ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

வத்தலகுண்டு திருவிளக்கு பூஜை

வத்தலகுண்டு திருவிளக்கு பூஜை

வத்தலகுண்டு திருவிளக்கு பூஜை
வத்தலகுண்டு திருவிளக்கு பூஜை

க்தி விகடனின் 60-வது திருவிளக்கு பூஜை, கடந்த 10.5.11 அன்று, வத்தலகுண்டு ஸ்ரீவிஷ்வரேஸ்வரர் ஆலயத்தில் விமரிசையாக நடந்தேறியது. திருவிளக்கு பூஜையின் மகிமையை சிவாச்சார்யர்கள் எடுத்துரைத்து, பூஜையைத் துவக்கினர். சிறுமிகள் கங்கா, ஆதி, விஜயலட்சுமி ஆகியோர் சேர்ந்து அம்பாளின் ஸ்தோத்திரப் பாடலைப் பாடியதில், நெகிழ்ந்து போனார்கள் வாசகிகள்.

''ஆபத்து நேரத்துல உதவலாமேன்னு பலருக்கு லட்சக்கணக்குல கடன் கொடுத்தேன். ஆனா நிறையப் பேர், பணத்தைத் தராம இழுத்தடிக்கறாங்க.

கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கணுங்கறது தான் என் பிரார்த்தனை'' என்றார் வத்தல குண்டு வாசகி சிவகாமசுந்தரி.

சின்னாளப்பட்டி வாசகி சியாமளாதேவி, ''எங்க கடைசிப் பொண்ணுக்கு கல்யாணம் தள்ளிப்போய்க்கிட்டே இருக்கு. எட்டு வருஷமா சக்தி விகடன் படிச்சு, அதன் மூலம் நிறையக் கோயில்களுக்குப் போய் வேண்டிக்கிட்டிருந்தாலும், சக்தி விகடனோட விளக்கு பூஜைல கலந்துக்கறது இதுதான் முதல் தடவை! என் பொண்ணுக்கு சீக்கிரமே கல்யாண மாலை கிடைச்சிடும்னு நம்பிக்கை வந்துருச்சு'' என உணர்ச்சிவசப்பட்டார்.

##~##
''எங்க குடும்பம் நல்லாருக்கணும்; குழந்தைங்களுக்கு நல்லா படிப்பு வரணும்'' என்று வாசகியர் உமா மகேஸ்வரியும் ஜெயலட்சுமியும் பிரார்த்தனை செய்தனர்.  

''என் பையனுக்கு பொண்ணு பார்த்துக்கிட்டிருக்கோம். ஆனா, எதுவுமே தகையலீங்க. அவனுக்குச் சீக்கிரம் ஒரு கல்யாணம் நடந்து, ஒரு குணவதி எங்க மருமகளா வந்தாப் போதும்'' என கவலையும் பொங்கப் பேசினார் வாசகி ரஞ்சிதம்.

''எனக்கு இந்த மாசம் கல்யாணம் ஆகப்போகுது. இத்தனை வருஷமா பிறந்து வளர்ந்த வீட்டையும், பெத்தவங்களையும், இந்த ஊரையும் விட்டுட்டுப் போகப்போறேன். புகுந்த வீட்ல ஆரம்பிக்கிற என்னோட திருமண வாழ்க்கை,  யாரோட மனமும் நோகாதபடி, எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி, சிறப்பா அமையணும்; அதைத்தான் ஸ்ரீவிசாலாட்சி அம்பாள்கிட்ட வேண்டிக்கிட்டேன். எல்லாரும் எனக்காகப் பிரார்த்தனை பண்ணுங்களேன்'' என வெட்கம் கலந்த, லேசான பதற்றத்துடன் வேண்டுகோள் விடுத்தார் வத்தலகுண்டு வாசகி திவ்யா. 'அப்படியே ஆகட்டும்’ என வேண்டிக்கொண்டனர், வாசகியர் அனைவரும்!

திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கப் போகும் திவ்யா, சிறப்புடன் வாழ வழி செய்வாள், அம்பிகை. மற்ற அனைவரின் வேண்டுதல்களையும்கூட நிறைவேற்றித் தருவாள் என்பதில் ஐயமென்ன?

கூட்டுப் பிரார்த்தனைக்கு மிகப்பெரிய சக்தி உண்டுதானே?!

- உ.அருண்குமார்
படங்கள்: வீ.சிவகுமார்