ஸ்தல வழிபாடு

'பொன் கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது' என்பார்கள். பொன்னுக்கும் பொருளுக்கும் அதிபதியான குபேரனை, அவருக்குரிய புதன்கிழமை அன்றோ, மற்ற விசேஷ நாளிலோ வணங்கி வழிபட்டால், பொன்னும் பொருளும் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்!

உலகின் பணக்காரக் கடவுள் என வர்ணிக்கப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்து உதவியவர் குபேரன். இந்தக் கடனை அடைப்பதற்காக, இன்றளவும் பெருமாள் படியளந்துகொண்டிருக்கிறார் என்கிறது புராணம். 'குபேரன்' என்கிற திருநாமத்தை உச்சரித்தாலே, நமக்குச் செல்வங்கள் சேரும் என்பது முன்னோர் வாக்கு.

தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் ஸ்ரீகாளத்தீஸ்வரர் கோயில், தேனி மாவட்டத்தில், தேனியில் இருந்து கம்பம் செல்லும் வழியில், சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தம பாளையம் என்னும் ஊரில் உள்ளது. புராதனமான இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டால், ராகு-கேது கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இதையட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும், சனி- ஞாயிறுகளில், மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை கிரக நிவர்த்தி பூஜைகளும் இங்கே நடைபெறுகின்றன.

தோஷம் நீங்கினால், தொடர்வது சந்தோஷமான வாழ்க்கைதானே?! ஆகவே, வாழ்வதற்கான பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுக்கும் குபேரனும், இந்த ஆலயத்தில் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார்! குபேரனுடன் ஸ்ரீலட்சுமி தேவியும் காட்சி தந்தருள்கிறார்.

புதன்கிழமைதோறும் (வெள்ளிக்கிழமை யிலும்கூட) குபேரனைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், வீட்டில் செல்வ கடாட்சம் சேரும்; சகல ஐஸ்வரியங்களுடன் வாழலாம் என்கின்றனர், பக்தர்கள். அட்சய திருதியை நாளில், குபேரனின் திருவடியில், பொன் அல்லது ஒரு ரூபாய் நாணயம் வைத்து, நெய் தீபமேற்றி வழிபட்டு வணங்கினால், ஆயுள் முழுவதும் காசுக்குப் பஞ்சமின்றி, சந்தோஷத்துடன் வாழலாம் என்கின்றனர் தேனி மாவட்டத்து மக்கள்.

இங்கே, ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீகாளத்தி நாதர்; அம்பாள் - ஸ்ரீஞானாம்பிகை. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்கை, வாஸ்து பகவான் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

இதோ... வரக்கூடிய தீபாவளித் திருநாள், வெள்ளிக்கிழமை அன்று (நவம்பர் 5-ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ஸ்ரீகுபேரனுக்கும் ஸ்ரீலட்சுமிதேவிக்கும் நெய் தீபமேற்றி, ஒரு ரூபாய் நாணயத்தைக் குபேரனின் திருவடியில் வைத்து, மனதார வழிபடுங்கள்; இயன்றவர்கள், குபேரனுக்கு வஸ்திரம் சார்த்தியும் வழிபடலாம்!

'எவ்ளோ சம்பாதிச்சாலும், கையில எதுவும் தங்கவே மாட்டேங்குது; நாலு காசு சேர்க்க முடியலை; சின்னதா ஒரு வீடு வாங்க முடியலை' என்று அலுத்துக்கொள்ளும் அன்பர்கள், குபேர வழிபாடு செய்யுங்கள்; குபேர- லட்சுமியை வணங்குங்கள். உங்கள் மனக்குறை தீர்ந்து, செல்வச் செழிப்புடன் வாழ்வீர்கள்; லட்சுமி கடாட்சத்துடன் திகழ்வீர்கள்!

- தி. முத்துராஜ், படங்கள் இரா. முத்துநாகு