தொடர்கள்

தசாவதாரம் திருத்தலங்கள்!

அன்னப் பறவைகள் அழகுநடை பயில, செங்கமலப் பூக்கள் இதழ் விரித்து மணக்க... கிழக்குத் திசையில் இந்திர நீல நிறத்தில் ரிக் வேதமும், மேற்கில் பதுமராக நிறத்தில் சாம வேதமும், வடக்கில் ஸ்படிக நிறத்தில் யஜுர் வேதமும், தெற்கே கறுநிறத்தில் அதர்வண வேதமும் ஒளிவீசித் திகழ... ஓங்கார நாதமும் கலைமகளின் வீணை இசையுமாக தெய்வீகச் சூழல் பொருந்தி காட்சி தரும் சத்தியலோகம், அன்று களையிழந்து கிடந்தது!

அந்த பிரமாண்ட உலகின் நாயகனாம் பிரம்மதேவனும் சோகத்தில் ஆழ்ந்திருந்தார். காரணம்?!

பூலோகத்தைக் கவர்ந்து சென்று பாதாள லோகத்துக்கும் கீழே, சமுத்திரத்தில் மறைத்து வைத்துவிட்டானாம் இரண்யாக்ஷன். மனிதர்கள் உட்பட, பூவுலகில் வசிக்கும் ஜீவராசிகள் என்ன ஆனார்கள் என்றே தெரியாத நிலைமை! அதுமட்டுமா? அசுரனின் செய்கையால், தேவ- பிதுர் யக்ஞங்களும் தடைப்படும். இதனால், ஒட்டு மொத்த தேவர்களும் பாதிக்கப்படுவார்களே!

தெய்வங்களையும் இந்திராதி தேவர்களையும் பிரார்த்தித்துச் செய்யப்படும் வேள்விகளும் யாகங்களும் தேவ யக்ஞம் ஆகும். மனிதர்கள், பிதுர் லோகத்தில் இருக்கும் தங்களுடைய முன்னோருக்காகச் செய்யும் கடமைகள் பிதுர் யக்ஞங்கள் ஆகும். இவை யாவும் தொடர்ந்து நடைபெற்றால்தான், நெய், அன்னம் என்று வேள்வி- யாகங்களில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் தேவாதிதேவர்களுக்கு உணவாக வந்து சேரும்.

இப்போது, இரண்யாக்ஷனால் அனைத்தும் தடைப்பட்டுப்போக, பாவம் தேவர்கள்... திண்டாடிப் போனார்கள்; திக்கற்றுத் தவித்தவர்கள், பிரம்மதேவனிடம் ஓடிவந்தார்கள்.

'படைக்கும் தெய்வமே... பூலோகத்தை மீட்பது எப்படி? எங்களின் துயர் நீங்க வழி என்ன?' என்று அவர்கள் கேட்க, பதில் சொல்லத் தெரியாமல் திகைத்தார் பிரம்மதேவன். எனினும், தனது இயலாமையை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தேவர்களுக்கு ஆறுதலும் தைரியமும் சொல்லி அனுப்பிவிட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தார்.

'எல்லாம் அந்த நாரதனால் வந்த வினை! அவன் ஏன் சோணபுரத்துக்குச் சென்றான்?! அப்படியே சென்றிருந்தாலும், வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கக்கூடாதா?! முக்காலத்தையும் அறிந்தவன் என்பதற்காக அசுரர்களிடமுமா எதிர்கால நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டிருப்பது... ச்சே..!' - நடந்ததையே மனம் மீண்டும் மீண்டும் அசைபோட, பிரச்னைக்குத் தீர்வு காண முடியாமல் தவித்தார் நான்முகன்.

எப்படி முடியும்... இது, அவரால் முடியக்கூடிய காரியமா?! சாட்சாத் அந்த பகவானால்... ஸ்ரீமந் நாராயணனால் மட்டுமே அல்லவா இதற்குத் தீர்வு காணமுடியும்! கொடியவனான இரண்யாக்ஷனை எதிர்ப்பதும், அவனை அழிப்பதும், அந்தப் பரம்பொருளுக்கு மட்டும்தானே சாத்தியம்!

ஆமாம்... யார் இந்த இரண்யாக்ஷன்?!

சோணபுரம்- இங்குள்ள உயிர்களைப் பறிக்கக் காலனே அஞ்சி நடுநடுங்கும் அசுரத் தலைநகரம். இதன் அதிபதிகள்- இரண்யகசிபு மற்றும் இரண்யாக்ஷன்; காசியபர்- திதிதேவி ஆகியோருக்குப் பிறந்த இரட்டைப் புதல்வர்கள்.

காசியபரா... அவர் தவசீலராயிற்றே? அவருக்கு எப்படி அசுரக் குழந்தைகள்?! அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு!

முதலாவது, இந்தத் தொடரில் நாம் ஏற்கெனவே பார்த்த ஜய- விஜயர்களின் சாபக்கதைதான்! ஆணவத்தால் அறிவிழந்து, சனகாதி முனிவர்களை வைகுண்டத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து, அவர்களால் சாபம் பெற்ற ஜய- விஜயர்கள், பூமியில் ஸ்ரீமகாவிஷ்ணுவின் எதிரிகளாக மூன்று ஜென்மங்கள் எடுக்கவேண்டும் என்பது விதி. அதன்படி காசியபர்- திதிதேவிக்கு மைந்தர்களாக... இரண்யகசிபு, இரண்யாக்ஷனாகப் பிறந்தனர்.

இரண்டாவது காரணம்- திதிதேவியின் மோகம்!

ஆசை வெட்கமறியாது என்பார்கள். ஆனால் திதிதேவிக்குள் ஆசையுடன் மோகமும் சேர்ந்து, காமமாக அல்லவா பரிணமித்துவிட்டது?!

கூடாத வேளையில், கணவர் காசியபருடனான கூடலை விரும்பினாள் அவள். ருத்ர கணங்கள் சஞ்சரிக்கும் சந்த்யா காலத்தில், அசுரவேளையில் கர்ப்பம் தரித்தாள். கணவனின் அறிவுரையை மீறியதாலும், முகூர்த்த தோஷத்தாலும் அசுர குணமுடைய குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.மூத்தவன் இரண்யகசிபு என்ற பெயரிலும், இளையவன் இரண்யாக்ஷன் என்று பெயர்கொண்டும் வளர்ந்தனர். கடும்தவம் இருந்து வரங்கள் பல பெற்றனர்.

பிறகென்ன... திக்விஜயம் செய்து, ஒட்டுமொத்த பூவுலகையும் தங்கள் வசமாக்கிக்கொண்டனர் அந்த அசுர சகோதரர்கள். இந்த நிலையில்தான், அவர்களின் தலைநகரமாம் சோணபுரத்துக்கு வருகை புரிந்தார் நாரதர்.

திரிலோக சஞ்சாரியான நாரதரை அகம் மகிழ வரவேற்று, உபசரித்து, வணங்கினர் அசுர சகோதரர்கள். நாரதரும் மகிழ்ச்சியுடன் அவர்களை ஆசிர்வதித்தார்.

அவரிடம், ''ஸ்வாமி! சகல லோகங்களிலும் சஞ்சரிக் கும் தாங்கள், அங்கெல்லாம் எங்களது ஆட்சி குறித்து பேசப்படும் விமர்சனங்களையும் அறிந்திருப்பீர்கள். தேவர்களும், மானிடர்களும், உங்களின் சக தோழர்களும் எங்களைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்?'' என்று கேட்டான் இரண்யாக்ஷன்.

அதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்த நாரதர், ''நாராயண... நாராயண... உங்களைப் பற்றிப் பேச வாய் திறப்பார்களா என்ன?'' என்றார் கேலியாக.

இரண்யகசிபு இடைமறித்து, ''எனில், தாங்களே சொல்லுங்கள்... எங்களது ஆட்சி பரிபாலனத்தில் ஏதேனும் குறை இருந்தால் திருத்திக்கொள்கிறோம்'' என்றான்.

நாரதருக்குத் தெரியாதா... அவர்களது குறையைச் சுட்டிக்காட்டினால் மறுகணம் என்ன நடக்கும் என்று! எனவே, ''அசுரத் தலைவர்களே! இதுவரை, ஈரேழு பதினான்கு உலகங்களிலும் உங்களைப்போல ஆட்சி செலுத்துபவர்கள் எவரும் இல்லை!'' என்று பொதுவாகச் சொல்லிவைத்தார்.

ஆனாலும், இரண்யாக்ஷன் விடவில்லை. ''அப்படியானால் இனிவரும் காலத்தில், எங்களை மிஞ்சும் அளவுக்கு ஆட்சியாளர்கள் எவரேனும் பிறப்பார்களோ?'' என்று கேட்டான்.

இப்படியரு தருணத்தை எதிர்பார்த்து தானே நாரதரும் காத்திருந்தார். இப்போது அவர் சொல்லப்போகும் பதிலும், அதன் விளைவுகளும்தானே அந்த அசுர சகோதரர்களில் ஒருவனது அழிவுக்குக் காரணமாகப் போகிறது!

தொண்டையைச் செருமிக்கொண்டு பதில் சொன்னார் அவர்... ''ஆமாம் இரண்யாக்ஷ£! உங்கள் குலத்தில் தோன்றப்போகும் பலி என்பவன், மிகச் சிறந்த சக்ரவர்த்தியாகத் திகழ்வான். ஆனால்...''

''ஆனால்..? ஆனால் என்ன..?'' - அதிர்ச்சியை அடக்க முடியாமல் கேட்டான் இரண்யகசிபு.

''எம்பெருமான் நாராயணன், தமது தந்திரத்தால் அவனுடைய உடைமைகள் அனைத்தையும் பிடுங்கிக் கொள்வார். அசுரகுலத்துக்கே உரிய பூவுலகமும் அவரது வசமாகிவிடும்'' என்றார் நாரதர்.

அவ்வளவுதான்... கடும்கோபம் கொண்டான் இரண்யாக்ஷன். ''நாங்களும் எங்களுடைய வம்சமும் ஆளக்கூடிய பூமியைக் கைப்பற்றுவதற்கு மகாவிஷ்ணு அவ்வளவு வல்லமை மிகுந்தவரா? எங்களின் பூமி அவருடைய கையில் அகப்படாமல் செய்து விட்டால்..? இப்போதே புறப்படுகிறேன்!'' - ஆவேசத்துடன் முழங்கியவன், கையில் கதாயுதத்துடன் புறப்பட்டான்.

சற்றும் தாமதிக்காமல், பூமிப் பந்தைத் தூக்கிக்கொண்டு கடலுக்குள் பாய்ந்தான். பாதாள லோகத்தை அடைந்து பூமியை ஒளித்துவைத்தான்.

'பெரும் மலைகளும், ஆர்ப்பரிக்கும் ஆறுகளும், காடுகளும், கோடானுகோடி ஜீவராசிகளும் வசிக்கும் பிரமாண்டமான பூமிப்பந்தை அந்தத் திருமாலின் கண்களில் இருந்து மறைத்து விட்டோம். இனி, பூலோகம் என்றென்றும் அசுரர்களுக்கே சொந்தம்' என்று களிப்படைந்தான்.

ஆனாலும் அவனுக்குள் ஓர் எண்ணம்... 'ஒருவேளை, வருங்காலத்தில் இந்தத் தேவர்கள் ஒன்றுகூடி அசுரர்களைத் தாக்கினால்..? விடக்கூடாது! அவர்களையும் அடியோடு வேரறுக்க வேண்டும்..!' - ரத்த வெறியுடன், பாதாளலோகத்தில் இருந்து புறப்பட்டான் இரண்யாக்ஷன்.

சிந்தனை கலைந்த பிரம்மதேவன், ஒரு முடிவுக்கு வந்தார். 'அசுரனை அழிக்க வேண்டும். தேவர்களைக் காப்பாற்றுவதோடு, பூவுலகையும் மீட்டாக வேண்டும். இதற்கு ஸ்ரீமந் நாராயணரைச் சரணடைவதைத் தவிர, வேறு வழியில்லை' என்று தீர்மானித்து, கண்மூடி வணங்கினார்; 'வையகம் காக்க வருவாய் இறைவா... பூமியை மீட்க அருள்வாய்' என வாய்விட்டுப் பிரார்த்தித்தார்.

மாலவனை மனதில் இருத்தி அஷ்டாக்ஷர மந்திரத்தை உச்சரிக்கத் துவங்கியவர் மெள்ள மெள்ள தியானத்தில் ஆழ்ந்தார்!

- அவதாரம் தொடரும்...