Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நவக்கிரகங்களை ஏழு முறை வலமாகவும், இரண்டு முறை இடமாகவும் சுற்ற வேண்டும் என்கிறார்களே, அப்படியா? நவக்கிரகங்களை வலம் வந்து வழிபடுவதற்கான நியதிகள் என்ன? அதேபோல், எந்தெந்த தெய்வத்தை எத்தனை எத்தனை முறை வலம் வந்து வழிபட வேண்டும்?

- ஆர்.வெங்கடேஸ்வரன், மதுரை-16

வலம் வருதல் என்பது 16 உபசாரங்களில் ஒன்று.  இந்தப் பணிவிடைக்கு பிரதக்ஷிணம் என்று பெயர். மூன்று முறை வலம் வந்தால், 'பிரதக்ஷிணம்’ என்ற இந்த உபசாரம் முற்றுப்பெறும். தெய்வத் திருவுருவங்களுக்கும் வலம் வருதலின் எண்ணிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. 9 கிரகங்கள் என்பதால், 9 முறை வலம் வரவேண்டும் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதேபோல், இடமாகச் சுற்றுவதும் தவறு. அது, 'வலம்’ வருதலில் அடங்காது. இடமாகச் சுற்றுவது என்பது அபசாரமாக மாறிவிடும்.

##~##
தெய்வத் திருவுருவங்களின் இயல்பை வைத்து வலம் வருதல் எழவில்லை. நாம் செய்யும் பணிவிடைகளே அதன் அளவுகோல். மூன்று முறை செய்தால் முற்றுப்பெறும் என்ற மரபு உண்டு. சாந்தி: சாந்தி: சாந்தி: என மூன்று முறை சொல்வோம். தம்பதி அக்னியை மூன்று முறை வலம் வருவார்கள். சாஸ்திரம் சொல்லும் சடங்குகளிலும் மூன்று முறை வலம் வருவோம். ஏலத்தில் மூன்று முறை சொன்னால் முற்றுப் பெற்றதாக எடுத்துக்கொள்வோம். கோர்ட்டிலும் மூன்று முறை சாட்சியை அழைப்பார்கள். இப்படி நடைமுறையிலும் மூன்று முறைக்கு முன்னுரிமை இருப்பதைக் காண்கிறோம். நவக்கிரகங்கள் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும். அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வலம் வர இயலாது. ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் மூன்று முறை வலம் வந்தால், முழுமையான உபசாரத்தை எட்டிவிடுவீர்கள்; உரிய பலனும் கிடைத்துவிடும். அதேபோல் குறிப்பிட்ட சாமியை குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வரவேண்டும் என்கிற கூற்றும் ஏற்கத்தக்கதல்ல. இப்படி, குறிப்பிட்ட தெய்வத்துக்கு உகந்த எண்ணிக்கையில் வலம் வரவேண்டும் எனும் தகவல், தெய்வ உருவின் பெருமையை மிகைப்படுத்தக் கையாளும் வழிகளில் ஒன்றே! வலத்தில் மூன்று முடிந்தாலே, முழுப் பயனும் கிட்டிவிடும்.

மகான்கள், தங்களின் உயிர் பிரியும் நாளை முன்னரே தெரிந்துகொள்வார்கள்; அதன்படியே அவர்களது முக்தி நிகழும் என்பார்கள். ஆனால், நம்முடன் வாழ்ந்த மகான்கள் பலரும் சாமானியர்களைப் போன்றுதானே மரணத்தைச் சந்தித்தார்கள். ஏன் அப்படி?

- ஆர்.மகாலட்சுமி, உடுமலைப்பேட்டை

  'பிறந்தவன் இறப்பைச் சந்திப்பது நியதி’ என்பது கண்ணன் வாக்கு. ஆசையில் கட்டுண்டு கிடக்கும் பாமரர்கள் மனதில் இறப்பு குறித்த சிந்தனை எழாது.

ஜீவன் முக்தன் என்றால், உயிருடன் வாழ்ந்துகொண்டே துயரத்தில் இருந்து விடுதலை பெற்றவன் என்று பொருள். அவர்களுக்கு உடலைப் பற்றிய சிந்தனையே இருக்காது. அப்படியிருக்க, அதன் அழிவைப் பற்றிய தகவலை உலகுக்கு அறிவிப்பது அவர்களுக்கு அழகல்ல. ஒருவர், இறப்பைப் பற்றிய சிந்தனை இல்லாமல் வாழ்வது சிறப்பு. இந்தத் தன்மை, கடமைகளைச் செம்மையாக நிறைவேற்ற உதவும். புராண கால மகான்களுக்கும் இன்றைய மகான்களுக்கும் பாகுபாடு உண்டு. அவர்களது செயல்பாடுகளிலும் மாறுபட்ட விளக்கங்கள் உண்டு. துறவியாக மாறிய ஒருவர் துரதிர்ஷ்டவசமாகத் தண்ணீரில் மூழ்கி, உயிர் பிரிய நேரிட்டால், 'அந்த மகான் ஜல சமாதியானார்’ என்பார்கள். அதேநேரம், என்னைப் போன்ற பாமரன் ஒருவன் தண்ணீரில் முழுகி உயிர் துறந்தால், 'துர்மரணம்’ என்பதுடன், உரிய பரிகாரத்துடன் இறுதிச் சடங்கை நிறைவேற்றச் சொல்லும் தர்ம சாஸ்திரம். அழியக்கூடிய ஒன்றின் அழியும் வேளையைத் தெரிந்துகொள்ள ஜோதிடம் துணைபுரியும். சாதாரண பாமரனும் அந்த வேளையை அறிந்துகொள்ள இயலும்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

மகான்கள் என்பவர்கள் முற்றும் துறந்தவர் கள். அவர்களுக்கு விதேஹமுக்தியின் சிந்தனை இருக்காது. பற்றில்லாத உடல் இருந்தால் என்ன, மறைந்தால் என்ன? இரண்டும் ஒன்றுதான். நம்மைப் போன்றவர்களுக்கு, இறப்பின் சிந்தனை இல்லாமல் இருப்பது சிறப்பு. இருக்கும் வரை ஒரு நொடி நேரத்தையும் வீணாக்காமல், அற வழியில் வாழ்க்கையை இணைத்து, அடுத்த தலைமுறையினருக்கும் வாழ்க்கையின் குறிக்கோளை அறிவிக்கவேண்டும். அதுவே வீடுபேறை ஈட்டித்தரும்.

இன்றையச் சூழலில் மகான்களை உருவாக்கு வதில் பாமரர்களின் நம்பிக்கைக்குப் பங்கு உண்டு. மரணத்தைச் சந்திக்கும் விஷயத்தில், பாமரர்- மகான் என்கிற பேதம் இல்லை. பிறப்பு- இறப்பு இல்லாத கடவுளும் மனிதனாகத் தோன்றினால், அவரது மறைவையும் புராணம் சுட்டிக்காட்டும். மனிதனுக்கு மர்த்யன் என்று பெயர் உண்டு. அதாவது, மரணத்தைச் சந்திப்பவன் என்று பொருள். 'மரண தர்மா’ என்று தர்ம சாஸ்திரம் சொல்லும். விருப்பப்படி மரணத்தை எதிர்கொண்டவர் பீஷ்ம பிதாமஹர். அதுவும் அவருக்கு கிடைத்த வரம். அவர் தனது மரணத்தை மக்களுக்குத் தெரி வித்து விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. ஏனெனில், அவர் ஜீவன்முக்தர். சாமான்யர், மகான் என்கிற பாகுபாட்டை மரணத்தை வைத்து நிர்ணயம் செய்யக் கூடாது. ஒருவரிடம் குடிகொண்டிருக்கும் நல்லெண்ணங்களே அவர்களுடைய உயர்வுக்கு அடையாளம்.

முன்னோர் போட்டோவை வீட்டில் எந்தப் பக்கத்தில், எந்தத் திசையை நோக்கி வைக்கவேண்டும்? ஆலயம் செல்லும்போது, முதலில் நாம் கும்பிட வேண்டிய தெய்வம் எது?

- கே.சோமராஜன், ராமநாதபுரம்

போட்டோவை நம் விருப்பப்படி எந்தப் பக்கத்திலும் எந்தத் திசையிலும் மாட்டலாம். அது நிழல்; நிஜமல்ல. அதற்கு சைதன்யம் இல்லை. உயிரற்றது. உயிரற்ற நிழலைப் (போட்டோ) பார்த்ததும், நிஜத்தின் ஞாபகம் வரும். மனம், நிஜத்தை நிழலுடன் இணைத்துப் பார்க்கும். சாளக்ராமத்தில் ஸ்ரீமந் நாராயணனையும், சிவலிங்கத்தில் ஈசனையும் பார்க்கும். அதேபோல், உருவச் சிலையில் தன்னுடைய தலைவரைப் பார்க்கும். அத்தனையும் மனம் சார்ந்த விஷயம்.

கும்பாபிஷேகத்தைச் சந்திக்காத சிலையை வைக்க, திசைகளைப் பார்க்கவேண்டிய தேவையில்லை. எங்கும் நிறைந்த பரம்பொருளுக்குத் திசை ஏது, வேளை ஏது? நமக்குத்தான் இரண்டும் உண்டு. அவனை வழிபட உகந்த திசையை வகுத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல், முன்னோரை உங்கள் மனதிலேயே இருத்திக் கொள்ளுங்கள். அப்போது திசையைப் பற்றிய எண்ணம் முளைக்காது. அவர்களை போட்டோவில் இறக்கி வைத்து, திசையைத் தேடிக்கொண்டு இருக்காதீர்கள். முன்பெல்லாம் முன்னோரை மனதில் இருத்தி வைத்து வழிபட்டார்கள். அதை மாற்றும்போதுதான் சிக்கல் எழுகிறது!

ஒரு கோயிலுக்குச் செல்பவனின் மனம், அங்கு உறைந் திருக்கும் இறைவனின் நினைவோடு இருக்கும். அப்போது வேறு இறையுருவத்தைப் பற்றிய சிந்தனை வரக்கூடாது. அப்படி வந்தாலும் அந்த இறையுருவத்திலும், குறிப்பிட்ட ஆலயத்தின் இறைவனையே காணவேண்டும். ஆகமங்களும் கோயில் சட்டதிட்டங்களும் சில சம்பிரதாயங்களைச் சொல்லும். பரிவார தேவதையை அலட்சியப்படுத்தாமல் இருக்க, சில நடைமுறை களைப் பரிந்துரைக்கும். விவரமறிந்த பக்தன், ஆலயத்தில் நுழையும்போது பிரதான இறையுருவத்தின் நினைவோடு செல்லவேண்டும். அவரை வணங்கி அருள்பெற்று, பரிவார தேவதைகளையும் வணங்கவேண்டும். அதுவே சிறப்பு!

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

என் தந்தை, கடந்த மார்ச் மாதம் காலமானார். ஒரு வருடம் பூர்த்தியாகாத நிலையில்... அமாவாசை தினங்களில் விரதமும் தர்ப்பணமும் கொடுக்கலாம் என்று சிலரும், விரதம் மட்டும் போதும் என்று வேறு சிலரும் சொல்கிறார்கள். கோயில் குருக்கள் ஒருவரோ, வருடாந்திர திதி கொடுத்து, பிண்டப் பிரதானம் செய்த பிறகே விரதம், தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறார். எது சரி?

- வி.கே.அசோக்குமார்

கோயில் குருக்கள் சொல்வதே சரி! வருடாந்திர திதிக்கு இடைப்பட்ட வேளையில் எதையும் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. விரதம், தர்ப்பணம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் தகுதி, வருடாந்திர திதிக்குப் பிறகே ஏற்படும்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர் இறந்த வருடத்தில், விழாக்கள்- கொண்டாட்டங் களில் கலந்துகொள்வதில்லை. வருடாந்திர திதி வரையிலும் இறந்தவரின் நினைவோடு இருக்க வேண்டும். மற்ற அலுவல்களில் ஈடுபடும்போது, அவர் குறித்த நினைவு அறுபட்டுவிடும். ஆகையால், வேறு அலுவல்களைத் தவிர்ப்போம். வருடாந்திர திதியே முக்கியமானது. அப்போதுதான் ஈமச்சடங்கு முற்றுப் பெறும். அதற்கு இடைப்பட்ட வேளையில், விரதம்- தர்ப்பணத்தைத் தவிர்க்கவேண்டும்.

கோயில்களில் தேங்காய் உடைப்பதற்கான தாத்பரியம் என்ன? ஸ்வாமிக்கு சமர்ப்பித்த தேங்காயில் ஒரு மூடியை அர்ச்சகருக்குத் தரவேண்டுமா? எனில், இரண்டு மூடிகளில் எதைத் தருவது?

- சகாரா, வேதாரண்யம்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

தாவரங்கள் அவனது படைப்பு. ஓஷதிகளும் (அரிசி, கோதுமை போன்ற) பயிரினங்களும், தென்னை, மா, பலா போன்ற வனஸ்பதிகளும் மற்ற உயிரினங்களுக்கு உணவாகும் நோக்கத்தில் இறைவனால் படைக்கப்பட்டவை.

வனஸ்பதியைச் சார்ந்தது தேங்காய். அதை உட்கொள்ளும் தகுதி இருப்பதால், அதை அவருக்குப் படைத்து, அவரது திருப்பார்வை பட்டு சுத்தமான தேங்காயை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இறைவனுக்கு அளிக்கும் அளவுக்குத் தூய்மை பெற்றது தேங்காய். இயற்கையாகவே வளர்ந்து நாம் உட்கொள்ளும் அளவுக்கு முழுமை பெற்ற பொருள் அது. அப்படி, கடவுளுக்குப் படைத்து அவரின் பார்வை பட்டுப் புனிதமாகும் பொருளை, தனக்கு மட்டுமே ஒதுக்கிக்கொள்ளாமல் மற்றவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் எனும் நோக்கத்தில், கடவுளை வழிபடும் பெரியோருக்குப் பகிர்ந்தளிப்பது சிறப்பு. கண் இல்லாத தேங்காய் மூடியை அர்ச்சகருக்கு அளித்து மகிழலாம்.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism