ஸ்தல வழிபாடு

தேவி தரிசனம்2

வெளுத்த வானமும், சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்த வெயிலும் திடீரென மறைந்து, மேகங்கள் கறுக்கத் துவங்கின. லேசாக மழை பெய்து, சட்டென்று மழை நின்று, வெளுக்கத் துவங்கிவிடுகிறது. இப்படி ஆகாயத்தில் அடிக்கடி அதிசயம் நிகழ்ந்துகொண்டிருக்கும் சீயாத்தமங்கை தலத்தை... 'மேகம் உறிஞ்சும் பெருஞ்சாத்த மங்கை' எனப் பாடுகிறார் திருஞானசம்பந்தர்.

நாகப்பட்டினம்-கும்பகோணம் சாலையில், நாகப்பட்டினத்துக்கும் சன்னாநல்லூ ருக்கும் நடுவே அமைந்துள்ளது சீயாத்தமங்கை. மெயின்ரோட்டில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவு பயணித்தால் (நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவு), ஸ்ரீஅயவந்தீஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.

ஒருகாலத்தில், சரக்கொன்றை மலர்கள் சூழ்ந்த வனமாக இருந்ததாம் இந்த ஊர். மலர்களின் நறுமணத்தை அறிந்து மகிழ்ச்சியுடன் இந்தத் தலத்துக்கு வந்த சிவனார், இங்கேயே தங்கியிருந்து, இன்றைக்கும் அருள்பாலித்து வருவதாக ஐதீகம். 'சரக்கொன்றை மாலை அணிந்த அயவந்தீஸ்வரர் அமர்ந்தவனே' எனும் பாடல், இதனை உறுதி செய்கிறது!

இந்தத் தலத்தில் ஸ்ரீஅயவந்தீஸ்வரரின் ஆட்சிதான் என்றாலும், ஆலயம் இத்தனை பிரமாண்டமாக உருவாகக் காரணம், இங்கு அருள்பாலிக்கும் அம்பிகைதான்!

செட்டிநாடு எனப்படும் காரைக்குடியில் இருந்து, தொழில் நிமித்தமாக நாகப்பட்டினம் நோக்கி ஒரு கூட்டம் நடந்து வந்தது. அப்போது மெள்ள இருள் படர்வதும், வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக இருக்கவே... நாகைக்குச் செல்லும் வழி தெரியாமல் அந்தப் பயணிகள் அவதிப்பட்டனர்.

அந்த வேளையில் அங்கு வந்த சிறுமி ஒருத்தி, பயணிகள் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவரின் கையைப் பிடித்து, ''என்னுடன் வாருங்கள்'' என்று அழைத்துச் சென்றாள். அவளுடைய கண்களில் மின்னிய பிரகாசத்தைக் கண்டு சிலிர்த்த மொத்தக் கூட்டமும் அவளைப் பின் தொடர்ந்தது. சற்று தூரத்தில் அமைந்திருந்த ஆலயத்தை நெருங்கியதும், கையை விடுவித்துக் கொண்ட அந்தச் சிறுமி சட்டென மறைந்துபோனாள்!

சிறுமியாக வந்தது, அந்தக் கோயிலில் அருள்பாலிக்கும் அம்பாளான இருமலர்க்கண்ணி அம்மையே என்பதை பின்னர் அறிந்து வியந்தனர். இயல்பாகவே கோயில் திருப்பணிகளில் ஆர்வம் கொண்ட அந்த அன்பர்கள், அம்பிகை காட்டிய கோயிலுக்கும் திருப்பணிகள் செய்து முடித்து, பிரமாண்டமான ஆலயமாக எழுப் பினர் என்கிறது ஸ்தல வரலாறு.

அம்பிகை ஸ்ரீஇருமலர்க்கண்ணி யம்மைக்கு, உபயபுஷ்ப விலோசினி என்றொரு திருநாமமும் உண்டு. சிவசொருபமாக ருத்ராட்சம், சிரசில் கங்கை மற்றும் நெற்றிக்கண்ணுடன்... சிவபாகத்தைக் கொண்டவளாகக் காட்சி தரும் இந்த அம்பிகையின் தரிசனம் அபூர்வமானது!

அம்பாள், அக்னி வடிவமாகத் திகழ்கிறாள். எனவே, அவளைக் குளிர்விக்கும் வகையில், பௌர்ணமி தினங்களில் அபிஷேகங்கள் செய்வித்துப் பிரார்த்தித்தால், உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், பௌர்ணமியில், இங்கேயுள்ள சூரிய- சந்திர தீர்த்தத்தில் நீராடி, அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால், விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்பர்.

அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரும், அவரின் மனைவி மங்கையர்க்கரசியாரும் அவதரித்தது இங்குதான்.

இந்தத் தம்பதி, அனுதினமும் ஸ்ரீஅயவந்தீஸ்வரரை கொன்றை மலர்களால் அர்ச்சித்து வழிபடுவது வழக்கம். ஒருநாள், சிவபூஜையின்போது... சிவலிங்கத் திருமேனியில் சிலந்தி ஒன்று ஊர்வதைக் கவனித்த மங்கையர்க்கரசியார் பதறிப் போனார். லிங்கத் திருமேனியில் இருந்து சிலந்தியை அகற்றும் எண்ணத்தில், வாயால் ஊதினார்.

அதைக் கண்டு திருநீலநக்கர் கோபம் கொண்டார். ''உன் எச்சில் இறைவனார்மீது பட்டுவிட்டது; ஆகம விதிகளை நீ மீறிவிட்டாய்'' என்று மனைவியைக் கடிந்துகொண்டவர், அவளை அங்கேயே விட்டுவிட்டு, தான் மட்டும் இல்லம் திரும்பினார்.

அன்றிரவு அவரின் கனவில் தோன்றிய இறைவனார், ''தாயுள்ளத்துடன் அவள் அப்படி நடந்து கொண்டாள். விடிந்ததும், என் திருமேனியை வந்து பார்'' என்றார்.

விடிந்தும் விடியாததுமாக விழுந்தடித்துக்கொண்டு ஆலயத்துக்கு ஓடிவந்தவர், கருவறையில் உள்ள சிவத் திருமேனியைக் கண்டு அதிர்ந்தார். லிங்கத் திருமேனியில் மங்கையர்க்கரசியாரின் எச்சில்பட்ட இடத்தைத் தவிர, மற்ற இடங்களிலெல்லாம் சிலந்தி கடித்துப் புண்ணாகியிருந்தது. இறைவனுக்கு நேர்ந்ததை எண்ணிக் கலங்கிய அதேநேரம் மனைவிக்காக அந்த இறைவனே பரிந்துரைத்ததை எண்ணி உள்ளம் பூரித்தார்; மங்கையர்க்கரசியாரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டார்.

இதையடுத்து, திருச்சாத்தங்கை திருத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் வந்தார். வீதிதோறும் தோர ணங்கள் கட்டி, கோலமிட்டு திருநீலநக்கரும் மங்கை யர்க்கரசியாரும் அவரை அன்புடன் மலர்தூவி வரவேற்று, இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். தங்களது வீட்டிலேயே ஞானசம்பந்தரைத் தங்க வைத்தது மட்டுமின்றி, அவருக்குத் திருமணத்தையும் நடத்திவைத்தார் திருநீலநக்கர்.

வைகாசி மூல நட்சத்திர நன்னாளில், திருநீலநக்க நாயனாருக்கு விமரிசையாக நடக்கிறது குருபூஜை. இறைவனின் திருமேனியில் சிலந்தி ஊர்ந்ததும் மூல நட்சத்திர நன்னாளில்தான். ஆகவே, மூல நட்சத்திரக்காரர்கள் வணங்கி நலம் பெற வேண்டிய திருத்தலம் இது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஆவணி மாத மூல நட்சத்திர நாளில், ஸ்ரீஇருமலர்க்கண்ணியம்மை சமேத ஸ்ரீஅயவந்தீஸ் வரருக்கு நடைபெறும் திருமண வைபவத்தை தரிசித்து, அந்த நாளில் நடைபெறும் 'ருத்ர வியாமல தந்திர' பூஜையில் பங்கேற்று, பிரார்த்தித்தால், திருமணத் தடைகள் நீங்கும்; விரைவில் மணமாலை கிடைக்கும் என்கின்றனர்.

வருகிற ஆனி மாதம் 32-ஆம் தேதி (ஜூலை-16) ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சீரும் சிறப்பாக நடைபெறுகிறது. இதற்கான திருப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன. மகாகும்பாபிஷேகத்தில் நாமும் பங்கேற்று, சீயாத்தமங்கை நாதரையும் அம்பாளையும் தரிசிப்போம்; சிந்தையில் தெளிவை யும் சிக்கலில்லாத வாழ்க்கையையும் பெறுவோம்!

- செ. மனோ, படங்கள் எம். ராமசாமி