சிறப்பு கட்டுரை

'நம்பிக்கையுடன் வருபவர்களை கைவிடமாட்டேன்!'

துரியோதனனின் மாமன் சகுனியின் சூழ்ச்சியால், சூதாட்டத்தில் தருமன் தோற்றுப்போக... பாண்டவர்கள் தேசத்தை இழந்து வனவாசம் சென்றனர்.

பாண்டவர்களது நிலை, விதுரனின் மனதைக் கலங்கச் செய்தது. ''

கிருஷ்ணர் நினைத்திருந்தால், தனது பிரியத்துக்குரிய பாண்டவர்களுக்கு இந்த நிலை ஏற்படாமல் காப்பாற்றி இருக்கலாமே? அவர்கள் சூதாடும் சூழலில், பரந்தாமன் ஏன் சும்மா இருந்து விட்டார்?'' என்ற எண்ணம் அவரை வாட்டி எடுத்தது.

ஒரு முறை,

கிருஷ்ணரைச் சந்தித்த விதுரன் தனது மனக் குழப்பங்களை அவரிடம் கூறினார்.

''கிருஷ்ணா! பாண்டவர்களின் உற்றத் தோழன் நீ. அவர்களுக்குத் துணையாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்பவன். அப்படி இருக்க... பாண்டவர்களை சூதாட விடாமல் நீ தடுத்திருக்கலாமே?'' என்று கேட் டார் விதுரன். மெள்ளப் புன்னகைத்த

கிருஷ்ணர், ''துரியோதனனது அரண்மனை வாசலில்தான் நான் இருந்தேன். ஆனால், தருமர் என்னை உதவிக்கு அழைக்கவில்லை. தவிர, தான் சூதாடுவது எனக்குத் தெரியக் கூடாது என்றும் அவர் எண்ணினார். இந்த நிலையில், நான் எப்படி தருமருக்கு உதவ இயலும்?'' என்று எதிர் கேள்வி கேட்டார்.

உடனே விதுரன், ''உன்னை அழைத்தால் மட்டும்தான் உதவி செய்வாயா கிருஷ்ணா? அதர்மம் நடக்கும் வேளையில், அதை தடுத்து நிறுத்துவது உனது கடமை அல்லவா? போகட்டும்... சூதாட்டத்தில் பாண்டவர்கள் வெற்றி பெறும் வகையில் நீ அருள் புரிந்திருக்கலாமே?'' என்று கேட்டார் ஆதங்கத்துடன்.

இதற்கும் தெளிவாக பதிலுரைத்தார்

கிருஷ்ணர் ''துரியோதனனுக்குச் சூதாடத் தெரியாது. எனவே, தனக்குப் பதிலாக மாமன் சகுனியை சூதாட நியமித்தான். அதேபோல், தருமரும் தனக்குப் பதிலாக என்னை அறிவித்திருந்தால், அவருக்குத் தோல்வி கிடைத்திருக்காது!'' என்றவர் மேலும் தொடர்ந்தார்...

''விதுரரே, உங்களுக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். திரௌபதியை துகிலுரித்த வேளையில்... அவள் தனது கரங்களால் சேலையை இறுகப் பற்றிக் கொண்டு என்னை அழைத்தபோது, நான் செல்லவில்லை. காரணம், அப்போது என்னை விட தனது கரங்களை அதிகம் நம்பினாள்! பிறகு, ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் தனது கரங்களை தலைக்கு மேல் கூப்பி, 'கிருஷ்ணா' என்று அவள் அழைத்ததும் ஓடோடிச் சென்று அருள் புரிந்தேன்.

ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் என்னைச் சரணடைபவர்களை, ஒருபோதும் நான் கை விட்டதில்லை; கைவிடவும் மாட்டேன்!'' என்றார்.

சந்தேகம் நீங்கி தெளிவு பெற்று,

கிருஷ்ணரின் திருவடி தொழுதார் விதுரன்.

- கே. ராஜலக்ஷ்மி, சென்னை-61