ஆலயம் தேடுவோம்!

கிடாத்தலைமேடு

ஸ்ரீதுர்காதேவி சுமங்கலி பூஜைக்கு துர்க்கையே வந்தாள்!

பி.சுவாமிநாதன்

அடலுடைச் சூலமேந்தி யழல்விழி மடங்கலூர்ந்து
குழல் குழம்பிய வெந்தீயோர் குலமெலாஞ் சவட்டுந்தேவி
மிடலுடை மகிடன் சென்னி வெட்டிவீழ்த் தியவிடத்தைக்
கடல்வளை யுலகத்துள்ளார் கடாத்தலை மேடென்பரால்

_ திருவாழ்கொளிபுத்தூர் புராணம்.

பெரும்பாலும் அம்மன் கோலோச்சும் ஆலயங்கள், அபரிமிதமான சக்திகளையும் பெருமைகளையும் தன்னகத்தே கொண்டு திகழ்கின்றன. உதாரணத்துக்கு காசி விசாலாட்சி, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, கொல்லூர் மூகாம்பிகை என்று சொல்லலாம். அதற்குக் காரணம் - சாந்தசொரூபியான அந்த அன்னையின் 'காக்கும் குணம்'தான். ஒருவர் எத்தகைய தவறு செய்திருந்தாலும், அதற்கு மனம் வருந்தி, தூய பக்தியுடன் அன்னையின் சந்நிதிக்கு வந்து மன்றாடி நின்று மன்னிப்பு கேட்டால், நிச்சயம் அவர் மன்னிக்கப்படுவார். அதுதான் பெண் தெய்வத்தின் பெருமை!

இந்தக் கலியுகத்தில் ஒருவருக்குத் தீங்கு என்றால், அதில் இருந்து அவரைக் காப்பாற்ற முற்படும் முதல் மனது- பெண் மனதாகத்தான் இருக்கும். கெட்டதைக் கண்டால் பெண்ணினம் பொறுக்காது. அநீதியைக் கண்டால், அதை அடக்காமல் மனம் ஓயாது. இது கண்கூடு.

முன் காலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன் பூலோக மக்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். மக்களைக் காக்க அவனை சம்ஹாரம் செய்தாள் துர்காதேவி. கடுங்கோபத்துடன் அன்னையால் துண்டிக்கப்பட்ட மகிஷாசுரனின் தலை, அதீத வேகத்துடன் விழுந்த இடமே கிடாத்தலைமேடு எனப்படுகிறது. மகிஷசிரோன்னபுரம் என்று அந்த ஊரைப் புராணம் சொல்கிறது.

இந்தச் செய்தியை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக கிடாத்தலைமேட்டில் அமைந் துள்ள ஸ்ரீகாமுகாம்பாள் உடனுறை துர்காபுரீஸ்வரர் ஆலயத்தில், அன்னை துர்காதேவிக்குத் தனிச் சந்நிதி விமரி சையாக அமைந்துள்ளது. கிடாத் தலை யின் மேல் நின்ற வண்ணம் காட்சி தரும் இந்த அன்னை, ஏராளமான அற்புதங் களை நிகழ்த்தி, தன் சந்நிதி நாடி வந்தோரை எந்தக் குறையும் இல்லாமல் வளமாகத் திருப்பி அனுப்புகிறாள்!

மகிஷாசுரனைக் கொன்ற பாவத்தில் இருந்து மீள்வதற்கு, இந்தத் தலத்தில் உறையும் சிவபெருமானை வணங்கி வழிபட்டாள் துர்கை. அவளுக்கு பாப விமோசனம் அளித்ததுடன், இதே ஆலயத்தில் நிருதி பாகத்தில் (தென்மேற்கில்) தனிச் சந்நிதியில் எழுந்தருளுமாறு துர்காதேவியை கேட்டுக் கொண்டார் ஈசன். அதன்படியே துர்கையும் இங்கு எழுந்தருளினாள். துர்காதேவிக்கு அருள் புரிந்ததால் இங்கு உறையும் ஈசன் துர்கா புரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு எழுந்தருளி இருக்கும் பிரதான அம்பாளின் திருநாமம்- ஸ்ரீகாமுகாம்பாள் என்பதாகும். இதற்கான கதையும் சுவாரஸ்யமானது. சிவபெருமானின் கவனத்தை பார்வதிதேவியின் மேல் திருப்புவதற்காக, 'குறுக்கை' எனும் வீரட்டானத் திருத்தலத்தில் சிவபெருமான் மீதே அம்பெய்தி னான் மன்மதன். கோபம் கொண்ட சிவன், தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை அங்கேயே எரித்துச் சாம்பல் ஆக்கினார்.

தன் நாயகனுக்கு ஏற்பட்ட சோக நிகழ்வைப் பார்த்து வருந்திய ரதிதேவி, பொன்னூர் என்னும் இடத்தில் தவச்சாலை அமைத்து, தவம் இருந்தாள். பின், ஈசன் திருமணக் கோலத்தில் அருளும் திருமணஞ்சேரிக்கு வந்து, ''உங்களைத் திருமணக் கோலத்தில் காண பெரும் பாக்கியம் செய்திருக்கிறேன். அதே நேரம், என் துணையை என்னிடம் இருந்து பிரித்து விட்டீர்களே.. நான் என்ன பாவம்

செய்தேன். மன்மதனை உயிர்ப் பித்துத் தாருங்கள்!'' என்றாள். அதன்படி, ரதி தேவியின் கண்களுக்கு மட்டுமே மன்மதன் காட்சி தரும் வரத்தைத் தந்தார் ஈசன்.

முற்பிறவியில் மன்மதன் சிவ அபசாரம் செய்ததால் இந்தப் பிறவியில் அவனுக்கு இப்படியரு நிலை ஏற்பட்டதாம். எனவே, சிவனால் உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன், இந்தத் தலத்தில் உறையும் சிவனை வணங்கி, பார்வதிதேவியையும் துதித்தான். மன்மதனின் பக்தி கண்டு இரங்கிய பார்வதிதேவி, அவனுக்குக் கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் மீண்டும் தந்து அருளினாள். எனவே, இந்த ஆலயத்தில் காட்சி தரும் அம்பாள், காமுகாம்பாள் என அழைக்கப்பட்டாள் (மன்மதனுக்கு காமன் என்கிற பெயரும் உண்டு. காம னுக்கு அருளியதால் காமுகாம்பாள்).

கிடாத்தலைமேட்டில் எழுந்தருளி இருக்கும் துர்கா புரீஸ்வரரும் சிறப்பானவர்; அவரது தேவியான காமு காம்பாளும் கீர்த்தி பெற்றவர்; பிராகாரத்தில் தனிச் சந்நிதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீதுர்காதேவி, பக்தர் களின் துயரைக் களைவதில் பிரதான இடம் வகிக்கிறாள். ஒரே ஆலயத்தில் இருக்கும் மூன்று சந்நிதிகளுக்கும் இப்படி ஏராளமான பெருமைகள் உண்டு. 1988-க்கு அடுத்து இப்போது கும்பாபிஷேகம் நடத்த உத்தேசித்து, கடந்த 14.9.08 ஞாயிறு அன்று பாலா லயம் செய்திருக்கிறார்கள். இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் நிர் வாகத்துக்கு உட்பட்ட கோயில் இது.

வாருங்கள், கிடாத்தலைமேடு ஆல யத்தைத் தரிசிப்போம்.

கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள் ளது. ராஜகோபுரம் இல்லை. விநாயகர், பலிபீடம், நந்திதேவர் கடந்ததும் ஈசன் சந்நிதி. அதற்கு முன்பாகவே அன்னை காமுகாம்பாள் சந்நிதி. நின்ற திருக்கோலத்தில் தெற்கு திசை நோக்கி அபய- வரத முத்திரைகளுடன் அருள் பாலிக்கிறாள். அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை சற்றே ஹீனமாகக் காட்சி தருகின்றன. நேராக- லிங்கத் திருமேனியில் ஸ்ரீதுர்காபுரீஸ்வரரின் தரிசனம். கயிலையானைத் துதித்துப் போற்றி விட்டு வெளியே வருகிறோம். பிராகார வலம் துவங்குகிறது.

ஸ்ரீதுர்காபரமேஸ்வரரின் கருவறை கோஷ்டத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகிய தெய்வங்கள் காணப்படுகின்றனர். கோஷ்டத்தில் துர்கை இல்லை. பிராகார வலத்தின்போது விநாயகர், ஸ்ரீதுர்கா தேவி, வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமண்யர், சைவ நால்வர், புனுகீஸ்வரர் (பெரிய லிங்கத் திருமேனி. இவருக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறுமாம்), கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், சனி பகவான் ஆகிய சந்நிதிகளைத் தரிசிக்கலாம். பிராகார வலத்தின் நிறைவில் வேப்ப மரத்தில் காட்சி தரும் மாரியம்மன், பைரவர், சூரியன், நாகர்கள் ஆகிய தெய்வங்களைத் தரிசிக்கிறோம். தல விருட்சமான வில்வம், பிராகாரத்தில் காணப்படுகிறது. தீர்த்தம் காவிரி.

இந்த ஆலயத்தின் சிறப்பான- தனிச் சந்நிதியில் அருளும் ஸ்ரீதுர்காதேவியைத் தரிசிக்கலாமா?

கிடா ரூபத்தில் காணப்படும் மகிஷனின் தலை மேல் நின்ற கோலத்தில் வடக்குத் திசை நோக்கி அருள் புரிகிறாள் ஸ்ரீதுர்காதேவி. சிம்ம வாகனம் மற்றும்

எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள். கரங்களில் இரண்டு வரத- அபய முத்திரை தாங்கியும், ஐந்து கரங்களில் சக்கரம், பாணம், வில், கத்தி, கேடயம் ஆகியவை தரித்தும், ஓர் இடக் கரத்தைத் தொடை யில் பதித்தும் தரிசனம் தருகிறாள். கடந்த

1996-ஆம் வருடம் துர்கை சந்நிதியில் ஸ்ரீசக்ர பூர்ண மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

துர்காதேவி சிலா விக்கிரகத்தில் இடது நாசியில் மூக்குத்தி அணிவதற்காக ஒரு சிறு துவாரம் அமைந் துள்ளது. இதற்கொரு சுவாரஸ்யமான பின்னணி உண்டு. இங்கு பிரதிஷ்டை ஆவதற்காகத் தயார் செய்யப்பட்ட துர்கை சிலா விக்கிரகத்தில், மூக்குத்தி அணிவிப்பதற்கான வசதியை சிற்பி ஏற்படுத்தவில்லை. ஆனால், இந்த துர்காதேவிக்கு மூக்குத்தி அணிய பெரும் விருப்பம் போலும்! அன்றைய தினம் இரவு சிற்பியின் கனவில் தோன்றி, ''நான் மூக்குத்தி அணிய வேண்டும். அதற்கு ஏற்றவாறு சிலையில் நாளை ஒரு திருத்தம் செய்' என்றாள் தேவி. உடனே, ''தாயே... விக்கிரக வேலை பூர்த்தியாகி விட்டது. இந்த நேரத்தில் உன் நாசியில் நான் கை வைத்து, அது பின்னமாகி விட்டால், என் மனம் மட்டுமல்லாமல் ஊர்மக்கள் மனமும் சங்கடப்படுமே... தவிர, இத்தனை நாள் உழைப்பு வீணாகிப் போகுமே?'' என்று கேட்டாராம் சிற்பி. அதற்கு துர்கை, ''வருந்தாதே... என் நாசியில் உளியை மட்டும் வை. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்!'' என்று சொல்லி மறைந்தாள்.

மறுநாள் காலை, துர்காதேவி விக்கிரகத்தின் இடது நாசியில் உளியை வைத்த அடுத்த கணம், தானாகவே அங்கு மிகச் சிறிய ஒரு துவாரம் ஏற்பட்டதாம்! இந்த அதிசயத்தைக் கண்டு துர்கா தேவியைப் போற்றி அந்தத் திருமேனியின் காலில் விழுந்து வணங்கினான் சிற்பி. இதில் இருந்து துர்கைக்கு மூக்குத்தி அணிவிக்கும்

வழக்கம் ஆரம்ப மானதாம்.

விசேஷ காலங்களில் துர்கையின் திருமுகத்தில் வியர்வைத் துளிகள் அரும்புவதாக ஆலய சிவாச் சார்யர் சொன்னார். இங்கு துர்கைக்கு நேர் எதிரே சுமார் இருபதடி உயரத்தில் சூலம் ஒன்று காணப் படுகிறது. இந்த சூலத்தின் அடிப்பாகம் பூமிக்கு அடியிலும் இருபதடி ஆழம் வரை செல்கிறதாம். இதற்கு பூஜை செய்ய படிக்கட்டுகள் உள்ளன. துர்கைக்கு எப்படி அபிஷேகம் ஆகிறதோ, அது போல் இந்த சூலத்துக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இது தவிர, ஐந்தடி நீளத்தில் ஒரு சூலமும் ஓரடி நீளத்தில் ஒரு சூலமுமாக மொத்தம் மூன்று சூலங்கள் உள்ளன. இந்த சூலங்களை ஸ்ரீசாமுண்டீஸ்வரியின் வடிவம் என்கி றார் அர்ச்சகர். எலுமிச்சம்பழத்தில் தேனைத் தடவி, இந்த சூலத்தில் குத்தி வழிபட்டால் ஏவல், பில்லி- சூன்யம் முதலானவை விலகுமாம். சாமுண்டீஸ்வரி எனப்படும் இந்த சூலத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், கால்நடைகளுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் அகன்று விடுமாம்.

சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன்... ஸ்ரீதுர்காதேவியே, ஒரு பக்தையின் வடிவில் இந்த ஆலயத்துக்கு வந்து சென்ற கதையை சிலிர்ப்புடன் நம்மிடம் சொன்னார்கள் ஆலய அன்பர்கள்.

1988-ஆம் வருடம் ஜூலை மாதம் 6-ஆம் தேதி புதன்கிழமை அன்று இந்த ஆலயத்துக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பிறகு மாதம்தோறும் பௌர்ணமி தினத்தன்று இந்த துர்கை சந்நிதியின் முன்னால் சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது. ஹோமத்தின் முடிவில், ஒன்பது சுவாசினிகளை (சுமங்கலிப் பெண்கள்) பூஜித்து, அவர்களுக்குப் புடவை, ரவிக்கை மற்றும் மங்கல திரவியங்கள் சிலவற்றைக் கொடுத்து, சந்நிதியி லேயே அவர்களுக்கு உணவும் அளித்து அனுப்பு வது வழக்கம். இது ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் தொடர்ந்து நடந்து வந்தது. இதன் நிறைவை 5.8.90 அன்று விமரிசையாகக் கொண்டாட எண்ணி னார்கள், விழாக் குழுவினர்.

இதற்காக முந்நூறு சுவாசினிகளை ஆலயத் துக்கு அழைத்து, அவர்களை பூஜித்து கௌரவிக்க விரும்பினர். அங்கே இங்கே என அலைந்து முந்நூறு சுவாசினிகளுக்கும் ஏற்பாடு செய்தாகி விட்டது. அன்றைய தினம் ஆலயமே விழாக் கோலம் பூண்டிருந்தது. பக்தர்கள் ஏராளமாக திரண்டனர். பூஜையில் கலந்து கொள்ளும் முந்நூறு சுவாசினிகளுக்கும் ஒன்பது கஜப் புடவை, ரவிக்கை, மஞ்சள், குங்குமம், புஷ்பம், பழம், சீப்பு, கண்ணாடி, குங்குமச் சிமிழ், கண்மை, வளையல், ரிப்பன், சாந்து, தேங்காய், தாம்பூலம், தட்சணையாக ரூபாய், கருகமணி, முறம் போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாக் குழுவைச் சேர்ந்த அன்பர் ஒருவர், வந்திருந்த சுமங்கலிகளை எண்ணிப் பார்த்தார். சரியாக 299 பேர் மட்டுமே இருந்தார்கள். ஒருவர் மட்டும் வரவில்லை. சுமங்கலிகளை இந்த பூஜையில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தவர் தவித்துப் போய் விட்டார். பின்னே... முந்நூறு சுமங் கலிகளில், ஒருவர் மட்டும் வராமல் போனால், அது ஓர் அபசகுனம் என்று மற்றவர்கள் கருத மாட்டார்களா? ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த முந்நூறாவது சுமங்கலி மட்டும் ஏனோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் கோயிலுக்கு வர முடியவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீதுர்கையின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு பூஜையைத் தொடங்கினர்.

சுமங்கலிகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து திரவியங்கள், புடவை மற்றும் ரவிக்கை முதலானவை வழங்கப்பட்டன. எஞ்சி இருந்த ஒரு செட் மங்கலப் பொருட்களை அதற்கு உண்டான புடவை- ரவிக் கையுடன் துர்கையின் பாதத்திலேயே பக்தி சிரத்தையுடன் வைத்து விட்டனர். ஆக, அந்த முந்நூறாவது சுமங்கலியாக அன்றைய தினம் துர்கா தேவியே பாவிக்கப்பட்டாள்!

பூஜை மற்றும் வழிபாடுகள் முடிந்த பிறகு சந்நிதியிலேயே 299 சுமங்கலிகளுக்கும் உணவு பரிமாறப்பட்டது. அனைவரும் திருப்தியாகச் சாப்பிட்டு எழுந்தனர். இத்துடன் இந்த சுமங்கலி பூஜை இனிதே முடிவடைந்தது. கலந்து கொண்ட

அனைவரும் தத்தம் இல்லம் திரும்பத் தொடங்கினர்.ஆலயத்தின் பிரதான அர்ச்சகர்

சுப்ரமணிய சிவாச்சாரியர் உட்பட வந்திருந்த அர்ச்சகர் களும் மதிய உணவுக்காகக் கோயிலுக்கு அருகே உள்ள இல்லத்துக்குத் திரும்பினர்.

கை-கால்களைக் கழுவிக் கொண்டு அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். இலை போட்டு அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. உணவைக் கையில் எடுத்து அவர்கள் சாப்பிடப் போகும் முன், வாசலில் இருந்து யாரோ பெண் குரல் அழைப்பது மாதிரி இருந்தது. பிரதான அர்ச்சகர் எழுந்து, வாசலுக்குப் போய்ப் பார்த்தால் - சுமார் எண்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார். சுமாரான தேகம். நெற்றியில் அழகான வட்ட வடிவில் பெரிய குங்குமப் பொட்டு. கழுத்தில் புரளும் மஞ்சள் தாலி. பழுத்த சுமங்கலியாகக் காட்சி அளித்தார். யாராக இருக்கும் என்று பிரதான அர்ச்சகர் குழம்பி நின்ற நேரத்தில் அந்த அம்மாளே ஆரம்பித்தார் ''ஏம்ப்பா... சுமங்கலி பூஜைக்கு வந்திருக்கேன். பல இடம் போயிட்டு வர வேண்டி இருந்ததால கொஞ்சம் தாமதம் ஆயிடுச்சு. எனக்குக் கொடுக்க வேண்டியதை எல்லாம் கொடுத்து அனுப்பிச்சா, நான் கௌம்பிப் போயிடுவேன்.''

பிரதான அர்ச்சகருக்கு சந்தோஷம். அதாவது முந்நூறு சுமங்கலிகளும் வந்திருந்து, புடவை பெற்றுச் சென்று விட்டார்கள் என்கிற நிறைவு இதன் மூலம் கிடைக்கிறதே! எனவே, முகம் மலர, ''வாங்கோ! கோயிலுக்குப் போவோம்'' என்று அவரையும் அழைத்துக் கொண்டு கோயிலை நோக்கி நடந்தார். மற்ற அர்ச்சகர்களும் இவர்களைப் பின் தொடர்ந்தனர்.

ஸ்ரீதுர்கை சந்நிதியில்... அவளது பாதங்களில் வைக்கப்பட்டிருந்த புடவை, ரவிக்கைத் துணி மற்றும் மங்கலப் பொருட்களை எடுத்து வந்தார் பிரதான அர்ச்சகர். பிறகு, மந்திரங்கள் முழங்க அவை அனைத்தும் அந்த அம்மாளுக்கு வழங்கப்பட்டன. புன்னகையோடு பெற்றுக் கொண்டவர், ''எனக்குப் பசிக்கிறது. ஏதாவது சாப்பாடு போடுங்கோப்பா'' எனக் கேட்க... அவரை அங்கேயே அமர வைத்து நுனி இலை போட்டு, பிரசாத உணவு வகைகளைப் பரிமாறி இருக்கின்றனர். திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தவர், கைகளைக் கழுவிக் கொண்டு, ஒரு தூணின் ஓரம் அமர்ந்தார். ''ஐயா... சாப்பிட்டதும் ஒரு களைப்பு வந்திடுச்சு. நான் இங்கேயே கொஞ்ச நேரம்

ஓய்வு எடுத்துக்கறேன். பாவம், நீங்கல்லாம் சாப்பிடாம இருக் கேள். போய் சாப்பிட்டு வந்துடுங்கோ'' என்றார் அந்த அம்மாள்.

அதன்படி வீடு திரும்பிய அர்ச்சகர்கள் உணவை முடித்துக் கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. ஆலயத்துக்குள் எண்பதுவயது அம்மாளை ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டு வந்த விவரம் பலருக்கும் மறந்தே போய் விட்டிருந்தது.

திடீரென இந்த விஷயம் சுப்ரமணிய சிவாச் சார்யரின் நினைவுக்கு வர, ''அடடா... அந்த அம்மாளைக் கோயிலுக்குள் ஓய்வெடுக்கச் சொல்லிட்டு வந்தோமே... அவருக்கு வேறு ஏதாவது தேவையா என்று கவனிப்போம், வாங்கோ'' என்று மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு, ஆலயத் துக்குள் நுழைந்தார்.

உள்ளே- அந்த அம்மாளைக் காணவில்லை. ஆலயத்தின் ஒவ்வொரு முடுக்கிலும் போய்ப் பார்த்தார்கள். வெளியே போயிருக்க வாய்ப்பில்லை. அப்படிப் போனாலும் அர்ச்சகரின் வீட்டைக் கடந்தே போயிருக்க வேண்டும். தவிர, இங்கிருந்து ஊரை விட்டு செல்ல அப்போது வாகன வசதிகளும் அவ்வளவாக இல்லை. ஓரிரு அர்ச்சகர்கள் இரு சக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கம் தேடிப் பார்த்தனர். அந்த அம்மாளை காணவே இல்லை. அப்போது, யதேச்சையாகக் கோயிலுக்குள் நுழைந்த ஒரு பெண்மணிக்கு அருள் வந்தது. ''அடேய்... கடைசி சுமங்கலியா கோயி லுக்குள் வந்தது நான்தான்டா... புடவை வாங்கிட்டு, நல்லா சாப்பிட்டுட்டு ரொம்ப திருப்தியோட கிளம் பினேன்'' என்று சொல்ல... அனைவரும் ஆடிப் போய் விட்டனர்.

புதிதாக வந்த பெண்மணிக்கு அருள் இறங்கியதும் அவரை ஆசுவாசப்படுத்தி அனுப்பினர். பிரதான அர்ச்சகர், அன்னை துர்கையின் முன்னே நின்று, ''அம்மா... நீயே வந்து ஒரு சுமங்கலியா உக்காந்து சாப்பிட்டதுல எங்களுக்குப் பரம சந்தோஷம்'' என்று பூரித்திருக்கிறார். அப்போது துர்கையின் முகம் ஏகத்துக்கும் வியர்த்திருந்ததாம். சாப்பிட்டுச் சென்றதால் அன்னைக்கு ஏற்பட்ட களைப்பு இது என்கிறார்கள்.

ஆக, சுமார் 18 வருடங்களுக்கு முன் நடந்த இந்த நிகழ்வை இப்போது கேட்கும் போதும், மெய்சிலிர்க்கிறது. பின்னே... துர்கா பரமேஸ்வரியே நேரில் வந்து புடவை பெற்றுக் கொண்டு, உணவும் உண்டு விட்டுச் செல்லும் பாக்கியம் எவருக்குத்தான் கிடைக்கும்?

இப்படிப் பல பெருமைகள் கொண்ட

ஆலயம், இன்று சிதிலம் அடைந்து காணப்படுகிறது. மண்டபங்களும் விமானங்களும் பொலிவிழந்து காணப் படுகின்றன. இவற்றை செப்பனிட்டு, மகா கும்பாபிஷேகம் செய்யத் தீர்மானித் துள்ளனர். அதன் முதல் கட்டமாகத்தான் பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. பெருமை வாய்ந்த துர்காபரமேஸ்வரர் ஆலயம் சீராக வேண்டாமா? அன்னை துர்கையின் புகழ் அகிலமெங்கும் பரவ வேண்டாமா?

அருள் மனம் கொண்ட உள்ளங்கள் உதவட்டும்; ஆலயம் புதுப் பொலிவு பெறட்டும். அனைத்தும் நல்ல விதத்தில் நிறைவேற, அந்த துர்கையை வணங்கி, அவள் ஆசி பெறுவோம்!

படங்கள் எ. பிரேம்குமார்

தகவல் பலகை

தலம் கிடாத்தலைமேடு
மூலவர் ஸ்ரீகாமுகாம்பாள் உடனுறை ஸ்ரீதுர்கா புரீஸ்வரர், ஸ்ரீதுர்காதேவி.

எங்கே இருக்கிறது? மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடுதுறைக்கு வடமேற்கிலும், திருமணஞ்சேரிக்கு வடக்கிலும், காவிரியின் வடகரையிலும் கிடாத் தலைமேடு அமைந்துள்ளது. குத்தாலத்தில் இருந்து சுமார் 8 கி.மீ.! திருமணஞ்சேரியில் இருந்து சுமார் 3 கி.மீ.! மயிலாடுதுறையில் இருந்து சுமார் 16 கி.மீ.!

எப்படிப் போவது? கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் வரும் ஊர் குத்தாலம். இங்கிருந்து திரு மணஞ்சேரி வழியாக காளி என்கிற ஊருக்கு மினி பஸ் செல்கிறது. இதில் பயணித்தால், கிடாத்தலை மேட்டில் இறங்கிக் கொள்ளலாம். மயிலாடுதுறையில் இருந்து காளி வழியாக மணல்மேடு செல்கிற பேருந்தில் பயணித்தால், காளியில் இறங்கிக் கொண்டு சுமார் 2 கி.மீ. தொலைவு நடந்தால் கிடாத்தலைமேடு வரும். மயிலாடுதுறையிலிருந்து கிடாத்தலைமேட்டுக்கு மினி பஸ் வசதி உண்டு. ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் பயணித்தால் எளிது.

தொடர்புக்கு

எஸ். மகாலட்சுமி,
ஸ்ரீதுர்காபுரீஸ்வரர் கைங்கர்ய சபா,
3, கீதகோவிந்தம், துளசி அபார்ட்மெண்ட்,
11/6, குப்புசாமி தெரு,
தி.நகர், சென்னை 600 017.
போன் 044- 2815 2533,
மொபைல் 98400 53289.
எஸ். சந்திரசேகர சிவம், அர்ச்சகர்.
போன் 04364- 230999,
மொபைல் 94438 77040.