இந்தியாவில் இருந்து சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாணிபத்துக்காக இந்தோனேஷியாவுக்குச் சென்று குடியேறினர் இந்தியர்கள். அவர்களது வணிகம் செழிக்க, வாழ்க்கையும் வளம் பெற்றது. எனவே அங்கேயே தங்கிவிட்டனர்.
ஆனால், அடுத்தடுத்து அந்நியர்களால் ஏற்பட்ட தொல்லைகளால், பாலி எனும் இடத்தில் தஞ்சம் புகுந்தனர். இன்றைக்கு இந்த நகரம், உலகின் மிகப்பெரிய சுற்றுலா மையம். ஆனாலும், இங்கே வழிவழியாக வாழ்ந்து வரும் இந்தியர்கள், தங்களது கலாசாரத்தில் இருந்து இம்மியளவும் மாறவில்லை.
கடைக்குக் கடை... வாசலில் சிறியதொரு பெட்டி உள்ளது. இறைவனுக்கான தேங்காய், ஊதுபத்தி, பூக்கள் போன்றவற்றை இந்தப் பெட்டியில் சமர்ப்பித்தால் போதும்; அவை, அங்கிருக்கும் ஆலயத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்படி ஆன்மிகம் செழித்து வளரும் தேசத்தில், அழகுற அமைந்திருக்கின்றன இஸ்கான் ஆலயங்கள்.
இந்த ஆலயத்தை இங்கே நிறுவிய ஸ்ரீல ப்ரபுபாதா, ''இந்தப் புனித பூமியில் காலடி எடுத்து வைக்கும்போதே, ஒருவித அதிர்வை உணர்ந்தேன்'' என்றார். ஆமாம்... பாலி நகரில் மூன்று, இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் ஒன்று என ஓங்கி வளர்ந்து நிற்கின்றன இஸ்கான் ஆலயங்கள்.
'ஜப்பானில் புரபசர் ஒருவர் செய்த ஆராய்ச்சி இது. ஒரேயரு தண்ணீர்த் துளியை எடுத்துக்கொண்டு, சத்தங்களையும் சொற்களையும் இணைத்து ஆராய்ச்சி செய்தார். 'உன்னைப் பார்த்தால் வெறுப்பாக உள்ளது. என்னை விட்டுச் சென்றுவிடு' என்று சொன்னபோது, அந்த நீர்த்துளியில் சில மாற்றங்கள் நிகழ்ந்ததாம். அதேபோல், 'உன்னைப் பார்த்தாலே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உன்னை ரொம்பவே பிடித்திருக்கிறது' என்றபோது, வேறுமாதிரியான மாற்றங்கள்!
|