ஸ்தல வழிபாடு

தேவி தரிசனம்6

அடர்ந்த வனப்பகுதி அது! சித்துக்கள் கைவரப்பெற்ற மகான் ஒருவர், மருத்துவக் குணங்கள் கொண்ட மூலிகைகளைத் தேடி இந்த வனத்துக்கு வந்தார். எங்கு தேடியும் அரிதான மூலிகைகள் கண்ணில் தென்படவே இல்லை. இதனால், உடலாலும் மனதாலும் சோர்வுற்ற மகான், ஒரு மரத்தடியில் தங்கி இளைப்பாறினார்.

சிறிது நேரத்தில் கண்ணயர்ந்து தூங்கியவருக்கு, யாரோ தட்டி எழுப்புவது போன்று உள்ளுணர்வு சொல்லவே, கண் விழித்தார்; அதிர்ந்து போனார். அங்கே... ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்துடன் காட்சி தந்தாள், அன்னை பராசக்தி.

மூலிகையைத் தேடி வந்தவருக்கு உலகின் மூலப் பொருளான சக்தியின் தரிசனமே கிடைக்க, சிலிர்ப்போடு உமையவளை விழுந்து நமஸ்கரித்தார். அப்போது அன்னை, ''இங்கே, இந்தப் பகுதியில் காவல் தெய்வமாக இருக்க விரும்புகிறேன். என்னை வழிபடுவோரின் இல்லங்களைக் காப்பேன்'' என அருளி மறைந்தாள்.

அம்மனின் விருப்பப்படி அங்கே ஆலயம் எழுப்ப எண்ணிய அந்த மகான், அவருக்குக் காணக் கிடைத்த திருவுருவத்திலேயே விக்கிரகம் அமைப்பது என முடிவு செய்தார். சிற்பக் கலைஞர்களையெல்லாம் தேடிப் பிடித்து அழைத்து வந்தவர், தான் கண்ணால் கண்ட அம்மனின் திருவுருவத்தை விவரித்தார். ஆனாலும், எவராலும் அந்தத் திருவுருவத்தை, விக்கிரகத் திருமேனியாக வடிக்க இயலவில்லை. இதில் மனம் நொந்த மகான், அன்னையிடம் முறையிட்டுக் கதறினார்; 'நீ எனக்குக் காட்டிய திருவுருவை விக்கிரகம் வடித்துப் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்கிற எனது விருப்பத்தை நிறைவேற்ற மாட்டாயா?' என்று கண்ணீர் மல்க வேண்டினார்.

அன்றிரவு, அவரது கனவில் தோன்றிய பராசக்தி, 'விக்கிரகத்தை வடிக்கச் சொன்னது உன்னைத்தானே?! நீயே உருவாக்கு' என அருளினாள். அதன்படி, அம்பாளை மனதில் எண்ணியபடி, கண்கள் மூடி அமர்ந்தார். பராசக்தியை நேரில் கண்டபோது எப்படி இருந்தாள் என்பதை மனக்கண்ணில் கொண்டு வந்தவர், கண் மூடியபடியே, விக்கிரகம் வடிக்கும் பாவனையில் காற்றில் கைகளை அளைந்தார்.

சற்றுப் பொறுத்துக் கண் விழித்த மகான், ஆச்சரியத்தில் விக்கித்து நின்றார். அங்கே, அவருக்கு எதிரே, அச்சு அசலாக அவர் நேரில் கண்டது போலவே, விக்கிரகத் திருமேனியாகக் காட்சி தந்தாள் அம்மன். இன்றைக்கும், பிடாரி ஸ்ரீஇளங்காளியம்மனாக அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறாள், அம்பிகை!

அந்த அடர்ந்த வனப்பகுதி, பின்னர் மக்கள் வசிக்கும் இடமாக மாறியது. கிராமமாக வளர்ந்து, சிற்றூராக உருவாகி, இன்றைக்குப் பெருநகரத்தின் முக்கியமான பகுதியாக விளங்குகிறது. அது... சென்னை - சைதாப்பேட்டை! போக்குவரத்து நெரிசல் மிகுந்த சைதாப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது பிடாரி ஸ்ரீஇளங்காளியம்மன் திருக்கோயில்.

வடக்குப் பார்த்த அம்மனை வணங்கினால், முடமாகிப் போன காரியங்கள்கூட கைகூடும் என்பர். அதற்கேற்ப, வடக்கு திசை நோக்கியபடி, அனைவரையும் வாழ வைக்கிறாள் பிடாரி ஸ்ரீஇளங்காளியம்மன்.

இங்கு, அம்மன் சந்நிதிக்கு முன்னே நின்று, மனமுருகிப் பிரார்த்தித்தால், நினைத்ததை நடத்தி வைப்பாள்; மனதில் உள்ள துக்கத்தையெல்லாம் போக்குவாள் என்கின்றனர் பக்தர்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், பொங்கல் படையலிட்டு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்து கின்றனர்.

'கொஞ்சி விளையாடக் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையே...' என ஏங்குவோர், இங்கு வந்து கோயிலின் ஸ்தல விருட்சமான அரசமரத்தில் சிறிய தொட்டில் கட்டி, அம்மனை வேண்டிச் செல்கின்றனர். விரைவில் கருத்தரிப்பதுடன், சுகப்பிரசவமாகவும் திகழ அருள்பாலிக்கிறாள், அன்னை!

பிடாரி இளங்காளியம்மனை மனமுருகப் பிரார்த்தனை செய்யுங்கள்; உங்களின் பிரச்னைகள் அனைத்தையும் களைந்து நலம் தருவாள், பாருங்கள்!

- ந. வினோத்குமார், படங்கள் து. மாரியப்பன்