ஸ்தல வழிபாடு

தேவி தரிசனம்3

''கல்யாணமாகி பல வருஷமாகியும், உன் வயித்துல ஒரு புழு-பூச்சியக்கூட காணோம். நீ உன்னோட பொறந்த வீட்டுக்கே போயிடு!'' என்று மருமகளை வீட்டைவிட்டுத் துரத்தினர், மாமனாரும் மாமியாரும்!

தெருவில் நின்ற அந்த மருமகள் கண்ணீரும் கம்பலையுமாக... சுட்டெரிக்கும் வெயிலில் கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள். நெடுநேர பயணத்தால் மனமும் உடலும் சோர்வடைய, சாலையோரம் இருந்த வேப்பமர நிழலில் சற்றே அமர்ந்தாள். அப்போது ஓர் அசரீரி, 'மகளே! பிள்ளை இல்லை எனும் கவலை உனக்கு இனி இல்லை. நானே உனக்கு மகளாகப் பிறப்பேன். அந்தக் குழந்தைக்கு, 'இசக்கியம்மன்' என பெயர் சூட்டுவாயாக!' என்று ஒலித்தது.

அதைக்கேட்டு நெக்குருகிப்போனாள் மருமகள். அன்று துவங்கி தொடர்ந்து 21 நாட்கள்... அந்த மரத்தையே, இறைத் திரு வுருவமாக எண்ணி, சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டு வந்தாள். பூஜையின் கடைசி நாளன்று அவளின் வயிற்றில் கரு உருவானது. 10 மாதங்கள் கழித்துக் குழந்தை யும் பிறந்தது. தகதகவென தங்கம்போல் ஜொலித்த அந்தப் பெண் குழந்தையைக் கண்டு, ''அம்மனே பொறந்திருக்காப்பா!'' என்று நெகிழ்ந்தது ஊரும் உறவும்.

அதையடுத்து, வேப்பமரத்தடியை வணங்கச் சென்றவர்கள், சிலிர்த்துப் போனார்கள். அங்கே கல் வடிவில் காட்சி தந்தாள் அம் மன் (தொடர்ந்து... சர்ப்பம் குடியேற, புற்று வடிவிலும் அம்மன் தரிசனம் தந்ததாக கூறுவர்). ஊர் மக்கள் ஒன்றுகூடி, அந்த இடத்தில் அம்மனுக்கு ஆலயம் அமைத்து, வேம்படி இசக்கியம்மன் எனத் திருநாமம் சூட்டி, வழிபடத் துவங்கினர்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வேம்படி ஸ்ரீஇசக்கியம்மன் ஆலயம். அம்மன், கல் வடிவாக முதலில் காட்சி தந்ததன் நினைவாக... முதல் பூஜை அபி ஷேகம் எல்லாம் அந்தக் கல் வடிவத்துக்குதான். அதன் பிறகே, கருவறையில் குடிகொண்டிருக்கும் இசக்கியம்மனுக்கு ஆராதனைகள் நடைபெறுகின்றன. திருமணத் தடை, ஜாதகத்தில் தோஷம் ஆகிய பிரச்னைகளால் கவலையுறும் பெண்கள், தொடர்ந்து 11 செவ்வாய்க்கிழமைகள் இந்தக் கோயிலுக்கு வந்து, இசக்கியம்மனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், விரைவில் திருமண வரம் கிடைக்குமாம்.

'பிள்ளை இல்லையே...' என ஏங்கித் தவிப்பவர்கள், கோயில் கிணற்றில் நீராடி, ஈரத்துணியுடன் சந்நிதியை வலம் வந்து, சேலைத் தலைப்பை (முந்தானை) ஒரு முழம் அளவுக்குக் கிழித்து, அதில் மரப் பொம்மையை வைத்துக் கட்டி, சந்தனம்- குங்குமமிட்டு, மல்லிகைப் பூச்சூட்டி, அம்மனின் திருப்பாதத்தில் வைத்து வழிபட வேண்டும்.

பிறகு, 'தாயே, உனக்கு மரப்பிள்ளையைத் தந்த எனக்கு நிஜப் பிள்ளையைத் தந்தருள்வாய்' என வேண்டிக்கொண்டு, மரப் பொம்மை இருக்கும் முந்தானைத் தொட்டிலை கோயிலின் வேப்பமரத்தில் கட்டிவிட்டுச் சென்றால், விரைவில் குழந்தை பாக்கியம் தந்தருள்வாள், இசக்கியம்மன்.

இந்தப் பிரார்த்தனை பலித்துக் கருவுறும் பெண்கள், வளைகாப்புக்கு முதல்நாள், இசக்கியம்மனுக்கு 'சூல்காப்பு' (வெள்ளி அல்லது கண்ணாடி வளையல்) சார்த்தி வழிபடுகின்றனர். இதனால், பிரசவம் சுகமாக அமையும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீஇசக்கியம்மன், பயணத்தில் வழித் துணையாகவும் வந்து அருள் புரிகிறாள். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, அதிகாலை முதல் கிளம்புகிற பேருந்துகள், கல்யாணம், காது குத்து முதலானவைபவங் களுக்காக வெளியூர் கிளம்பும் வாகனங்கள் ஆகியவற்றின் டிரைவர்கள் (சில பயணி களும்), இசக்கியம்மன் ஆலயத்துக்குச் சென்று, விடலைத் தேங்காய் உடைத்து வழிபட்டபிறகே ஊர் எல்லையைக் கடக்கின்றனர்.

இசக்கியம்மனை வணங்கிச் சென்றால் அன்றைய பயணத்தில், பக்கத் துணையாக இருந்து காப்பாள்; விபத்து ஏதும் நிகழாமல் தடுப்பாள் என்பது நம்பிக்கை! புதிதாக வாகனங்கள் வாங்குவோர் அம்மன் சந்நிதியில் சாவியை வைத்து வழிபடுகின்றனர். சக்தியும் சாந்நித்தியமும் மிகுந்தவள் இசக்கியம்மன். இந்த ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் இசக்கிராஜ், இசக்கியம்மாள், இசக்கியப்பன், பொன் இசக்கி எனப் பெயர் சூட்டுவதே அதற்குச் சாட்சி!

- இ. கார்த்திகேயன், படங்கள் எல். ராஜேந்திரன்