மண் மணக்கும் தொடர்

எல்லை சாமிகள்! - 94

கட்டுச்சோறுக் கருப்பர் உளிவீரன்

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடிக்குக் கிழக்கில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலத்துப்பட்டி. இந்தக் கிராமத்தின் வடக்கு எல்லையில்தான் ராஜாங்கம் நடத்துகிறார்கள் கட்டுச்சோற்றுக் கருப்பரும் உளிவீரனும்!

முன்னொரு காலத்தில் இந்தக் கிராமம், 'காயாங்காடு' எனப்பட்டது. இதன் அருகில் இருந்த மற்றொரு கிராமம் வன்னியன் சூரக்குடி. இங்கு, வன்னிய ராஜா ஒருவர் கோட்டை கட்டி ஆண்டு வந்தார். அவரிடம், அழகிய- வெள்ளை நிற மாயக் குதிரை ஒன்று இருந்தது.

இதே காலகட்டத்தில், மலையாள தேசத்தில் குறுநில மன்னனாக திகழ்ந்தவன் உளிவீரன். இவன், தனது மந்திர சக்தியின் மூலம் வன்னியராஜாவின் மாயக் குதிரை யைப் பற்றி அறிந்தான். அதை அபகரித்துச் செல்ல தனது படைகளுடன் புறப்பட்டு வந்தான். வன்னியராஜாவுடன் போரிட்டு குதிரையைக் கைப்பற்றுவது இயலாத காரியம் என்பதால், இரவுப் பொழுதில் குதிரையைக் கடத்தத் திட்டமிட்டான் உளிவீரன். அதன்படி, தனது மந்திர சக்தியைப் பயன்படுத்தி மாயக் குதிரையைக் கடத்தியவன், தனது தேசத்துக்குப் புறப்பட்டான். ஆனால், காயாங்காடு எல்லையைத் தொடும்போதே பொழுது விடிய ஆரம்பித்தது. பகலில் பயணத்தைத் தொடர்வது உசிதமல்ல என்பதால், உளி வீரனும் அவனது படைகளும் காயாங்காட்டிலேயே பதுங்கி இருந்தனர்.

இந்த நிலையில்... மாயக் குதிரையைக் காணாமல் பதறிய வன்னியராஜா, குதிரையைத் தேடி நாலா திசையும் படைகளை அனுப்பினார். அப்போது, மாயக் குதிரையைக் கடத்திச் சென்ற உளி வீரன் படைகளுடன் காயாங்காட்டில் பதுங்கியிருக்கும் விஷயம் தெரிய வந்தது. ஆத்திரம் கொண்ட வன்னியராஜா, தனது படைகளுடன் காயாங் காட்டுக்குப் புறப்பட்டார். இதையறியாத உளிவீரனும் அவன் படையினரும் தாங்கள் கொண்டு வந்திருந்த கட்டுச் சோற்றைப் பிரித்துச் சாப்பிட முற்பட்டனர். ஒரு கவளச் சோற்றை அள்ளி வாயில் போடும் நேரத்தில், வன்னியராஜாவின் படையினர் தாக்க... உளிவீரனும் அவன் படையினரும் செத்து மடிந்தனர். வன்னியராஜா மாயக் குதிரையுடன் கோட்டைக்கு திரும்பினார்.

பக்திமானாகிய வன்னிய ராஜா அடிக்கடி மதுரை

மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இவரின் பக்தியை மெச்சிய மீனாட்சியம்மை ஒரு நாள் அவருக்குக் காட்சி தந்தாள். ''இனி, என்னைத் தேடி நீ இங்கு வர வேண்டாம். உனது இடத்துக்கு நானே வருவேன்'' என்று அருளி மறைந்தாள். பேரானந்தம் அடைந்த வன்னிய ராஜா, அன்னையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தார்.

சொன்னபடி, வன்னியராஜாவின் கோட்டை வாசலுக்கு வந்து சேர்ந்தாள் அன்னை மீனாட்சி. ஆனால் அவள் வேறு ரூபத்தில் வந்ததால், அவளை யாரென்று அறியாத வன்னிய ராஜா கால் மேல் கால் போட்டு அரியணையில்அமர்ந் திருந்தாராம்! இதனால் சினம் கொண்ட மீனாட்சியம்மன், வன்னிய ராஜாவும் அவரது கோட்டை- கொத்தளங்களும் மண் மூடிப்போகும் படி சபித்தாள். அதன்படியே மண் மாரி பெய்து, வன்னிய ராஜாவின் கோட்டை- கொத்தளங்கள் அழிந்தன.

இதைக் கண்ட காயாங்காட்டு மக்கள், 'வன்னிய ராஜாவை பழி வாங்க... உளிவீரனின் ஆவிதான் இப்படி மண் மாரி பொழிய வைத்துள்ளது!' என்று பயந்தனர். போரில் வன்னியராஜாவுக்கு உதவிய குற்றத்துக்காக,

தங்களையும் உளிவீரனின் ஆவி ஏதேனும் செய்து விடுமோ என்று அஞ்சியவர்கள், அப்போதே உளி வீரன் இறந்த இடத்துக்குச் சென்றனர். ''தெரிந்தோ தெரியாமலோ நாங்கள் தவறு செய்திருந்தால், பொறுத்துக் கொள்ள வேண்டும். எங்களையோ எங்களின் சந்ததிகளையோ எதுவும் செய்யக் கூடாது. இனி, நீயும் உனது பரிவாரங்களும்தான் எங்களை எந்தப் பிணியும் அண்டாமல் பாதுகாக்க வேண்டும்'' என்று வேண்டிக் கொண்டனர். இதன் பிறகு, ஊருக்குள் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. எனவே, உளிவீரனையும் அவன் படையினரையும் குலக் கடவுள்களாகவே வழிபட ஆரம்பித்தனர் ஊர் மக்கள். அத்துடன், ஆலத்தி கண்மாய் கரையில், சிறிய கோயில் ஒன்றையும் எழுப்பினர். மனித வடிவில் வந்த கடவுள்கள் என்பதால், கோயிலை வீடு போன்றே கட்டியுள்ளனர்.

கோயிலில் மூலஸ்தானத்தின் மத்தியில், கிழக்கு நோக்கி- உளிவீரன் வணங்கிய சன்னாசி சாமிக்கு பெரிதாக சிலை வைத்துள்ளனர். இவருக்கு இரு புறமும் மலுக்கன், அரசுமகன், சந்தனக் கருப்பர், தொட்டியான், உளிவீரனின் படைத் தளபதியான கட்டுச் சோற்றுக் கருப்பர், வேடர், செங்கிடாய் கருப்பர், மேலக் கருப்பர் உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளனர்.

மேலும் மெய்யபெருமாள், சின்னக் கருப்பர், பெரிய கருப்பர் ஆகிய தெய்வங்கள் வடக்குப் பார்த்தும், தெற்கு நோக்கி தங்க அம்மனும் காட்சி தருகிறார்கள். தம்பி உளிவீரனைக் காணாமல், மலையாள தேசத்திலிருந்து தேடி வந்த தங்க அம்மன் இங்கேயே தெய்வமாகி விட்டாளாம்!

மூலஸ்தானத்தை விட்டு வெளியேறி, வடக்குப் பக்கம் இருக்கும் இன்னொரு வாசலைக் கடந்து உள்ளே சென்றால், தெற்கு நோக்கி கையில் உளியுடன் கம்பீரமாக நிற்கிறார் உளிவீரன். அருகிலேயே மேற்கு நோக்கிய இரு வனசாமி.

உள் பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில், அபூர்வமான ஆண் பனை மரம் ஒன்று நிற்கிறது. கோயிலின் முக்கிய விசேஷங்களுக்கு, இந்த பனை மரத்திடம் திருவுளம் கேட்கிறார்கள். அங்கிருந்து, 'சம்மதம்' என்பதற்கு சாட்சியாக 'கௌளி' (பல்லி சத்தம் ஒலித்தால்தான்) சொன்னால்தான் விசேஷத் துக்கு நாள் குறிப்பார்கள்.

மாந்திரீகம் படித்த சாமி என்பதால்... பேய்- பிசாசு, பில்லி- சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால்... உளிவீரன், அந்த தீய சக்திகளை ஓட ஓட விரட்டி விடுவார் என்பது நம்பிக்கை. அந்தக் காலத்தில் இதுபோல் பேய்- பிசாசு பிடித்தவர்களை, சிவராத்திரிக்கு மறுநாளன்று பகல் வேளையில் இங்கு அழைத்து வருவார்களாம். பாதிக்கப்பட்டவர்கள், உளிவீரனின் வாசலுக்கு வந்ததும் தானாகவே ஆடத் துவங்குவராம். அவர்களது முடியை கொத்தாகப் பிடித்து இழுத்து வரும் கோயில் பூசாரி, அருகில் இருக்கும் பாலைமரத்தில் ஆணி அடித்து, அவர்களது முடியை அதில் கட்டி, குறிப்பிட்ட அளவு கத்தரித்து எடுத்து விடுவார். இப்படிச் செய்வதால் அவர்களைப் பிடித்திருக்கும் பேயை, அந்த மரத்தில் கட்டியதாக அர்த்தம்! இப்போது இந்த வழக்கம் இல்லை என்றாலும் தீய சக்திகளால் பாதிக்கப் பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நலம் பெறலாம் என்பது நம்பிக்கை. தவிர, திருமண பாக்கியம் மற்றும் குழந்தை வரம் அருள்வதில், கட்டுச் சோற்றுக் கருப்பரும் உளிவீரனும் கண்கண்ட தெய்வங்களாக திகழ்கின்றனர்.

இங்கு, ஆண்டுத் திருவிழா என்று எதுவும் இல்லை என்றாலும் மாசி சிவராத்திரியை திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். சிவராத்திரி அன்று இரவு 1 மணிக்கு பச்சைப் பயறுகளை அவித்து வைத் தும் பச்சரிசியை ஊற வைத்தும் படையல் வைக்கிறார்கள். மறு நாள் மதியம்... பொங்கலிட்டு, பரங்கிக் காய் சமைத்து, பச்சரிசி மாவு இடித்து வைத்து, பள்ளையம் (படையல் போடுதல்) கட்டி சாமியாடிக்கு வழங்கி சாமி அழைக்கிறார்கள். அப்போது அவர் மீது வந்திறங்கும் கட்டுச் சோற்றுக் கருப்பர், பக்தர்களது கேள்விகளுக்கு பதில் சொல்வார். பிறகு, கரும்பு, வாழைப் பழம் போன்றவற்றை உளி வீரனின் பரிவாரங்களுக்கு சூறை விடுவார். இதை யடுத்து அவரை, அருகிலுள்ள ஆலத்தி ஐயனார் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கும் பூஜைகள் நடத்தி அருள்வாக்கு சொல்லி விட்டுத் திரும்புகிறார் சாமியாடி.

ஆடி மாதம் இங்கு நடக்கும் 'கிடா வெட்டு' படை யலும் பிரசித்தியானது. செங்கிடாய்காரனுக்கு செங்கிடாய், கட்டுச்சோற்றுக் கருப்பருக்கு கருங் கிடாய், மெய்ய பெருமாளுக்கு பல நிறத்துக் கிடாய்... என மூன்று விதமான கிடாய்களைக் கோயில் சார்பாக பலி கொடுக்கிறார்கள். தவிர, வேண்டுதல் வைத்தவர்களும் தனியே கிடாய் வெட்டி பலி கொடுப்பது உண்டு.

ஆடியில் வரும் ஏதாவதொரு வெள்ளியன்று இரவு பத்து மணிக்கு இந்த பூஜை தொடங்குகிறது. மற்ற கிடாய்களை வழக்கம்போல் பலி கொடுப்பவர்கள், பல நிறத்துக் கிடாயை மட்டும் வித்தியாசமாக பலியிடுவர். உயிருடன் இருக்கும்போதே, அதன் வயிற்றைக் கிழித்து, ஈரலை எடுத்து சாமிக்கு படையல் வைக்கிறார்கள். பலியிடப்பட்ட மற்ற கிடாய்களை சமைப்பதுடன், பொங்கலிட்டும் படைக்கிறார்கள். வேண்டுதல் வைத்தவர்களால் பலியிடப்படும் கிடாய்களை, அங்கேயே சமைத்துப் பரிமாறிவிட்டு வீடு திரும்புகிறார்கள். உளி வீரனுக்கு மட்டும் பிராந்தி, விஸ்கி முதலான போதை வஸ்துகளைப் படைக்கின்றனர்.

இந்தக் கோயிலை வணங்குகிறவர்கள் அனைவரும் திருவிழாவின்போது கண்டிப் பாக வந்தாக வேண்டும் என்பதாலும், திரு விழாவுக்கு அதிகம் செலவாகும் என்பதா லும் 12 வருடங்களுக்கு ஒருமுறைதான் இந்த 'கிடா வெட்டு' திருவிழாவை நடத்து கிறார்கள்.

- (இன்னும் வரும்)
படங்கள் எஸ். சாய் தர்மராஜ்