தொடர்கள்

எல்லை சாமிகள்!

தஞ்சாவூரின் ஒரு பகுதியை, அரக்கர்களான சும்ப-நிசும்ப சகோதரர்கள், தங்களது ஆளுமையின்கீழ் வைத்திருந்தனர். கொடூரமான அவர்களின் செயல்பாடுகளால் மக்கள் அடைந்த துயரங்களுக்கு அளவே இல்லை. ஒருகட்டத்தில், மனிதர்களை அடக்கியாண்டது அலுத்துப் போய், தெய்வங்களையும் அடக்கியாள நினைத்தனர்.

அதற்காகச் சிவபெருமானை நோக் கிக் கடும் தவம் புரிந்தனர். தவத்தில் மகிழ்ந்த சிவனார், அரக்க சகோதரர் களுக்குக் காட்சி தந்து, ''என்ன வரம் வேண்டும், கேளுங்கள்'' என்றார்.

''எவராலும் எங்களை அழிக்க முடியாத வரத்தைத் தந்தருளுங்கள்'' என வேண்டினர் சும்ப- நிசும்பர்கள். அவர்களுக்கு வரம் அளித்த சிவனார், ''எவ்வளவு பலம் பொருந்திய ஆண் களாலும் உங்களை வெல்ல முடியாது. அதே நேரம், மோகினிப் பெண்ணொருத்தியால், உங்களது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பது விதி!'' என்று கூறி மறைந்தார்.

வரம் கிடைத்த மமதையில், தங்களின் அட்டகாசத்தை அளவில்லாமல் தொடர்ந்தனர் அசுரர்கள். வனத்தில் தவமிருந்த துறவிகளையும் முனிவர்களையும் ஓடஓட விரட்டினர். இதனால் வருந்திய முனிவர்களும் துறவிகளும் சிவபெருமானை எண்ணித் தவம் இருந்தனர். அவர்களுக்குக் காட்சி தந்த ஈசனிடம், அரக்கர்களின் கொடுமைகளைத் தெரிவித்தனர்.

''கவலை வேண்டாம்! அரக்கர்களை அழிப்பதற்காகவே மோகினியாக பூமியில் அவதரித்துவிட்டாள் உமையவள். இனி, அவள் பார்த்துக்கொள்வாள்'' என்று அருள்புரிந்தார் ஈசன்.

அதன்படி, தஞ்சையின் வடகிழக்கில்... அப்போது அந்தப் பகுதியில் வசித்த குறிப்பிட்ட பிரிவினரின் வீட்டில், நிசும்பசூதனி எனும் பெயருடன் பிறந்து வளர்ந்து வந்தாள் உமையவள். அசுரர்களை அழிக்க உரிய காலம் வந்ததும், தனது அருளாடலைத் துவங்கினாள். அவளின் அழகால் ஈர்க்கப்பட்ட அசுரர்கள் இருவரும், அவள் தங்களை அழிக்கப் பிறந்தவள் என்பதை அறியாமல், அவளை விரும்பத் துவங்கினர்.

ஒருகட்டத்தில், நிசும்பசூதனியை யார் அடைவது எனும் போட்டியில், சகோதரர்கள் இருவருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. ஒருவரையருவர் கத்தியால் குத்திக்கொண்டு வீழ்ந்தனர். அப்போதுதான், சிவனார் அளித்த வரம் அவர்களின் நினைவுக்கு வந்தது. இருவரும் தட்டுத்தடுமாறி எழுந்து நிசும்பசூதனியைக் கொல்ல முயன்றனர். ஆனால் அவளோ காளியாக உருவெடுத்து, அசுரர்களை சூலாயுதத்தால் குத்தியும், காலால் மிதித்தும் கொன்றாள். தேவர்கள் பூமாரிப் பொழிய, நிசும்பசூதனியின் உக்கிரம் தணிந்தது; சாந்தம் அடைந்தாள் தேவி.

காலங்கள் ஓடின. 9-ஆம் நூற்றாண்டில், தஞ்சைத் தரணியை விஜயாலயச் சோழன் ஆட்சிசெய்து வந்தான். திடுமென, தேசத்தில் இனம் தெரியாத கொள்ளை நோய் தாக்கி, மக்கள் பலரும் மாண்டனர். மன்னனும் மிஞ்சியுள்ள மக்களும் கலங் கித் தவித்தனர்.

ஒருநாள் இரவு, சோழனின் கனவில் சந்நியாசி வடிவில் காட்சி தந்த சிவபெருமான், ''ஒருகாலத்தில் அசுரர்களை அழிக்க என்னால் சிருஷ்டிக் கப்பட்ட நிசும்பசூதனி, உனது எல்லைக்குள் உக்கிரமாகி இருக்கிறாள். அவளைக் குளிர்வித்து, பூஜைகள் செய்'' என்று அருளி மறைந்தார்.

விடிந்ததும், அரண்மனை ஜோதிடர்களிடம் இதுகுறித்து விவாதித்தான் மன்னன். அவர்கள் சொன்ன ஆரூடத்தின்படி, சும்ப- நிசும்பர்கள் வதம் செய்யப்பட்ட இடத்தில் நிசும்பசூதனிக்கு ஆலயம் எழுப்பினான் விஜயாலயச் சோழன். காளியாக உருவெடுத்து அசுர வதம் நிகழ்த்தியவள் என்பதால், நிசும்ப சூதனி உக்கிரகாளியம்மனின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தான். அன்று துவங்கி இன்றளவும் தஞ்சையின் வடகிழக்கு எல்லையைக் காக்கும் தெய்வமாக அருளாட்சி நடத்திவருகிறாள் நிசும்பசூதனி!

தஞ்சாவூரின் குயவர் குடியிருப்பை ஒட்டி அமைந்துள்ளது நிசும்பசூதனி உக்கிரகாளியம்மன் ஆலயம். கருவறையில், கையில் சூலம் ஏந்தி, வலது காலை மடக்கி, இடது காலால் அசுரனின் தலையை மிதித்தபடி ஆக்ரோஷமாகக் காட்சி தருகிறாள் அம்மன். கருவறையை அடுத்துள்ள மண்டபத்தில் ஸ்ரீசிவபெருமானும் ஸ்ரீவிநாயகரும் சந்நிதி கொண்டுள்ளனர்.

கோயிலுக்குள் நுழைந்ததும் வலது பக்கத்தில், விஜயால யச் சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காளியையும், அடுத்து மாயசக்தி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீராகு- கேது, ஸ்ரீசூரியபகவான் ஆகியோரையும் தரிசிக்கலாம். கோயில் முகப்பில், தெற்கு நோக்கிய கருவறையில், வெள்ளையம்மாள்- பொம்மி சமேதராக மதுரைவீரனும் காட்சி தருகிறார்.

காளியம்மனுக்கு எதிரே பலிபீடமும், அடுத்துள்ள சிறிய மாடத்தில் சாம்பான் சிலாரூபமும் உள்ளது. அதையடுத்து வேப்ப மரம் ஒன்று நிற்கிறது. திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு வந்து, ராகு கால வேளையில் காளியம்மனுக்கு விளக்கேற்றி, வேப்ப மரத்தில் மஞ்சள் சரடு கட்டிப் பிரார்த்தித்தால், விரைவில் வீட்டில் கெட்டி மேளச் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை. பிராகாரத்தின் பின்புறம் புற்று மற்றும் நாகர் சந்நிதியைத் தரிசிக்கலாம்.

மாங்கல்ய தோஷம், தம்பதிக்கு இடையே பூசல், வழக்கில் இழுபறி, தொழில் போட்டி யால் சிக்கல் ஆகியவற்றால் கலங்குவோர், நிசும்பசூதனியிடம் பிரார்த்தித்துச் சென் றால், விரைவில் பலன் கிட்டுமாம்.

இந்தக் கோயிலில், சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையன்று பால்குட திருவிழா ஆரம்பம். அப்போது, வேளார் தெருவில் இருந்து பால்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்வர். அன்று மாலை, கோயிலில் இருந்து புறப்பட்டு, தஞ்சை கீழவாசலைச் சுற்றி வீதியுலா வருவாள் காளி. மறுநாள் மதியம், கோயில் வாச லில் கூழ் காய்ச்சி, அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கும் வழங்குவார்கள். 3-ஆம் நாள், மஞ்சள் நீராட்டு; காளியம்மன், வேளார் தெருவில் வீதியுலா வருவாள்.

இதேபோல் அடுத்த ஞாயிற்றுக் கிழமையன்று, கீழவாசல் சாமியார் பிள்ளை தெரு மக்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். அன்று மாலை, காளியை எழுந்தருளச் செய்து, தங்கள் பகுதிக்குக் கொண்டு சென்றுவிடுவர். அடுத்து இரண்டு நாள் வைபவங்களும், அவர்களின் பகுதியிலேயே நடைபெறும். 3-ஆம் நாள் இரவு, காளியம்மனைக் கோயிலுக்கு அழைத்து வருவர். மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில், பெரிய அரிசிக்கார தெரு மக்கள் பால்குடத் திருவிழாவை நடத்துகின்றனர்.

அமாவாசை மற்றும் பௌர்ணமியில், கோயிலில் அன்னதானம் நடைபெறும். ஆடி மற்றும் தை மாதங்களில், வெள்ளிக் கிழமைதோறும், மகளிர் பேரவையினரால் திருவிளக்கு பூஜை நடைபெறும். ஆடி மாதக் கடைசி வெள்ளியன்று, சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சி தரும் காளியம்மனை கண் குளிரத் தரிசிக்கலாம்!

சாம்பானை தரிசிக்க வரும் கிறிஸ்தவர்கள்!

ஆலயத்தில் உள்ள சாம்பானின் சந்நிதி, ஆடிப் பதினெட்டாம் பெருக்கின்போது களை கட்டும்; கூட்டம் அலைமோதும்! இந்த நாளில், திருவையாறு மற்றும் ஒரத்தநாடு பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெருமக்கள், சாம்பானுக்கு ரொட்டி மற்றும் ஆட்டுக் குடல் ஆகியவற்றைப் படையலிட்டு, வழிபட்டுச் செல்கின்றனர். அவர்களில் பலரும், காளியம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வணங்கிச் செல்வது வழக்கம்.

- (இன்னும் வரும்)
படங்கள் எம். ராமசாமி