ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
##~##
கவான் சத்யசாயிபாபாவின் சரிதம், பிறப்பில் இருந்தே அற்புதங்களோடு தொடங்கியிருக்கிறது. தாய் ஈசுவரம்மா, சுவாமியைக் கருக்கொண்டிருந்தபோதே தொடங்கிவிட்டது தெய்வலீலை! புராண நாடகங்களில் நடிக்கும் குடும்பமாக சுவாமியின் குடும்பம் இருந்ததால், ஒத்திகையில் ஈடுபடும்போது, பகல் நேரங்களில் இசைக்கருவிகளை இசைப்பது உண்டு. ஆனால், சுவாமி பிறப்பதற்குச் சில நாட்களுக்கு முன், நள்ளிரவில் தம்புரா 'தானே’ ஒலிக்கத் தொடங்கியது; மிருதங்கம் 'தானே’ இசைக்கத் தொடங்கியது. திகைத்துப்போன தந்தை பெத்தவெங்கப்பராஜு, ஒரு சோதிடரிடம் சென்று கேட்டபோது, 'உங்கள் குடும்பத்தில் இப்போது யாரேனும் கர்ப்பிணியாக இருக்கிறார்களா?’ என்று கேட்டார். 'ஆம்’ என்று இவர் சொல்ல, 'அது தெய்வக் குழந்தை. அதை சந்தோஷத்தோடு வரவேற்பதற்கே தேவர்கள் வாத்தியங்களை இசைத்திருக்கிறார்கள்’ என்று சோதிடர் சொன்னார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே சுவாமி சத்ய சாயிபாபா காட்டி வந்த லீலைகளை, மகிமைகளை, அற்புதங்களை எப்படி அளக்க முடியும்? சாயி வாக்கின்படி, சமுத்திரத்தையே மையாக்கி, கற்பக மரத்தையே எழுதுகோலாக்கி, வானத்தையே ஏடாக்கினாலும் சாயியின் மகிமையைப் பூரணமாகச் சொல்ல முடியாது. அற்புதத்தோடு தொடங்கி உலகெங்கும் பேரற்புதங்களை நிகழ்த்திய சத்யசாயி அவதாரம், சாதாரணமான மனித நிகழ்வோடு முற்றுப்புள்ளி வைத்துக் கொள்ளாமல், மானிட வடிவில் வந்த தெய்வம் அவர். 'நீங்கள் கண்டு வியக்க, நீலவானின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை நடந்து செல்வேன்’ என்று சொல்லும் பகவான் பாபா, இனிதான் பேரதிசயங்களை நிகழ்த்தவே போகிறார்.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சுவாமி பாபா நிகழ்த்திவரும் லீலைகளால் திணறித் திகைத்து, மகிழ்ந்துகொண்டிருக்கும் எண்ணற்ற குடும்பங்களில் ஸ்ரீமதியின் குடும்பமும் ஒன்று. விபூதி, குங்குமம், மஞ்சள், கல்கண்டு, அமிர்தம், அட்சதை என்று அங்கு சுவாமியின் அருள் பொழிந்துகொண்டே இருக்கும். சுவாமியோடு பேசிக்கொண்டே வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமதிக்கு மட்டும் சுவாமி சூட்சுமத்தில் வருவதும், நடமாடுவதும் தெரியும். அவர் சொன்னால் மட்டும்தான், கணவர் தயானந்தத்துக்கும் மற்றவர்களுக்கும் செய்தி தெரியும்.

ஸ்ரீமதியின் மாமனார், மைத்துனர், நாத்தனாரின் கணவர் எல்லோரும் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு புறப்பட்டுப் போயிருந்தார்கள். நான்கு நாட்களுக்குப் பிறகு திரும்பி வருவதாக இருந்தார்கள். ஸ்ரீமதி பார்க்க பூஜை நடந்து, அவர்கள் கிளம்பிப் போனதும்... பூஜையறையிலிருந்து சுவாமி பாதங்களில் பூ 'மாறி’ விழுந்தது. சுவாமி ஏதோ லீலை செய்கிறார் என்று புரிந்ததால்... 'சுவாமி! உனக்கு வேறு வேலை இல்லை. எனக்கு சமையல் வேலை இருக்கிறது. நீயே சரியாகப் போட்டுக் கொள்’ என்றதும், பூக்கள் பழையபடிக்கு ஒழுங்காக அமைந்தன.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

திடீரென்று சுவாமி பாதங்கள், பீடத்தை விட்டுக் கீழே இறங்கி நகரத் தொடங்கின. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஸ்ரீமதிக்கு, சுவாமி நடந்து வருவது நன்றாகத் தெரிந்தது. 'சுவாமி, சுவாமி..! அப்படியே இரு; தரையில் நடக்காதே!’ என்று ஒரு சிவப்புக் கார்ப்பெட்டை விரித்தார் ஸ்ரீமதி. சுவாமி, அந்தக் கார்ப்பெட்டின்மேல் நடக்கத் தொடங்கினார். மற்றவர்களுக்கு வெள்ளிப் பாதங்கள் மட்டும் தானாக வருவது தெரிகிறது. 'சுவாமி, இதென்ன... இப்படி விளையாடுகிறாய்?!’ என்று ஸ்ரீமதி கேட்பதைப் பார்த்து, கணவரும் உறவினர்களும் பயந்தும் வியந்தும் போனவர்களாய், கண்ணுக்குத் தெரியாத சுவாமியை நமஸ்காரம் செய்தபடி, பாதங்கள் நகர்ந்து வரும் இடத்தைச் சுற்றியபடி போய்வந்து கொண்டிருந்தார்கள். பாதங்கள் கார்ப்பெட்டின் விளிம்புவரை வந்து நின்றுவிட்டன. 'தரையில் இறங்கி நடக்காதே, சுவாமி!’ என்று சத்தம் போட்டதால், கார்ப்பெட்டிலேயே நின்றுவிட்டார் சுவாமி. பிறகு என்ன செய்தார் என்கிறீர்கள்... பக்தை கார்ப்பெட்டில்தானே நடக்கச் சொன்னார் என்பதால், இப்போது கார்ப்பெட்டை இழுத்துக்கொண்டு பாதம் நடக்கத் தொடங்கியது! பூஜையறை, ஹால், வெளியறை என்று அதுபாட்டுக்கு நடந்துகொண்டிருந்தது பாதம்!

குடும்பத்தினர் அனைவரும் சுவாமியைக் கும்பிட்டபடியே சுற்றிச்சுற்றிப் போய்வந்து கொண்டிருந்தனர். என்ன காரணம் என்று தெரியவேயில்லை நான்கு நாட்களாக 'பாதம்’ நடந்துகொண்டே இருந்தது.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

நான்காவது நாள், ஐயப்பன் கோயிலுக்குப் போய்த் திரும்பிய மாமனார், மைத்துனர் எல்லோரும், நடந்து கொண்டிருந்த பாதங்களைப் பார்த்து திகைத்துப் போய் நின்றார்கள். அவர்களுக்கு, வீட்டினர் தங்களுக்குப் புரியாத இந்த அதிசயத்தை விவரித்துக்கொண்டிருந்தனர்.

அவர்கள், பெரிய விபத்து ஏற்பட்டு அதிலிருந்து சுவாமியால் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள். 'உயிரோடு வந்தது, தெய்வத்தின் கருணையால்தான்’ என்றவர்கள், அந்தப் பாதங்களைத் தொட்டு நமஸ்காரம் செய்தனர். பிறகு, பாதங்கள் நகரவில்லை. அவர்கள் காவலுக்காகவே சுவாமி, இப்படியும் அப்படியுமாக நடந்திருக்கிறார். விபத்திலிருந்து அவர்களைக் காத்து, அவர்கள் வீடு வந்து பாத நமஸ்காரம் எடுத்துக்கொண்டதும், சுவாமி அமைதியடைந்தார். அதையடுத்து, சுவாமியின் பாதங்களைக் கொண்டு வந்து, பூஜையறையில் வைத்து, அபிஷேகம் செய்து, பூப்போட்டு பஜன்களைப் பாடி சுவாமிக்கு மங்கள ஆரத்தி எடுத்தனர்.

- அற்புதங்கள் தொடரும்

'மகனை காத்த பாபா!'

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

னக்கு இரண்டு மகன்கள். இவர்களில் என் முதல் மகன், 11 மாதக் குழந்தையாக இருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது!

குழந்தைக்குத் தொண்டை வலி வந்து, சதா அழுதுகொண்டே இருந்தான். அதற்காக மருந்து கொடுத்தோம். ஆனால், அந்த மருந்து அலர்ஜியாகி, திடீரென உடல் முழுவதும் ஏதோ நெருப்பால் சுட்ட புண்களைப்போல், கொப்புளங்கள் ஏற்பட்டன. ஏற்கெனவே, தொண்டை வலியில் தவித்துக் கதறிய குழந்தை, இன்னும் அதிகமாகவே அழுது புலம்பினான்.

உடனே, மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடினோம். அனுபவமுள்ள டாக்டர்தான் அவர். ஆனால் அவரே, ''எத்தனையோ லட்சம் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரியான பிரச்னையை இதுவரை பார்த்ததே இல்லை'' எனக் குழம்பிப் போனார். பிரமை பிடித்து, சித்தம் கலங்கியவர்கள் போல் இருந்தோம், நானும் என்னுடைய கணவரும்.

'இந்தக் குழந்தையே சாயிபகவானின் பேரருளால் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது’ என நெக்குருகிக் கிடக்கிற வேளையில், அவரிடமே முறையிடுவோம் எனத் தோன்றியது. 'சுவாமி, நீங்கள் போட்ட பிச்சை இந்தக் குழந்தை. அப்படியிருக்க, உங்களின் குழந்தை கஷ்டப்படலாமா? நீங்கள்தான் அவனைக் காப்பாற்றவேண்டும். இல்லையெனில், என் உயிரை மாய்த்துக்கொள்வேன்’ என மானசீகமாகப் பிரார்த்தித்தேன்.  

இதே வேளையில், 'நிலைமை ரொம்பவே மோசம்’ என்று சொல்லிவிட்டார் மருத்துவர். மருத்துவமனையின் நடை பாதையில், ஒரு ஓரமாகச் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்து கொண்டு, 'சாயிராம், சாயிராம், சாயிராம்...’ என கண்கள் மூடி, முணுமுணுப்பதைத் தவிர எனக்கு வேறெதுவும் தெரியவில்லை. சிறிது நேரம் கழிந்த நிலையில்... நர்ஸ் ஓடி வந்து, ''உங்க குழந்தை அபாய கட்டத்தைத் தாண்டிருச்சுங்க. நீங்க பயப்படத் தேவையில்லை. உள்ளே போய்ப் பாருங்க!'' என்றாள். ஆர்வமும் அழுகையுமாக அறைக் குள் சென்றேன். அங்கே கண்ட காட்சியை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது எனக்கு!

ஆம்... குழந்தையின் தலைமாட்டில் நின்றுகொண்டு, அவனது தலையில் கைவைத்து, வருடிவிட்டுக்கொண்டு இருந்தார் சாயிபகவான்! ஒருகணம் சிலிர்த்துத் திகைத்தே விட்டேன்.

பிறகு, அடுத்தடுத்த நாட்களில் பூரண மாகக் குணம் அடைந்த என் மகனுக்கு இப்போது 21 வயது. ஆரோக்கியமாகவும், உடலில் ஒரு குறையும் இல்லாமலும், பட்டப் படிப்பு படிக்கிறான், அவன்.

இன்னொரு விஷயம்... சாயி பகவானுக்கு உகந்த ஒரு வியாழக்கிழமை அன்று பிறந்தான், எங்களின் இளைய மகன். அது மட்டுமா? அவன் பிறந்தது, சுவாமியின் திருநட்சத்திரத்தில்!  

ஓம் ஸ்ரீசாயிராம்.

- மீனாட்சி பாண்டியன், சென்னை-41

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!