கேள்வி-பதில்

அம்பாளுக்கு மட்டும் ஒன்பது நாள் கொண்டாட்டம் ஏன்?

பதில் சொல்கிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முத்தொழில் புரியும் மும்மூர்த்தி களுக்கு ஒரு நாள் கொண்டாட்டத்துடன் நிறுத்திக் கொள்கிறோம். ஆனால், அம்பாளுக்கு மட்டும் ஏன் ஒன்பது நாள்?

- உமா மகேஸ்வரி, சென்னை-20

மது- கைடபர், மகிஷாசுரன், தூம்ரலோசனை, சண்ட -முண்டன், சும்ப- நிசும்பர், ரக்த பீஜன் - இப்படியோர் அசுரர் கூட்டம் அண்டத்தை ஆட்டிப்படைத்தது.

முப்பத்து முக்கோடி தேவர்கள், மும்மூர்த்திகள், இந்திரன், திக்பாலகர்கள் ஆகிய எவராலும் அசுரர்களை அடக்க முடியவில்லை. உலகைக் காக்கும் பொறுப்பை சுமப்பவர்கள் தேவர்கள். சும்மா இருக்க முடியுமா? சிந்தனையில் ஆழ்ந்தார்கள்!

ஈசன் விழித்துக் கொண்டார். தனது உடலில் ஒன்றியிருக்கும் தேஜஸை அதாவது சக்தியைப் பிரித்து வெளியே எடுத்தார். அதைப் பார்த்து, மற்ற தேவர்களும் தங்களது தேஜஸை- ஆற்றலை வெளியே கொண்டு வந்தார்கள். அனைத்து தேவர்களது சக்தியும் ஒன்றாகத் திரண்டு ஒரு பேரொளியாக மாறியது. அந்தப் பேரொளியின் பெயர் துர்கை! ஆண்மையில் உறைந்திருந்த சக்தி, அவசரத்துக்கு உதவவில்லை. எனவே, அந்தப் பேரொளி பெண்மையாகத் தோற்றமளிப்பதையே தேவர்கள் விரும்பினர்.

உண்மையில்... ஆண்- பெண் என்பது வெளித் தோற்றத்தில் தென்படும் மாறுபாடே. உள்ளே உறைந்திருக்கும் ஆற்றல், ஆக்கப் பிறந்ததாக இருக்க வேண்டும். இதை மெய்ப்பிப்பதே துர்கையின் தோற்றம். தேவர்களின் ஆற்றல் மட்டுமின்றி, அவர்களது ஆயுதங்களும் அம்பாளை வந்தடைந்தன. சுருங்கச் சொன்னால், அனைத்துத் தேவர்களின் ஒட்டுமொத்த வடிவமே அம்பாள் என்ற தகவலை 'தேவி மகாத்மியம்' விவரிக்கிறது.

பிரம்மனின் சக்தி இணைந்திருப்பதால் அவள் ப்ராம்மீ. அவளிடம் மகேசனின் பங்கும் உள்ளதை மாகேஸ்வரி என்றப் பெயர் சுட்டிக்காட்டுகிறது. இதைப்போல், முருகப் பெருமான், விஷ்ணு மற்றும் இந்திரன் ஆகியோரது சக்தியையும் தன்னில் கொண்டவள் என்பதை... கௌமாரீ, வைஷ்ணவி, வாராஹி (வராக மூர்த்தியின் அம்சமானவள் என்பதால்) இந்திராணி என்ற தேவியின் பெயர்கள் சுட்டிக்காட்டுகின்றன.

போரில் ஒவ்வொரு எதிரி விழும்போதும் அந்த வெற்றியைக் குதூகலமாகக் கொண்டாடுவதுண்டு. தேவி, உலகின் எதிரிகளான ஒன்பது அசுரர்களை அழித்தவள். ஆதலால், அவளை ஒன்பது நாட்களாவது கொண்டாடுவோம். அவள் மக்களுக்காகச் செயல் பட்டவள்; மக்கள் துன்பத்தை அகற்றி, இன்பம் சேர்த்தவள்!

பேரொளியின் பூரண மகத்துவம் இரவில் பளிச்சிடும். இரவில், அவளைத் தரிசிப்பது கண்ணுக்கு விருந்து. ஒளிமயமான வாழ்க்கைக்கு ஒளிமயமானவளை வழிபடுவது சிறப்பு. சூரியன், பகலில் ஒளி தருவான். இவள், இருளிலும் ஒளி தருபவள். மனதில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளை அகற்ற ஆதவனால் இயலாது; தேவியால் இயலும். மற்றவர்களைவிட அம்பாளிடம் தனித் தகுதி உறைந்திருப்பதை உணர முடிகிறது.

மக்கள் மனதிலிருந்து பயம் அகல வேண்டும். அவர்களை, ஏழ்மை தழுவக் கூடாது. அவர்களது அறியாமை அகன்று, அறிவொளி மிளிர வேண்டும். ஆக... மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆதாரமான வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்றையும் எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பவள் அவள்.

உலகின் தாய் அவள். பிள்ளைகளில் பாகுபாடு பார்க்காது தாயுள்ளம். பிள்ளைகளின் உள்ளத்தில் கெட்ட எண்ணம் தென்படலாம். ஆனால், கெட்ட எண்ணம் கொண்ட தாயுள்ளம் உலகில் இல்லவே இல்லை என்று ஆதிசங்கரர் கூறுவார்!

மனதில் நினைத்தால் போதும்; அவள், மரண பயத்தை அகற்றி விடுவாள். அவளின் திருவுருவை அலங்கரித்து அடிபணிய வேண்டாம்; உள்ளம் அவளை நினைத்தாலே போதும்... அவளின் அருள் கிடைக்கும்.

இல்வாழ்வில் இன்னல் தோன்றாமல் இருக்க பயம் அகல வேண்டும். உலகையே பயத்தால் நடுங்க வைத்தவர்களையும் அழித்தவள் அவள். பயம் அகன்றவர்களுக்கு சிந்தனை வளம்பெற அறிவூட்டுபவள் அவள். வாழ்க்கையின் அடித் தளத்தையே தகர்க்கும் ஏழ்மை, மக்களை பற்றாமல் பார்த்துக் கொள்பவள் அவள். 'பயம், ஏழ்மை ஆகிய வற்றை அகற்றி, அறிவொளி அளிக்க எப்போதும் கருணை உள்ளத்துடன் விழித்துக் கொண்டிருக்கும் தாய் துர்கை'- என்று மார்க்கண்டேய புராணம் கூறுகிறது (துர்கே ஸ்ம்ரு தாஹரஸி...).

பயம் போக்கும் துர்கை வடிவத்துக்கு மூன்று நாள், ஏழ்மையை அகற்றும் லட்சுமி வடிவத்துக்கு மூன்று நாள், அறிவொளி தரும் அறிவு வடிவத்துக்கு மூன்று நாள்... இப்படி ஒன்பது நாட்கள் அம்பாளை வழிபடுவது சிறப்பு! மூன்று தடவை சொன்னால் முற்றுப்பெற்றதாக எண்ணலாம். 'ஓம் சாந்தி சாந்தி சாந்தி' என்று வேதம் மும்முறை சொல்லும். மூன்று நாட்களில் பயம் அகன்றது. அடுத்த மூன்று நாட்களில் ஏழ்மை அகன்றது. கடைசி மூன்று நாட்களில் அறிவொளி நிலைத்தது. ஆகையால், 'அம்பாளுக்கு ஒன்பது நாள் பணிவிடை!' என்கிற மரபு பொருள் படைத்ததே!

'மந்திரம் கால்... மதி முக்கால்!' என்று பெரிய வர்கள் சொல்வார்கள். எனில், மந்திரங்களை எப்படி நம்புவது?

- கே.எல். கந்தரூபி, மேலகிருஷ்ணன்புதூர்

மருந்து, மருத்துவர், நோயாளி மற்றும் நோயாளியைக் கவனிப்பவர்... இந்த நான்கு தரப்பும் சேர்ந்தே நோயாளியின் நோயை அகற்ற வேண்டும்.

நோய்க்கு உரிய மருந்தை மருத்துவர் தேர்வு செய்ய வேண்டும். அது சிறந்த மருந்தாயினும், சரியான வேளையில் கொடுக்க வேண்டும். கொடுத்த மருந்தை நோயாளி உட்கொள்ள வேண்டும். இந்த நான்கில் ஒன்று பிசகினாலும் பலன் கிடைக்காது. இதில், மருத்துவர் மிக முக்கியம். மற்ற மூவரும் சேர்ந்து கால் பங்கு என்றால், மருத்துவர் முக்கால் பங்கு! _ இவ்வாறு மருத்துவரின் முக்கியத்துவத்தை- அவரது பொறுப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறது ஆயுர்வேதம்.

இதுபோலத்தான் நீங்கள் குறிப்பிடும் வாசகமும். மந்திரம் கால் பங்கு எனில், நமது புத்திசாலித்தனமான செயல்பாடு முக்கால் பங்கு இருக்கவேண்டும். அப்போது, அந்த காரியம் வெற்றி பெறும். முயற்சிக்கு உதவுவது மந்திரம்!

ஒருவன், ஆசிரியரிடம் கற்ற பாடத்தில் தனது சிந்தனையால் தெளிவு பெறுகிறான். நண்பர்களுடன் ஆலோசித்து சந்தேகங்களைக் களைகிறான். காலப்போக்கில் அவனது அனுபவமாகிய நான்காவது பங்கும் சேர்ந்து கொள்ள முழுமை பெறுகிறான். ஆக, ஆசிரியர் கற்பிப்பது கால் பங்கு எனில், முக்கால் பங்கு நமது முயற்சியால் பெறுவது. அதற்காக ஆசிரியர் தேவையில்லை என்று கூறலாமா?

மந்திரமும் தேவை; புத்திகூர்மையான முயற்சிகளும் தேவை! மந்திரத்தை ஜபிக்கும் மனம் வேறொரு விஷயத்துக்கு தாவாமல் ஒருமுகப்பட்டுத் திகழ்வதால், நமது செயல்பாடுகள் சிறக்கும்.

பிரகலாதனின் மனம் நாராயண நாமத்தை அசை போட்டது. கடவுளில் முனைப்புடன் இணைந்த அவனது செயல்பாடு, பலன் அளித்தது. கால் பங்கு மந்திரமே, அவனை செயல்படத் தூண்டியது; சிந்தனைகளைச் சிதறடிக் காமல் அவன் மனதை ஒருமுகப்படுத்தியது. இதனால் அவனது (முக்கால் பங்கு) செயல்பாடு சிறந்தது!

ஜாதகத்தில் அதிர்ஷ்டம் இருந்தாலும், அது தானாகவே வந்து விடாது. கால் பங்குதான் அதிர்ஷ்டம். அதை வர வழைக்க முக்கால் பங்கு முயற்சி வேண்டும்.

விதையே பயிராகிறது. ஆனால், நன்றாக உழ வேண்டும், தண்ணீர் பாய்ச்ச வேண்டும், பயிர் வளர வெளிச்சம் வேண்டும். அப்போதுதான் விதை பயிராகும். விதை- கால் பங்கு எனில், மற்றவை- முக்கால் பங்கு!

பாலில்- நெய், எள்ளில்- எண்ணெய் போன்றது மந்திரத்தில் அடங்கியிருக்கும் பலன். மந்திரம்- கால் பங்கு; அதன் பலனைப் பெறுவதற்குத் தேவையான நமது முயற்சி- முக்கால் பங்கு!

ஆக, 'முயற்சியே முழுப் பயனை அளிக்கும்!' என்பதை விளக்கும் உபதேசமே, 'மந்திரம் கால்; மதி முக்கால்' என்ற வாசகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

காலையில் எழுந்ததும் முருங்கை மரத்தில் விழிக்கக் கூடாது என்கிறார்களே, ஏன்?

- ஆர். வெங்கடேசன், பென்னாகரம்

பெரும்பாலும் வீட்டை ஒட்டி மிக அருகில், எவரும் முருங்கை மரம் வளர்ப்பதில்லை. சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு தோட்டத்திலோ அல்லது அடிக்கடி கண்ணில் தென்படாத ஓர் இடத்திலோதான் முருங்கை மரத்தை வளர்ப்பார்கள்.

முருங்கைக் காய் வேண்டும். ஆனால், முருங்கை மரத்தால் ஏற்படும் தொல்லைகளைத் தவிர்க்க வேண்டும். முருங்கை மரம் உள்ள இடங்களில், கம்பளிப் பூச்சி போன்றன அதிகம் தென்படும். இது, ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல. எனவே, எச்சரிக்கையாக செயல்பட்டார்கள் நம் முன்னோர்கள்!

இருந்தாலும், சில தவிர்க்க முடியாத காரணங்களால்... காலையில் எழும்போது முருங்கை மரத்தைப் பார்க்க நேர்ந்தால், தவறில்லை.

காலையில் எழுந்ததும் உங்களின் உள்ளங்கைகளைப் பாருங்கள். அதன் பிறகு, எதைப் பார்த்தாலும் தவறில்லை. அடிப்படை இல்லாத தகவல்களை நம்பி மனதைக் குழப்பிக் கொள்ளாதீர்கள்!

சிலர், பூஜை செய்யும்போது, மனதை ஒருமுகப்படுத்தாமல் சுற்றுப் புறச் சம்பவங்களில் கவனத்தைச் சிதற விடுகிறார்கள்! இன்னும் பலர், பூஜையில் அமர்ந்திருக்கும் போதும் மற்றவர்களைத் திட்டு வதைப் பார்த்திருக்கிறேன். இதுபோன்ற அணுகுமுறைகள் சரியானவையா?

- மாலதி சந்திரசேகர், பெங்களூரு-34

செயலில் கவனம் வேண்டும். அப்போதுதான் அந்த செயல்பாடு சிறக்கும். வழிபாட்டின்போது நம் மனம், இறைவனில் ஊன்றியிருக்க வேண்டும்.

'மற்ற சிந்தனைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டு, மனதை என்னில் நிறுத்தி விடு. உனது விருப்பத்தை, நான் பூர்த்தி செய்கிறேன்!' என்ற கண்ணனின் வார்த்தையை நினைவில் கொள்ள வேண்டும்.

சபிப்பதற்கும், திட்டுவதற்கும் வேறு தருணங்கள் நிறைய இருக்கும்போது... பூஜையின்போதும் அதைக் கடைப் பிடிப்பது ஏன்? அதற்கு அவரது பலவீனமே காரணம்!

பூஜைக்குப் பிறகு செய்ய வேண்டிய முக்கியமான காரியங்கள் பற்றிய எண்ணமும் பூஜையின்போது அவசரத்தையும் பரபரப்பையும் உண்டுபண்ணும்.

கடமையை நிறைவேற்ற இயலாமை, தாழ்வு மனப்பான்மை, பூஜைப் பொருட்களின் தட்டுப்பாடு, அலுவல்களின் சுமை, விருப்பம் நிறைவேறாததால் ஏற்பட்ட ஆதங்கம்... இப்படி பல மன அழுத்தங்களும் ஒருசேர தலை தூக்கினால் பூஜைவேளையிலும் சபிக்கத் தோன்றும்.

இப்படி சபிப்பவர்களது சாபம் அவர்களின் மனதில் தேங்கியிருக்கும் துயரத்தின் வடிகாலாக எண்ணுங்கள். அமைதியான தருணத்தில் அவர்களின் தவறை சுட்டிக் காட்டினால், உண்மையை உணர்ந்து கொள்வார்கள்.

தினமும் தெய்வங்களை வழிபடும்போது, சங்கல்பம் சொல்லி பிரார்த்திக்கலாமா?

- விருதகிரி

சங்கல்பம் சொல்லி தெய்வங்களை வழிபடலாம். மனதில் தோன்றும் எண்ணம், சொல்லில் வெளிப்படும்; செயலில் சிறக்கும். மனதில் தோன்றாதது வார்த்தையில் வராது! 'மனது நினைப்பதை, வாக்கு சொல்லும். அதை,

செயல்புலன்கள் நடைமுறைப்படுத்தும்' என்கிறது வேதம் (யத்திம னஸா த்யாயதி தத்வாசா...). 'இன்ன காரியத்தை இப்படிச் செய்ய வேண்டும்; இன்னார் செய்ய வேண்டும்' என்று மனம் தீர்மானிக்கும். அதன்படி நாம் செயல்படுவோம்!

சங்கல்பம் என்பது... அதைச் செய்பவர், செய்யும் வேளை, குறிக்கோள், செயலின் உருவம் ஆகிய நான்கும் சேர்ந்தது ஆகும். 'இந்த நான்கும் இல்லாமல் செய்வது பலனளிக்காது!' என்கிறது தர்ம சாஸ்திரம். மனம் விரும்பியதை, சங்கல்பத்தில் சேர்க்க வேண்டும். அப்படி, விருப்பம் எதுவும் இல்லை என்றாலும்கூட, 'கடவுளை திருப்திப்படுத்த' என்று குறிப்பிட்டு, சங்கல்பிக்க வேண்டும் (பரமேச்வர ப்ரீத்யர்த்தம்).

கர்மாவுக்கு பலன் உண்டு. தேவையில்லை என்றால், பகவானிடம் அளிக்க வேண்டும். நமது கர்மாக்களின் பலனை பகவானுக்கு அளிக்கும் மரபு இன்றும் இருக்கிறது (மயா அனுஷ்டி தமிதம் கர்ம ஒம் தத் ஸத் ப்ரம்மார்ப்பணம்). ஆகவே, சங்கல்பத்துடன் வழிபடுங்கள்.

வாசகர்களே...
ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி

'கேள்வி பதில்', சக்தி விகடன்,
34, கிரீம்ஸ் ரோடு, சென்னை-600 006.

-பதில்கள் தொடரும்...
படங்கள் பொன். காசிராஜன்