குருவருள்

வாழும் கலை கேளுங்கள்!

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

கெட்ட சகவாசத்தை ஒதுக்க வேண்டும். 'ஒரு மனிதனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவனுடைய தோழர்களின் மூலமும், அவன் படிக்கும் புத்தகங்களின் மூலமும் தெரிந்து கொள்ளுங்கள்' என்று சொல்லப்படுவதுண்டு.

கெட்ட சகவாசம் என்றால் என்ன? உங்களுடைய தவறான குணங்களையும், செயல்களையும் உறுதிப்படுத்தும் தோழமைதான் கெட்ட சகவாசம்.

உங்களுக்கு ஒரு பிரச்னை! நீங்கள் ஒருவரி டம் சென்று அதைப் பற்றிப் பேசுகிறீர்கள். அவர், உங்களது குற்றச்சாட்டுகளில் உள்ள தவறான எண்ணங்களையும் நம்பிக்கையையும் நியாயப்படுத்திப் பேசுகிறார் என்றால், அதுதான் கெட்ட

தோழமை.

வேறொருவரிடம் சென்று அதே பிரச்னையைச் சொல்லி, தீர்வு கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள் வோம். அந்த நபர், உங்களை மன இறுக்கத்தில் இருந்து தளர்த்தி விடுகிறார்; அவரிடமிருந்து திரும்பி வரும் போது, 'இந்தப் பிரச்னை அவ்வளவு பெரியது இல்லை!' என்று நீங்கள் உணர்கிறீர்கள் எனில், இவரே சிறந்த நண்பர்; இதுதான் சரியான சகவாசம்!

உங்களது பிரச்னைகளையும் மனக் குறைகளையும் ஒப்புக் கொள்பவர்களே சிறந்த நண்பர்கள் என்று நினைக்காதீர்கள். அவர்கள் நண்பர்களே அல்ல!

உங்களது எதிர்மறை எண்ணங்களையும் ஏமாற்றங்க ளையும், மேலும் மேலும்

வளர்ப்பவர்கள் அந்த நேரத்துக்கு நண்பர்கள் போல் தோன்றுவர். ஆனால், அவர்கள் உங்களின் எதிரிகளே!

நீங்கள் பழகும் அநேக மனிதர்கள், உங்களது எதிர் மறைச் செயல்களை உறுதிப்படுத்துகிறார்கள். நீங்கள் அன்பு நிறைந்தவராக வளர வேண்டுமானால் கெட்ட சகவாசத்தை விட்டு ஒதுங்குங்கள். ஏனெனில், கெட்ட சகவாசம் உங்களது ஆசையைத் தூண்டுகிறது.

நாம் எதற்கு கெட்ட சகவாசத்தில் இருந்து விடுபட வேண்டும்? ஏன் கெட்ட சகவாசத்தை வைத்துக் கொள்ளக் கூடாது?

ஏனெனில், அது உங்களுக்குக் காமத்தையும், ஆசையையும், மன எழுச்சியை யும் உண்டு பண்ணுகிறது. 'அந்த மனிதனிடம் விலை உயர்ந்த கார் இருக்கிறது. என்னிடமும் இதுபோல் கார் இருக்க வேண்டும். அந்த மனிதரிடம் இது இருக்கிறது. என்னிடமும் அது இருக்க வேண்டும்' எனப்போன்ற ஆசைகள் நிறைவேறாதபோது கோபம் வருகிறது. எல் லாம் கெட்ட சகவாசத்தின் விளைவு!

ஆம்... ஆசை, விருப்பம், ஏமாற்றங்கள், மன எழுச்சி, கோபம், மருட்சி (பயம்) இவை யாவும் கெட்ட சகவாசத்தால் பெறப்படுபவையே!

நீங்கள் சந்திக்கும் ஒரு மனிதரைக் குறித்து, 'அவர் மிகவும் நம்பிக்கை இல்லாதவர்' என்று நினைக்கிறீர்கள். மற்றவர்களிடம் கேட்டு, உங்கள் மனதில் அவரைப் பற்றி ஒரு முழுக் கருத்தை உருவாக்கி வைக்கிறீர்கள். எதிர்பாராமல், அவரைப் பற்றி நீங்கள் வைத்திருந்த கருத்துகளும், மதிப்பீடுகளும் தவறு என்று தெரிய வருகிறது.அப்போது, அவை எல்லாம் சிதறிவிடுகின்றன. உங்கள் மதிப்பீடுகள் தவறாகி விடுகின்றன. இதுபோன்று, வாழ்க்கையில் உங்களது மதிப்பீடுகள் எவ்வளவு முறை உங்களைத் தோல்வி அடையச் செய்து இருக்கிறது?!

இருந்தபோதிலும் நமது கடந்த கால அனுபவத்திலிருந்து நாம் எதையும் கற்றுக் கொள்வதில்லை; அதற்கான முயற்சிகளும் எடுப்பதில்லை.

எந்த சகவாசம் உங்களை தோல்வியடையச் செய்கிறதோ... எது, உங்கள் சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ள விடவில்லையோ, அந்தச் சகவாசமே கெட்ட சகவாசம்.

மனிதர்கள், மறுபடியும் மறுபடியும் தவறு செய்து, வாழ்நாள் முழுவதும் மன அழுத்தமும் மனச் சோர்வும் அடைகிறார்கள். 'தாங்கள் துயர் நிறைந்தவர்களாக இருக்கிறோம்' என்பது அவர்களுக்கே தெரியாது. அத்துடன், சுற்றி இருப்பவர்க ளையும் துயர் நிறைந்தவர்களாகச் செய்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் உறவே கெட்ட சகவாசம்.

பயம் வரும்போது, ஞாபக சக்தி இழப்பு ஏற்படுகிறது. நீங்கள், உங்கள் சக்தியை யும், 'நீங்கள் யார்?' என்ற அறிவையும் இழந்து விடுகிறீர்கள். அறிவு மங்கலாகவும், தெளிவில்லாமலும் இருந்தால் எல்லாம் தவறாகத்தான் தெரியும்.

எது, குறைந்த காலத்துக்கு சந்தோஷத்தையும், நீண்ட காலத்துக்கு துக்கத்தையும் கொடுக்கிறதோ அது நல்லதல்ல! எது, நீண்ட காலத்துக்கு சந்தோஷமும் குறைந்த காலத்துக்கு துயரத்தையும் கொடுக்கிறதோ, அதுவே நல்லது. இதுதான், நல்லது- கெட்டதின் விளக்க உரை. 'இது நல்லது... நல்லதல்ல' என்பதை அறிவுதான் முடிவு செய்யும். அறிவே போய் விட்டால், அனைத்தையுமே இழந்து விடுவோம்.

சிறையில் உள்ள கைதிகளிடம் போய்ப் பேசினால், இதைத்தான் நீங்கள் பார்ப் பீர்கள். ஒரேயரு நொடியில் அவர்கள் அறிவை இழந்ததால், எல்லாவற்றையும் இழந்து விட்டனர். அறிவை அல்லது பாகுபாடு செய்யும் திறனை இழப்பதால், எல்லாக் குற்றங்களும் நிகழ முடியும். அநேகமாக எல்லோரும் கெட்ட சகவாசத்தால் தான் அறிவை இழக்கிறார்கள். அதனால்தான் மக்கள் கூட்டம், வன்முறையை உண்டு பண்ணுகிறது.

தனி மனிதன் மட்டும் பெரிய தீங்கு செய்ய முடியாது. அதனால், கெட்ட சகவா சத்தை ஒதுக்கிவிட வேண்டும். நல்ல சகவாசம், உங்களை உற்சாகப்படுத்துகிறது, மகிழச் செய்கிறது, உயர்த்துகிறது. இணக்கமான சுபாவத்தையும் உணர்வையும் கொடுக்கிறது. நீங்கள் எப்போதும் உங்களுக்கு இணையான ஒருவரிடம் அல்லது உங்களைப் போல் எண்ண அலைகளைக் கொண்டவரிடம் அல்லது உங்களுக்கு சமமானவருடன் தோழமை வைத்துக் கொள்கிறீர்கள். யாராவது உங்களுக்கு மேல் மட்டத்தில் இருந்தால், நீங்கள் அவருக்கு மரியாதை கொடுக்கிறீர்கள். கௌரவம் கொடுக்கிறீர்கள். அவரைத் தெய்வம் போல் வழிபடுகிறீர்கள்.

யாராவது உங்களுக்கு கீழ் மட்டத்தில் இருந்தால், அவரை கவனிக்கக்கூட முயற் சிக்க மாட்டீர்கள். தூசைத் தட்டுவது மாதிரி அவரை விலக்குகிறீர்கள்.

நீங்கள் வைத்துக் கொள்ள விரும்பும் சகவாசம் உங்களுக்குச் சமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அங்குதான் உங்களுடைய கோபங் களும், ஏமாற்ற உணர்ச்சிகளும் ஆரம்பிக்கின்றன. அப்போது நீங்கள், உங்களை மிகச் சிறியவராக நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் மேல் மட்டத்தில் வைக்கிறீர்கள். அல்லது உங்களைப் பெரியவராக நினைத்து எல்லாவற்றையும் அற்பமாக வும், தகுதி இல்லாததாகவும் கருதுகிறீர்கள்.

'உண்மையில் நீங்கள் யார் என்றே உங்களுக்குத் தெரியாது!' என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் மற்றொருவருடைய சமையலறைக்குச் சென்று பார்த்தால், அங்குள்ள கண்ணாடி குப்பி களில் அடையாளச் சீட்டு ஒன்று இருக்கும். அத னுள்ளே வேறொரு பொருள் இருக்கும். குப்பிகளில் இருப்பது ஒன்று; அடையாளச் சீட்டு சொல்வது வேறொன்று. அதே மாதிரிதான் நீங்களும். நீங்கள் யாரோ ஒருவர் என்று கூறிக் கொள்கிறீர்கள். ஆனால்,

உங்களுக்குள்ளே நீங்கள் முழுவதுமாக வேறுபட்டு இருக்கிறீர்கள். உங்களுடைய அடையாளத்தை விலக்கி விடுங்கள்.

எவர் ஒருவர், ஞானிகளுக்கு- சான்றோர்களுக்கு சேவை புரிகின்றாரோ, உத்தமமானவர்களுடன் தோழமை வைத்துக் கொள்கிறாரோ... அவர் 'எனக்கு இது வேண்டும். அது வேண்டும்' என்ற உணர்வுகளில் இருந்து விடுபட்டு விடுகிறார்.

நீங்கள், இருந்தாலும் இல்லாதது போல்; வாழ்ந்தா லும் வாழாதது போல் பற்றற்று இருக்கிறீர்கள். நிர்மலமான, காலியான, பாரமில்லாத மனதோடு ஒரு பறவையின் மென்மையான சிறகு போல் இருக் கிறீர்கள். உங்களுக்கு ஏதும் கோரிக்கைகள் இல்லை. மனிதர்கள், உங்களை அடையாளம் கொள்ள வேண்டும் என்று கோரிக்கையை வைப்பதில்லை. உங்களை எல்லோரும் அடையாளம் கண்டுகொள்ளா விட்டாலும் என்ன? அடையாளம் கண்டு கொண் டால்தான் என்ன? உலகத்தில் எல்லோரும் உங்களை அடையாளம் கண்டு கொள் ளட்டுமே!

தோட்டத்தில் பூக்கள் இருக்கின்றன. காடுகளில் பூக்கள் இருக்கின்றன. 'யாரும் என்னைப் பார்க்கவில்லை நான் மலர்ந்திருக்கிறேன்' என அவை சொல்கின்றனவா? ரோஜா மலருக்குத் தன்னை யாராவது பார்க்கிறார்களா, இல்லையா என்பது ஒரு பொருட்டா?

இன்னொருவரிடமிருந்து நமக்கு அங்கீகாரம் வேண்டும்; நல்ல பெயர் வரவேண்டும், என்ற உந்துதல் உங்களை தொல்லைப்படுத்துகிறது. நீங்கள், உங்கள் வேலையைச் செய்யுங்கள். உங்களுக்கு என்ன வர வேண்டுமோ அது வரும். மற்றொருவரிடம் இருந்து உங்களுக்கு நல்ல பெயர் வேண்டும் என்று ஏன் ஏங்குகிறீர்கள்?

உங்களுக்கு யானை- ஈ கதை தெரியுமா? ஒரு 'ஈ' யானையின் காலில் வசித்தது. ஒரு நாள், அந்த 'ஈ'க்கு கோபம் வந்தது. 'நான், இன்று உன்னை விட்டுச் செல்கிறேன். உனக்கும் எனக்குமான வாழ்க்கை முடிந்துவிட்டது' என்று கூறி, யானையின் காலை விட்டு அகன்றது. அந்த நேரத்தில், யானை தன் காலை நகர்த்தியது. இதனால் புழுதி பரவியது. அதை, புயல் என்று கருதிய ஈ, தான் கிளம்புவதால் தான் புயல் வந்திருக்கிறது என்று நினைத்தது. உடனே யானையிடம், 'இதோ பார், புயல் வந்து விட்டது. நான் உன்னை விட்டுச் செல்கிறேன். நீ புயலினால் கஷ்டப்படு' என்று ஈ சொன்னது.

யானைக்கு, தன் காலில் ஈ உட்கார்ந்து இருப்பது கூட தெரியாது! அதே மாதிரிதான் - 'நீங்கள் யார்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்யவில்லை?' என்று எவரும் கவனம் செலுத்து வதில்லை.

எல்லா மனத் தாக்குதல்களும் காலம் என்னும் வெள்ளத்தால் அழிக்கப்படுகின்றன. காலம், வெள்ளமாக வந்து உங்களை மூழ்கச் செய்கிறது. உங்களை அழித்துவிடுகிறது.

நீங்கள் - சேவை செய்யுங்கள். அகம்பாவம் என்ற நிலையில் இருந்தும், குறுகிய மனப்பான்மை யிலிருந்தும் விடுபடுங்கள்.
அன்பு என்பது கொடுப்பதில்தான் உள்ளது. அது, அதிகமாகக் கேட்டு வாங்கிக் கொள்வதில் இல்லை!

(ஆனந்தம் தொடரும்)

-தொகுப்பு தீபிகா
படங்கள் சு.குமரேசன்