த சிவனார், முனிவருக்குத் திருக் காட்சி தந்தார்; நெக்குருகிப் போன வியாக்ரபாதரை ஆட்கொண்டு அருளினார்.

வியாக்ரபாத முனிவர் வழிபட்ட பல தலங்கள், பின்னாளில் 'புலியூர்' என அழைக்கப்பட்டன. 'புலியூர்' என அழைக்கப்படும் ஊர்களில், வியாக்ரபாத முனிவர் வழிபட்ட இறைத் திருமேனி இருக்கும் என்பர். அந்தச் சிவலிங்கத்தை பிறிதொரு காலத்தில் அறிந்து வியந்த மன்னர்கள், அழகிய ஆலயம் அமைத்து, சிவனாரை வழிபட்டனர். அப்படி அவர்கள் எழுப்பிய எண்ணற்ற கோயில்கள், இன்றைக்கும் நம் தேசத்தில் பல ஊர்களில் உள்ளன.

வியாக்ரபாதர் தவம் செய்வதற்காகத் தங்கிய ஊர் புலியூர் என்றானது. ஊழிக்காலத்தில் அனைத்து உயிர்களையும் தன்னுள் ஒடுக்கிக்கொண்டு பள்ளிகொள்ளச் செய்து, பிறகு மீண்டும் அந்த உயிர்கள் அனைத்தையும் கருணையுடன் பிறக்கச் செய்தார் அல்லவா, சிவபெருமான்..! இதனால், அந்த ஊருக்குப் பள்ளிக்கருணை எனும் திருநாமம் அமைந்தது. பிறகு, காலப்போக்கில் அது மருவி, பள்ளிக்கரணை என்றாகிவிட்டது.

மன்னர்கள் காலத்தில், இந்தப் பகுதி சோழ தேசத்தின் ஆளுகையின் கீழ் இருந்தது. அப்போது, புலியூர் கோட்டம் எனப் பிரிக்கப்பட்டு, சுரது நாடு எனும் பெயரில் மிகப் பெரிய ஊராகத் திகழ்ந்தது. செழுமையும் வளமையும் கொண்ட இந்தப் பகுதி, ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

சோழ மன்னன் ஒருவன், ஜெயங்கொண்டத்து சோழ மண்டலத்துக்கு வந்தபோது, ஊரின் அழகில் சொக்கிப் போனான். 'இந்த மண்டலம் இத்தனைச் செழிப்புடன் திகழ்கிறதே?!' என வியந்தான். வியாக்ரபாத முனிவர் அங்கே வந்து சிவனை வழிபட்டு அருள் பெற்றதையும் இன்னபிற தகவல்களையும் அந்த ஊர் மக்கள், மன்னனுக்குத் தெரிவிக்க, அவற்றைக் கேட்டுச் சிலிர்த்த மன்னன், ''இத்தனைப் பெருமைகள் ஒருங்கே அமையப் பெற்றுள்ள இந்த ஊரில், அழகிய ஆலயம் ஒன்றை நிர்மாணிக்கிறேன்; அதனால் இந்த மண்டலம், இன்னும் சீரும் சிறப்புமாகச் செழிக்கட்டும்'' என்று சொல்லி, அங்கே அழகிய சிவாலயத்தை அமைத்தான்.

ஸ்வாமிக்கு அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு அருள்மிகு சாந்தநாயகி என்றும் திருநாமம் சூட்டியதாகத் தெரிவிக்கிற கல்வெட்டுகளைக் காண முடிகிறது.

பள்ளிக்கரணை என்ற அந்த ஊர், சென்னை- வேளச்சேரிக்கு அருகில் (தாம்பரம்- வேளச்சேரி சாலையில்) அமைந்துள்ளது. இங்கே குடிகொண்டிருக்கும் ஸ்ரீஆதிபுரீஸ்வரரின் ஆலயம், பல காலங்களாக வழிபாடுகளும் விழாக்களும் இன்றிக் களையிழந்து காட்சி தருகிறது.

''கோயிலுக்குக் கும்பாபிஷேகம் எப்ப நடந்துச்சுன்னே தெரியலை.

ரொம்ப வருஷமா சிதிலம் அடைஞ்ச நிலையில, மதில் முழுசும் பொலபொலன்னு விழுந்து, வழிபாடே இல்லாம இருக்குது. இந்தக் கோயிலுக்கு நல்ல வழி கிடைச்சா, அது இந்த ஊருக்குக் கிடைச்ச மாதிரி'' என்று வேதனைப் பொங்கத் தெரிவிக்கின்றனர் ஊர்மக்கள்.

கோபுரம், மதில் என எதுவு மின்றி, நந்தி, பலிபீடம் ஆகியன வும் இல்லாமல் பரிதாபமாகக் காட்சி தந்த ஆலயத்தைக் கண்டு வருந்திய ஊர்மக்களே ஒன்று சேர்ந்து, 'அருள்மிகு சாந்தநாயகி அறக்கட்டளை' எனும் கமிட்டியை உருவாக்கி, கோயிலுக்குப் பாலாலயம் செய்து, கடந்த 12 வருடங்களாகத் திருப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

''அற்புதமான ஆலயம் இது.

கருவறை மண்டப விதானத்தில், கண்ணப்ப நாயனார் சிவலிங்கத் துக்குக் கண் வழங்கும் காட்சி, சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிவலிங்கத்தை மயில் ஒன்று பூஜிப்பது போலவும், நாகம் ஒன்று வணங்கி வழிபடு வது போலவும் சிற்பங்கள் உள்ளன. ஆதிபுரீஸ்வரரின் பெருங்கருணையாலும், அவருடைய அடியவர்களின் உதவியாலும் கோயில் திருப்பணிகள் முக்கால்வாசி நடைபெற்றுவிட்டன. போதிய நிதிப் பற்றாக்குறையால், இப்போது திருப்பணிகள் மந்தமாகிவிட்டன'' எனக் கவலையுடன் தெரிவித்தார், அறக் கட்டளையின் தலைவர் முருகேசன்.

ஒருகாலத்தில், ராகு- கேது தோஷங் களுக்குப் பரிகாரத் தலமாகத் திகழ்ந்த ஆலயமாம் இது. இன்றைக்குச் சந்தோஷங்களையும் குதூகலங் களையும் தொலைத்து, பரிதாபமாகக் காட்சி தருகிறது திருக்கோயில்.

கிழக்கு பார்த்தபடி ஸ்ரீஆதிபுரீஸ்வரரும் ஸ்ரீசாந்த நாயகியும் ஒரே கருவறையில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர். இங்கு, ஸ்ரீவிநாயகரையும் ஸ்ரீஆஞ்சநேயரையும் ஒரே இடத்தில் நின்றபடி தரிசிக்கலாம். இந்தத் தலத்துக்கு வந்து, இறைவனையும் இறைவியையும் வணங்கி வழிபட்டால், திருமண தோஷங்கள் யாவும் நீங்கும்; விரைவில் கல்யாண வரம் கிடைக்கும்; ஸ்ரீவிநாயகரையும் ஸ்ரீஆஞ்சநேயரையும் வழிபட்டால், சனி தோஷம் விலகும் என்பது ஐதீகம்!

ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்கை, ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீசரஸ்வதிதேவி, ஸ்ரீமகா லட்சுமி ஆகியோருக்கான சந்நிதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தவிர, அறுபத்து மூவருக்கும் கல் விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்வதற்குத் தயார் நிலையில் உள்ளன.

ஆலயத்தின் விருட்சம்- வில்வம். அத்துடன் செண்பக மரம், வேம்பு, அரச மரம், மகிழ மரம், வன்னி மரம் ஆகியனவும் உள்ளன.

கருணாமூர்த்தியாக ஸ்ரீஆதிபுரீஸ்வரரும் அன்பும் அரவணைப்பும் கொண்டவளாக ஸ்ரீசாந்தநாயகியும் அருள்பாலிக்கும் அற்புதமான இந்தத் தலம், கும்பாபி ஷேகம் காண வேண்டாமா? கோலாகலமாக விழாக்கள் நடைபெறவேண்டாமா? வழிபாடுகள் நடைபெற்றால்தானே, வணங்குவதற்கு மக்கள் வருவார்கள்! பரமனின் அருளைப் பெற்று, நிம்மதியுடன் வாழ்வார்கள்?!

ஆதிபுரீஸ்வரரின் ஆலயத்தை அழகுபடுத்துவது நம் கைகளில்தான் உள்ளது. ஸ்ரீசாந்தநாயகி குடிகொண்டிருக்கும் கோயிலில், சகல விழாக்களும் விமரிசையாக நடைபெறுவதற்கு, ஏதேனும் ஒருவகையில் நாமும் காரணமாக இருக்க வேண்டாமா?!

கருணை எங்கே உள்ளதோ, அங்கே இறைவன் குடிகொண்டி ருப்பார் என்கின்றன வேதங்கள். நம் மனத்துள் கருணை இருந்தால், அந்தக் கருணையே நம்மைத் திருப்பணி செய்யத் தூண்டும்; அப்போது, நமக்குள்ளே குடிகொண்டு, அருளும் பொருளையும் அள்ளித் தருவார், ஆதிபுரீஸ்வரர்!

- படங்கள் ச.இரா. ஸ்ரீதர்