ஸ்தல வழிபாடு

தேவி தரிசனம்7

திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில், திருவெறும்பூருக்குத் தெற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது சோழமாதேவி. இங்குள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீகயிலாசமுடையார் கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவு பயணித்தால்... அருளும் பொருளும் அள்ளித்தரும் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மனைத் தரிசிக்கலாம்.

முற்காலத்தில், இந்தப் பகுதி வனமாகத் திகழ்ந்ததாம். இங்கே, அன்பர் ஒருவர் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது, தெய்வ விக்கிரகம் ஒன்று கிடைத்தது. அந்தச் சிலாரூபத்தை கன்னிகாபரமேஸ்வரியாக எண்ணி வழிபட ஆரம்பித்தனர். மேலும், அந்தத் தெய்வத் திருமேனியை எழுந்தருளச் செய்வதற்காக ஓர் ஆலயமும் எழுப்பினர். கூடுதலாக ஒரு புதிய விக்கிரகத்தையும் செய்து வைத்தனர். பின்னர், ஆலய கும்பாபிஷேகத்துக்கு நாள் குறிக்கவும், அந்த வைபவத்தை நடத்திக் கொடுக்கவும் சிவாச்சார்யர் ஒருவரை அணுகிய போது, அவர் ஏனோ வர மறுத்துவிட்டாராம். இதேபோல், ஆலயத் திருப்பணிகளுக்கும் எண்ணற்ற தடங்கல்கள்; ஊருக்குள்ளும் நிறைய பிரச்னைகள்!

மக்கள் மனம் கலங்கியிருக்க... திடுமென ஒருநாள் வந்து சேர்ந்தார் அதே சிவாச்சார்யர். ஆலயத்தை ஒருமுறை வலம் வந்தவர், சிலிர்த்துப்போனார். ''இந்த இடத்தில் ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீபுவனேஸ்வரி, ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆகிய தெய்வங்களின் சாந்நித்தியமும் சக்தியும் மிக அதிகமாக நிரம்பியிருக்கிறது. அந்தச் சக்தியே, என்னை இங்கே இழுத்துவந்திருக்கிறது'' என்றார். அவரிடம், பூமியிலிருந்து கிடைத்த தெய்வ விக்கிரகத்தைக் காட்டினார்கள் ஊர்க் காரர்கள். அதைக் கண்டு திகைத்த சிவாச்சார்யர், ஊர் மக்கள் நினைத்ததுபோல் அது கன்னிகாபரமேஸ்வரி விக்கிரகம் அல்ல; ஐயனார் விக்கிரகமே என விளக்கினார். பின்பு, அவரது அறிவுரைப்படி ஸ்ரீராஜராஜேஸ்வரியையே மூல விக்கிரகமாக அமைத்து, ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டனர். கும்பாபிஷேகமும் சிறப்புற நடைபெற்றது (ஐயனார் விக்கிரகம் தனிக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது). அன்று முதல் கலியுக தெய்வமாக இந்த ஊரைக் காத்துவருகிறாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி.

இந்தக் கோயிலின் சிறப்பம்சம்... அம்மனின் திருக்கரத்தில் திகழும் முடிக்கயிறு. அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், கண்திருஷ்டியால் பாதிக்கப்படுபவர்கள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மனைப் பிரார்த்தித்து, முடிக்கயிற்றை வாங்கிக் கையில் கட்டிக்கொள்ள... அனைத்துப் பிரச்னைகளும் பனிபோல் விலகுமாம்.

மார்ச் மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று ஊர்க்காரர்கள், அம்மனுக்குப் பால்குடம் எடுத்து வழிபடுகின்றனர். அதே போல், ஆடிமாதத்தின் 3-ஆம் ஞாயிறன்று, அருகில் உள்ள அண்ணா நகர் மற்றும் போலீஸ் காலனி பகுதி மக்கள் பால்குடம் எடுக்கின்றனர். 4-ஆம் ஞாயிறு அன்று, சுமங்கலி பூஜை நடைபெறும்.

பௌர்ணமி தினங்களில் இங்கே நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனை மிக விசேஷம். குடும்பத்தில் குழப்பம், கடன் தொல்லை, திருமணத் தடை, பிள்ளை பாக்கியம் இல்லாத கவலை, சொத்துத் தகராறு என்பன போன்ற தங்களது பிரச்னைகளை, சீட்டு ஒன்றில் பக்தர்கள் எழுதித் தர, அந்தப் பிரார்த் தனைச் சீட்டுகளை அம்மனின் திருப் பாதத்தில் வைத்துக் கூட்டுப் பிரார்த்தனை செய்கின்றனர். இந்த நாளில் சிறப்பு அபிஷேகத்துடன், தங்கக் கிரீடம் மற்றும் தங்கப் பாதங்கள் சார்த்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தரிசனம் தரும் அம்மனைக் காணக் கண்கோடி வேண்டும்!

கோயிலுக்கு வடக்கில்- உய்யக்கொண்டான் ஆற்றுக்கு அருகில், ஆலமரம் ஒன்று உள்ளது. சத்குரு சம்ஹார மூர்த்தி எனும் மகான் தவம் செய்த அந்த மரத்தடியில் ஜோதி மண்டபம் ஒன்றைக் கட்டி, அணையா விளக்கு ஏற்றிவைத்து வழிபடுகின்றனர். அந்த விளக்கை வணங்கி பிரார்த்தித்தால், குழந்தைகள் கல்வி-கேள்வியில் சிறந்து விளங்குவர்!

வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில், இங்குள்ள ராகு மற்றும் கேது சந்நிதியில் பாலபிஷேகம் செய்து பிரார்த்திக்க, தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பக்தர்களே நேரடியாக ராகு- கேதுவுக்கு அபிஷேகம் செய்துவழிபடலாம்!

- எஸ். ஷண்மதி, படங்கள் எம். ராமசாமி