ஸ்தல வழிபாடு

ஆலயம் தேடுவோம்!

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். ஆனால், நாரதர் செய்த ஒரு காரியத்தால், அவருக்குச் சாபம்தான் கிடைத்தது.

தட்சனுக்கு மூன்று மகன்கள். தந்தையைப் போலவே இவர்களும் சிவனாரை நிந்திப்பவர்களாக வளரக்கூடாது என எண்ணினார் நாரதர். மூவ ரிடமும் சிவனாரின் பெருமைகளை விவரித்து, சிவானுபூதி கிடைத்தால் உலகம் போற்ற வாழலாம் என எடுத்துரைத்தார். கயிலாயநாதனை வணங்குவதால் என்னென்ன பலன்கள் எனச் சொன்னவர், எப்படி வழிபடவேண்டும் என்பதை யும் விளக்கினார்.

மருமகனை மதித்து மரியாதை செய்தால், மகள் நன்றாக, நிம்மதியாக வாழ்வாள் என எண்ணுவது தானே உலக இயல்பு! ஆனால், மகளைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை தட்சன்; மருமகனுக்கு மரியாதை செய்யவும் தயாராக இல்லை. மகன்கள் மூவருக்கும் சிவனருள் கிடைப்பதில் அவனுக்குத் துளியும் விருப்பமில்லை. இத்தனைக்கும்... ஈசனை எண்ணித் தவம் இருந்து எண்ணற்ற வரங்களைப் பெற்று மகிழ்ந்தவன், தட்சன்.

நாரதரின் செயல் கண்டு கோபமுற்ற தட்சன், ''என் மைந்தர்களை என்னிடம் இருந்து பிரிக் கப்பார்க்கிறாயா?' என்று பூமிக்கும் வானுக்கு மாக எகிறிக் குதித்தான். அத்தோடு நின் றானா?! தன் மகன்களுக்குச் சிவனா ரின் வரம் கிடைக்கவேண்டும் என எண்ணிச் செயல்பட்ட நாரத முனி வருக்குச் சாபம் கொடுத்து, தன் கோபத்தைத் தணித்துக்கொண் டான்.

இந்தச் சாபத்தால் உடல் மெலிந்தார் நாரதர். நீண்ட தூரம் நடப்பதற்கான வலுவைக் கால்கள் இழந்தன; வயிறும் கன்னங்களும் ஒட்டிக்கொண்டன; கண்களில் ஒளி மங்கிற்று; மொத்த உடலும் சோர்வுற்றுத் தளர்ந்தது. ஆனால், உள்ளம் மட்டும் அதே உறுதியுடன், அதே சிவபக்தியுடன் இருந்தது.

மெள்ள, அந்த நதி நோக்கி வந் தார் நாரதர். அங்கே இலந்தைக் காடாக இருந்த பகுதியில், ஓர் இலந்தை மரத்தடியில் அமர்ந்து சிவனாரை நோக்கி தவம் புரிந்தார். பக்தியும் ஒருமித்த சிந்தனையும் கொண்டு செய்யப்பட்ட இந்தத் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ரிஷபாரூடராக நாரத முனிவருக் குக் காட்சி தந்தார். அந்த நிமிடமே, இழந்த தனது சீரான உடலை மீண்டும் பெற்றார் நாரதர்.

நாரதர் வழிபட்டுப் பலன் பெற்ற தலம் என்பதால், இந்த ஊர் நாரதர்பூண்டி எனப் பெயர் பெற்று, பிறகு நாரதம்பூண்டி என்றாகி, தற்போது நார்த்தாம் பூண்டி என அழைக்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத் தில் உள்ளது நார்த்தாம்பூண்டி. இங்கே, நாரதருக்குக் காட்சி தந்த ருளிய ஸ்ரீகயிலாசநாதர், அற்புத மான லிங்கத் திருமேனியராக கோயில் கொண்டிருக்கிறார். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீபெரியநாயகி.

இந்தத் தலத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. சிவ னாரின் இடப்பாகத்தைப் பெறுவதற்காக உமையவள் கடும் தவம் இருந்ததும், அதையடுத்துத் தனது திருமேனியின் இடப்பாகத்தைத் தந்த ஈசன் அர்த்தநாரீஸ்வரத் திருமேனி யராகக் காட்சி தந்ததும் தெரியும்தானே?! அப்படி, தாயார் உமையவள் தவம் இருப்பதற்கு மைந்தன் முருகப் பெரு மானும் உதவி செய்தார். பிள்ளையின் வெற்றிக்கு வேல் கொடுத்தாள், தாய். இங்கே... தாயாரின் எண்ணம் ஈடேற, நீராடித் தவம் இருக்க... வேல் கொண்டு நதியை உண்டாக்கி னான் மைந்தன்.

காஞ்சியம்பதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் செல்லும் வழியில், உரிய நேரங்களில் சிவ பூஜை செய்து வந்தாள் உமையவள். வாழைப்பந்தல் எனும் இடத்துக்குப் பார்வதிதேவி வந்தபோது, இருள் கவியத் துவங்கியது. நீராடுவதற்கும் பூஜைக்கும் தண்ணீர் வேண்டுமே! மகனை உதவிக்கு அழைத்தாள் தேவி. தன் கையில் இருந்த வேலை, கந்தக் கடவுள் மேற்கு திசை நோக்கி வீச, மலைக்குன்றுகளைப் பிளந்தபடி, தரையில் குத்திட்டு நின்றது வேல். அந்த இடத் தில் ஊற்றெனக் கிளம்பிய தண்ணீர், ஆறெனப் பெருகி வழிந்தோடியது. தாய்க்காக சேய் உருவாக்கிய ஆறு, சேயாறு எனப்பட்டது. இதையே பின்னாளில் 'செய்யாறு' என்கிறோம்.

செந்தில்வேலவன், செய்யாறு உருவாக் கிய அதேநேரம் இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. புத்திராண்டன், புருகூதன், பாண்டுரங்கன், போதசரன், போதன், கோமன், வாமன் ஆகிய ஏழு அந்தணர்கள் குன்றுகளில் அமர்ந்து தவம் இருந்தனர். வேலவன் வீசிய வேல், இந்த ஏழு அந்த ணர்களையும் தாக்கிவிட்டுப் பூமியில் குத்திட்டு நின்றது. இதனால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளான முருகப்பெருமான், செய்யாற்றின் வடகரையிலும் தென் கரையிலும் ஏழேழு லிங்கமூர்த்தங்களை ஸ்தாபித்து, வழிபட்டார். இதில், முருகப் பெருமானின் பாபம் நீங்கியதாகச் சொல்கிறது கந்த புராணம்.

காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், கரைப்பூண்டி, மண்டக்குளத்தூர் ஆகிய ஏழு தலங்களை சப்த கரை கண்டங்கள் என்றும், தாமரைப்பாக்கம், வாசுதேவம்பட்டு, நார்த்தாம் பூண்டி, தென்பள்ளிப்பட்டு, பழங்கோயில், கரப் பூண்டி, மண்டக்குளத்தூர் ஆகிய ஏழு தலங்களை சப்த கயிலாயத் தலங்கள் என்றும் போற்றுவர். இவற்றில் மூன்றாவதாகத் திகழும் நார்த்தாம்பூண்டி தலம், நீண்டகாலமாக திருப்பணிகள் ஏதுமின்றி, வழிபாட்டுக் கோலாகலங்கள் இன்றி இருப்பதுதான் வருத்தத்துக்குரிய ஒன்று! சோழ மன்னன் எழுப்பிய ஆலயம், விஜய நகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட கோயிலில், இன்றைக்கு உள்ளூர் அன்பர்களின் பெருமுயற்சியால் திருப்பணிகள் மெள்ள நடந்தேறி வருகின்றன.

தெற்கு நோக்கிய ஆலயம்; உள்ளே நுழைந்ததும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் தரிசனம் கிடைப்பதும் சிறப்பு. எனவே, இங்கு வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு வஸ்திரம் சார்த்திப் பிரார்த்தித்தால், குழந்தைகள் கல்வி- கேள்வியில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை. நுழைவாயிலில் கோபுரம் இல்லை. தற்போது, ஐந்தடுக்கு ராஜகோபுரத்தை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

முருகன் வழிபட்ட இந்தத் தலத்தில், ஸ்ரீசுப்ரமணியரின் சந்நிதி சிதிலம் அடைந்தே இருந்துள்ளது. பக்தர்களின் முயற்சியால், இப்போது அழகிய மண்டபத்துடன் சந்நிதி அமைக்கும் பணி நடந்து வருகிறது. மடப்பள்ளி, முழுவதும் இடிந்துவிட்டது! எனவே, இறைவனுக்கான நைவேத்திய உணவுகளை வீட்டிலேயே தயார் செய்து எடுத்து வந்துவிடுகிறார் அர்ச்சகர். ஊருக்கே படியளக்கும் சிவனாரின் ஆலயம், மடப்பள்ளி இல்லாமல் இருக்கலாமா?

ஸ்தல விருட்சம் - இலந்தை மரம். இந்த மரத்தடி யில் உள்ளது சிவலிங்க மூர்த்தம்; அருகில் வணங் கிய நிலையில் நாரத முனிவர்! ஸ்ரீகயிலாசநாதரை யும் முருகப்பெருமானையும் தரிசித்துவிட்டு, பிரா காரத்தில் உள்ள லிங்கமூர்த்தத்தையும் நாரத முனி வரையும் வழிபட... அனைத்து பாவங்களும் நீங்கும்; வீட்டில் சுபகாரியங்கள் தங்குதடையின்றி நடைபெறும் என சிலாகிக்கின்றனர் பக்தர்கள்.

கிழக்கு நோக்கியபடி, ஸ்ரீபெரியநாயகியும் ஸ்ரீகயிலாசநாதரும் காட்சி தருகின்றனர். விடியலின் திசை கிழக்கு. இவர்களை வணங்கினால் நமக்கு விடிவுகாலம் நிச்சயம். கோயிலின் விடியலுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்தால், நம் சந்ததி சீரும் சிறப்புமாகச் செழிக்கும் என்பது உறுதி!

ஸ்ரீகொத்தளத்து விநாயகர்!

கோயிலின் வெளிப் பிராகாரத்தில், ஸ்ரீகொத்தளத்து விநாயகரின் சந்நிதி உள்ளது. கோட்டை கொத்தளங்களைக் காத்தருளியதால், இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னன் ஒருவன், ஸ்ரீவிநாயகருக்கு கோயில் எழுப்பி, அனுதினமும் வழிபட்டு வந்தானாம்!

கோட்டை கொத்தளங்களை மட்டுமின்றி, பூமியைச் செழிக்கச் செய்து, விவசாயத்தையும் தழைக்கச் செய்வாராம் விநாயகப்பெருமான். நார்த்தாம்பூண்டி மற்றும் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்தவர்கள், 'இவரை வணங்கிவிட்டு, நிலத்தில் விதைக்க, அந்த முறை அமோக விளைச்சல் உறுதி' என சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.

எங்கே இருக்கிறது?

நினைத்தாலே முக்தி தரும் அற்புதத் தலமாம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது நார்த்தாம்பூண்டி. திருவண்ணாமலை - வேலூர் சாலையில், சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது நாயுடுமங்கலம் கூட்டுரோடு. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நார்த்தாம்பூண்டி திருத்தலம். நாயுடுமங்கலத்தில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

- வி. ராம்ஜி, படங்கள் பா. கந்தகுமார்