Published:Updated:

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

ண்பன் நாராயணன் போன வாரம், ஒரு போன் அடித்தான். அவன் வீட்டிலிருந்து அல்ல; மகாபலிபுரத்திலிருந்து.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''நீ எப்போடா அங்கே போனே? என்கிட்டே சொல்லவே இல்லையே?'' என்றேன்.

''அதான்டா இப்போ அவதிப்படறேன். எனக்காக ஒரு காரியம் பண்ணு. உடனே 10,000 ரூபா எடுத்துண்டு சொந்தக் காரிலோ, அல்லது ஒரு கால் டாக்ஸி பிடித்துக்கொண்டோ மகாபலிபுரம் வந்து சேரு. அங்கே ரிதம் ரிஸார்ட்ஸ், ரூம் நம்பர் டூ நாட் டென்!''

''வரேன்,'' என்று வாக்கு கொடுத்துவிட்டு, உடனே கிளம்பி, ராத்திரிக்குள் ஹாலிடே ரிஸார்ட்டை அடைந்து, அவன் ரூமுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

''நாளைக் காலை எட்டு மணிக்கு செக் அவுட் டைம். நான் ஒரு 20,000 காஷாக கொண்டு வந்தேன். இன்னும் ஒரு 10,000 ஆகும் போலிருக்கு. கிரெடிட் கார்டு அக்ஸெப்ட் பண்ணிக்கமாட்டாங்களாம். செக் அக்ஸப்டென்ஸ் கிடையாது. அதான் உனக்கு ஃபோன் அடிச்சேன். ஆபத்பாந்தவா, அனாத ரட்சகா! காப்பாத்தினியே!'' என்று கும்பிடு போட்டான்.

##~##
மிஸஸ் நாராயணன் முகம் அழாத குறையாகக் காட்சி தந்தது. '’அக்கா பிள்ளைக்கு மெடிக்கல் ஸீட் கிடைச்சிட்டுதாம். இவர் ட்ரீட் தந்தே தீருவேன்னு அக்கா குடும்பத்தைக் கூப்பிட்டுவிட்டார். எங்க குடும்பமும் சேர்ந்து, பத்துப் பேர் நேத்து வந்தோம். ஒரு நாள் சந்தோஷமா இருக்கணும்னு உங்க நண்பர் திட்டம் போட்டு, மூணு ரூம் எடுத்தார். 15,000 ரூபாய் வாடகை. சாப்பாடு மெனு கார்டைப் பாருங்களேன்.''

ரிஸார்ட்டின் சைவ உணவுப் பட்டியலின்மீது பார்வையைச் செலுத்தி னேன். கத்தரிக்கா காரக் குழம்பு கண்ணில் பட்டது. அதிக விலையில்லை.

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

275 (குழம்பு மட்டும்)! கடையில் 12 ரூபாய்க்கு வாங்குகிற தண்ணீர் பாட்டில் இங்கே 87 ரூபாய்! 'ஒரு பாட்டில் தண்ணி 87 ரூபாயா!’ என்று எனக்கு மயக்கம் வராத குறை. தடால்னு ஒரு சந்தேகம்... ''ஏண்டா நாராயணா, நான் வந்ததும் வராததுமா மடக் மடக்குனு அரை பாட்டில் தண்ணியைக் குடிச்சு பாட்டிலை காலி பண்ணிட்டேனே! அப்போ, 44 ரூபா தண்ணியை முழுங்கிட்டனா? அடடா... அதன் விலை எனக்குத் தெரியாம போச்சே!'' என்று வருத்தப்பட்டேன்.

மறுநாள் காலையில், சாப்பிடும்போது என் மனைவி செம்பு நிறையத் தண்ணீரை வைத்தாள். ''இதை எவ்வளவு அலட்சியப்படுத்துகிறோம்! இது சும்மாவும் கிடைக்கிறது; பாட்டிலுக்குள் புகுந்துகொண்டு, 87 ரூபாய் குடு என்றும் கேட்கிறது'' என்றேன்.

''நம்ம பக்தி மாதிரி!'' என்றாள் மனைவி. ''ஒரு இன்ச் பூ போட்டு யாரை பக்தி பண்ணுகிறோமோ, அதே ஆண்டவனுக்குத்தான் லட்ச ரூபாய் செலவில் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து, மூச்சுத் திணற முண்டியடித்துக்கொண்டு தள்ளுமுள்ளு செய்து, பக்தி செய்கிறோம்.''

காரைக்காலம்மையார் பாடி வைத்தது நினைவுக்கு வந்தது...

எக்கோலத் தெவ்வுருவாய் எத் தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே ஆம்

நம்ம வீட்டு பூஜை அறையில் நாம் வழிபடும் சாமியும், சிரமப் பயணம் போய் தள்ளுமுள்ளுடன் நாம் தரிசிக்கும் சாமியும் ஒண்ணேதான்! பக்தி செய்பவரும் நாம்தான். கடவுள்களைக் கொண்டாடி ஏற்றிப் புகழ்ந்து, சில தலங்களை பிரசித்தியாக்குவதும் நாம்தான்; சிலவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் நாமேதான். கடவுள் இந்த இரண்டு நிலைகளுக்கும் அப்பாற்பட்டவர்- தண்ணீர் மாதிரி!