ஆலய தரிசனம்

கட்டீல் துர்கைக்கு இளநீர் அபிஷேகம் விசேஷம்!

கர்நாடக மாநிலம், மங்களூரி லிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும் உடுப்பி யிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள திருத்தலம் கட்டீல்! சாபம் பெற்ற நந்தினி (தேவ லோக) பசுவின் துயர் தீர... ஆற்றின் நடுவே கோயில் கொண்டு, ஸ்ரீதுர்காதேவி அருள் பாலிக்கும் புண்ணிய திருத்தலம்! அதுசரி... நந்தினி பசுவை யார் சபித்தது? அதற்கான காரணம் என்ன?
பூமியில் கடும் பஞ்சம்! உயிர்களின் துயர் தீர யாகம் செய்ய விரும்பினார் ஜாபாலி

மகரிஷி. யாகப் பொருட்கள் வேண்டுமே?!

தேவலோகம் சென்ற மகரிஷி, தேவேந்தி ரனைச் சந்தித்தார். கேட்பதைக் கொடுக்கும் காமதேனு பசுவை, தன்னுடன் அனுப்பும்படி வேண்டினார். ஆனால் தேவேந்திரன், வருண லோகத்தில் நடைபெறும் ஒரு யாகத்துக்காக காமதேனுவை அனுப்பி

இருந்தான். எனவே, காமதேனு வின் குழந்தையான நந்தினியை அனுப்புவதாகச்சொன்னான். ஆனால் நந்தினி மறுக்கவே...கோபமுற்ற மகரிஷி, பூவுலகில் பிறக்கும்படி அவளை சபித்தார். மனம் கலங்கிய நந்தினி, ஆதிபராசக்தியை வணங்கி சாப விமோசனம் வேண்டினாள். தேவி, ''கலங்காதே! நீ நதி வடிவாகி பூலோகம் செல். காலம் வரும்போது, உனது அம்சமாகிய நந்தினி நதியின் நடுவில், நான் கோயில் கொள்வேன். அதனால் நீயும் புகழ் பெறுவாய்!'' என்று அருளினாள். அதன்படி, பூமியில் நதியாகிப் பாய்ந்தாள் நந்தினி. காலங்கள் உருண்டோடின!

அருணாசுரன் எனும் அசுரன், கடும் தவமியற்றி பிரம்மனிடம், 'மனிதர்களாலோ, நீர்வாழ் உயிரினங்களாலோ, இரண்டு மற்றும் நான்கு கால் மிருகங்களாலோ தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது!' என்ற வரம் பெற்றான். கலைமகளிடமும் வரம் வேண்டினானாம்! அவள், ''காயத்ரி மந்திரத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டிருந்தால், உன்னை எவராலும் கொல்ல முடியாது'' என்று அருளினாள்! பிறகென்ன... மூவுலகையும் ஆட்டிப் படைத்தான். தேவர்களும் ரிஷிகளும் ஸ்ரீவிஷ்ணுவிடம் சரணடைந்தனர். அவர், அசுரனிடம் இருந்து அனைவரையும் காக்கும் படி ஆதிசக்தியிடம் வேண்டினார். அவர்களுக்கு

அபயம் அளித்தாள் பராசக்தி.

அழகிய உருவம் கொண்டு, பூலோகம் வந்தாள். அவளின் அழகில் மயங்கிய அருணாசுரன், தன்னை மணக்கும்படி கேட்டான். ஆனால் தேவியோ, ''உன்னைக் கொல்ல வந்தவளடா நான்!'' என்றாள். இதைக் கேட்டு

கோபம் கொண்ட அருணாசுரன் தன்னிலை இழந்தான். காயத்ரி மந்திரத்தையும் மறந்தான். தேவியைக் கொல்ல அசுரன் வாளை ஓங்கியபோது, அவள்

மாயமானாள்!

அசுரனின் கோபம் அதிகரித்தது. தனது வாளால் அருகில் இருந்த பாறையைப் பிளந்தான். அப்போது அங்கு தோன்றிய தேவி, ரக்தேச்வரியாக திருவடிவம் கொண்டு அசுர சேனைகளை அழித்தாள். பின்னர், பிரமராக (பெரிய பெண்) வண்டாக வடிவெடுத்து அருணாசுரனை அழித்த தேவி, பிரமராம்பிகையாக அங்கேயே அமர்ந்தாள். அவளது உக்கிரம் தணிய வேண்டி, கற்பக விருட்சத்திலிருந்து எடுத்து வந்த இளநீரால் அபிஷேகித்தான் இந்திரன்.

ஜாபாலி மகரிஷியும் அங்கு வந்து, ''தாயே, அன்பின் வடிவமாக... இங்கேயே

கோயில் கொள்ள வேண்டும்!'' என்று பிரார்த்தித்தார். நந்தினியும் தனக்கு சுயரூபம் தந்தருளும்படி அன்னையை வேண்டினாள்! இதையடுத்து சாந்த சொரூபினியாக- ஸ்ரீகட்டீல் துர்கையாக இங்கு கோயில் கொண்டாள் தேவி. நந்தினி நதியின் 'கடி'யில் அதாவது மத்தியில், தேவி கோயில் கொண்டிருப்பதால் இந்தத் தலத்துக்கு, 'கட்டீல்' என்று பெயர்.

நந்தினி நதியின் நடுவில் அழகுற அமைந் திருக்கிறது ஆலயம். வடக்குப் புறத்தில் நாற்கால் மண்டபம். துவஜஸ்தம்ப மண்டபத்தில் உள்ள... வெள்ளித் தகடுகள் வேயப்பட்ட கொடி மரமும், பிரதான சந்நிதி கதவுகளும் ஜொலிக்கின்றன. உள்ளே... அமர்ந்த கோலத்தில் நான்கு

திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள் தேவி. மேற்கரங்களில் சங்கு- சக்கரம்; கீழ்க் கரங்களில் அபய- வரத முத்திரைகள். தங்கக் கவசத்தில் தகதகக்கிறாள் துர்கை. இங்குள்ள சுயம்பு லிங்கத்துக்கும் தங்கக் கவசம் உண்டு. அருணாசுரமர்த்தினியாக அருள் புரியும் இந்தத் தேவியை

இளநீரால் அபிஷேகிப்பது சிறப்பு!

பிராகாரத்தில் மகா கணபதி, ஷோத்திர பாலர்கள், நாகர் மற்றும் பிரம்மன் ஆகியோரது சந்நிதிகளும் உள்ளன. இங்கு, சந்தனம்- குங்குமத்துடன் பாக்கு மரத்தின் பூவும் பிரசாதமாக தரப்படுகிறது. இது, துளசி இலை பிரசாதத்துக்கு இணையானதாம்! இங்கு வரும் பக்தர்கள், ஸ்ரீதுர்காதேவிக்கு இளநீர் அபிஷேகம், புஷ்ப பூஜை, பால் பாயச நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். துலாபார பிரார்த்தனையும் இங்கு உண்டு! தினமும் இரு வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்தக் கோயிலின் மற்றொரு விசேஷம், யக்ஷகானம்! தெருக்கூத்து போல், புராணக் கதைகளை ஆடிப்பாடி விவரிப்பதே யக்ஷகானம். இதற்கென கோயிலில் ஒரு

குழுவே அமைக்கப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் விமரிசையாக நடைபெறும் யக்ஷகான வைபவத்தை ஸ்ரீதுர்காதேவியே கண்டு மகிழ்வதாக ஐதீகம். இங்கு, ஸ்ரீதுர்கைக்கு பக்தர்கள் சாத்தும் புடவைகளை விற்பதோ, ஏலம் விடுவதோ இல்லை. ஏழைகளுக்கும்

யக்ஷகானக் குழுவினருக்கும் வழங்குகின்றனர்.

இந்தக் கோயிலுக்கு அருகில் பெரிய பாறை ஒன்றுள் ளது. அருணாசுரன், தனது வாளால் பிளந்த பாறை இது. இதிலிருந்தே அம்பிகை வெளிப்பட்டாள் என்பதால், இந்தப் பாறைக்கும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

-சி.டிகே. மூர்த்தி, சென்னை-82