ஸ்தல வழிபாடு

தேவி தரிசனம்4

அரச குடும்பத்தில் பிறந்த அந்தப் பெண், தன் கணவன் மீது உயிரையே வைத்திருந்தாள். ஒருநாள், ஒரு நிமிடம்கூட கணவனைப் பிரிவதற்கு இடம்கொடாத அளவுக்கு, அவன் மீது பிரியத்துடன் திகழ்ந்தாள். அவர்களின் அன்புக்குச் சாட்சியாகக் கருத்தரித்தாள்.

பிரசவத்துக்கு பெண்கள் பிறந்த வீட்டுக்குச் செல்வதுதானே வழக்கம்?! ஆனால் இவளோ, கணவனைப் பிரிய மனமில்லாமல் புகுந்த வீட்டிலேயே இருந்து விட்டாள். ஒருநாள், கணவன் வேட்டைக்குக் கிளம்பினான். 'நானும் வருகிறேன்' என்று அடம்பிடித்து, அவனுடன் காட்டுக்குச் சென்றாள்.

போன இடத்தில் பொசுக்கென்று வந்தது பிரசவ வலி! செய்வதறியாது திகைப்பும் தவிப்புமாய்க் கலங்கினான் கணவன். அந்த இருண்ட கானகத்தில், உதவிக்கு ஆள் தேடி, நாலாபுறமும் பார்த்தான். நெடுந்தொலைவில் ஓரிடத்தில் வெளிச்சம் படர்ந்திருப்பதைக் கவனித்தான். அங்கு சென்று மருத்துவச்சியை அழைத்து வரலாம் என்ற எண்ணத்துடன் விரைந்தான்.

அந்த நேரத்தில், வனத்தில் இருந்த கொடிய அரக்கன் ஒருவன், தனிமையில் பிரசவவலியில் துடிக்கும் பெண்ணைக் கண்டு, அவளைக் கொல்ல முயன்றான். அதில் நிலை குலைந்தவள், தான் எப்போதும் வழிபடும் பத்ரகாளியம்மனை மனதார வேண்டினாள். 'தாயே, என்னைக் காப்பாற்று' எனப் பெருங்குரலெடுத்துக் கதறினாள்.

பக்தையின் அவலக்குரல் கேட்டும் சும்மா இருப்பாளா அம்பிகை?! கோபாவேசத்துடன் தோன்றியவள், தனது சூலாயுதத்தால் அரக்கனை அழித்துவிட்டு மறைந்தாள்.

கண்கள் பனிக்க, பத்ரகாளியம்மனை மீண்டும் மனதாரப் பிரார்த்தித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினாள் அந்தப் பெண். வழியில் இருந்த மயான பூமியை அவள் நெருங்கிய போது, தரையில் கிடந்த மாட்டுச் சாணத்தில் கால் வைத்து வழுக்கி விழுந்தாள். இதனால் மூர்ச்சையாகி விழுந்தவள், அப்படியே கற்சிலையாக மாறிப்போனாள்.

சற்று நேரத்தில் மருத்துவச்சியை அழைத்துக் கொண்டு ஓடிவந்த கணவன், கற்சிலையாக இருக்கும் தன் அன்பு மனைவியைக் கண்டு அதிர்ந்தான். விஷயமறிந்து ஊர் மக்களும் ஓடோடி வந்தனர். எல்லோரும் திகைத்துப்போய் நிற்க... 'இவள் சாதாரணப் பெண் அல்ல; முன் ஜன்மத்தில் சாமியாக இருந்து அருள்பாலித்தவள். சாபம் நிறைவேற, மனித உருவெடுத்தாள். இப்போது, இந்த ஊரில் இருந்தபடி அருளாட்சி செய்யப் போகிறாள்' என அசரீரி ஒலித்தது.

அசரீரி வாக்கு பலித்தது! அந்தத் தெய்வப்பெண், 'மாசானியம்மன்' எனும் திருப்பெயருடன்... பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலைப் பகுதியில் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறாள். இந்தக் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து எழுப்பப் பட்ட ஆலயம்தான், விருதுநகர் குமாரலிங்கபுரத்தில் அமைந்துள்ளது. சாந்நித்தியம் கொண்ட இந்த அம்மன் கோயிலுக்கு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர். கோயிலின் சிறப்பம்சம்- இங்கேயுள்ள நீதிக் கல்! நகையோ, பணமோ திருடு போய்விட்டால், நேராகக் கோயிலுக்கு வந்து, 'அம்மா, எங்க பொருள் களவு போயிடுச்சு. நீதாம்மா மீட்டுத்தரணும்' என்று பிரார்த்தித்தபடி, காய்ந்த மிளகாயை அம்மியில் அரைத்து, கூம்பு வடிவ நீதிக் கல்லில் சார்த்திவிட்டு, அருகில் உள்ள சூலாயுதத்தில் மூன்று எலுமிச்சைப் பழங்களைச் செருகி விட்டுச் செல்கின்றனர். தொடர்ந்து ஏழு வாரம் இதேபோல் செய்து பிரார்த்திக்க... ஸ்ரீமாசானியம்மனின் திருவருளால் களவு போன பொருட்கள் திரும்பக் கிடைத்துவிடும்; திருடியவன் அகப்பட்டுக் கொள்வானாம்.

''இதுவரை மாசானியம்மனிடம் முறையிட்டது எதுவும் பலிக்காமல் இருந்ததில்லை'' என்று சிலிர்ப்புடன் தெரிவிக் கின்றனர் பக்தர்கள். அதுமட்டுமா? கர்ப்பிணிப் பெண்கள், இங்கு வந்து அம்மனுக்கு எலுமிச்சை மாலை சார்த்தி வழிபட்டுச் சென்றால், அவர்களுக்கு சுகப்பிரசவம் நிகழும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.

- இர. ப்ரீத்தி, படங்கள் என்.ஜி. மணிகண்டன்