மீண்டும் உங்களுக்காக...

கவியரசு கண்ணதாசன்

அர்த்தமுள்ள இந்துமதம்

போகம் ரோகம் யோகம்
தொடர்ச்சி...
யோகியாக இல்லாமலேயே, யோகம் கைவரப் பெற்றவனாக லௌகிக வாழ்க்கையை ஒருவன் நடத்த முடியும். ஒருவன், மனைவியோடு வாழலாம்; ஆனாலும், அவளைத் தீண்டாமலிருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருவனுக்கு நிறைய உணவு-வசதிகள் இருக்கலாம். பசி எடுத்தாலும் அந்த உணவை உண்ணாமலிருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

இதுதான் இயக்கத்தில் இயங்காமை. இதுவே லௌகிக மனிதனுக்குத் தேவையான யோகம்.

பதவி என்றால் எல்லாருக் கும் ஆசைதான். ஆனால் நேரம் வரும்போது, அந்தப் பதவியைத் தூக்கியெறியும் திராணி எல்லாருக்கும் வந்து விடுவதில்லை.

'நம்மை அது அடக்குவதா, அதை நாம் அடக்குவதா?' என்று வரும்போது, 'எதையும் நான் அடக்க முடியும்' என்ற நிலைக்கு வருவதே யோகம்.

எது கிடைத்தாலும், 'எனக்கு, எனக்கு' என்று ஓடுகிறவன் போகி. பின்பு ஒரு நாள் அவன் ரோகி. 'எதையும் விட, தான் உயர்ந்தவன்' என்று கருதக் கூடியவன் யோகி.

வாரியார் சுவாமிகள் சொன்ன கதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.

ஒரு குறுகலான பாலம். நன்றாகக் குளித்து விட்டு நெற்றியில் விபூதிப் பூச்சோடு அந்தப் பாலத்தில் வந்து கொண்டிருக்கிறது ஒரு யானை. எதிரே அசிங்கமாக வந்து கொண்டிருக்கிறது ஒரு பன்றி. வாலை ஆட்டிக் கொண்டு பன்றி கம்பீரமாக வருகின்ற வேகத்தில், சக்தி வாய்ந்த யானைக்குக் கோபம் வரவில்லை. அது ஒதுங்கி நின்று வழி விடுகிறது. பன்றிக்கோ, தான் வெற்றி பெற்று விட்டதாக நினைவு. யானையே தனக்குப் பயந்து விட்டதாக ஒரு கனவு. ஆனால், யானை யினுடைய நினைவோ, 'பாவம் பன்றி! விட்டு விடுவோம்' என்பதாகும்.

தன்னை உயரத்தில் வைத்துப் பார்க்கும் ஆணவம் இல்லாமல் யானை ஒதுங்கிற்று.

இன்னொரு யானைக் கதை.

ஒரு யானையின் மீது சவாரி செய்ய ஒரு அணில் விரும்பிற்று. 'சரி, முதுகில் ஏறிக்கொள்!' என்றது யானை. அணில் ஏறிக் கொண்டது.

யானை அதைச் சுமந்து செல்லும்போது யானையின் தலையில் ஒரு தென்னை மட்டை விழுந்தது. யானை ஒரு பிளிறு பிளிறிற்று. உடனே அணில் கேட்டது. ''நான் முதுகில் இருக்கிறது வலிக்கிறதா?'' என்று.

யானைக்கு அணில் ஒரு சுமையா? ஆனாலும் அணிலுக்கு அப்படி ஒரு நினைவு.

தாழ்ந்தவர்கள் தங்களை உயர்வாகக் கருதும் போது, உயர்ந்தவர்கள் சிரித்துக் கொண்டே ஒதுங்கி விட வேண்டும். அதுவும் யோகம்தான்.

'என்னைவிட நீ உயர்வா?' என்று சண்டைக்குப் போகக் கூடாது.

'உலகத்தில் கடவுள் தனக்கு அடுத்தபடியாக நம்மை வைத்திருக்கிறான்' என்று கருதி, அந்தத் தெய்வீக நிலையை எட்டி விடுகிறவனே யோகி.

'பட்டதெல்லாம் போதுமடா பகவானே' என்ற பட்டினத்தார் யோகம் அனுபவ யோகம்.

ஒன்றைப் பார்த்த உடனேயே, 'இது விஷம்' என்று கண்டுகொள்பவனே அறிவார்ந்த யோகி. 'இது மோசம்' என்று கண்டு கொள்கிறவன் அறிவார்ந்த யோகி. அதை அனுபவித்துப் பார்த்து விலகுபவன், அனுபவ யோகி.

அறிவார்ந்த யோகியின் செயலைத்தான், 'ஞான திருஷ்டி' என்கிறார்கள்.

பஸ்ஸில் ஏறி வெளியூருக்குச் செல்ல விரும்பினார் ஒரு நண்பர். திடீரென்று, 'இன்றைக்குப் போக வேண்டாம்' என்று முடிவு கட்டினார். அன்று அந்த பஸ் விபத்துக்குள்ளாகி விட்டது. இது இறையருள் யோகம்.

இறைவன் எல்லாருக்கும் இந்தச் சக்தியைக் கொடுப்பதில்லை. பூர்வ ஜன்ம விதிவசத்தால், சிலருக்கு இது கைகூடுகிறது.

நூறாண்டுகளுக்கு ஒருமுறை, இப்படி இறையருள் யோகம் கைவரப் பெற்றவர்கள் பிறக்கிறார்கள்.

இந்த விதிவிலக்குகளை நம்முடைய வாழ்க்கையில் எடைபோடக் கூடாது.

உண்மையான யோகம் என்பது, நான் முன்னே சொன்னபடி, வாழ்ந்து கொண்டே வாழாமல் இருப்பது; அல்லது வாழாமலே வாழ்வது.

பகவான் கீதையிலே கூறும் முக்கியமான யோகங்கள் சில. கரும யோகம் அவற்றிலே ஒன்று.

'கருமத்தைச் செய்; பலனை எதிர் பார்க்காதே' என்பதே பகவான் வாக்கு. இதை ஆயிரக்கணக்கான முறை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

இதன் பொருள் என்ன? 'அலுவலகத்தில் வேலை பார்; சம்பளம் வாங்காதே' என்பதா?

சாதாரண மனிதனுக்கு அப்படித்தான் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல.

உனக்கென்று சில சுய தர்மங்களை வகுத்துக்கொள். 'பத்துப் பேருக்கு உதவுவது' என்று வைத்துக் கொண்டால், எந்தப் பத்துப் பேரிடமிருந்து எதையும் நீ எதிர்பார்க்க முடியாதோ, அவர்களுக்கு உதவு.

'கருமம்' என்பது கடமை. ''மகனைப் படிக்க வைத்துப் பட்டம் பெற வைத்து, உத்தியோகமும் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்'' என்று மட்டும் நினை. 'அப்படிக் கொடுத்து விட்டால், அவன் சம்பளத்தில் சாப்பிடலாமே' என்று நினைக்காதே.

எங்கே நீ பலனை எதிர்பார்க்கலாமோ, அங்கே எதிர்பார்க்கலாம்.

மனைவிக்கு நகை வாங்கிக் கொடுப்பதும் கருமம்தான்; அப்படி வாங்கிக் கொடுத்தால், 'அவள் நம்மிடம் பிரியமாக இருப்பாள்' என்ற பலனும் அதில் அடங்கி இருக்கிறது.

அரசியல் ரீதியாகச் சொன்னால், ஒரு கருமத்தின் பலன் இருந்தும், இல்லாமலும் இருக்கிற இரண்டு நிலைகள்

உண்டு. உதாரணம் வங்காளதேச விடுதலை. அந்த விடுதலையின் மூலம் ஒரு அரக்கனி டமிருந்து வங்காள தேச மக்கள் விடுதலை பெற்றார்கள்.

நாம் அந்த நாட்டைக் கைப்பற்ற வில்லை. ஆனால், ஒரு கோடி அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

ஒரு வகையில் நமக்குப் பலன் இருந்தது; ஒரு வகையில் பயனில்லை.

நாம் எதிர்பார்த்த பலன், அகதிகளை அனுப்புவது.

நாம் விரும்பாத பலன் நாட்டைக் கைப்பற்றுவது.

தச்சன், அடிக்கின்ற ஆணிக்குக் கூலி வாங்காமல் இருக்க முடியாது. கொல்லன் அடிக்கின்ற இரும்புக்குக் கூலி வாங்கித்தான் தீர வேண்டும்.

பகவான் இவர்களைத்தான், பலனற்ற கருமம் செய்யச் சொல் கிறான் என்று பலர் தப்பாகக் கணக் கிடுகிறார்கள். உண்மை அதுவல்ல.

'கருமம்' என்ற வார்த்தையைக் 'கடமை' என்றே அவன் கொள்கிறான்.

'தருமம்' என்பது என்ன? பலன் கருதாத உதவி.

'கருமம்' என்பது பலன் கருதாத கடமை.

எந்தப் பலனும் கருதக் கூடாது.

'மகராஜன் நல்லா இருக்கணும்' என்று வாழ்த்துவார் கள், பெற்றுக் கொண்டவர்கள். அந்தப் பலனையும் எதிர்பார்க்கக் கூடாது. சிலர் பெற்றுக் கொண்டே திட்டுவார்கள்; அதைப் பற்றியும் கவலைப் படக்கூடாது. 'அடப்பாவி! நான் எவ்வளவு உதவி செய்திருக்கிறேன். என்னைப் போய்த் திட்டுகிறானே' என்று சொல்லக் கூடாது.

உண்மையில் அதுவும் ஒரு வகை யோகம்தான்!

'நன்றியை எதிர்பாராதே.'

'நன்றி கெட்டவனை மன்னித்துவிடு.'

'எந்தச் சூழ்நிலையிலும் நமது கடமையைச் செய்து விட்டோம்' என்று திருப்தியடையுங்கள்!

இதுவே யோகம்.

இந்த இலக்கணத்தின்படி, எத்தனை பேரை இன்று நாம் சந்திக்க முடியும்?

தருமச் சொத்து என்று வைத்து, அதிலேயும் கொள்ளையடிப்பவர்கள்தான் அதிகம். ஆனால், கண்ணை மூடிக் கொண்டு கடமையைச் செய்வதுதான் யோகம்.

இன்றைய யோகிகளில் சிலர் காரியத்தைச் செய்து கொடுத்துவிட்டு - தாங்கள் எதிர்பார்க்கா விட்டாலும் வருகின்ற பலனைப் பெற்றுக் கொள்கிறார்கள்! இது நேரான யோகத்துக்குப் புறம்பானது. லௌகிக வாழ்வில்
ஒரு மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் இது.

நல்ல அடை மழை, 'தனது வீடு ஒழுகுகிறது' என்று நாலு பேர் கதவைத் தட்டினால், அவர்கள் படுப்பதற்குக் கூடச் சில பேர் இடம் கொடுப்பதில்லை.

ஓர் இந்து, 'தங்கள் வீடு, அகதிகளும் அதிதிகளும் ஆபத்தில் தங்குவதற்காக' என்று கருத வேண்டும்.

'தன் உணவு பங்கிட்டுச் சாப்பிடவே!' என்று எண்ண வேண்டும்.

'செல்வம் செல்லக்கூடியது' -

'தங்கம் தங்காதது'

தங்கக் கூடியது, நல்வினைப் பயன் ஒன்று மட்டுமே.

-(வளரும்)