Published:Updated:

தினம் தினம் திருநாளே!

தினம் தினம் திருநாளே!
தினம் தினம் திருநாளே!

அசுவினி: அதிகாரிகள் சந்திப்பும் அவர்களுடன் கருத்துவேறுபாடும் ஏற்படக்கூடும். வீண் அலைச்சல் உண்டாகும். நேரத்துக்கு சாப்பிடமுடியாது. முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் தலைவலி வரக்கூடும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது.

பரணி: இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. அதனால் பிறர் உதவியை நாடவேண்டி இருக்கும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் உண்டாகும் என்பதால் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். இன்று நீங்கள் விநாயகப் பெருமானை வழிபடுவது உகந்தது.

கிருத்திகை: இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு.

ரோகிணி: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். புது முயற்சிகளில் இறங்காமல் இருப்பதுடன், வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்யவும்.  பொருட்கள் களவு போகக்கூடிய வாய்ப்பு உள்ளதால் மிகவும் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள், வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். கோயிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடவும்.

மிருகசீரிடம்: உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் ஒருவர் மற்றவருடன் பழகுவதில் கவனம் தேவை. தசா புக்திகள் சாதகமாக இருப்பவர்களுக்கு தொலைந்த பொருள் கிடைப்பது, மகான்களின் தரிசனம் போன்ற சுப பலன்கள் நடக்கும்.

திருவாதிரை: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால், தசா புக்தி பாதகமாக இருப்பவர்க்கு மேலே சொன்ன பலன்களுக்கு நேர்மாறான பலன்களே நடைபெறும்.

புனர்பூசம்: வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். லாபகரமான செயல்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். நண்பர்களுடன் திரைப்படம் பார்ப்பீர்கள்.  புனர்பூசம் நட்சத்திரம் மிதுன ராசியில் பிறந்த அன்பர்கள் மட்டும் புதிய முயற்சிகளில் இறங்காமல் இருப்பதுடன், அன்றாட அலுவல்களிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படவும்.

பூசம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.

ஆயில்யம்: உணவில் வெறுப்பு, வீண் செலவுகள் உண்டாகும். தகாத நண்பர்களின் சேர்க்கையால் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வீட்டிலும் பயணத்தின்போதும் பொருட்கள் களவு போக வாய்ப்பு உள்ளது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

மகம்:  அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். நேரத்துக்கு சாப்பிடமுடியாது. சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் ஆரோக்கியம் சற்றே பாதிக்கப்படக்கூடும். விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

பூரம்: இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மற்றவர்களிடம் கடன் வாங்கவேண்டிய நிலை உண்டாகும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் உண்டாகும் என்பதால் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். இன்று நீங்கள் விநாயகருக்கு அறுகம்புல் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.

உத்திரம்: சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் உண்டாகும்.  அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு.

அஸ்தம்:  எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். புது முயற்சிகளில் இறங்காமல் இருப்பதுடன், வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்யவும்.  பொருட்கள் களவு போகக்கூடிய வாய்ப்பு உள்ளதால் மிகவும் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள், வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். கோயிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடவும்.

சித்திரை: உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற எண்ணங்களால்  மனதில் இனம் தெரியாத அச்ச உணர்வு உண்டாகும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். மற்றவர்களுடன் தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் மற்றவருடன் பழகுவதில் கவனம் தேவை. சித்திரை நட்சத்திரம் கன்னி ராசியில் பிறந்தவர்கள் குருபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும். துலாம் ராசி அன்பர்கள் விநாயகரை வழிபடவும்.

சுவாதி: அரசாங்க அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். வெளிநாடுகளில் இருந்து வரும் நல்ல செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சிறிது தாமதமாகவே நிறைவேறும். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று முருகப் பெருமானை வழிபடவும்.

விசாகம்: எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அவர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்றுவருவீர்கள். விசாக நட்சத்திரம் துலாம் ராசியில்  பிறந்த அன்பர்கள் மட்டும் புதிய முயற்சிகளில் இறங்காமல் இருப்பதுடன், அன்றாட அலுவல்களிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படவும்.

அனுஷம்: மனதில் இனம் தெரியாத மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு வியாபாரத்தின் நிமித்தமாகவோ பணியின் காரணமாகவோ வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். எதிர்பாராத பொருள்வரவு உங்களை சந்தோஷப்படுத்தும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.

கேட்டை: தகாத நண்பர்களின் சேர்க்கையால் தேவையற்ற பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வீட்டிலும் பயணத்தின்போதும் பொருட்கள் களவு போக வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

மூலம்: அரசாங்க அதிகாரிகளைச் சந்திக்கும்போது பேச்சில் மிகுந்த எச்சரிக்கை உணர்வு தேவை. இல்லையென்றால் அநாவசிய சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு வீண் அலைச்சல் உண்டாகும். நேரத்துக்கு சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருக்கும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும்.  பிற்பகலுக்கு மேல் சிலருக்கு லேசான சிறு அளவில் உடல்நலக்குறைவு உண்டாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

பூராடம்: இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. அதனால் பிறர் உதவியை நாடவேண்டி இருக்கும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் உண்டாகும் என்பதால் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். இன்று நீங்கள் விநாயகப் பெருமானை வழிபடுவது உகந்தது.

உத்திராடம்: இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரிகளால் நடக்கவேண்டிய காரியங்கள் தடையில்லாமல் முடியும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு.

திருவோணம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். புது முயற்சிகளில் இறங்காமல் இருப்பதுடன், வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்யவும்.  பொருட்கள் களவு போகக்கூடிய வாய்ப்பு உள்ளதால் மிகவும் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள், வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். கோயிலுக்குச் சென்று சனிபகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றவும்.

அவிட்டம்: உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற எண்ணங்களால் மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் ஒருவர் மற்றவருடன் பழகுவதில் கவனம் தேவை. அவிட்டம் கும்ப ராசியில் பிறந்த அன்பர்கள் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

சதயம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சதய நட்சத்திர அன்பர்கள் தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

பூரட்டாதி: எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அவர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்றுவருவீர்கள்.
உத்திரட்டாதி:மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.

ரேவதி: வீண் செலவுகள் உண்டாகும். தகாத நண்பர்களின் சேர்க்கையால் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வீட்டிலும் பயணத்தின்போதும் பொருட்கள் களவு போக வாய்ப்பு உள்ளது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.