. தே.னி- பெரியகுளம், ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமி கோயிலில், சக்தி விகடனின் 61-வது திருவிளக்கு பூஜை கடந்த 24.5.11 அன்று விமரிசையாக நடந்தேறியபோது, வாசகியரின் முகங்களில் அப்படியரு பரவசம்!.
''எட்டு வருஷமா சக்தி விகடனைத் தொடர்ந்து வாங்கிப் படிச்சுக்கிட்டிருக்கேன். என் பையன் கேட்டரிங் முடிச்சுட்டு, வெளிநாட்டுல வேலை கிடைக்குமானு தேடிக்கிட்டிருக்கான். அவனோட ஆசைதான், என் ஆசையும்! அந்த வேண்டுதலோடதான், இங்கே விளக்கு பூஜைக்கு வந்திருக்கேன்'' என்றார் ஆண்டிபட்டி- வைகைநரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த வாசகி ஈஸ்வரி.

''எம்.பி.பி.எஸ். கனவோட பிளஸ் டூ படிக்கிறா என் பொண்ணு. ஏற்கெனவே, தேனியில விளக்கு பூஜை நடத்தினப்பவே கலந்துக்கணும்னு ஆசைப்பட்டேன்; முடியலை. இந்த முறை என் பொண்ணோடு வந்துட்டேன். அந்த முருகப்பெருமான்தான் துணை நிக்கணும்'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் குச்சனூர் வாசகி சாந்தி.

''மதுரைல பலமுறை விளக்கு பூஜை நடந்தப்பெல்லாம் கலந்துக்கிட்டவ நான். இப்ப பெரியகுளத்துல இருக்கிற எங்க மாமியார் வீட்டுக்கு வந்திருந்தப்ப, விளக்கு பூஜை அறிவிப்பைப் பார்த்துட்டு, இதோ ஓடி வந்துட்டேன். அதென்னவோ, சக்தி விகடன் நடத்தற விளக்கு பூஜைல கலந்துக்கிட்டாலே ஒரு திருப்தி, நிறைவு உண்டாகிடுது!'' என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார் மதுரை வாசகி கௌரி லதா.

''நான் லைப்ரரியனா வேலை பார்க்கிறேன். ஆனாலும், சக்தி விகடனை ரெகுலரா வாங்கி, வீட்டுல வைச்சுப் படிச்சாத்தான் எனக்கொரு திருப்தி! புரமோஷனுக்காகக் காத்துக்கிட்டிருக்கேன். அது சீக்கிரம் கிடைச்சா நல்லாருக்கும். இந்த விளக்கு பூஜைல கலந்துக்கறதுல எனக்கு ரொம்பப் பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு. ஏன்னா... இது என் சொந்த ஊராக்கும்'' எனப் பெருமைபடப் பேசினார் சில்லமரத்துப்பட்டி வாசகி கிருஷ்ணவேணி.

''பொதுவா, எங்க ஊர்ல யாருமே விளக்குபூஜையெல்லாம் நடத்தினதே இல்லீங்க. அப்படியிருக்கிறப்போ, இங்கே வந்து கலந்துக்கும்போது கிடைச்ச நிறைவுக்கு ஈடு இணை இருக்குமா, சொல்லுங்க! என் கணவரோட ஜவுளி வியாபாரம் செழிக்கணும்; பசங்க நல்லாப் படிக்கணும். அது போதும் எனக்கு!'' என்றார், வடுகபட்டி வாசகி அமுதா, சிலிர்ப்பும் நெகிழ்வுமாக!

பெரியகுளம் ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமி இருக்க, கவலை எதற்கு?!

- தி.முத்துராஜ்
படங்கள்: இரா.முத்துநாகு