ஆலய தரிசனம்

கேரள சிறப்பு தரிசனம்

தாமரை பூத்த தடாகத்தில் தரிசனம் தரும் தேவி!

பிரியமதுரா

கல்வி உள்ளிட்ட கலைகளுக்கு அதிபதியான நாமகள்- அன்னை சரஸ்வதிதேவி எதில் அமர்ந்திருப்பதாக ஓவியங்களில் நாம் பார்த்திருக்கிறோம்? வெண்மையான தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகிய குளத்தின் நடுவே, வெண் தாமரையில் வீற்றிருப்பதை தரிசித்திருக்கிறோம்; சரஸ்வதிதேவியின்

திருவுருவம் துலங்கும் அந்த ஓவியங்களில், அதை வரைந்த ஓவியரின் கற்பனைத் திறனை வெகு சுவாரஸ்யமாகவே ரசித்திருக்கிறோம்.

ஓவியங்களில் பார்த்து மகிழ்ந்த அதே காட்சியை நேரிலேயே காண நேரிட்டால் எப்படி இருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!

ஆம்! உடலும் உள்ளமும் பரவசமாகிறது, அந்தக் காட்சியைக் காண நேரிடும்போது! ஓவியங்களில் நாம் இதுவரை கண்டு வந்த அந்தக் கற்பனைக் காட்சி இங்கே நம் கண் முன்னே தத்ரூபமாக விரிகிறது. வாருங்கள், எழிலார்ந்த அந்த அற்புதக் கோலத்தில் குடி கொண்டிருக்கும் சரஸ்வதிதேவியைத் தரிசிப்போம்.

வெண்தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகான - சதுரமான குளம். பளிங்கு போல் தண்ணீர் நிரம்பிய ஆழமான இந்தக் குளத்தின் நடுவே_ சரஸ்வதிதேவியின்

வடிவமாகக் கோயில் கொண்டு தனி மண்டபத்தில் அமர்ந்திருக்கிறாள் அன்னை ஸ்ரீமூகாம்பிகா. இந்தக் காட்சியைக் காண நேரிடும்போதே வீணையின் கானமும், வேதத்தின் சாரமும் நம்மை மென்மையாக ஆட்கொள்வது போன்ற ஓர் உணர்வு. இது போன்ற அமைப்புடன் விளங்கும் ஒரு திருக்கோயிலை வேறு எங்கும் தரிசித்திருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

எங்கே இருக்கிறது இந்த அழகிய ஆலயம்?

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வடக்கு பரவூர் (பரூர் என்றும் சிலர் சொல்கிறார்கள்) என்கிற ஊரில் ஆலயம் அமைந்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவு.

கொல்லூரில் ஆதிசங்கரரால் வழிபடப்பட்ட அன்னை மூகாம்பிகாதேவி, சௌபர்ணிகா நதிக் கரையில் கோயில் கொண்டுள்ளது போல், இந்த தட்சிண மூகாம்பிகா (அப்படித்தான் அழைக்கிறார்கள்), பத்ம தீர்த்தம் எனும் குளத்தின் நடுவே கோயில் கொண்டு, அருள் பாலிக்கிறாள். திருவாங்கூர் தேவஸம் போர்டு நிர்வாகத்தில் இந்த தட்சிண மூகாம்பிகா ஆலயம் இருந்து வருகிறது (கோட்டயத்தை அடுத்த பனச்சிக்காடு என்கிற ஊரிலும் சரஸ்வதிதேவிக்கு சிறப்புக் கோயில் இருக்கிறது).

வழிபாடுகளும் வாத்திய கோஷங்களும் கேரள சம்பிரதாயப்படி அனுதினமும் வெகு சிறப்பாக நடந்து வருகின்றன. கொல்லூரில் ஸ்ரீமூகாம்பிகா ஆலயம் எப்படி இருக்கிறதோ, கிட்டத்தட்ட அதே அமைப்பில் இந்த ஆலயம் காணப்படுகிறது. அங்குள்ள மாதிரியே உபதேவதைகளும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

கொல்லூரில் குடி கொண்ட ஸ்ரீமூகாம்பிகாதேவி இங்கும் வந்து கோயில் கொண்டது எப்படி?

விளக்கம் சொல்கிறது சில நூறு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கதை...

ஒரு காலத்தில் பரவூர் உட்பட்ட இந்தப் பகுதியை ஆண்டு வந்தார் ஒரு ராஜா. இவரது அரண்மனை பரவூரில்தான் இருந்து வந்தது. கொல்லூர் மூகாம்பிகாவின் பரம பக்தரான ராஜா, மாதம் ஒரு முறை தன் சிப்பந்திகளுடன் கொல்லூர் சென்று தேவியைத் தரிசித்துத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எண்ணற்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு மூகாம்பிகாவைக் குளிர்விப்பார். வண்ண மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்ய வைப்பார். மூகாம்பிகாவின் மேல் அப்படியரு பக்தி அவருக்கு! ராஜ்யம் சம்பந்தமான எத்தனையோ பணிகள்

இருந்தாலும், கொல்லூருக்குச் சென்று மூகாம்பிகாவைத் தரிசித்து வருவதில் மட்டும் எந்தக் குறையும் வைக்கவில்லை ராஜா.

வருடங்கள் உருண்டோடின. முதுமைப் பருவம் ராஜாவை ஆட்கொண்டது. என்றா லும், தட்டுத் தடுமாறி, காவலர்களின் துணையோடு பல்லக்கில் கொல்லூர் போய் வந்தார். ஒரு கட்டத்தில் 'இனியும் தன்னால் இவ்வளவு தொலைவு வந்து அன்னையைத் தரிசிக்க முடியாது' என்பதைத் தெளிவாக உணர்ந்த பின்னர், தன் நிலைப்பாட்டை மூகாம்பிகாவிடமே ஒரு பிரார்த்தனையாகச் சொன்னார்.

பக்தனது நியாயமான கோரிக்கைக்கு அன்னை செவி சாய்க்காமல் இருப்பாளா, என்ன?!
ஒரு முறை கொல்லூரில் இருந்தபோது, அசரீரி வாக்கில் ராஜாவுக்குப் பதில் சொன்னாள் 'கலங்காதே பக்தா! உன் தளர்வை நானும் உணர்கிறேன். ஒவ் வொரு மாதமும் கொல்லூர் வந்து என்னை தரிசிக்க வேண்டும் என்று உன் மனம் விரும்பினாலும், வயோதிகம் காரணமாக உன் உடல் ஒத்துழைக்காது. பிறவி எடுத்த ஒவ்வொருவரும் வயோதிகத்தையும் அனுபவிக்க வேண்டும். இது விதி.

தற்போது, கொல்லூரில் என்னைத் தரிசித்த பின் உன் ராஜ்யத்துக்கு நீ புறப்பட்டுச் செல். நானும் உன்னைப் பின்தொடர்ந்து வருவேன். வழியில் எங்கும் திரும்பிப் பார்க்கக் கூடாது. பரவூரில் நான் குடி கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அந்த ஊரில் உன் அரண்மனையை அடையும் வரை நீ திரும்பிப் பார்க்கக் கூடாது.

அரண்மனைக்குள் நுழைந்த பின் திரும்பிப் பார். அந்த நேரத்தில் நான் எங்கு இருக்கிறேனோ, அங்கு எனக்கு ஒரு கோயில் கட்டு. மூகாம்பிகாவாகிய நான் என்றென்றும் அந்த இடத்தில் உறைவேன். நீ என்னை அங்கேயே தரிசிக்கலாம். கொல்லூரில் நீ செய்து வந்த வழிபாட்டை அங்கேயே செய். தவிர, உன் புண்ணியத்தால், என்னை தரிசிக்க பரவூர் வரும் பக்தர்களுக்கும் நான் அருள் புரிவேன்' என்றது அந்த அசரீரி வாக்கு.

மூகாம்பிகாவின் அருள்வாக்கைக் கேட்டு மகிழ்ந்த பரவூர் ராஜா, கொல்லூரில் இருந்து புறப்பட்டார். அசரீரி வாக்குப்படி எங்கும் திரும்பிப் பார்க்காமல் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

பரவூரும் வந்தது. அரண்மனைக்குள் நுழைந்ததும் அன்னையின் சொல்படி வந்த வழியைத் திரும்பிப் பார்த்தார். அப்போது அவரிடம் இருந்து சற்றுத் தள்ளி நின்றிருந்த மூகாம்பிகா, தான் சொன்னபடி அதே இடத்தில் நிலையாக அமர்ந்தாள். பிறகு, பரவூர் ராஜா அன்னை மூகாம்பிகாவுக்கு இந்த இடத்தில் அற்புதமான கோயில் எழுப்பினார். எங்கும் இல்லாதவாறு, தாமரைக் குளத்தின் நடுவே இந்த தேவியை அமர வைத்த பரவூர் ராஜா, தனது வழிபாடுகளை இங்கேயே தொடர்ந்தார். இதுதான் இங்கு ஆலயம் உருவான கதை.

இனி, பரவூர் ஸ்ரீமூகாம்பிகா ஆலயத் தைத் தரிசிப்போமா?

ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன் வெளியே ஒரு திருக்குளம். பக்தர்கள் இதில் இறங்கி, தீர்த்தத்தைத் தங்கள் தலையில் தெளித்துக் கொள்கிறார்கள். ஆலய முகப் புக்கு அருகே திருவாங்கூர் தேவஸம் போர்டைச் சேர்ந்த நிர்வாக அலுவலகம்.

பிரதான வாசல் தாண்டி உள்ளே நுழைகிறோம். பத்ம தீர்த்தம் எனப்படும் தாமரைக் குளத்தை பிரதட்சிணமாகச் சென்றால், சிறிய பாலத்தில் நடந்து கருவறை முன் செல்லலாம். அப்படி நடக்கும்போதே தாமரைக் குளத்தின் அழகிய கோலத்தை ரசிக்கிறார்கள் பக்தர்கள். சுமார் இருபதடிக்கும் மேல் ஆழம் இருக்கும் என்கிறார்கள். எத்தகைய ஒரு சூழ்நிலையிலும் பத்ம தீர்த்தத்தில் தண்ணீர் வற்றியதே கிடையாதாம். தாமரை இலைகளும், மலர்ந்த பூக்களும், மலராத மொக்குகளும், தண்ணீரில் அலை பாய்ந்து கொண்டிருக்கும் மீன்களும் பார்க்கப் பார்க்க அழகு. இதில் மலரும் தாமரைப் பூக்களை அவ்வப்போது பறித்து மாலையாகக் கட்டி மூகாம்பிகாவுக்கு அணிவிக்கிறார்கள்.

மூகாம்பிகாவின் சந்நிதிக்கு வருகிறோம். கிழக்கு நோக்கிய திருச்சந்நிதி. அருள் மழை பொழியும் ஆனந்த தரிசனம். மூகாம்பிகாவை இங்கே தரிசனம் செய்ய நமக்கெல்லாம் நல்வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த அந்த பரவூர் ராஜாவை மானசீகமாக வணங்கி, அன்னையின் திருப்பாதம் பணிகிறோம். ஆரத்தி காண்பிக்கிறார் அர்ச்சகர்.

கல்வியிலும், பிற கலைகளிலும் தேர்ந்து விளங்குவதற்காக நம்மை ஆசிர்வதிக்கும் கோலத்தில் அன்னையின் திருமேனி காணப்படுகிறது. இடக் கையில் அட்ச மாலை. வலக் கையில் புத்தகம். அபயம்- வரதம் அருளும் திருக்கரங்கள்.

இந்த ஆலயத்தில் ஸ்ரீகணபதி, ஸ்ரீசுப்ரமண்யர், மகாவிஷ்ணு, யக்ஷி, ஹனுமான், வீரபத்திரர் முதலான தெய்வங்களுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

தினமும் வழிபாடுகள் இங்கே சிறப்பாக நடைபெற்று வருகின்றன. காலை ஏழு மணி, நண்பகல் பதினோரு மணி, இரவு ஏழே முக்கால் மணி ஆகிய நேரங்களில் பலியிடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதாவது ஆலயத்தைச் சுற்றி பிராகாரப் பாதையில் அமைக்கப்பட்டிருக்கும் பலிபீடங்களுக்கு உணவிடும் வைபவம். ஆலயத்தின் உற்சவர் விக்கிரகத்தைக் கைகளில் சுமந்து கொண்டு அர்ச்சகர் ஒருவர் வலம் வருவார். அப்போது மேள-தாளங்களும் உடன் வரும். இன்னொரு அர்ச்சகர் ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ள பலி பீடங்களுக்கு உணவிட்டு வழிபடுவார்.

தினமும் இரவு வேளையில் நடை சாத்தும் முன் ஒரு வித கஷாயத்தை, அப்போது ஆலயத்தில் இருக்கும் பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகி றார்கள். மூலிகைகள் கொண்டு ஆயுர்வேத முறைப்

படி தயாரிக்கப்பட்ட இந்தக் கஷாயம், உடல் உபாதைகளைப் போக்கும் வல்லமை கொண்டது. குறிப்பாக, இதை உட்கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் அறவே நீங்கி விடும் என்கிறார்கள் ஆலய அன்பர்கள்.

இந்தக் கஷாயத்தைப் பெறுவதற்கென்றே வெளி யூர்களில் இருந்தும் பல பக்தர்கள் வருவார்கள். உள்ளூர் பக்தர்கள் பெரும்பாலும் இந்த கஷாய பிரசாதத்தைத் தவற விடுவதில்லை. தினமும் இரவு வேளையில் கோயிலுக்கு வந்து இளஞ்சூட்டோடு தரப்படும் கஷாயத்தைப் பருகி, அன்னையைத் தரிசித்து வீடு திரும்புகிறார்கள். ஒருவேளை, முதல் நாள் இரவில் கஷாய பிரசாதத்தைப் பெற முடியாதவர்கள், மறுநாள் காலையில் கேட்டுக் கொண்டால்- அப்போது கைவசம் கஷாயம் இருந் தால் பக்தர்களுக்குத் தருகிறார்களாம்.

கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்குவதற் காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பரவூர் வந்து, இந்த மூகாம்பிகாவை உளமார வணங்கிச் செல்கின்றனர். குழந்தைகளைப் பள்ளி யில் சேர்க்கும் முன், இந்த மூகாம்பிகாவின் சந்நி திக்கு வந்து அட்சர அப்பியாசம் (குழந்தைகளின் நாவில் இறைவனின் திருநாமத்தை எழுதி, அவர் களுக்கு முதன் முதலாக எழுத்து சொல்லித் தரும் வழிபாடு) செய்கின்றனர். இதற்காகத் தினமும் பல பேர் தங்கள் குழந்தைகளுடன் இங்கு வருகின்றனர். சாதாரண நாட்களில் இப்படி என்றால்... விடுமுறை, விசேஷ நாட்களில் இங்கு கூடும் கூட்டத்துக்கு அளவே இல்லை.

இந்த மூகாம்பிகா ஆலயத்தில் புரட்டாசி மாத நவராத்திரியும், தை மாத உத்திரட்டாதியில் நடைபெறும் ஆராட்டு உற்ஸவமும் வெகு சிறப்பு. இந்த விசேஷங்களின்போது கொடியேற்றத்துடன் விழா, களை கட்டுகிறது. இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கிருஷ்ணன் கோயிலின் குளத்தில் ஆராட்டு உற்ஸவம் நடக்கும். கேரள மக்கள், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து இங்கே திரள்கிறார்கள்.

இதோ, நவராத்திரி வந்து விட்டது. அதற் காக பல்லாயிரக்கணக்கான பக்தர்களை எதிர் நோக்கி ஆலயம் பிரமாதமாகத் தயாராகி வருகிறது. நவராத்திரியின்போது ஒன்பது நாட்களும் அபிஷேக- ஆராதனைகள் சிறப்பாக இருக்கும். கேரளப் பாரம் பரியமான செண்டையும், பஞ்ச வாத்தியங்களும், யானைகளின் அணிவகுப்பும் இந்த நாட்களில் கோலாகலமாக இருக்கும்.

நவராத்திரி காலங்களில் ஸ்ரீமூகாம்பிகாவுக்குத் தினமும் சந்தன அபிஷேகம் நடைபெறும். தவிர, நடை திறந்ததும், 'அஷ்டாபிஷேகம்' எனப்படும் எண்ணெய்,

நெய், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேங்காய்த் துருவல், பன்னீர் ஆகிய எட்டு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடக்கும். இதைக் காணக் கண் கோடி வேண்டும்.

நவராத்திரி- ஒன்பது நாட்களும் இங்கே விசேஷக் கச்சேரிகள் நடக்கும். சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்த இசைக் கச்சேரிகளில் பிரபல பாடகர்கள் ஜேசுதாஸ், டி.எம். கிருஷ்ணா, விஜய்சிவா, ஹைதராபாத் சகோதரர்கள் முதலான பலரும் இங்கே பாடி, அன்னை மூகாம்பிகாவுக்குத் தங்களது இறை வணக்கங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். இங்கு வந்து பாடு வதை ஒரு பாக்கியமாக நினைத்தே பல வித்வான்கள் வருகிறார்களாம்.

தவிர சலங்கை பூஜை, நடன அரங்கேற்றம் போன்றவையும் நவராத்திரி நேரத்தில் இந்த ஆலய வளாகத்தில் அதிகம் நிகழும். இந்தக் காலத்தில் அட்சர அப்பியாசத் துக்காக பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இங்கு திரள்வது வாடிக்கை.

கல்விக் கலை அருளும் அன்னை மூகாம்பிகாவை, அவளுக்கு உகந்த நவராத்திரி காலத்தில் தரிசித்து, இன்னருள் பெறுவோம்!

படங்கள் வி. செந்தில்குமார்

தகவல் பலகை

தலம் வடக்கு பரவூர்.
மூலவர் ஸ்ரீமூகாம்பிகா என்கிற சரஸ்வதிதேவி.
எங்கே இருக்கிறது? கொடுங்கல்லூரில் இருந்து சுமார் 10 கி.மீ.! காலடியில் இருந்து சுமார் 20 கி.மீ.! ஆலுவாய் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 17 கி.மீ.!

நடை திறப்பு காலை 600 - 1100 மாலை 500 - 800

ஆலயத் தொடர்புக்கு

எஸ். கிருஷ்ணகுமார்
சப் குரூப் ஆபீஸர்,
ஸ்ரீதட்சிண மூகாம்பிகா திருக்கோயில்,
என். பரவூர், எர்ணாகுளம் மாவட்டம்,
கேரள மாநிலம், பின்கோடு 683 513.
மொபைல் 0- 94479 68037

(இவர் மலையாளத்தில் மட்டுமே பேசுவார்)