ஆலய தரிசனம்

அன்னை சரஸ்வதி கூத்தனூரில் குடிகொண்ட கதை!

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டத் தில் அரிசலாற்றின் கரையில் அமைந்திருக்கிறது கூத்தனூர். அம்பாள்புரம், ஹரி நாதேஸ்வரம் என்றெல்லாம் புராணங்கள் போற்றும் இந்தத் தலத்தில் ஸ்ரீசரஸ்வதிதேவி கோயில் கொண்டது எப்படி? இந்த ஊருக்கு, 'கூத்தனூர்' என்று பெயர் வரக் காரணம் என்ன?

பிரம்மதேவனைக் கணவனாக அடைய வேண்டி தவம் செய்ய விரும்பினாள் கலை மகள். எனவே, பூலோகம் வந்தவள், தவம் செய்வதற்குத் தகுந்த இடம் தேடி அலைந்தாள். கடைசியில், அரிசொல் (இன்றைய அரசலாறு) நதிக்கரையை அடைந்தாள். தாழம்பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும் ரம்மியமான இந்த இடத்தின் சூழல் மிகவும் பிடித்துப் போனது. அங்கேயே தவத்தில் ஆழ்ந்தாள் கலைமகள்.
வருடங்கள் ஓடின. கலைவாணியின் தவத்தால் மகிழ்ந்த பிரம்மதேவன், அவளை மணந்தார் என்கிறது சிதலைப்பதி புராணம். மேலும், 'தான் தவம் செய்த இடத்திலேயே சுயம்புவாக எழுந்தருளினாள் கலைமகள். இதையறிந்த நவ கன்னியர்கள் நவராத்திரி காலங்களில் அம்பாள்புரம் (கூத்தனூர்) வந்து

ஸ்ரீசரஸ்வதிதேவியை வழிபட் டனர்!' என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இன்றும், நவராத்திரி காலங்களில் நவ கன்னியர்கள் இங்கு வந்து கலைமகளை வழிபடு வதாக ஐதீகம் உண்டு.

விக்கிரம சோழனின் அரசவையில் புகழ்பெற்ற புலவராகத் திகழ்ந்தவர் ஒட்டக்கூத்தர். சரஸ்வதி தேவியின் பக்தரான இவர் ஒருமுறை, அன்னையின் அருள் வேண்டி கடும் தவம் செய்தார்.

அவர் முன் தோன்றிய கலைமகள், தன் வாயிலிருந்த தாம்பூலத்தை ஒட்டக் கூத்தருக்கு அளித்து ஆசி புரிந்தாள். இதன் பலனால், பெரும் புலமை பெற்ற ஒட்டக்கூத்தர், ''எனக்குக் காட்சி தந்து அருளியதுபோல், இங்கு வந்து உன்னை வணங்கும் பக்தர்களுக்கும் அருள் புரிய வேண்டும்!'' எனப் பிரார்த்தித் தார். 'அப்படியே ஆகுக!' என்று அருள் புரிந்தாள் கலைமகள். அந்த இடத்தில் ஸ்ரீசரஸ்வதிக்கு ஓர் ஆலயம் உருவானது.

கலைமகள் அருளால் கவித்துவம் பெற்ற ஒட்டக்கூத்த ரின் புலமையால் மகிழ்ந்த சோழ மன்னன், அவர் தவம் செய்த இடமான அம்பாள்புரத்தை அன்ப ளிப்பாக வழங்கினான். அதன் பிறகு, இந்தத் தலம் ஒட்டக்கூத்தரின் பெயராலேயே, 'கூத்தனூர்' எனப் பட்டது. பிற்காலத்தில் ஒட்டக்கூத்தரின் பேரனான ஓவாத கூத்தன் என்பவன், இங்கு ஸ்ரீசரஸ்வதிதேவிக்குக் கற்கோயில் அமைத்தான்.

அகண்டதொரு பிராகாரத்துடன்... முக மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்று அழகுற அமைந் திருக்கிறது கூத்தனூர் ஸ்ரீசரஸ்வதிதேவி ஆலயம்.

இங்கு, கருவறையில் அருள் புரியும் ஸ்ரீசரஸ்வதிதேவி யின் கைகளில் வீணை இல்லை. ஆதிசங்கரரது சௌந்தர்ய லஹரியின் ஸ்லோகத்தின்படி இந்தத் திருவுருவம்

அமைந்துள்ளதாகச் சொல்வர். இத்தகு உருவில் திகழும் கலைவாணியை ஞான சரஸ்வதி எனப் போற்றுவர். இவள், கைகளில் வரத- அபய முத்திரைகள், ஸ்படிக மாலை மற்றும் சுவடி ஏந்தி காட்சி தருகிறாள். தலையில்- சந்திரகலை திகழ, ஞானத்தின் அடையாளமாக ஜடாமகுடமும், நெற்றிக் கண்ணும் கொண்டு திகழ்கிறாள் கூத்தனூர் சரஸ்வதி. இந்த தேவியை வணங்கினால் கல்வி, கலை ஞானம் மற்றும் கவிபாடும் திறன் கிடைக்கும் என்பர்.

விஜயதசமி திருநாளில் ஏராளமான கலைஞர்கள் இங்கு வந்து அன்னையைப் பாடி துதிப்பதும், இசை பயில்வதும் வழக்கம். இந்தத் திருநாளில், குழந்தைகளுக்கு அட்சர அப்பியாச வைபவமும் இசை- நாட்டியக் கலைகளைப் பயிலத் தொடங்கும் ஆரம்ப விழாவும் இங்கு நடைபெறுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

விஜயதசமி திருநாளில்... ஸ்ரீகலைவாணி, தன் திருப்பாதங்களைக் கருவறையையும் தாண்டி வெளியே நீட்டி வைத்திருப்பது போல் மலர்களால் அலங்கரித்திருப்பர். அன்று மட்டும் பக்தர்கள், இந்தத் திருப்பாதங்களை மலர்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சித்து சரஸ்வதிதேவியை வழிபடலாம்.

- டி.ஆர். பரிமளம், திருச்சி-21