ஸ்தல வழிபாடு

தேவி தரிசனம்1

சென்னை- காஞ்சி சாலையில் உள்ளது வாலாஜாபாத். இந்த ஊரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்காடு.

மாமன்னர் கிருஷ்ணதேவராயர் ஆட்சி செய்த காலம். ஒரு நாள், பெரும் காடாகத் திகழ்ந்த இந்தப் பகுதிக்கு வேட்டையாட வந்தார் கிருஷ்ணதேவராயர். தான் ஆசை ஆசையாக வளர்க்கும் நாயையும் வேட்டைக்கு அழைத்து வந்திருந்தார்.

அன்று நெடுநேரம் வேட்டையாடிய கிருஷ்ணதேவராயர், தாகத்தால் தவித்தார். காட்டுக்குள் எங்கு தேடியும் நீர்நிலைகள் தென்படாதுபோகவே, மிகவும் துவண்டு போனார். ஒரு மரத்தின் அடியில் அப்படியே சுருண்டு படுத்து விட்டார். மன்னர் தாகத்தால் தவிப்பதைக் கவனித்த நாய், தண்ணீரைத் தேடி ஓடியது!

ஓரிடத்தில் சுனை ஒன்றைக் கண்டது. நீர் பொங்கி வழிந்த அந்தச் சுனையில் குதித்து, தன் உடல் முழுவதையும் நனைத்துக் கொண்டது. பிறகு கரையேறி, தண்ணீர் சொட்டச் சொட்ட, மன்னர் இருக்கும் இடத்துக்கு விரைந்தோடி வந்தது. களைப்பும் மயக்கமுமாக இருந்த மன்னரின் தேகத்தில் தண்ணீர் விழும்படி, உடலைச் சிலுப்பியது; மெள்ளக் குரைத்தது. குளிர்ந்த நீர்த்துளிகள் உடலில் பட்டதால் மயக்கம் தெளிந்த மன்னர், கண்விழித்தார். தண்ணீர் இருக்கும் இடத்தைத் தனது நாய் கண்டுபிடித்து விட்டதைப் புரிந்துகொண்டார். நாய் அவரைப் பார்த்துக் குரைத்துவிட்டு, மீண்டும் சுனையை நோக்கி மெதுவாக ஓட ஆரம்பிக்க, மன்னர் பின்தொடர்ந்தார். அங்கே... சுனையைக் கண்டு, மகிழ்வோடு தண்ணீரைக் குடிக்க முனைந்தார். அப்போது, நீர்ப் பரப்பில் எலுமிச்சைப் பழம் ஒன்று மிதந்து வர, கல் விக்கிரகம் ஒன்றும் தென்பட்டது.

அதேநேரம்... மன்னரைத் தேடிக்கொண்டு படைபரிவாரங்களும் அங்கே வந்துசேர்ந்தன. அவர்களிடம், விக்கிரகத்தை கரைசேர்க்கும்படி உத்தரவிட்டார் மன்னர். வீரர்கள் சிலர், சுனைக்குள் வலையை வீசி, விக்கிரகத்தைத் தூக்க முயன்றனர். ஆனால், வலை அறுபட்டதே தவிர, முயற்சி பலனளிக்கவில்லை. பிறகு, இரும்பால் ஆன வலையைக் கொண்டு, சிலையை வெளியே எடுத்த பிறகே, அது அம்மன் சிலை என அறிந்தனர். விக்கிரகத் திருமேனியாகத் திகழும் அம்பாளை வணங்கித் துதித்தார் கிருஷ்ணதேவராயர்! விரைவில்... சுனைக்கு அருகிலேயே அழகிய ஆலயம் அமைத்து, அம்பாளைப் பிரதிஷ்டை செய்தார். வனத்தின் எல்லைப் பகுதியில் சிலை கிடைத் ததால், 'எல்லம்மன்' என்று பெயர்கொண்டாள் அந்த அம்பிகை.

பிற்காலத்தில் இந்தக் காடு, ஊராகப் பரிணமிக்க... ஊற்று நீரில் அம்மன் சிலை வந்ததை நினைவுபடுத்தும் விதமாக அந்த ஊருக்கு ஊற்றுக்காடு எனப் பெயர் அமைந் தது. இதுவே, 'ஊத்துக்காடு' என பின்னர் மருவியது.

பிறிதொரு நாளில்... மன்னரின் மெய்க் காப்பாளரான நாகல் நாயுடு என்பவரின் கனவில் தோன்றிய எல்லம்மன், 'ஊருக்குக் கிழக்கில், என்னை வைத்து வழிபடுங்கள்' என்று சொல்ல, அதன்படியே அமைக்கப் பட்டதாம் ஆலயம். கருவறையில்- சூலம், உடுக்கை மற்றும் அபய- வரத முத்திரைகள் திகழும் நான்கு திருக்கரங்களுடன், நாடிவருவோருக்கு அருள் வழங்கும் நாயகியாக காட்சி தருகிறாள் ஸ்ரீஎல்லம்மன். ஆரம்பக் காலத்தில் அம்மன் மிக உக்கிரமாக இருந்ததாகவும், அதனால் ஊத்துக்காடு தீப்பிடித்து எரிந்ததாகவும் சொல்லும் ஊர்ப் பெரியவர்கள், ஆலய நுழைவாயிலை சற்றே மாற்றி அமைத்து, அம்மனை முன்னோர்கள் சாந்தப்படுத்தியதாக விவரிக்கிறார்கள். தற்போது கருணையே உருவாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீஎல்லம்மன்.

கிழக்கு நோக்கிய ஆலயம்; வட்ட வடிவ பலிபீடத்துக்குப் பதிலாக இங்கே கூம்பு வடிவ பலிபீடம்; 'இதனால்தான் எங்கள் ஊருக்குள் துர்தேவதைகள் நெருங்குவதில்லை' என்று சிலிர்ப்புடன் கூறுகிறார்கள் ஊர்மக்கள்.

ஸ்ரீஎல்லம்மனுக்கு முன்னே சுமார் ஏழரை அடி உயரத்தில், கம்பீரமாகத் தோற்றமளிக்கிறாள் ஸ்ரீகாளிகாம்பாள். சப்த கன்னியர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீஆஞ்சநேயர், மகாவிஷ்ணு, சிவபெருமான், ஸ்ரீபார்வதி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகாலபைரவர் ஆகியோரும் இந்தக் கோயிலில் தரிசனம் தருகின்றனர்.

பைரவர் குளம் மட்டுமின்றி, சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அழகிய தெப்பக்குளம் ஒன்றும் உள்ளது. இந்தக் குளத்தில்தான் சித்திரை மாதம், தெப்போத்ஸவம் நடைபெறுமாம். விழாக்காலங் களில் காலை துவங்கி இரவு வரை கோயில் நடை திறந்திருக்கும். ஆடி மாதத்தில் செவ்வாய், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில், எண்ணற்ற பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்து அம்மனின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.

தற்போது, ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகளும் கோபுர உச்சியில் தங்கக் கலசம் ஒன்று வைக்கவும், ஆலய நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

கருவறையில் எல்லம்மன்; அவளுக்கு இடதுபுறத்தில் தனிச் சந்நிதியில் வராகியும் வலதுபுறத்தில் ஸ்ரீதுர்கையும் என மூன்று சக்திகளும் ஒருங்கிணைந்து அருள்பாலிக்கும் அற்புத ஆலயம் இது. திருமணத் தடையால் கலங்குவோரும் பிள்ளை பாக்கியம் இல்லையே என ஏங்குவோரும் (இங்கேயுள்ள அலரி மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்) இங்கு வந்து பைரவர் குளத்தில் நீராடி, அம்மனைப் பிரார்த்தித்தால், திருமண வரமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இன்னொரு சிறப்பு... ஸ்ரீஎல்லம்மனுக்கு, உப்பில்லாத வெண்பொங்கல் நைவேத்தியம் செய்யப்பட்டு, பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

கல்வி- கேள்வியிலும் சிறக்கச் செய்வாள் எல்லம்மன் என்பதால், தேர்வு எழுதுவதற்கு முன்ன தாக எண்ணற்ற மாணவர்கள் இங்கு வந்து, ஹால் டிக்கெட்டை அம்மனின் திருப்பாதத்தில் வைத்து வழிபடுகின்றனர்.

சுனை நீரில் அம்மன் காட்சி தந்தது, சித்திரை மாத மூல நட்சத்திர நன்னாள். எனவே, அப்போது பிரம்மோத்ஸவ விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். பைரவக் குளத்து நீரால் அம்மனை அபிஷேகிப்பதைக் காணக் கண் கோடி வேண்டும்! அதே போல் நவராத்திரி (தசரா) விழாவில், பத்துவித அலங்காரத்தில், கண்ணாடி மாளிகையில் இருந்தபடி அம்மன் தரிசனம் தரும் அழகே அழகு!

தீவினைகள் தீர்த்து வைக்கும்
மஞ்சள் தண்ணீர் பிரசாதம்!

தீராத வியாதி, தொழிலில் நஷ்டம், பில்லி- சூனியம், ஏவல், அம்மை வார்த்தல் ஆகியப் பிரச்னைகளால் வாடுவோர், இங்கு வந்து திருக்குளத்தில் நீராடி, வேப்பிலை ஆடை உடுத்தி, எல்லம்மனை வழிபட்டுச் செல்கிறார்கள். இதன் மூலம், நோய்கள் நீங்கி பூரண குணம் பெறலாம்; தொழில் விருத்தியாகும் எனச் சிலாகிக்கின்றனர் பக்தர்கள்.

பிரார்த்தனை நிறைவேறியவர்கள், அம்மனுக்கு முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். அம்மனின் அருளால், தடைகள் நீங்கித் திருமணம் நடந்தேறியவர்கள், தம்பதி சமேதராக வந்து வேப்பிலை ஆடை அணிந்து, தலையில் பட்டம் கட்டி வழிபட்டுச் செல்கின்றனர். இன்னும் சில பக்தர்கள், அம்மன் சந்நிதிக்கு அருகிலேயே திருமணம் செய்துகொள்கின்றனர்.

பில்லி- சூனியம் முதலான ஏவலால் அவதிப்படுபவர்களுக்கு, இங்கே மஞ்சள் கலந்த தண்ணீர் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தத் தண்ணீரை, முகத்திலும் தலையிலும் தெளிக்க, விரைவில் பூரண நலம் பெறுவர் என்பது நம்பிக்கை!

- பா. ஜெயவேல்