சிறப்பு கட்டுரை

வாசகர் தகவல்கள்

மார்க்கண்டேயர் மீது எமதர்மன் வீசிய பாசக்கயிறு, சிவலிங்கத்தின்மீது விழுந்ததல்லவா?! இதில் கோபம் கொண்ட ஈசன், எமனின் பதவியைப் பறித்தார். இழந்த தனது பதவியைப் பெறுவதற்காக, தலங்கள் பலவற்றுக்கும் சென்று, சிவலிங்க பூஜை செய்து வழிபட்டார் எமதர்மன்.

அப்போது, ஓரிடத்தில் மணலால் சிவலிங்கம் செய்ய எண்ணியவர், ஒரு குச்சியால் தரையைத் தோண்டினார். அந்த இடத்தில் இருந்து நுரையாகப் பொங்கவே... மணலுடன் நுரையையும் சேர்த்து லிங்கமாக உருவாக்கிப் பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து, தவம் இருந்தார்.

இதில் மகிழ்ந்த சிவனார் அவருக்குக் காட்சி தந்ததோடு, பறித்துக்கொண்ட பதவியையும் அவருக்குத் தந்தருளினார். காலனுக்கு வாழ்க்கை, பதவி என காலத்தைக் கொடுத்து அருளியதால், இந்தத் தலத்து இறைவனுக்கு ஸ்ரீகாலகாலேஸ்வரர் எனும் திருநாமம் உண்டானதாம்!

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகாலகாலேஸ்வரர் ஆலயம். மணல் லிங்கம் என்பதால், லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் கிடையாது.

ஸ்ரீகாலகாலேஸ்வரரை வணங்கி வழிபட்டால், ஆயுள் நீடிக்கும்; ஆரோக்கியம் கூடும்; இழந்த பதவியைப் பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தத் தலத்தின் விருட்சம் - வில்வம். இந்த மரத்தில் காய்க்கும் காய்கள், உருண்டையாக இல்லாமல், கிட்டத்தட்ட லிங்க வடிவிலேயே இருப்பது விசேஷம்!

திருவாரூர் மாவட்டம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் வழியில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம். இந்தத் தலத்தில் சிவபெருமானின் வாகனமாகவே எமதர்மன் இருப்பது சிறப்பு என்கின்றனர். மேலும் இந்தத் திருத்தலத்தை ஆயுள் தோஷங்களை நிவர்த்தி செய்யும் தலம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். ஆலயத்தின் திருக்குளம், கங்கைக்கு நிகரான தீர்த்தமாம்; எனவே, குப்த கங்கை எனப் போற்றப்படுகிறது. கார்த்திகை மாத ஞாயிறன்று இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தக் குளத்தில் நீராடி, இறைவனை வழிபட, ஆயுள் தோஷம் நீங்குவதுடன், நாம் செய்த பாவம் அத்தனையும் தொலையும் என்பது நம்பிக்கை!

- இரா. பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு

திரயோதசி ஷய பார்வதி விரதம்

ஆடி மாத, சுக்லபட்ச திரயோதசியில் அனுஷ்டிக்கும் விரதம் இது. இந்த நாளில், அன்னை ஸ்ரீபார்வதி தேவியை எண்ணி விரதம் இருந்து வழிபட... எண்ணிய யாவும் கைகூடும்; அனைத்திலும் ஜெயம் உண்டாகுமாம்!

அஸ்வத்த பிரதக்ஷிணம்

ஆடி மாதத்தின் சுக்லபட்ச ஏகாதசி, துவாதசி மற்றும் பௌர்ணமி ஆகிய நாட்களில் இந்த விரதத்தை மேற்கொள்வர். இந்த விரத நாளில், அஸ்வத்த (அரச) மரத்தை வலம் வந்து வழிபட, சகல நலன்களும் கைகூடும்; துஷ்ட தேவதைகள் நம்மை அண்டாது; நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பர்.

கோ பத்ம விரதம்

ஆடி மாத, சுக்லபட்ச ஏகாதசி நாளில் செய்யப்படும் விரதம் இது. பசுக்கள் கட்டும் தொழுவத்தில், கோமயத்தால் நன்றாக மெழுகி, பச்சரிசி மாவில் தாமரைக் கோலமிட்டு, ஐந்து வண்ணங்களால் அழகுபடுத்தி, அதன் நடுவில் (சர்வதோ பத்ர மண்டலத்தில்), ஸ்ரீவிஷ்ணுவை பிரதிஷ்டை செய்து, கன்றுடன் கூடிய பசுவை, ஆச்சார்யருக்குத் தானம் செய்வதுடன், அன்னதானமும் செய்ய... சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப்பெறுவர் என்பது ஐதீகம்!

மாஸ உபவாஸம்

இந்த விரதத்தை ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை சுக்லபட்ச ஏகாதசி வரை மேற்கொள்வர். ஸ்ரீலட்சுமிநாராயணரை எண்ணி வழிபட... லட்சுமி கடாட்சம் பெருகும்.

ஆஜாட சுக்ல துவாதசி விரதம்

ஆடி மாத, சுக்ல துவாதசியில், ஸ்ரீமகா விஷ்ணுவை எண்ணி வழிபடும் விரதம் இது! இந்த விரதத்தை மேற்கொண்டால், சகல ஐஸ் வரியங்களும் கிடைக்கும்; தொழில் விருத்தி ஏற்படும்!

- கிருஷ்ண. மனோகரன், குயவர்பாளையம்

கல்யாண வரம் தரும் தாழம்பூ பாவாடை

கல்யாணத் தடைகள் நீங்கவும், விரைவில் திருமணம் நடக்க வேண்டுமென்றும் நினைப்பவர்கள் தாழம்பூ மடல்களால் ஆன பாவாடை தைத்து, அம்பாளுக்கு சார்த்தி வழிபட, விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது 'புஷ்ப' விதி. தாழை மடல்களைச் சேர்த்து தைக்கும்போது, அவற்றின் நுனிப்பகுதி மேற்புறம் இருக்கும்படி அமைத்து தைப்பது முக்கியம்.

நாக தோஷத்துக்கான பரிகாரத் திருத்தலம் காளஹஸ்தி. இங்கே அருள்பாலிக்கும் ஸ்ரீஞானப்பூங்கோதை அம்பாளின் ஒட்டியாணத்தில் 'கேது' உருவம் உள்ளது. இந்த அம்பாளை வழிபட கேது தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

- எஸ். விஜயா சீனிவாசன், திருச்சி

ஆவுடையார்கோவில் அற்புதம்

திருப்பெருந்துறை ஆவுடையார்கோவில் கருவறையில் லிங்கம் இல்லை. ஆவுடையார் மட்டுமே உள்ளது. இங்கே கருவறையில் அம்பாள் விக்கிரகத்துக்குப் பதில் இரண்டு பொற்பாதங்கள் மட்டுமே தரிசிக்கக் கிடைக்கும். கற்பூர ஆரத்தியும் வெளியே கொண்டுவரப்படுவது இல்லையாம்!

- எஸ். பரிமளா, கோபி

முருகன் எத்தனை முருகன்!

யோக நிலையில் அமர்ந் திருக்கும் முருகப் பெருமானின் சிலா திருமேனியை மதுராந்தகம் அருகில் உள்ள குமாரவாடி, அழகேசுவரப் பெருமாள் கோயிலில் காணலாம்.

ஆண்டுக்கு மூன்று முறை- அதாவது, ஐப்பசி கந்த சஷ்டி விழாவின்போதும், தை மாதம் தெப்பத் திருவிழாவின்போதும், பங்குனி மாதத் திருவிழாவின்போதும் ஆக மூன்று சூரசம்ஹாரம் நடைபெறும் சிறப்பு கொண்டது திருப்பரங்குன்றம் திருத்தலம்.

கொல்லிமலையில் உள்ள பழநியப்பர் கோயிலில் உள்ள முருகன் சிலையில், மகுடத்துக்குப் பதிலாக கொண்டை போன்ற அமைப்பு உள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் இது!

- ஜெயலெட்சுமி கோபாலன், சென்னை-64

ஏலகிரி முருகன் கோயில்

கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோயில் போல ஏலகிரியில் வேலவன் கோயில் அமைந்துள்ளது. பக்திக்கும், பரவசத்துக்கும் உரிய இடமாக இது திகழ்கிறது. ஏலகிரி மலையின் உச்சியில் இது அமைந்துள்ளதால் பச்சைப்பசேல் என்ற மலையின் எழில் தோற்றத்தையும் கண்டு ரசிக்கலாம். ஆடி மாதத்தில் இக்கோயிலில் நடைபெறும் விழா சிறப்பானது. கோயிலின் முன்னே கடோத்கஜனின் பிரமாண்டமான சுதைச் சிலையும் உள்ளது.

மந்திரகிரி

முருகன் கையில் சேவல்கொடி இருப்பது வழக்கமானதுதான். ஆனால், சேவலையே கையில் தாங்கி நிற்கும் வித்தியாசமான முருகனின் திருக்கோலத்தைக் காண்பதரிது. பல்லடம் அருகில் இருக்கும் தென்சேரி மலை - மலைப்பாளையத்தில் உள்ள மந்திரகிரி வேலாயுதசுவாமி கோயிலில், கையில் சேவலோடு காட்சி தரும் முருகனைத் தரிசிக்கலாம்.

- எஸ். ராமச்சந்திரன், சென்னை-4

நிலாத் திருவிழா

அபிராமி அந்தாதி பாடிய அபிராமிபட்டர், 'விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு...' என்ற (79-வது) பாடலைப் பாடியதும், அவருக்குக் காட்சிகொடுத்த ஸ்ரீஅபிராமி, தன் தாடங்கத்தை விண்ணில் வீசியெறிந்து வானம் முழுவதும் பௌர்ணமி போல் ஓளிவீசச் செய்தாளாம்.

தேவியின் இந்தத் திருவிளையாடல் நிகழ்ந்த தினம் - ஆடி அமாவாசை. அன்றைய திதி பௌர்ணமி என்று மன்னனிடம் கூறிய தன் பக்தன் அபிராமிபட்டரின் வாக்கை மெய்யாக்க அன்னை நடத்திய அற்புதம் அது. இதை நினைவூட்டும் விதம், வருடம் தோறும் ஆடி அமாவாசை திருநாளில், திருக்கடவூர் தலத்தில், நிலாத் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், திருக்கடவூர் சென்று அபிராமவல்லியை தரிசிக்க ஆனந்தம் பெருகும். இயலாதவர்கள், அபிராமி அந்தாதியைப் பாடி, அம்பாளை மனதால் தியானித்து வணங்கி இன்னருள் பெறலாமே!

- ஆர். ராஜலட்சுமி, ஹூப்ளி

பூ வாக்கு தருவாள் பொன்னாச்சியம்மன்!

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி - ஆப்பக் கூடல் பாதையில், சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது பெருந்தலையூர். இங்கே, பவானி ஆற்றின் கரையில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீபொன்னாச்சியம்மன். பொன் அரளி மலர்கள் பூத்துக்குலுங்கிய இடத்தில் தோன்றியதால், அம்மனுக்கு இந்தப் பெயர் வந்ததாம்.

18-ஆம் நூற்றாண்டில் நடந்த வழக்கு ஒன்றில், பக்தர் ஒருவருக்காக, பொன்னாச்சியம்மனே பொன்னிற பட்டாடை உடுத்தி வந்து, நீதிமன்ற கூண்டிலேறி சாட்சி சொன்னாளாம். இன்றும் மிக சாந்நித்தியத்துடன் திகழ்கிறாள் இந்த அம்பிகை. இந்தப் பகுதி மக்கள், பொன்னாச்சியம்மனை வணங்கி பூ வாக்குக் கேட்டு, அவள் அனுமதி கொடுத்தபிறகே புதிய காரியங்களில் இறங்குகிறார்கள். சில விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் கலங்கும்போது, தெளிவான முடிவு வேண்டியும், அம்மனிடம் பூ வாக்கு கேட்பார்கள். பூ வரம் கேட்கும் நிகழ்ச்சி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாலை நேர பூஜையின்போது நடைபெறும். அம்மனும் பக்தர்களுக்கு தெளிவான தீர்வை உணர்த்துவதுடன், பிரச்னைகள் எளிதில் முடிவடையவும் அருள்புரிகிறாள்.

- அம்சவள்ளி, சென்னை-21

குழந்தைகளைக் காக்கும் ஸ்ரீகுஞ்சுமாரியம்மன்

சேலம் மாவட்டம்- தாரமங்கலத்தில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு குஞ்சுமாரியம்மன், குழந்தைகளை காக்கும் கருணைத் தாயாகத் திகழ்கிறாள்.

தாரமங்கலத்தில் சந்தைப்பேட்டைக்கு அருகில் உள்ளது ஸ்ரீகுஞ்சுமாரியம்மன் திருக்கோயில். நுழைவாயில் தூண்களை இரண்டு பூதகணங்கள் தாங்குவது போன்ற சிற்ப வேலைப்பாடு அற்புதம். குழந்தைகள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ இந்த அம்பிகையை வழிபடுகிறார்கள். இந்த அம்மனுக்கு தை மாதம் நடைபெறும் திருவிழா விசேஷம்.

தாரமங்கலத்திலேயே கோயில் கொண்டிருக்கும் இன்னொரு தெய்வம் - கண்ணனூர் மாரியம்மன். வணிகத்தின் பொருட்டு கண்ணனூர் சென்று திரும்பிய வணிகர்களுக்கு பாரக்கல்லாக இருந்து உதவிய இந்த அம்மன், வணிகர்களின் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறாள். இந்தக் கோயிலில் ஆடிமாதம் திருவிழா களைகட்டும். அப்போது உலோக மணிகள், மரத்தொட்டில்கள் கட்டி பிரார்த்தனை செலுத்துகின்றனர் பக்தர்கள்.

- அம்சவள்ளி, சென்னை-21

ஆடி பதினெட்டில்...
அம்மனுக்கு வளைகாப்பு!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகில் வெக்காளி அம்மன் கோயில் உள்ளது. இங்கு, ஆடி பதினெட்டாம் நாளன்று அம்மனுக்கு வளைகாப்பு உற்ஸவம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்தத் திருநாளில் ஸ்ரீவெக்காளி அம்மன் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசிப்பதுடன், ஆலய வைபவம் நிறைவுற்றதும் அருள்பிரசாதமாகத் தரப்படும் வளையல்களை அணிந்துகொண்டால், விரைவில் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.