தட்சிணகாசி எனப்படும் தென்காசி ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயத்தில், சக்தி விகடன் மற்றும் நயஹா இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 14.5.10 அன்று விமரிசையாக நடந்தேறியது. சக்தி விகடன் நடத்தும் 35-வது திருவிளக்கு பூஜை, இது! நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆலங்குளம், புளியங்குடி எனப் பல ஊர்களில் இருந்தும் ஆர்வத்துடன் வந்து பங்கேற்றனர் வாசகிகள்.
பூஜையில், தனி உற்சாகத்துடன் இருந்தார் ஜோதி. ''பிளஸ்டூ பரிட்சைல அதிக மார்க் எடுக்கணும்னு சொல்லி உலகம்மனுக்கு விளக்கேத்தறதா வேண்டிக்கிட்டேன். ரிசல்ட்டும் வந்துச்சு. 1,123 மார்க்! உடனடியா அம்மனுக்கு விளக்கேத்தலாம்னு நினைச்சிட்டிருந்தப்ப... சக்தி விகடன் இங்கே விளக்கு பூஜை நடத்தற அறிவிப்பு! சந்தோஷத்துக்கும் மனநிறைவுக்கும் கேக்கணுமா, என்ன!''- சொல்லும்போதே, ஜோதியின் முகத்தில் அப்படியரு ஜோதிப் பிரகாசம்!
|