சிறப்பு கட்டுரை

சந்திர கிரஹணம் என்ன செய்ய வேண்டும்?

பூமியின் நிழல் சந்திரனில் விழும்போது, சந்திரன் மறைக்கப்படுகிறான். அதுவே சந்திர கிரஹணம்.

கிரஹண காலத்தை புண்ணிய காலம் என்கிறது தர்ம சாஸ்திரம். ஜபம்- மனத் தூய்மையை ஏற்படுத்தும்; கொடை- மனதைப் பக்குவப்படுத்தும்; முன்னோர் வழிபாடு-

நமது சிந்தனையை சரியான வழியில் திருப்பிவிடும். ஆகவே, கிரஹண வேளையில் இந்த மூன்றுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால், பன்மடங்கு பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.

கிரஹணம் துவங்கும்போது நீராட வேண்டும். பிறகு, இந்த பூமியில் நாம் இருக்கும் இடம், வருஷம், மாதம், பக்ஷம், வாரம், (அன்றைய) நட்சத்திரம், யோகம், கரணம் மற்றும் நமது பெயர், பிறந்த நட்சத்திரம், ராசி ஆகியவற்றுடன் எதற்காக நீராடுகிறோம் என்பதையும் சொல்ல வேண்டும். இதையே சங்கல்பம் என்கிறோம். கிரஹண காலத்தின் மையப் பகுதியில் இவற்றை செயல்படுத்துவது சிறப்பு. கிரஹணம் முடிந்ததும், மீண்டும் நீராட வேண்டும்.

கிரஹண வேளையில், மறை ஓதுபவர்கள் வேதத்தைச் சொல்லலாம். மற்றவர்கள் நமசிவாய, நமோ நாராயணாய என்றோ அல்லது தெரிந்த தோத்திரங்களையோ சொல்லலாம். வாய் பேசாதோர் மற்றும் சிறுவர்கள், மந்திரம் எழுதிய பட்டத்தை நெற்றியில் தரிப்பர். அதாவது, கனமான காகிதத்தில், 'யோ ஸெள வஜ்ரதரோ தேவ ஆதித்யானாம் பிரபுர் மத ஸஹ ஸ்ர நயன சந்திர க்ரஹ பீடாம் வ்யபோஹது' என்ற ஸ்லோகத்தை எழுதி, நெற்றியில் கட்டிக் கொள்வர். 'கிரஹண வேளையால் ஏற்படும் இன்னல்கள் அனைத்தும் மறைய வேண்டும்' என்று கடவுளை பிரார்த்திக்கும் வார்த்தைகள் இவை.

கிரஹணம் காரணமாக... சந்திர ஒளிக்கதிரின் பரவல் தடைபடும்போது, ஜீவ ராசிகளுக்கு மன மாறுதல் ஏற்படுவது இயல்பு. இது, நம் சிந்தனையையும் செயல்பாட்டையும் மாற்றும். சுகாதாரத்தையும் பாதிக்கும். எனவே சந்திர கிரஹணத்தின்போது, நம் உடல்- உள்ளம் ஆகியவற்றின் செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும்.

கிரஹண வேளைகளில் சாப்பிடும் உணவு செரிக்க தாமதமாகும். எனவே, உடல் வலிமை கொண்டவர்கள் கிரஹணம் துவங்குவதற்கு 9 மணி நேரம் முன்பே சாப்பிட்டுவிட வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆகாரம் செரிக்கும் வேளையைக் கணக்கில் கொண்டு, ஐந்து மணி நேரத்துக்கு முன்பு சாப்பிடலாம் என்று விதியை சற்றே தளர்த்திச் சொல்கிறது ஆயுர்வேதம். முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடல்நலமற்றவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. இவர்கள், கிரஹண வேளையில் மட்டும் சாப்பிடாமல் இருந்தால் போதும் என்கிறது சாஸ்திரம்.