Published:Updated:

திருவண்ணாமலை கோயிலில் ராஜகோபுர விரிசல்கள் சீரமைக்கப்பட்டன!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் ஏற்பட்டிருந்த 6 விரிசல்களை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வல்லுநர் குழுவினர் சீரமைத்துள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது, கோயில் ராஜகோபுரத்தில் சுமார் 10 டன் எடை கொண்ட பாறையை தாங்கிப் பிடிக்கும் கருங்கல்லில் விரிசல் ஏற்பட்டிருந்தது கடந்த ஜூலை 22-ம் தேதி தெரியவந்தது. இதுதொடர்பாக அறநிலையத் துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை நடைபெற்றது. இதில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சின்டெக் என்ற கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்திடம் ராஜகோபுர விரிசலை சீரமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 6-ம் தேதி 13 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் ராஜகோபுர விரிசலை சீரமைக்கும் பணியைத் தொடங்கிய நிலையில், ராஜகோபுரத்தில் மேலும் 5 இடங்களில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால், மொத்தம் 6 இடங்களில் ஏற்பட்டிருந்த விரிசல்களை துருப்பிடிக்காத இரும்புக் கம்பிகள், எஃகு ஆகியவற்றைப் பயன்படுத்தி சீரமைத்தனர். 

அடுத்த கட்டுரைக்கு