மீண்டும் உங்களுக்காக...

அர்த்தமுள்ள இந்து மதம்!

காலத்தால் அழியாத அன்மிக காவியம்

எனக்கொரு நண்பர் உண்டு. அவர் வீட்டுக்கு நான் எப்போதாவது சாப்பிடப் போவேன்.

முதலில், பெரிய தஞ்சாவூர் தாட்டிலை போடுவார்கள். ''இலை இவ்வளவு பெரிதாக இருக்கிறதே. எங்கே வாங்கினீர்கள்?'' என்று கேட்பேன்.

''வாங்குவதா? நம் தோட்டத்தில் இருந்து வந்தது!'' என்பார்.

பிறகு சாதம் வைப்பார்கள்.

''அரிசி நன்றாக இருக்கிறதே?'' என்பேன்.

''நம் பண்ணையில் விளைந்தது!'' என்பார்.

நெய் ஊற்றுவார்கள். ''நெய் வாசம் கமகமவென்று அடிக் கிறதே!'' என்பேன்.

''நம்மிடம் நாற்பது சுவிட்ஸர்லாந்து மாடுகள் உண்டு'' என்பார். 'என் பண்ணை, என் மாடு' என்று பேசுவதில் அவருக்கு அலாதிப் பிரியம்.

அவரது தொழிலையே செய்யும் இன்னொரு நண்பரும் உண்டு. அவரது வீட்டுக்குச் சாப்பிடப் போவேன். பாவம் அவர்; மிகவும் நல்லவர். அந்த நண்பரைப் போல் ஐந்து மடங்கு சம்பாதிப்பவர். பிள்ளை குட்டி இல்லாதவர். குறிப்பிட்ட அளவுக்கு மேல் சொத்து சேர்க்காதவர்.

காய்கறி வாங்கிய கடையையும், அரிசி வாங்கிய கடையையும் கூறுவார். அவரிடம் பண்ணை இல்லை. பணம் நிறைய சம்பாதிப்பாரே தவிர, சொத்து சேர்க்கும் ஆசையில்லை.

இந்த மண்ணாசையைப் பற்றி, ரஷ்ய ஞானி டால்ஸ்டாய் ஒரு கதை எழுதினார்.

ஓர் அரசன். அவனுக்கு வேடிக்கையான ஒரு எண்ணம் தோன்றிற்று. ஒரு வளமான பெரிய நிலத்தைக் காட்டி, 'இந்த நிலத்தில் ஒருவன் எவ்வளவு தூரம் ஓடிச் சுற்றி வருகிறானோ, அவ னுக்கு அந்த இடம் முழுவதும் சொந்தம்!' என்று அறிவித்தான்.

நில ஆசை பிடித்த ஒருவன் ஓடத் தொடங்கினான். ஓட ஓட, 'இன்னும் கொஞ்சம் போகலாம்! இன்னும் கொஞ்சம் போகலாம்!' என்று தோன்றிக் கொண்டே இருந்தது. ஓடினான், ஓடினான், ஓடினான். ஓடிக் கொண்டே இருந்தான். கடைசியில் மாரடைப்பால் செத்தான். டால்ஸ்டாய் கதையை முடிக்கும்போது- ''இனி அவனுக்கு அதிக நிலம் தேவை இல்லை; ஆறடி நிலமே போதும்!'' என்று முடித்தார்.

அனுபவிக்கும் ஆசை யாரை விட்டது?

'வாழ்க்கை என்றால் என்ன?' என்று கேட்டதற்கு, ஆங்கில ஆசிரியன் ஒருவன் சொன்னான் ''ஒன்று மாற்றி ஒன்றைப் பிடிக்க முயன்று, இறுதியில் ஒன்றையும் பிடிக்காமல் சாவதற்குப் பெயரே வாழ்க்கை.''

சந்நியாசியின் கோவணத்தில் ஒட்டிய அழுக்காவது அவன் கூடவே போய்த்தான் தீருகிறது.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் சொன்ன கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

'படித்த முட்டாள்' என்று ஒரு கதை எழுதுவதற்காக, அவர் என்னை பெங்களூருக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் சொன்ன கதைச் சுருக்கம் இது

ஏழைத் தோட்டக்காரன் ஒருவன். பாசம் என்ற போகத்தில் மாட்டிக் கொண்டான். அவனுக்கு ஒரு மகன். அவனைப் பட்டணத்தில் படிக்க வைத்துப் பணம் அனுப்பி வந்தான் தோட்டக்காரன்.

பையன், பட்டணத்தில் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்தான்.

ஒரு நாள், மகனைப் பார்க்க பட்டணத் துக்கு வந்தான் தந்தை. அன்று, அந்தப் பணக்காரப் பெண்ணுக்குப் பிறந்த நாள். பையன் விருந்து கொடுத்துக் கொண்டிருந்தான். அவனோ, 'தான் பணக்காரன் மகன்' என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

திடீரென்று ஏழைத் தகப்பனைக் கண்டதும், தன் குட்டு வெளிப்பட்டு விடுமே என்று அவனுக்குப் பயம் வந்து விடுகிறது.

தகப்பனோ பாசத்தோடு மகனைப் பார்த்து, 'டேய் ராஜா!' என்று கூப்பிட்டு விடுகிறான்.

அந்தப் பணக்காரப் பெண் உடனே ஆத்திரத்தோடு, ''யார் இவன்? உங்களைப் பார்த்து, 'டேய்' என்று கூப்பிடுகிறானே?'' என்றாள்.

பையன் அமைதியாக, 'இவன் எங்கள் வீட்டுத் தோட்டக்காரன்!' என்று கூறி விடுகிறான்.மனம் ஒடிந்த தந்தை, கண்ணீரோடு கிராமத்துக்குத் திரும்பி, முதலாளியின் தோட்டத்தில் தென்னை மரங்களைப் பாதுகாக்கத் தொடங்குகிறான்.

காதலியால் வஞ்சிக்கப்பட்ட மகன், பசி- பட்டினியோடு ஒரு நாள் ஓடிவந்து, ''அப்பா, தண்ணீர்... தண் ணீர்!'' என்று அழுகிறான். தகப்பன் அவனுக்குத் தண்ணீர் தராமல், தென்னை மரத்துக்கே ஊற்றுகிறான்.

''அட மகனே! உனக்கு ஊற்றிய பாலுக்குப் பரிசாக நீ என் தலையில் அடித்து விட் டாய். இந்தத் தென்னைக்கு எத்தனையோ நாட்கள் நான் தண்ணீர் விட்டிருக்கிறேன்; இதுவரை என் தலையில் விழுந்ததில்லை!''

- இதுதான் அந்த வசனம். அந்தப் படம் எடுக்கப்படவில்லை. அந்த வசனத்தைத்தான் பின்னாளில் நான்,

''தென்னையைப் பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு!''

என்று பாட்டாக எழுதினேன். போகத்தில் ஆசையுள்ள வன், கண்ணீருக்குத் தப்ப முடியாது. அது பாசமாகட்டும்; காதலாகட்டும்; இல்லை நால் வகை ஆசைகளில் எந்த ஓர் ஆசையாகட்டும். அது, மனிதனை நதியோட்டத்தோடு இழுத்துக் கொண்டே போகும்.

இறைவன் உலகத்தை எப்படிப் படைத்தான்? போகத்தையும் எவ்வளவு அழகாக வைத்தான்!

குறிப்பிட்ட அளவுக்கு மேல் வயலிலே தண்ணீர் தேங் கினால், பயிர் அழுகி விடுகிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் காற்றடித்தால், அது புயலாகி விடுகிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் மழை பொழிந்தால், அது வெள்ளமாகி ஊரை அழித்து விடுகிறது.

நிகழ்ச்சிகள், தத்துவங்களில் உள்ள நியாயங் களையே கொண்டிருக்கிறது. ஆனால், நிகழ்ந்த கதையே திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண் டிருக்கிறது.

நீதிமன்றங்கள் நிரம்பி வழிகின்றன. அங்கே போகிகள் கூட்டம் ஒன்று. சிறைச் சாலையிலும் அப்படியே. ஹோட்டல் களிலும் அப்படியே. முறையறிந்து வாழ்வோர் எத்தனை பேர்?

எல்லாரும் சங்கராச்சார்யார் ஆகி விட முடியாது; எனக்குத் தெரியும். ஆனால், தான் விளையாடுவதற்கு ஒரு நியாயமான வேலியை மட்டும் போட்டுக் கொள்கிறவர்கள் எத்தனை பேர்?

வெறும் பிரமையிலும் மயக்கத்திலும் எல்லாருமே உழலுகிறோம். கற்பகோடி காலம் வாழப் போவதாகக் கருதுகிறோம். ஏழு தலைமுறைக்குச் சொத்துச் சேர்க்கிறோம். 'உடம்பு படுத்தால் ஒரு துளி சாம்பலுக்கு மரியாதை இல்லை' என்பதை மறந்து விடுகிறோம்.

அடுத்தவர் சொத்தை அபகரிக்கும் போகிகள்- அந்தச் சந்தோஷத்தை எத்தனை நாள் அனுபவித் தார்கள்? இறைவன், அவர்கள் தங்கியிருக்கும் வீட்டிலேயே ஒரு நீதிமன்றத்தை ஏற்படுத்தித் தண்டிக்கிறான்.

சரித்திரம் சுடுகாடாகக் காட்சியளிக்கிறது.

உலகை வெல்லப் புறப்பட்ட அலெக்சாண்டரின் எலும்புக்கூடு அதோ கிடக்கிறது. சீசரின் எலும்பு கூடக் கடலில் மிதக்கிறது. பாதி உலகத்தை வென்று விட்ட ஹிட்லரின் எலும்புக் கூட்டை உலகம் தேடிக் கொண்டிருக்கிறது. இதிலே மண்ணென்ன, பெண்ணென்ன, பொன்னென்ன?

நான்காவது ஆசை, புகழ் எனும் ஆசை என்றேன். இதுவும் ஒரு வகை போகம்.

'எந்தக் கல்யாண வீட்டிலும் நாமே கல்யாண மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்' என்று பலருக்கு ஆசை. தன்னைப் பற்றியே பாடச் சொல்லிக் கேட்பது-

தன்னைப் பற்றியே எழுதச் சொல்லி ரசிப்பது-

'கலையில் வல்லவனும் நான்தான்'-

'கவிதையில் வல்ல வனும் நான்தான்'-

'பத்திரிகையில் ஆசிரியனும் நான்தான்'-

'ஊரில் உள்ள பெண்களுக்கெல்லாம் மாப்பிள்ளையும் நான் தான்' என்று திட்டம் தீட்டுவது.

வீடெங்கும் புகைப்படங் களையும், வாழ்த்துப் பாடல்களையும் மாட்டி வைப்பது... மேடையேறினால், 'நான்தான்' என்று பேசுவது... மற்றவர்களுக்குப் புகழ் வருவது போல் தோன்றினால் அதைத் தடுக்கப் பார்ப்பது...

- இவையெல்லாம், தகுதி இல்லாமல் புகழை விரும்பும் சிலரது குணங்கள். உண்மையிலே தகுதி இருப்பவன், பூமாலைக்கு ஆசைப்பட மாட்டான்.

காஞ்சிப் பெரியவரின் காலில் விழுகிற மாதிரி, எவரும் ஒரு ஜனாதிபதியின் காலில் கூட விழுவதில்லை. காரணம், புகழையோ, இகழையோ கணிக்காத பெரிய ஆத்மா, காஞ்சிப் பெரியவர். போகங்களில் சிக்காத புனிதர் அவர். பக்தி மார்க்கத்துக்கும், ஞான மார்க்கத்துக்கும் பாலம் அவர்.

பகவத் பாதாளுக்கும், ராமானுஜருக்கும் இணைப்புப் பாலம் அவர்.

துறவிக்கு வேந்தன் துரும்பு.

துறவி என்பவன் யார்? அவன் போகங்களைத் துறந்தவன். 'மத்தியானம் என்ன சாப்பிடலாம்' என்று காலையிலேயே திட்டம் தீட்டாதவன். கைப்பிடி அவலிலும், அரை ஆழாக்குப் பாலிலும் ஆன்மாவையும் தேகத்தையும் பாதுகாப்பவன்.

அவன் பெண்ணைத் தொட நேர்ந்தால், பேப்பரைத் தொடுவது போல் உணர்கிறான். பொன் னைத் தொட நேர்ந்தால், கல்லைத் தொடுவது போல் தொடுகிறான். மண்ணில் நடக்கும்போது,

பகவான் விரித்த நடை பாதையில் நடப்பதாகக் கருதுகிறான். என் கடிகாரம் எங்கே? என் பெட்டி எங்கே? என்ற வார்த்தைகளை அவன் உச்சரிப்பதே இல்லை.

'ரஜோ' குணத்து போகி, ஆன்மாவை அடியோடு ஒழித்து விட்ட வெறும் தேக சுக லௌகிகவாதி.

போகத்தை அறவே மறந்து விட்ட துறவி, கடவுளையே தன் சேவைக்கு அழைக்கும் ஞானி.

போகம், முடிவாக ரோகத்தில் கொண்டு சேர்க்கும்.

யோகம், ஆரம்பத்தி லேயே கைவரப் பெற் றால், அது போகத்தையும், ரோகத்தையும் தூக்கியெறிந்து விட்டுப் பகவானிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்.

- (வளரும்)