Published:Updated:

7000 சிலைகள் ஒரே இடத்தில்...! - இது விநாயகர் ஸ்பெஷல்!

7000 சிலைகள் ஒரே இடத்தில்...! - இது விநாயகர் ஸ்பெஷல்!
7000 சிலைகள் ஒரே இடத்தில்...! - இது விநாயகர் ஸ்பெஷல்!
7000 சிலைகள் ஒரே இடத்தில்...! - இது விநாயகர் ஸ்பெஷல்!

விநாயகனே, வினை தீர்ப்பவனே・ என்னும் பாடலைப் பாடியவாறு, விநாயகர் சதுர்த்தி அன்று மஞ்சள், களிமண், காய்கறி, பழம், கொழுக்கட்டை, கரும்பு, அருகம்புல் எனப் பலவிதமான பொருட்களை வைத்துவிநாயகரை வழிபடும் பக்தர்கள் மத்தியில், 7000 வகையான விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்களைபக்திப்பெருங்கடலில் மூழ்க வைத்திருக்கிறார் சென்னை குரோம்பேட்டை,அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன்.

சென்னையில் உள்ள ஸ்ரீ விநாயகா கட்டட நிறுவனத்தின் தலைவரான சீனிவாசன், தீவிர விநாயக பக்தர். தன் வீட்டில் 7000 வகையான விநாயகர் சிலைகளை வைத்து ஒரு கண்காட்சியையே நடத்தி வருகிறார். காண்போரின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும் இக்கண்காட்சியைக் காண இவர் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.

ஓலை, களிமண், தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த கற்களில் செய்யப்பட்ட விநாயகர் வரை இவர் பல்வேறு விதமான  விநாயகர் சிலைகளைச் சேகரித்து வைத்துள்ளார்.
 
தஞ்சாவூர் குத்தாலம்தான் என் சொந்த ஊர். பொறியியல் பட்டதாரியான நான், 2002-ல் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலையில் ஏற்பட்ட எனது கவனக் குறைவால் விபத்து ஏற்பட்டு, என் வலது கை விரல்களை இழக்க நேரிட்டது. யாராவது உதவினால் மட்டுமே வாழ்க்கையை நடத்த முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். அந்த இக்கட்டான தருணத்தில் எனக்குத் துணையாகவும் ஆறுதலாகவும் இருந்தது, அந்த மருந்துவமனை வளாகத்தில் இருந்த மரத்தடியில் அருள்பாலித்த விநாயகர் மட்டும் தான். அன்று அவர்மீது கொண்ட தீவிர பக்தியின் காரணமாக, அவரைப் பற்றிய பாடல்கள், கதைகளைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.  அதன் மூலம் எனக்கு ஏற்பட்ட ஓர் உந்துதல்தான், இன்று விநாயகர் சிலைகளை மட்டுமே வைத்து ஒரு கண்காட்சியை நடத்தும் அளவுக்கு என்னை  உருவாக்கியிருக்கிறது・என்கிறார் சீனிவாசன். தொடர்ந்து...

7000 சிலைகள் ஒரே இடத்தில்...! - இது விநாயகர் ஸ்பெஷல்!

விநாயகர் மீது கொண்டுள்ள தீரா பக்தியின் காரணமாக 2005-ம் ஆண்டு ஸ்ரீ விநாயகா என்ற பெயரில் கட்டட நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். தொடங்கிய ஒரே ஆண்டில், அது நல்ல வரவேற்பையும் வளர்ச்சியையும் பெற்றது. அதற்கு விநாயக பெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக , அந்த ஆண்டு வந்த விநாயகர் சதுர்த்திக்கு என்னால் முடிந்தவரை  20 கோயில்களுக்குப் பூஜை சாமான்கள் வாங்கிக் கொடுத்தேன். அடுத்த ஆண்டு என் நிறுவனத்தின் வளர்ச்சி மேலும் முன்னேற்றத்தைக் கண்டது. விநாயகர் சதுர்த்தியன்று 108 விநாயகருக்கும் மேல் நாம் பார்த்தால் கோடி புண்ணியம் என்பார்கள். எனவே, என் வீட்டில் 2006 முதல் நான் சேகரித்து வைத்திருந்த 300 விநாயகர் சிலைகளைக் கொண்டு, விநாயகர் சதுர்த்தியன்று சிறிய அளவிலான கண்காட்சியகத்தை அமைத்தேன். என் ரசனையைப் பலரும் பாராட்டி ஊக்குவித்தனர். அதற்குக் கிடைத்த பெரும் வரவேற்புதான் தொடர்ந்து 10  ஆண்டுகளாக  என்னை  இந்தக் கண்காட்சியகத்தை நடத்தும் உற்சாகத்தைக் கொடுத்தது.

அதன்பின், என்னுடைய பயணங்களில், குறிப்பாக வடமாநிலங்கள், வெளிநாட்டுப் பயணங்களின்போது விதம்விதமான விநாயகர் சிலைகள் வாங்குவதை வழக்கமாக்கிக் கொண்டேன். இந்தக் காட்சியகத்தில் இருக்கும் விநாயகர் சிலைகள் எதுவும் பரிசாகக் கிடைத்ததோ, பிரத்யேகமாகச் செய்யப்பட்டதோ இல்லை. என் பயணங்களில் நான் பார்த்து, ரசித்து வியந்த சிலைகளை மட்டுமே வாங்கி வந்து இந்தக் காட்சியகத்தை உருவாக்கியிருக்கிறேன். 2007-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது, 508 என்ற எண்ணிக்கையில் இருந்த விநாயகர் சிலைகள், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு 7000 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு தீம் அடிப்படையில் இந்தக் கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு, விநாயகர் கல்யாணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சகோதரிகளான ரித்திக் - சித்திக்கை தேவலோகத்திலிருந்து வந்து விநாயகர் மணமுடிக்கும் காட்சியை இங்கு காணலாம். மேலும், கிருஷ்ண விநாயகர், கயிலை விநாயகர், ரயில் ஓட்டும் விநாயகர்,  விளையாட்டு விநாயகர், யோகாசனங்கள் செய்யும் விநாயகர், நீதிபதி, வழக்கறிஞர், காவலர், மருத்துவர், ஆசிரியர், கணினி விநாயகர், பாகுபலி, சோட்டா பீம் எனப் பலவிதமான பிள்ளையார்களை நீங்கள் இங்கு காணலாம்・என்கிறார் சீனிவாசன்.

‘தான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம் என்பதற்கு ஏற்ப இந்தக் கண்காட்சியை  நடத்தி வரும் சீனிவாசன் இந்த ஆண்டுக் கண்காட்சி வரும் 11-ம் தேதி வரை, காலை 9 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அஸ்தினாபுரத்தில்  நடைபெறுகிறது.

கட்டுரை : ஆ. ஐஸ்வர்ய லட்சுமி
படங்கள் : பா. பிரபாகரன்
(மாணவ பத்திரிகையாளர்கள்)