மயிலாப்பூர் என்றதும் சட்டென்று நினைவுக்கு வரும் ஸ்ரீகபாலீஸ்வரர் ஆல யத்துக்கு அருகிலேயே உள்ளது ஸ்ரீஆதிகேசவபெருமாள் திருக்கோயில். இங்கே... ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீஆதிகேசவபெருமாள்; தாயாரின் திருநாமம் - ஸ்ரீமயூரவல்லித் தாயார்.
முன்னொருகாலத்தில் மயிலாப்பூர்- மயூரபுரி என்றும், அருகில் உள்ள திருவல்லிக் கேணி- துளசி வனமாக, பிருந்தாரண்ய க்ஷேத்திரமாகவும் இருந்ததாம்.
இந்தத் தலத்தில் உள்ள கைரவணி தீர்த்தக் குளத்தில், பங்குனி உத்திர நன்னா ளில், ஆம்பல் மலராகத் தோன்றிய மகாலட்சுமித் தாயார், பிருகு முனிவரின் மகளாக அவதரித்து, பேயாழ்வாருக்கு அருள் புரிந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். எனவே, மயூரபுரியில் அவதரித்ததால், ஸ்ரீமயூரவல்லித் தாயார் எனத் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர்.
இங்கு, தாயார் மிகவும் விசேஷம். உத்ஸவ மூர்த்தமாகவும், அமர்ந்த திருக்கோலத்தில் அழகு ததும்பக் காட்சி தருகிறார். இன்னொரு சிறப்பு... தாயாருக்கு, இங்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமைதோறும் காலையில் ஸ்ரீசூக்த ஹோமமும், மாலையில் வில்வார்ச்சனையும் சிறப்புற நடைபெறுகிறது.
|