ஸ்தல வழிபாடு

தேவி தரிசனம்5

கோவை காந்திபுரத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது காட்டூர். தொழில் சிறக்கவும், செல்வம் கொழிக்கவும் அருள்வதில் இங்கேயுள்ள அம்பிகை முத்துமாரியம்மனுக்கு நிகரில்லை எனச் சொல்லிச் சிலிர்க்கின்றனர் ஊர்மக்கள்!

ஒருகாலத்தில், கோவையில் கடும் பஞ்சம் நிலவியதாம். மழையின்றிப் பயிர்கள் காய்ந்தன; உணவின்றி மக்கள் வாடினர்; தொழில் நசிந்து வியாபாரிகள் கவலைப் பட்டனர். இந்த நிலையில், தற்போது ஆலயம் அமைந்துள்ள பகுதியில் குடிசை ஒன்று இருந்ததாம்! ஒருநாள்... இந்தப் பகுதிக்கு வந்தாள் பெண்ணொருத்தி. 'அவள் யார்? எந்த ஊர்?' என எல்லோரும் குழம்பினர். 'இங்கேயே பஞ்சம் தலைவிரிச்சாடுது; இந்த நேரத்துல வெளியூர்லேருந்து ஒருத்தி இங்கே வந்து என்ன செய்யப் போறாளாம்?!' என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

அந்தப் பெண் நாலாப்புறமும் பார்வையைச் செலுத்தினாள். எதிரில் உள்ள குடிசையையும் கண்டாள். மெள்ள நடந்து அந்தக் குடிசைக்கு அருகில் சென்றாள்; திரும்பி, தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்த ஜனங்களை ஒருமுறை உற்று நோக்கினாள். 'இனி உங்க ஊர் நல்லாருக்கும்' என்று சொல்லிவிட்டுக் குடிசைக்குள் போனவள்தான்... வெளியே வரவே இல்லை! உள்ளே சென்று தேடியும் அவளைக் காணவில்லை.

அடுத்தடுத்த நாளில், பஞ்சம் மறைந்தது; விளைநிலங்கள் செழிப்புற்றன; வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டினர். இவை அனைத்துக்கும், சாமியாகிப்போன அந்தப் பெண்ணே காரணம் எனச் சொல்லிச் சிலிர்த்த மக்கள், அந்தக் குடிசையையே கோயிலாக எண்ணி வழிபட்டனர். பின்னர், குடிசை இருந்த இடத்தில் அழகிய கோயிலை எழுப்பி, அம்மன் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, ஸ்ரீஅம்பிகை முத்துமாரியம்மன் எனத் திருநாமம் சூட்டி, வழிபடத் துவங்கினர்.

திருமணத் தடை உள்ளவர்கள், இந்த அம்மனை வணங்கி வழிபட்டால், விரைவில் வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்பது நிச்சயமாம்! ஆலயத்தில், சித்திரை மாத விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது, பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பூச்சட்டி எடுத்தல், மாவிளக்கு ஏற்றுதல் முதலான நேர்த்திக்கடன்களைச் செலுத்துகின்றனர். ஏழு நாள் நடைபெறும் விழாவில், மதுரை ஸ்ரீமீனாட்சி, காஞ்சி ஸ்ரீகாமாட்சி, சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், திருக்கடையூர் ஸ்ரீஅபிராமி என 11 வகை அலங்காரங்களில் காட்சி தந்து சிலிர்க்க வைக்கிறாள் இந்த முத்துமாரியம்மன்!

இங்கே... இன்னொரு சிறப்பு பூஜையும் உண்டு. சித்திரை மாத விழாவின்போது, அம்மனுக்குப் பணமாலை சூட்டி அழகுபார்க்கின்றனர் பக்தர்கள். அதாவது, பக்தர்கள் தங்களால் இயன்ற பணத்தைத் தர, அந்தப் பணத்தைக்கொண்டு, பிரமாண்டமான பணமாலை மற்றும் அலங்காரம் அம்மனுக்குச் செய்யப்படுகிறது. சிறப்பு பூஜை முடிந்ததும், பக்தர்கள் அந்தப் பணத்தை வாங்கிச் சென்று வீட்டுப் பூஜையறையில் வைத்து தினமும் வழிபட, பஞ்சம் அகலும்; செல்வம் சேரும்; சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறுவர் என்பது நம்பிக்கை!

சித்திரையின் 3-வது செவ்வாய்க் கிழமை இரவு, அம்மனுக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அப்போது, பூஜையில் வைத்துத் தரப்படும் மஞ்சள் சரடை வாங்கி பெண்கள் அணிந்தால், கணவனின் தீராத நோயும் தீரும்; தாலி பாக்கியம் நிலைக்கும் என்பர். மறுநாள், ஊஞ்சல் வழிபாடு. பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், அம்மனை ஊஞ்சலில் வைத்து ஆட்டிப் பிரார்த்தனை செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதியாம்!

அதேபோல், மூல நட்சத்திரக் காரர்கள் இங்கே, ஒன்பது வெள்ளிக் கிழமைகள் வந்து, எண்ணெய் தீப மேற்றி வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

இங்கு, தனிச் சந்நிதியில் காட்சி தரும் ஸ்ரீமகாகணபதி ஞானத்தையும், ஸ்ரீபாலமுருகன் மனநிம்மதியையும் நமக்குத் தந்தருள்கின்றனர்.

- ஞா. அண்ணாமலைராஜா, படங்கள் ஜா. ஜாக்சன்