தொடர்கள்

கலகலப் பக்கம்!

சரபோஜி ராஜா காலத்தில், தஞ்சாவூர்ப் பக்கம் சிங்கராயர் என்ற பிராமணர் ஒருவர் இருந்தார். ஒருநாள், திருடன் ஒருவன், சிங்கராயர் வீட்டுப் புழக்கடையை அடைந்து, பதுங்கியிருந்தான்.

இரவு உணவை முடித்துவிட்டு, சிங்கராயரும் அவருடைய மனைவியும் பேசிக்கொண்டிருந்தது, அவன் காதுகளில் விழுந்தது. மறுநாள் விடியற்காலை, சிங்க ராயர் தன் மகள் வீட்டுக்குச் சென்று, அவள் தரும் ஒரு லட்சத்தை வாங்கி வரப்போகிறார் என்று தெரிந்தது. அவரின் மகள், நன்னிலம் கிராமத்தில் குடியிருந்தாள். பெரும் மிராசுதார்கள் வாழ்ந்த கிராமம் அது!

ஒளிந்திருந்து சகலமும் கேட்ட திருடன், நிதானமாகக் கணக்குப் போட்டான். 'இப்போது திருடினால், அஞ்சோ பத்தோதான் கிடைக்கும். இந்த ராயர், மகள் வீட்டிலிருந்து திரும்பும்போது, மண்டையில் ஒரு போடு போட்டு, லட்சத்துடன் ஓடிவிடலாம்!' எனத் திட்டமிட்டான்.

நன்னிலம் சென்று, மகள் வீட்டில் உணவை முடித்து, மாலையில் அங்கிருந்து கிளம்பினார் சிங்கராயர். ''அப்பா! ஏதோ என்னால முடிஞ்சதைத் தந்திருக்கேன். ஆயிரம், ரெண்டாயிரம் குறைவாக இருக்கலாம். தப்பா நினைச்சுக்காதீங்க'' என்று சொல்லி, ஓலைப்பெட்டி ஒன்றை அவரிடம் கொடுத்தாள் மகள்.

ராயர் புறப்பட்டார்; அவரைப் பின்தொடர்ந்தான் திருடன். பாதி வழியில், பின்னந்தலையில் பலமான அடி விழ... ரத்தம் பீறிடச் சரிந்தார் ராயர். அவர் கையிலிருந்து ஓலைப்பெட்டியைப் பிடுங்கிக்கொண்டு ஓடத் தயாரானான் திருடன். சட்டென அவனது கையைப் பற்றிக் கொண்ட சிங்கராயர், ''தம்பி, இதுல ஒரு லட்சம் இருக்கும். எண்ணிப் பாரு. எதுனா குறைஞ்சிருந்தா, அதை நீயே போட்டு, பச்சைவயல் ராமர் கோயில்ல சேர்த்துடப்பா!'' என்று சொல்லிவிட்டு, இறந்துவிட்டார்.

பிறகு, ஒரு மறைவான இடத்துக்குச் சென்று ஓலைப் பெட்டியைத் திறந்து பார்த்தான் திருடன். உள்ளே... நிறைய நோட்டுகள். ஆனால், ரூபாய் நோட்டுகள் அல்ல; பள்ளிச் சிறுவர்கள் எழுதுகிற நோட்டுப்புத்தகங்கள். அவை அனைத்திலும், 'ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்' எனப் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருந்தது. 'இதைத்தான் லட்சம் என்றாரா அந்த ராயர்' என்று நொந்துபோனான் திருடன். 'சரி, பணம்தான் கிடைக்கவில்லை. இந்த நோட்டுக்களை அவர் சொன்னபடி கோயிலிலாவது சேர்ப்போம்' என்று தீர்மானித்தான்.

அதையடுத்து, ராமர் கோயிலில் அந்த நோட்டுக்களைக் கொடுப்பதற்கு முன், பொறுமையாக எண்ணிப்பார்த்தான். லட்சத்துக்கு 2,000 குறைவாக இருந்தது. தானே பொறுமையாக 2,000 தடவை ஸ்ரீராமஜெயம் எழுதிப் பூர்த்தி செய்து, சிங்கராயர் சொன்ன ராமர் கோயிலுக்கு அதை எடுத்துச் சென்று சேர்த்தான் திருடன்.

கோயிலில், அடுத்து நடக்கவுள்ள குடமுழுக்கின் போது, பக்தர்கள் எழுதிய திவ்யநாமப் பிரதிகளை விக்கிரகத்தின் அடியில் போடுவதாகத் திட்டமிட்டு, எல்லோரையும் எழுதச் சொல்லியிருந்தனர். சிங்கராயர் தன்னால் முடியாமல், மகளிடம் இந்தப் பணியைக் கொடுத்திருந்தார். திருடன் அந்த திவ்ய நாம நோட்டுகளைத்தான் ஆலயத்தில் ஒப்படைத்தான்.

அதுமட்டுமா.. அன்றிலிருந்து எங்கே, எதைத் திருடினாலும் அனைத்தையும் பணமாக்கி, அந்தக் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுக்கத் துவங்கினான். உண்மையான பக்தர் ஒருவரைக் கொன்றதற்கு இதுவே பரிகாரம் எனக் கோயில் திருப்பணிக்கு நிறையவே கொடுத்தான். பின்னாளில், அவன் கைது செய்யப்பட்டுத் தண்டனையும் பெற்றான். ஆனால், அந்தக் கோயிலுக்கு 'திருடன் கோயில்' என்றே பெயர் வந்துவிட்டது.

சின்ன வயதில் என் தாத்தா சொன்ன இந்தத் திருடன் கோயில் கதையில் இடம்பெற்ற கோயில் இப்போதும் உள்ளதா என்று தெரியாது. ஆனால், தாத்தாவை அன்று நான் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் சொன்ன பதிலும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 'சிங்கராயர் கோயில் என்றோ ஸ்ரீராமஜெய கோயில் என்றோ பேர் வைத்திருக்கலாமே, தாத்தா? திருடனைத்தானா ஞாபகம் வைச்சுக்கணும்?!' என்று கேட்டேன்.

''ஸ்ரீருத்ரத்தில் சிவபெருமானை ஸ்தோத்தரிக்கும்போது, 'திருடர்களின் தலைவரே! (ஸ்தாயூனாம் பதயே, நக்தஞ்சரத்ப்ய - பதயே) திருடுவதற்காக இரவில் சஞ்சரிப்ப வரின் தலைவரே! உங்களுக்கு முன்னும் பின்னும் நமஸ் காரம்!' எனப் போற்றுகின்றனர். திருடன், திருட்டுக் கொடுத்தவன் என்கிற பேதமெல்லாம் இறைவனுக்குக் கிடையாது!'' என்றார் தாத்தா.