Published:Updated:

கிருஷ்ண புஷ்கர விழா அன்னதானத்தில் அசத்திய திருமலை-திருப்பதி தேவஸ்தானம்!

கிருஷ்ண புஷ்கர விழா அன்னதானத்தில் அசத்திய திருமலை-திருப்பதி தேவஸ்தானம்!
கிருஷ்ண புஷ்கர விழா அன்னதானத்தில் அசத்திய திருமலை-திருப்பதி தேவஸ்தானம்!

கிருஷ்ண புஷ்கர விழா அன்னதானத்தில் அசத்திய திருமலை-திருப்பதி தேவஸ்தானம்!

கிருஷ்ண புஷ்கர விழா அன்னதானத்தில் அசத்திய திருமலை-திருப்பதி தேவஸ்தானம்!

தமிழகத்தில்  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக விழாவைப் போன்றே  ஆந்திராவிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை  'கிருஷ்ணா புஷ்கர விழா'  கடந்த 12-ம் தேதி தொடங்கி, 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச்சேர்ந்த  கோடிக்கணக்கான பக்தர்கள் பெருந்திராளாகக் கூடி அங்கே பாயும் கிருஷ்ணா நதிக்கு நன்றி தெரிவிப்பதுடன், நதியில் நீராடி தங்கள் பிரார்த்தனைகளைச் செலுத்தி வருகின்றனர். இதற்கென கிருஷ்ணா நதி பாய்ந்தோடும் நீர்வழித்தடங்களில் படித்துறைகள் அமைக்கப்பட்டு, வண்ண வண்ண நிறங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. விஜயவாடா நகரில் அமைந்துள்ள பிரதான படித்துறையில் நடைபெற்ற விழாவில்,  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் பங்கேற்று, இந்த விழாவை  தொடங்கி வைத்தார். 12 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழா 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

கிருஷ்ண புஷ்கர விழா அன்னதானத்தில் அசத்திய திருமலை-திருப்பதி தேவஸ்தானம்!


இந்த விழாவின்போது, கிருஷ்ணா நதியில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை. இதனால் ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள்  கிருஷ்ணா நதியில் நீராடி வருகிறார்கள். விஜயவாடா பகுதிகளில் 17 நாட்கள் இறைச்சி விற்பனைக்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர புஷ்கர விழா நடைபெறும் இடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்துக்கு மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


கிருஷ்ண புஷ்கர விழாவைத் தொடங்கிவைத்த, சந்திரபாபு நாயுடு “ நாட்டில் நலமும் வளமும் பெருக நதிகளே நமது முக்கிய ஆதாரமாகும். நம்மை வளமுடன் வாழ வைக்கும் நதிகளை நாம் போற்றி, வணங்கிட வேண்டும். நதிகளுக்குப் பூஜைகள் செய்து ஆரத்தி அளிக்கும் நமது சம்பிரதாயத்தைப் போற்றி நதிகளை வணங்குவோம். கிருஷ்ணா நதியில் புனித நீராட வரும் பக்தர்கள் அனைவருக்கும் சிறந்த வசதிகளை மாநில அரசும், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் இணைந்து  செய்துள்ளன. பக்தர்கள் இங்குள்ள கிருஷ்ணா நதியில் நீராடி, நதியன்னையின் அருள் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டும்” என்றார். 


கிருஷ்ண புஷ்கர விழாவில், திருமலைதிருப்பதி தேவஸ்தானத்தின் பங்குப்பணி அளப்பறிய முடியாத வகையில் இருந்தது. இது பற்றி திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக செயல் அதிகாரி டி.சாம்பசிவ ராவ் மற்றும் இணை செயல் அலுவலர் கே.எஸ்.சீனிவாச ராஜூ ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, ''திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக, பக்தர்களுக்கான அன்னதான பிரசாதம் பெரிய அளவில் நடைபெறுகிறது. இதற்காக, தினந்தோறும் பெரிய அளவிலான தானியங்கிச்  சமையல் பாத்திரங்களைக்கொண்டு திருமலையில் தயாரிக்கப்பட்டு, விழா நடக்கும் பகுதி முழுதும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்காக, வழக்கமாக இயங்கும் சமையல்கூடம் அல்லாத சிற்பபு சமையல் கூடம் ஒன்றும் இயங்குகிறது. தினந்தோறும், 100 சமையல்கலை நிபுணர்கள் மூன்று ஷிப்டுகளில் பணியாற்றிவருகின்றனர். ஒருநாளுக்கு, 6 ஆயிரம் கிலோ அரிசி, 1,100 கிலோ ரவா, 840 கிலோ சூரியகாந்தி எண்ணெய், 200 கிலோநெய், 200கிலோ முந்திரிப்பருப்பு, 1,000 கிலோ பருப்பு வகைகள், 2,000 கிலோ உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் இதற்கென செலவிடப்பட்டுள்ளன. 

<

கிருஷ்ண புஷ்கர விழா அன்னதானத்தில் அசத்திய திருமலை-திருப்பதி தேவஸ்தானம்!


இந்த உணவுகளை, விஜயவாடா,குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விழா நடக்கும் படித்துறைகளில் வழங்கி, பக்தர்களின் பசியைப் போக்கிவருகின்றனர். பொங்கல், சட்னி, உப்புமா, சாம்பார் சாதம் எனப் பலவகை உணவுகளை வழங்கிவருகின்றனர்.
திருமலையின் பக்தர்களில் பலரும் தன்னார்வலர்களாக சேவைக்குக் களம் இறங்கி  இதைச் சாதித்துள்ளனர். கிருஷ்ண புஷ்கர விழாவில்  திருமலை தேவஸ்தானம் சார்பில் மிகப்பெரிய கோவில் செட் அமைக்கப்பட்டு, தினமும் நாட்களும் திருமலையில் நடப்பது போன்றே நித்திய சேவைகளும்  நிகழ்கின்றன. இதை, பல லட்சம் பக்தர்கள் கண்டுகளித்துவருகின்றனர்.
பூமியின் தாய்ப்பால் நதிகள்... நதிகளைக் கொண்டாடுவோம்! 


- எஸ்.கதிரேசன்

அடுத்த கட்டுரைக்கு