ஈசனின் திருத்தலங்கள்

தேவாரத் திருவுலா! - 99

மதுரையிலிருந்து திருவேடகம் செல்லும்போது, வைகைக் கரையோடு பயணிக்கிறோம். இந்த வழியாகத்தான் குலச்சிறையாரின் குதிரையும் பறந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மிக அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது ஏடகத் திருக்கோயில். சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது பக்தர்களது வருகை அதிகரித்து வருவதாகச் சொல்கிறார்கள். மதுரையில் உள்ளவர்களுக்கு மீனாட்சியம்மையையும் சொக்கே சனையும் பார்க்காமல் இருக்க முடியாது. ஆனால், இப்போதெல்லாம் அங்கே அளவுக்கதிகமாகக் கூட்டம் சேர்ந்து விடுவதால், பலர் ஏடகம் நோக்கி வந்துவிடுகிறார்களாம். உள்ளூர்க்காரர் ஒருவர் தந்த தகவல் இது.

ஏடகநாதர் திருக்கோயில். கிழக்கு நோக்கிய கோயிலின் முகப்பில், அடிக் கட்டுமானத்தோடு நின்றிருக்கும் கோபுரம். தாண்டிச் செல்ல, ஒரு சிறிய நந்தவனம் போன்ற பகுதி. இங்கே, அருகருகே இரு கோபுரங்கள். சுவாமி சந்நிதிக்கு ஒன்று; அம் மன் சந்நிதிக்கு ஒன்று.

சுவாமி சந்நிதி கோபுரம் முன்பாக நிற்கிறோம். ஐந்து நிலை கோபுரத்தில் நிறைய பொம்மைகள். சிவபெருமான் நடனம், மீனாட்சி திருக்கல்யாணம், தட்சிணாமூர்த்தி, தண்டாயுதபாணி என்று பல் வேறு காட்சிகள். ரசித்துக் கொண்டே உள்ளே நுழைகிறோம். வெளிப் பிராகாரப் பகுதிக்கு வந்து விடுகிறோம். அம்மன் கோபுரம் வழியாக வந்தாலும் வெளிப் பிராகாரத்தை அடையலாம்.

வெளிப் பிராகாரத்தை வலம் வரத் தொடங்கு கிறோம். சுவாமி கோபுரத்திலிருந்து சுவாமி சந்நிதிக்கு நேரடியாகச் செல்லும் விதத்தில், மேலே நிரந்தரப் பந்தல் போல் இட்டிருக்கிறார்கள். சுவாமி சந்நிதி வாயிலுக்கு நேரே கொடிமரம், பலிபீடம், நந்தி. நந்தி சற்றே உயரத்தில் இருக்கிறார். இந்தப் பந்தல் பகுதியிலிருந்து பக்கவாட்டில் சென்று அம்மன் கோபுர உள்பகுதியை அடைகிறோம். அம்மன் சந்நிதிக்குச் செல் லும் உள் வாயிலுக்கு முன்பாக, இரு புறமும் மேடை போன்ற அமைப்பு. 'இதற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் உண்டா?' என்று கேட்டால், 'இல்லை' என்கிறார்கள். ஒருவேளை முற்காலத்தில், உற்சவங்கள் ஏதேனும் நடைபெற்றனவோ என்னவோ!

சுற்றி வர, திருச்சுற்றுகளில் கோயில் நந்தவனம். ஆங்காங்கே நிறைய மரங்கள். பக்தர்கள் நடப்பதற்கு வசதியான பாதை. இந்தக் கோயிலைப் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். தூய்மையோ தூய்மை, அபாரமான தூய்மை. கோயிலின் பின்புறம் வைகை நதி. நதியில் நீராடி, ஏறி வருவதற்கு வசதியாகப் பின்புறம் ஒரு வாயில் உள்ளது.

ஞானசம்பந்தப் பெருமானது பதிக ஏடு வைகையில் எதிர்த்துச் சென்றது எப்படியிருந்ததாம் தெரியுமா? பிறவி என்கிற ஆறு. சாதாரண பிறவி எடுத்தவர்கள், இந்த ஆற்றில் வீழ்ந்து மூழ்கி, அமிழ்ந்து கலங்கி அல்லல் படுவார்கள். ஆனால், பெரும் தவசிகள்? அவர்கள் ஆற்றில் மிதப்பார்கள்; ஆற்றுக்குள் மூழ்க மாட்டார்கள். அவ்வளவு ஏன்... ஆற்றின் போக்கை எதிர்த்துச் செல்வார்கள். அதுபோன்று, அதாவது பெரும் தவசிகள் போன்று, இந்த ஏடும் வைகையில் எதிர் நீச்சல் இட்டதாம்!

வைகையைக் கண்டு வணங்கி, வெளிப் பிராகாரச் சுற்றை நிறைவு செய்து, உள் வாயிலுக்கு வருகிறோம். வாயிலின் இரு புறமும் உள்ள விநாயகரையும் முருகரையும் வணங்கிப் புகுகிறோம்.

நேரே மூலவர் தரிசனம். இங்கிருந்து பார்க்கும் போது ஒன்று கவனத்தை ஈர்க்கிறது. மூலவர் கருவறை சற்றே உயரமாக இருக்கிறது. ஆற்றின் கரையில் இருக்கும் ஆலயம் என்பதால், வைகையில் வெள்ளம் வந்தாலும் வழிபாடு தடங்கலின்றி நடைபெறுவதற்காக இவ்வாறு அமைத்தார்கள் போலும்.

ஏடகநாதரைப் பாடிய சம்பந்தப் பெருமான், திருவேடகத்தில் நெடிய மாளிகைகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். அவர் காலத்தில் இருந்தனவோ? அப்போதும்கூட மாட- மாளிகை கள் இங்கிருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், சுவாமியின் அருள் மாளிகை இங்கு மிக உயரமானது என்று குறிப்பிடும் ஆசையில் இப்படிக் கூறினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கொடிநெடு மாளிகை கோபுரம் குளிர்மதி
வடிவுற அமைதர மருவிய ஏடகத்து
அடிகளை அடிபணிந்து அரற்றுமின் அன்பினால்
இடிபடும் வினைகள்போய் இல்லை அதாகுமே...

விண்ணிலுள்ள பிறை அளவு உயர்ந்த மாளிகைகளாம். அவற்றின் மீது கொடிகளாம். உண்மைதானே! முடியில் பிறை சூடிய பெருமானுடைய அருள் மாளிகை, பிறை அளவு உயரம்தான்; அதன்மீது அவர்தம் புகழ் கொடிதான்!

ஏலவார் குழலி அம்மையோடு உடனாய ஏடகநாதர் எழுந்தருளிய இடம், பற்பல வாச மரங்கள் நிறைந்த இடமாம். இந்த நாதரை வணங்கினால் செல்வம் மிகும் என்றும் பாடுகிறார்.

ஏலமார் தருகுழல் ஏழையோடு எழில்பெறும்
கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடம்
சாலமாதவிகளும் சந்தனம் சண்பகம்
சீலமார் ஏடகம் சேர்தலாம் செல்வமே

எதிரில் தெரியும் ஏடகநாதரைக் காணக் காணப் பேரானந்தம்! இந்தத் திருக்கோயில் அலாதியானது. ஏடு எழுந்த இடம் என்பதால் கொண்ட பெருமை மட்டுமல்ல, இன்னும் பல பெருமைகளும் இந்தக் கோயிலுக்கு உண்டு. கருடன், ஆதிசேஷன் ஆகியோர் இங்கு வழிபட்டனர். சாஸ்தாவும் இங்கு வழிபட்டார்.

ஒரு காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் வில்வ வனமாக இருந்ததாம். எனவே வில்வாரண்யம் என்று போற்றப்படும் பகுதிகளில் இதுவும் ஒன்று. வில்வ மரங்கள் செழித்திருந்த பகுதியின் மண்ணைத் தொட்டாலும் போதும், அதுவே பலகோடி நன்மையைக் கொடுக்கும் என்கின்றன சாத்திரங்கள். ஏடக மண்ணில் நிற்கும்போதே, நெஞ்சில் சொல்லொணா பரவசம் எழுகிறது.

மூலவராம் ஏடகநாதரைப் பார்த்துக் கொண்டே, உள் பிராகார வலத்தைத் தொடங்கு கிறோம். கிழக்குச் சுற்றில் சூரியன், தமது தேவியரான சாயா மற்றும் சமிக்ஞை ஆகியோருடன் காட்சி தருகிறார். உள் பிராகார தெற்குச் சுற்றில் திரும்ப, அறுபத்துமூவர். தென்மேற்கு மூலையில் உற்சவ மூர்த்தங்களின் சந்நிதி. ஏடகநாதர், ஏலவார்குழலி, ஆறுமுக சுவாமி, கணபதி, சோமாஸ்கந்தர், ஞானசம்பந்தர் என்று ஏராளமான உற்சவத் திரு மேனிகள். அடுத்து மெய்கண்ட சிவம், உமாபதி சிவம், அருள் நந்தி சிவம், மறை ஞான சிவம் ஆகியோரின் சந்நிதி. அடுத்தொரு சித்தர். தனியாக எந்தப் பெயரும் குறிப்பிடப்படவில்லை. எல்லா சித்தர்களையும் ஒருசேர எண்ணி வணங்கு கிறோம். அடுத்து வரிசையாக, பஞ்ச லிங்கங்கள்.

வடமேற்கு மூலையில், வள்ளி- தெய்வானை உடனாய முருகப் பெருமான், மயிலோடும் பன்னிரு திருக்கரங்களோடும் அபயஹஸ்தமும் வேலும் தாங்கியவராக தரிசனம் தருகிறார்.

வடக்குச் சுற்றில், சப்த மாதர்களான பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, மாகேந்த்ரி, சாமுண்டி ஆகியோர் வரிசையாகக் காட்சி தருகின்றனர். தொடர்ந்து இரட்டை விநாயகர், சுப்பிரமணியர், நாகர், விநாயகர், சுப்பிரமணியர், துர்கை, மகாலட்சுமி.

வடக்குச் சுற்றின் கிழக்குப் பகுதியில், நடராஜ சபை. மீண்டும் கிழக்குச் சுற்றில் திரும்புகிறோம். கால பைரவர் சந்நிதி. அடுத்து வரிசையாக வல்லப கணபதி, பூரணாதேவி ஒருபுறமும் புஷ்கலாதேவி மற்றொரு புறமும் உடனிருக்க நடுவில் ஐயனார், பின்னர் சாஸ்தா (ஐயப்பனும் ஐயனாருமாக வணங்கப்படுபவரே சாஸ்தா என்றாலும் சாஸ்தா திருவுருவமும் உள்ளது). தமது தேவியரான ரோஹிணி யோடும் கார்த்திகையோடும் சந்திரனும் காட்சி தருகிறார். நடராஜ சபைக்கும் கால பைரவர் சந்நிதிக் கும் எதிராக நவக்கிரகங்கள்.

உள் பிராகார வலத்தை நிறைவு செய்துவிட்டு, மூலவர் சந்நிதிக்கு நேராக நாம் நிற்கும் இடத்தை முன் மண்டபம் என்று குறிப்பிடலாம். தூண்களோடு கூடிய மண்டபம். தூண்களில் ஏராளமான சிற்பங்கள். ரிஷப வாகனர், தட்சிணாமூர்த்தி, வேணுகோபாலன், அனுமன், மகாவிஷ்ணு, எண்ணற்ற சிவ லிங்கங்கள், சதுர்புஜ அம்மன், நடராஜர், அன்னம் உள்ளிட்ட பறவைகள், பிட்சாடனர், முருகப் பெருமான் என்று ஏராளமான எழில் கோலங்கள். தூண் சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே மூலவர் சந்நிதிக்குச் செல்ல முற்படுகிறோம்.

நாம் முன்னரே பார்த்தது போன்று சந்நிதி சற்றே உயரத்தில் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்துக்கும் கருவறைக்கும் போக வேண்டு மானால், இரண்டு படிகள் ஏறித்தான் போக வேண்டும். நாம், ஏற்கெனவே உள்வாயிலில் பார்த்த நந்தியும் சரி, இங்கே முன்மண்டப நந்தியும் சரி, மூலவர் கருவறையின் உயரத்துக்கேற்ப உயரமான பீடங்களில் அமைக்கப்பட்டுள்ளனர்.

முகப்பின் மேல்பகுதியில் கஜலட்சுமி திருவுருவம்; இரு புறங்களிலும் விநாயகரும் முருகரும். கஜலட்சுமிக்கும் மேலே காளையின்மீது கோலம் கொண்ட சிவன்- பார்வதி. மீண்டும் இரு புறங்களிலும் நின்ற கோல விநாயகரும் தண்டாயுதரும். முகப்பின் இரண்டு பக்கங்களிலும் பெரிய துவாரபாலகர்கள். துவார கணபதியும் துவாரமுருகரும் கூட உள்ளனர். வணங்கி உள்ளே நோக்குகிறோம்.

கண்களைக் கொள்ளை கொள்கிறார் அருள்மிகு ஏடகநாதர். ஏடகேசர், ஏடக நாதேஸ்வரர் என்னும் திருப்பெயர்களையும் கொண்ட இவர், கல்வெட்டுகளில் திருவேடகம் உடைய நாயனார் என்று குறிக்கப்படுகிறார். சிவலிங்கம் சுயம்பு மூர்த்தம். சதுரபீட ஆவுடையாரில் குட்டையான பாணம். பாகனூர்க் கொற்றத்து திருவேடகமுடையார் இவர்தாம்! பார்க்கப் பார்க்க நெஞ்சம் நிறைகிறது. 'ஏட்டில் இருப்பவனே' என்று அழைத்தவுடன் ஏட்டிலும் பாட்டிலும் அருள் தந்த அணுக்கநாதராயிற்றே! ஏட்டிலும் இருப்பார்; பாட்டிலும் இருப்பார்; நீரிலும் இருப்பார்; நெருப்பிலும் இருப்பார்; எங்கும் இருப்பார்; எதிலும் இருப்பார்! ஏற்றங்கள் தரும் ஏடகநாதரை மனம்- மெய்- மொழிகளால் வணங்குகிறோம்.

பிரம்மா, திருமால், வியாசர், அவர் தந்தையான பராசரர் ஆகியோர் இந்த இறைவனை வழிபட்டுள்ள தாகத் தல புராணம் கூறுகிறது. சித்த சுவாதீனம் இல்லாதவர்கள், மனக் கலக்கம், உறக்கமின்மை முதலானவற்றால் அவதிப் படுபவர்கள், ஏடகநாதரை வணங்கி வழிபட்டால், சித்தம் சரியாகும் என்பதும், துன்பங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை.

நம்பிக்கையின் ஆழத்தையும் அதன் பலனையும் கண்ணெதிரில் காட்டுவதுபோல், மனங்கலங்கியவர் ஒருவரை அழைத்து வருகிறார்கள்; வரும்போது யாருக்கும் கட்டுப்படாது வருகிற அவர், பிராகாரத்தில் சுற்றும் போதே அமைதியடை வதைக் காண முடிந்தது. ஏடகநாதரின் மகிமைதான் என்னே!

கோயிலுக்கு அழைத்துச் சென்ற மருத்துவர் ஒருவர், தனது தொழிலிலும், இவ்வாறு ஏடகநாதரை வழிபட்டு நோயின் தன்மையும் வீரியமும் கட்டுப்பட்டவர்கள் உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறார்.

மீண்டும் உள் பிராகார வலம் வருகிறோம். கோயிலின் கட்டுமானம் அழகோ அழகு. நின்ற சீர் நெடுமாறர் (அதுதான் ஞானசம்பந்தரால் நோய் தீர்க்கப்பட்டு கூனலும் நிமிர்ந்தவர்) தொடங்கி அவருக்குப் பின் வந்த பாண்டிய மன்னர்கள் பலரும், அதற்கும் பிற்பாடு விஜயநகர அரசர்களும் இந்தக் கோயிலுக்கு நிறைய திருப்பணிகள் செய்துள்ளனர்.

திருத்தமான தூண்கள், செதுக்குக் கூர்மை குன்றாத சிற்பங்கள், தூண் போதிகைகளில் சிலிர்ப்புடன் தொங்கும் தாமரை மொட்டுகள் என்று பிற்காலக் கட்டுமான முறையின் எடுப்பு, பளிச்சென்று புலப்படுகிறது. கோஷ்டத்தில் பால கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை. தனி மண்டபத்தில் சண்டிகேஸ்வரர்.

உள் பிராகாரத்தின் தெற்குச் சுற்றில், பக்கவாட்டு வாயிலொன்று இருக்கிறது. இதன் வழியாகவே அம்மன் கோயிலுக்குச் செல்லலாம். அம்மன் கோயில் உள் பிராகாரத்தை அடைகிறோம்.

சுவாமி கோயில் அமைப்பில், அதற்கு இணையாக, சுவாமிக்கு வலப் பக்கமாக, கிழக்குப் பார்த்து அமைந்துள்ள அம்மன் கோயில். விசாலமான உள் பிராகாரம். அம்மன் சந்நிதிக்கு எதிரில் பலி பீடம், நந்தி, துவார கணபதியையும் துவார தண்ட பாணியையும் வணங்கி நிற்கிறோம். அம்மன் கோயில் தூண்களிலும் நிறைய சிற்பங்கள். ரிஷப நாதர், நாகலிங்கம், நடனமாதர், சங்கணன், தண்டபாணி, புலிக்கால் முனிவர்(மனித உடம்பும் புலியின் கால்களும் கொண்ட வியாக்ரபாதர்), வினோதமுனி, இசையில் லயித்திருக்கும் தும்புரு, கதாயுதம் தாங்கிய துர்கை, யானைகள் விசிற தவம் செய்யும் முனிவர், அன்னங்கள் உள்ளிட்ட பலவிதமான பறவைகள்... இந்த சிற்பங்களின் அழகு நெஞ்சை கொள்ளை கொள்கின்றன. தவிர, அம்மன் கருவறை வாயிலின் மேல் பகுதியில் ரிஷப வாகனர், கஜலட்சுமி, விநாயகர், முருகர், வீணை ஏந்திய பெண்கள்.

அருள்மிகு ஏலவார் குழலி அம்மன், நின்ற திருக்கோல நாச்சியாராக தரிசனம் தருகிறார். நான்கு திருக்கரங்கள். இரண்டு கரங்களில் அபயமும் வரமும் தாங்கி அருள்பாலிக்கிறார்.

கோஷ்டத்தில் இச்சா, கிரியா மற்றும் ஞான சக்திகள். பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதி; வடமேற்கு மூலையில் சுப்பிர மணியர் சந்நிதி. பிராகாரத்தின் வடக்குச் சுற்றில் பள்ளியறை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரி.

அம்மன் சந்நிதித் தூண்கள் ஒன்றில் திருஞான சம்பந்தக் குழந்தையின் திருவுருவம் சிற்பமாக உள்ளது. சின் முத்திரையுடன், தலையில் மாலை சூடி, கைத்தாளம் இல்லாமல் அந்தக் குழந்தை நிற்கிற அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.

ஏடு எதிர் ஏறிய திருவிழா ஆவணி மாதத்தில் நடைபெறும். கார்த்திகை சோமவாரத்தில் இந்தக் கோயில் தரிசனம் வெகு சிறப்பானது. அம்மன் கோயிலை விட்டு வெளியில் வந்து வெளிப் பிராகாரத்தை அடையும்போது, அங்குள்ள மணி கண்ணில் படுகிறது. இது, மலாயா நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டதாம்.

மணியைப் பார்த்தபடி நிற்கிறோம். ஞான சம்பந்தப் பெருமானுடைய பாடல் காதுகளில் ஒலிக்கிறது. குலச் சிறையாரின் குதிரை குளம்போசை கேட்பதுபோல் தோன்ற... மெள்ள வெளியே வருகிறோம்.

- (இன்னும் வரும்)
படங்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி