கல கல கடைசிப் பக்கம்

முகவரி தேடி அலைகிறீர்களா?

தென்கச்சி சுவாமிநாதன்

இளைஞன் ஒருவன், கையில் ஒரு துண்டுச் சீட்டுடன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான்!

அந்த வழியாக வந்த பெரியவர் ஒருவர் இவனைப் பார்த்து, ''ஏன் இப்படி அலைந்து கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார்.

''ஒரு முகவரியைத் தேடி அலைகிறேன். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை!'' என்றான் இளைஞன்.
''இப்படிக் கொடு அந்தச் சீட்டை!'' என்று சீட்டை வாங்கிப் பார்த்தார் பெரியவர். அந்த முகவரி அவருக்குத் தெரிந்த இடம்தான்.

''வா என்னுடன்!'' என்றவர், இளைஞனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

வழியில் ஒரு நாய், தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருந்தது! அதை சுட்டிக்காட்டிய பெரியவர், ''அந்த நாயைக் கவனித்தாயா? அது, தன் வாலை கவ்வ முயற்சிக்கிறது. ஆனால் முடியவில்லை!'' என்றார்.

''ஆமாம், உண்மைதான்!''_ இளைஞனும் ஆமோதித்தான்.

பெரியவர் தொடர்ந்தார் ''ஆனால், பாம்பு அப்படியல்ல! பாம்பால் தனது வாலை தானே கவ்விக் கொள்ள முடியும். வேறு எந்த உயிரினத்துக்கும் இது சாத்தியம் இல்லை. எனவேதான், 'பாம்பை போல் அறிவுள்ளவனாக இரு' என்கிறார் இயேசு!''

''அப்படியென்றால்..?''

''உன்னையே நீ அறிவாய்!''

''புரியவில்லையே!''_ இளைஞன் குழம்பினான்.

''குண்டலினி சக்தி பற்றி கேள்விப் பட்டிருக்கிறாயா? அது, மனிதனின் உள்ளே இருக்கும் சக்தி. அதற்கு அடையாளமே பாம்புதான். அதை, 'பாம்பு சக்தி'

என்றுதான் சொல்வார்கள்!''

''நமக்குள்ளே அது எங்கே இருக்கிறது?''

''நமது மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கிறது. அதை விரிவடையச் செய்து, மேலே கொண்டு வந்து புருவ மத்தியில் நிறுத்தும் முயற்சிதான் காயகல்ப பயிற்சி!''

''ஐயா, எனக்கு ஒரு சந்தேகம்!''

''என்ன?''

''முகவரி எங்கே இருக்கிறது என்று நான் தேடிக் கொண்டிருக்கிறேன்... நீங்களோ, மூலாதாரம் எங்கிருக்கிறது என்பது பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்! இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?''

''இருக்கிறது... இப்போது, அதை நீ தெரிந்து கொள்ள வேண்டுமா?''
''ஆமாம்!''

''இந்தா... உன் துண்டுச் சீட்டு! மறுபடியும் படித்துப் பார். அந்த முகவரி எங்குள்ளது என்பது புரிகிறதா?'' வாங்கிப் பார்த்தான்.

''இது எனக்குத் தெரிந்த இடம்தான். இனி, யாரும் எனக்கு வழிகாட்ட வேண்டியதில்லை!'' என்றான்.

''அப்படியானால், பாம்பு தன் வாலைக் கண்டுபிடித்து விட்டது... நீ போகலாம்! அதற்கு முன், அது யாருடைய முகவரி என்பதைச் சொல்லிவிட்டுப் போயேன்!''

''ஹி... ஹி! எனது முகவரிதான்!''