தொடர்கள்

புனித பூமியில் மனித தெய்வங்கள் - கபீர்தாஸ்

எளிமை, மனிதத்தன்மை, கருணை, மனத் திருப்தி ஆகியவற்றை இரண்டே வரிகளில் அழகுற விளக்கும் நூற்றுக்கணக்கான கவிதைகளை இயற்றியவர்; தூய பக்தியுடன் மத ஒற்றுமையைப் போற்றி, மக்களை நல்வழிப்படுத் தியவர்; பிறப்பிலும் வளர்ப்பிலும் அதிசய நிகழ்வு களைக் கொண்ட அந்த பக்த கவி... கபீர்தாஸ்!

கி.பி.1440-ஆம் வருடம்... உத்தரப்பிரதேச மாநிலத்தில், பிரதாப்கர் எனும் ஊரில் வசித்த ஏழை அந்தணப் பெண், கணவரைப் பறிகொடுத்த சில மாதங்களில், ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். வளர்க்க வழி ஏதுமின்றி, அந்தக் குழந்தையை நிராகரித்தாள் அந்தத் தாய்.

காசியில், நெசவுத் தொழில் செய்து வந்தார் தமால் எனும் இஸ்லாமியர். அவரும் அவரின் மனைவி ஜிஜ்ஜா பீபியும் இறைவழிபாடு மற்றும் பக்கிரிகளுக்கு அன்னதானம் செய்வதில் ஈடுபாடு கொண்டவர்கள். முதுமை அடைந்துவிட்ட அந்தத் தம்பதிக்கு, குழந்தை பாக்கியம் இல்லை என்பதே குறை.

அவர்களின் வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர், 'உங்களின் விருந்தோம்பல் தொடர, இறைவன் உங்களுக்கொரு குழந்தையைத் தந்தருள்வான்' என வாழ்த்திச் சென்றார். 'இந்த வயதில் நமக்குக் குழந்தையா?' என்று மெள்ளச் சிரித்துக் கொண்டார் தமால்.

ஒருநாள்... நெய்வதற்கான பட்டு நூலிழைகளை கங்கையில் அலசிக்கொண்டிருந்தார் அவர். அப்போது, பட்டு நூல் கையிலிருந்து நழுவி, ஆற்றில் மிதந்து சென்றது. அதைக் கைப்பற்றிவிடும் எண்ணத்தில், பட்டு நூலைத் தொடர்ந்தபடி, கரையோரமாகவே ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தமால். அப்படியே ஊரைக் கடந்து, காட்டுப் பகுதிக்கே வந்துவிட... அங்கே குழந்தையின் அழுகுரல் கேட்டது.

திடுக்கிட்டவர், அழுகுரல் வந்த திசையில் ஓடினார். கங்கைக் கரையில் கைக்குழந்தை ஒன்று அழுதபடி கிடப்பதைக் கண்டார். ஓடிப்போய் அள்ளியெடுத்தவர், 'பெரியவரின் வாக்கு பலித்துவிட்டதே' என வியப்பும் சந்தோஷமுமாக வீட்டுக்கு வந்து, அந்தக் குழந்தையை மனைவியிடம் ஒப்படைத்தார். இறைவனின் திருப்பெயர்களில் ஒன்றான, 'மேன்மையானவன்' எனும் பொருள் படும்படி, 'கபீர்' என்று பெயர் சூட்டி, குழந்தையைக் கனிவுடன் வளர்த்தனர் சிறுவனாக வளர்ந்த கபீர், இறை பக்தியிலும் நெசவுத் தொழிலிலும் ஆர்வம் காட்டினான்.

ஒருநாள் கடைத்தெருவில், கபீர் நெய்த துணியை வாங்கிய அந்தணர் ஒருவர், ராம நாம மகிமையையும், குரு ஒருவரிடம் உபதேசம் பெறுவதன் சிறப்பையும் சொல்லிச் சென்றார்.

அந்தக் காலகட்டத்தில், ராமானந்தர் எனும் துறவி, காசியில் வசித்தார். அவரை குருவாக ஏற்க எண்ணிய கபீர், அவரின் ஆஸ்ரமத்துக்குப் பலமுறை சென்று, உபதேசம் பெற முயன்றான். வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவன், தங்கள் குருநாதரை அடிக்கடி சந்திக்க முயற்சிப்பதை சந்தேகத்துடன் கவனித்த சீடர்கள், ஒருகட்டத்தில் கபீரை அடித்து விரட்டினர். ஆனாலும், ராமானந்தரை குருவாக ஏற்று உபதேசம் பெறவேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்த கபீர், அதற்காக ஒரு யுக்தியையும் கையாண்டான்.

தினமும் விடிவதற்கு முன்னதாக எழுந்து, கங்கையில் நீராடுவது ராமானந்தரின் வழக்கம். அன்றைக்கும் அதே போல், கங்கையில் நீராடுவதற் காகப் படித்துறையில் இறங்கினார் ராமானந்தர். திடீரென அவருடைய கால்கள், எதன் மீதோ பட்டு இடறின. குனிந்து பார்த்தவர், அதிர்ந்தார். 'அடடா... படுத்திருக்கும் சிறுவனை மிதித்துவிட்டோமே...' எனப் பதறிய வர், எப்போதும் உச்சரிக்கும் 'ராம ராம' எனும் மந்திரத்தை உச்சரித்தபடி சென்றார்.

குளித்துவிட்டுத் திரும்பிய ராமானந்தர், தன் கால்களில் மிதிபட்ட சிறுவன் அங்கு அமர்ந்திருப்பதைக் கண்டார். அவனது கையில், 'கபீர்' எனப் பச்சைக் குத்தப்பட்டிருந்தது. தன்னிடம் உபதேசம் பெற முயன்று இயலாமல் போகவே, இப்போது இந்தக் காரியத்தில் இறங்கியிருக்கிறான் என உணர்ந்து, உருகினார் ராமானந் தர். அவனை, மனமுவந்து சீடனாக ஏற்பதாகச் சொன்னார். 'ஸ்ரீராம நாமத்தையே ஜபித்து வா!' என ஆசீர்வதித்தார். அதையடுத்து, ராம பக்தியில் திளைத்தான் கபீர்.

தூய பக்திக்கு வெளிவேஷங்கள் எதற்கு? அங்கே துறவறம் இல்லை; காவி உடை இல்லை; தலை மழித்தல் அவசியம் இல்லை. ஆகவே, நெசவுத் தொழிலுடன், சாதாரண உலக வாழ்க்கையை நடத்தியபடி, உள்ளே இறை பக்தியுடன் வாழ்ந்து வந்தார் கபீர். சுந்தரா எனும் பெண்ணை மணந்தார். ஒழுக்கம் மிகுந்த இல்லறம், ஸ்ரீராமனின் மீது காதல் கொண்ட மனம், ஏழைகளுக்கு உணவளித்த பிறகே உண்ணும் குணம் ஆகியவை கபீரிடம் இருந்தன. அவரின் மனத் தடாகத்தில், ஞானத் தாமரை மலர்ந்தது. அதன் வெளிப்பாடாக, அவருக்குள்ளிருந்து போதனை களும் கவிதைகளும் மணம் பரப்பின!

'வாழ்க்கை என்பது இரண்டு தத்துவங்களின் கூட்டுறவு; அவை, ஜீவாத்மாவும் பரமாத்மாவும்! ஜீவாத்மாவானது, ஒழுக்கம் மற்றும் பக்தியால் தன்னையே ஒப்படைத்து, பரமாத்மாவுடன் இரண்டறக் கலப்பதுதான் முக்தி!'

'உயிர்களுக்குள் வேறுபாடு கிடையாது; ஜாதி- மதங்களுக்குள் உயர்வு- தாழ்வு இல்லை. மதத்தின் பெயரால் சண்டையிடுவது பயனற்ற செயல்; இறைவன் ஒருவனே! அவன் எதிர் பார்ப்பது, ஆடம்பரங்களையோ வெறும் சடங்குகளையோ அல்ல; தூய பக்தியை மட்டுமே!' என்பன போன்ற கருத்துகளை, எளிய கவிதைகளாகச் சொல்லி, மக்களுக் குப் போதித்தார் கபீர். கபீர்தாஸ் என அனைவராலும் புகழப்பட்டார்.

கபீர் கல்வி கற்கவில்லை; எழுதக் கற்றுக்கொண்ட வார்த்தையும் 'ராம்' என்பது மட்டுமே! ஆனால், 'தோஹா' எனும் ஈரடிப் பாடல் களில், எளிமையான சொற்களில், அவர் எடுத்துரைத்த சமயக் கொள்கைகளும் வாழ்வியல் தத்துவங்களும் லட்சக்கணக்கான மக்களை அவர்பால் ஈர்த்தன! 'குரு கிரந்த சாஹிப்' எனும் சீக்கியர்களின் புனித நூலில், கபீரின் ஏராளமான கவிதைகள் இடம்பெற்றன. ரவீந்திரநாத் தாகூர், இவரது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இந்து மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் இணைப்புப் பாலமாக விளங்கிய முதல் ஞானி என வரலாற்று ஆய்வாளர் களால் புகழப்பட்ட கபீர்தாஸ், சர்வமத சமரச மார்க்கம் எனும் கொள்கையைத் தோற்றுவித்தார். உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள், இந்தக் கொள்கையின் படி இன்றைக்கும் வாழ்கின்றனர்.

பிறப்பும், அதையடுத்ததான வாழ்க்கையும் போலவே கபீர்தாஸின் மரணமும் ஆச்சரியங்கள் நிறைந்ததுதான்! கி.பி. 1518-ஆம் வருடம், இந்த உலக வாழ்வை முடித்துக் கொண்டார் கபீர்தாஸ். அவரது திருவுடலை இந்துக்கள் எரிக்க விரும்பினர்; இஸ்லாமியர்களோ புதைக்க விரும்பினர். ஆனால், அவரின் உடலை மூடியிருந்த துணியை அகற்றிய போது, அங்கே... மலர்கள் மட்டுமே இருந்தன!

'லாலீ மேரி லால்... ஜீத் தேகோ தித் லால்..
லாலி தேகன் மை கயீ, மை பீ ஹோ கயீ லால்'

'என் அன்பே! எங்கெங்கு காணினும் சிவப்பே தெரிகிறது. சிவப்பை அருகிலிருந்து பார்க்கச் சென்றேன்; நானும் சிவப்பானேன்!' என அருளிய மாமனிதர் கபீர்தாஸ்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டாலும், இன்றைக்கும் இந்த பூமியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் கபீர்தாஸ்!

- (தரிசிப்போம்)