ஸ்தல வழிபாடு

பலம் தரும் பரிகாரத் தலங்கள்!

ஊர் என்றிருந்தால் மக்களும், மக்களைக் காப்பதற்குக் கோயிலும், கோயிலில் அருள்பாலிக்கும் ஆண்டவனும் இருக்கவேண்டும். அந்த ஊரில், வைணவப்பெருமக்கள் அதிகம் வாழ்ந்து வந்தனர். அவர்களையும் ஊரையும் செழிக்கச் செய்வதற்கு, பெருமாளும் கோயில் கொண்டிருந்தார். ஆனாலும், ஊரை வலம் வந்து காப்பதற்கு, கிராமத்தின் அத்தனை தெருக்களிலும் வீதியுலா வருவதற்கு, உற்ஸவ மூர்த்தம் இல்லையே... என ஏங்கித் தவித்தனர் ஊர்மக்கள்!

இந்த ஊருக்கு சத்தியபுரி க்ஷேத்திரம் என அந்தக் காலத்தில் பெயர் இருந்ததாம். உண்மையுடனும் பக்தியுடனும் எவர் பிரார்த்தனை செய்தாலும், அதனை நிறைவேற்றி வைப்பதையே லட்சியமாகக் கொண்டிருந்த பெருமாளாம், இவர்!

சத்தியபுரி க்ஷேத்திரத்தைச் சுற்றியுள்ள பல ஊர்களிலும் விழாக்கள் அமர்க்களப்படும். வாணவேடிக்கையும் வீதியுலாவுமாக ஏதேனும் தெய்வ உற்ஸவ விக்கிரகங்கள், சர்வ அலங்காரத்தில் தெருவெங்கும் வலம் வருவதைக் காண, இங்கிருந்தும் ஏராளமானோர் செல்வார்கள். திரும்பும்போது, ஏக்கமும் துக்கமுமாக அழுதபடியே வருவார்கள்.

இவற்றை அறிந்த வைணவப் பெருமக்கள் ஒன்றுகூடி, பெருமாள் கோயிலுக்குள் சென்றனர். 'பகவானே! எங்களையும் இந்த ஊரையும் சோதித்தது போதும்; உற்ஸவ விக்கிரகமின்றி, வீதியுலா எப்படி? திருமண விழாவை எவ்விதம் நடத்துவது? ஒரு காலத்தில், உற்ஸவ மூர்த்திக்கும் தாயாருக்கும் திருமணம் செய்து வைத்தால், தடைப்பட்ட திருமணமும் கைகூடும் என்பதுதானே சத்தியவாக்கு?! உற்ஸவ மூர்த்தத்தை எங்களுக்குக் காட்டியருள்வாய். இல்லையேல், பரமபதத்தில் எங்களைச் சேர்த்துக்கொள்'' என்று கண்ணீர் விட்டுப் பிரார்த்தித்துச் சென்றனர்.

விடிந்தது. 'இனி, சத்தியபுரிக்கு விடிவுகாலம்' என்பதை ஊர்மக்கள் எவரும் அறியவில்லை. அருகில் உள்ள பாலாற்றில், நீராடச் சென்றனர். குளிக்கும்போது, ஏதோவொன்று தட்டுப்பட..., பயமும் பதற்றமுமாக, அனைவரும் சூழ்ந்துகொண்டு, வெளியே எடுத்தார்கள்; திகைத்துப் போனார்கள். அது... பெருமாளின் திருவிக்கிரகம்; உற்ஸவ மூர்த்தம்! சூரிய ஒளியில், தகதகத்த உற்ஸவரை அள்ளியெடுத்துக்கொண்டு, நாராயண நாமம் முழங்க, ஆற்றங்கரையில் இருந்து வீதியுலாவாக வந்தார் பெருமாள். அந்த நிமிடம் துவங்கி, அவ்வூரில் காடு-கரையெல்லாம் நிறைந்தது; வயல்களெல்லாம் செழித்தன; அந்த ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும், திருமணங்கள் நடந் தேறின; வம்சம் தழைத்தோங்கியது.

சத்தியபுரி எனும் க்ஷேத்திரம் மெய்யூர் எனும் அழகிய கிராமமாக இன்றைக்கு விளங்குகிறது. அங்கே அருளும் இறைவன் - ஸ்ரீசுந்தரராஜ பெருமாள்; தாயார் - ஸ்ரீசுந்தரவல்லித் தாயார்.

சென்னை - திருச்சி சாலையில், செங்கல் பட்டுக்கு அடுத்துள்ளது ஆற்றுப்பாலம். அதை யட்டிப் பிரியும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவு பயணித்தால், மெய்யூர் கிராமத்தை அடையலாம் (செங்கல்பட்டில் இருந்து பஸ் வசதி உண்டு). ஊரின் நடுவே அழகுறக் கோயில் கொண்டுள்ளார், ஸ்ரீசுந்தரராஜபெருமாள்.

'என்னன்னே தெரியலை... கல்யாணம் தட்டிப் போயிகிட்டே இருக்கு', 'களத்திர ஸ்தானத்துல தோஷமாம்; என்ன பண்றதுன்னே புரியலை'... என மகன் அல்லது மகளின் திருமணம் குறித்து கவலைப் பட்டு, நிம்மதியின்றித் தவிக்கும் பெற்றோரா, நீங்கள்?! மெய்யூர் ஸ்ரீசுந்தரராஜ பெருமாளுக்கும் ஸ்ரீசுந்தரவல்லித் தாயாருக்கும் திருமண வைபவத்தை நடத்திவையுங்கள். உங்கள் வீட்டில் பந்தக்கால் நடுவதும் வாழைத் தோரணம் அமைப்பதும் சத்தியம் எனச் சிலிர்க்கின்றனர் பக்தர்கள். அதுமட்டுமா? ஸ்ரீசுந்தரராஜ பெருமாளை, மனதாரப் பிரார்த்திக்க... பிள்ளை வரம் கிட்டும்; தொழில் சிறக்கும்; பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் என்றும் தெரிவிக்கின்றனர்.

கோபுரம் இல்லை; ஆனால், மெய்யூர் பெருமாளின் பேரருள் வானளாவி நிற்கிறது. கிராமம்தான்; ஆனாலும் மெய்யன்பர்கள், இங்கு வந்து தங்கி இறைவனைத் தொழு வதற்கு வசதியாக, ஆலயத்தின் உட்பகுதியிலேயே அறைகள் கட்டி வைத்துள்ளனர்.

பல்லவ மன்னன் கட்டிய கோயில். தீபஸ்தம்பம் மற்றும் பலிபீடம் கடந்தால், கருடாழ்வார் தரிசனம். அடுத்து, மகா மண்டபம், அர்த்த மண்டபம். கருவறையில், கிழக்குப் பார்த்த திருமுகத்துடன் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக ஸ்ரீசுந்தரராஜபெருமாள். பெருமாளுக்கு வலப் பக்கத்தில், ஸ்ரீசுந்தரவல்லித் தாயாரின் திருச்சந்நிதி; பத்மாசனத்தில் அமர்ந்தபடி காட்சி தரும், கருணைத் தெய்வம் இவள்! பெருமாளுக்கு இடப் பக்கத்தில், ஸ்ரீஆண்டாள் சந்நிதி.

ஸ்ரீவிஷ்வக்சேனர், ஸ்ரீநம்மாழ்வார், திருமங்கை யாழ்வார் மற்றும் மணவாள மாமுனிகள் ஆகியோரையும் தரிசிக்கலாம். பிராகாரத்தில், ஸ்ரீஆஞ்சநேயர் சந்நிதி. ஒருகாலத்தில், கருடாழ்வா ரின் திருப்பாதத்தின் கீழே அனுமன் இருந்தாராம். ஒருமுறை, இங்கு வந்த பெரியவர் ஒருவர், 'பெரிய திருவடிக்குக் கீழே சின்னத் திருவடி இருக்கலாகாது; அனுமனுக்கு தனிச் சந்நிதி அமையுங்கள்; இந்த ஊர், இன்னும் சிறப்புறும்' என்றாராம். அதன்பிறகு, ஸ்ரீஅனுமனுக்கு சந்நிதி அமைக்க, விளைச்சலுக்கும் வம்சவிருத்திக்கும் குறைவே இல்லை என்கின்றனர் ஊர்க்காரர்கள்.

ஆடிப்பூரம், மார்கழி வைபவம், நவராத்திரி, பங்குனி உத்திரம், மாசி லட்சார்ச்சனை, திருக் கார்த்திகை என விழாக்களுக்குக் குறைவில்லை. வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற அன்பர்கள், பெருமாள்- தாயாருக்கு திருமணம் நடத்தி வைத்துப் பிரார்த்தித்துச் செல்கின்றனர். அதேபோல், ஸ்ரீஅனுமனுக்கு வடை மாலை மற்றும் வெற்றிலை மாலை சார்த்தி வேண்டினால், நினைத்தது நிறைவேறும்; பதவி உயர்வு தேடி வரும் என்பது ஐதீகம்!

மெய்யூர் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளைத் தரிசியுங்கள்; வாழ்வில் வசந்தம் நிச்சயம்; இதில், பொய்யேதுமில்லை!

- வி. ராம்ஜி, படங்கள் பு. நவீன்குமார்