'மனவளக்கலை பயிற்சியைக் கத்துக்கிட்டு, தினமும் செஞ்சா, உடலும் மனசும் சுறுசுறுப்பாயிடும்னு எனக்குத் தெரிஞ்சவங்க எல்லாருமே சொன்னாங்க. முக்கியமா, 'மூட்டு வலிப் பிரச்னைலேருந்து உனக்கு விடுதலை கிடைச்சிடும்’னு நம்பிக்கையா சொன்னாங்க. இப்ப, இந்த இலவச முகாம்ல கலந்துக்கும்போது, பெருமையாவும் இருக்கு; நிறைவாவும் இருக்கு!''

திருப்பூர்- கருவம்பாளையம் மனவளக் கலை மன்றத்தில், சக்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து, கடந்த 29.5.11 அன்று நடத்திய மனவளக் கலை யோகா இலவசப் பயிற்சி முகாம் குறித்து, இப்படி நெகிழ்வோடு தெரிவித்த வாசகி நாகலட்சுமி அம்மாளுக்கு வயது 58.

. ''கோயில், வீடு, கோர்ட்னு ஓடிக்கிட்டிருக்கிறவ நான். அந்தக் கால்களுக்கும் மனசுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைச்சா நல்லாருக்குமேனு யோசிக்கும்போதுதான், சக்தி விகடன்ல அறிவிப்பைப் பார்த்தேன். 'அட, எனக்காகவே இந்த முகாம் நடக்குதுப்பா’னு உள்ளே அத்தனை சந்தோஷம்! இந்தப் பயிற்சி ரொம்பச் சுலபமானது மட்டுமில்லே; அதிகப் பலன் தருவது; நமக்கு அவசியம் தேவையானது!'' என்று சொல்லிப் பூரித்தார், சக்தி விகடனின் நீண்ட கால வாசகியான வக்கீல் சுவாதி..
''ரெண்டரை வயசுக் குழந்தையையும் பாத்துக்கறேன்; கணவரோட கம்பெனி வேலையிலயும் கவனம் செலுத்தறேன். இதனால எனக்கு ஏகப்பட்ட மன அழுத்தம். என் மாமனார்தான் இந்த மனவளக் கலைப் பயிற்சி பத்தி அடிக்கடி சொல்லி, என்னையும் கலந்துக்கச் சொல்லுவார். இப்ப, இங்கே வந்து கலந்துக்கும் போதுதான், இந்தப் பயிற்சியோட மகத்துவமே புரிஞ்சுது எனக்கு'' என்கிறார் கல்பனா.

முகாமில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ராம்ராஜ் குரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மன் கே.ஆர்.நாகராஜன், ''வெற்றி அடையறது சுலபம்; அந்த வெற்றியைத் தக்க வைச்சுக்கறதுதான் கஷ்டம். ஆனா, வெற்றிக்கான ஓட்டத்துல அயர்ச்சியாகித் தவிச்சவன் நான். 'போதுமே இது’னு முடிவு பண்ணி, வேதாத்திரி மகரிஷி ஐயாகிட்ட போய் நின்னப்ப... 'இந்த ஜென்மத்துக் கடமை அப்படித்தான்’னு சொல்லி, மனசுக்கும் தேகத்துக்குமா அவர் கத்துக் கொடுத்த பயிற்சிகள்தான், என்னை இன்னும் இன்னும்னு ஓட வைச்சுக்கிட்டிருக்கு. என் கடமையைச் சிறப்பா செய்யறதுக்கு, இந்தப் பயிற்சி ரொம்பவே உதவுது'' என்று அவர் சொன்னபோது, வாசகர்களிடமிருந்து ஆரவாரமான கைத்தட்டல்கள் எழுந்தன.

''டென்ஷனில் இருந்து விடுதலையும், மனசுக்குள் நிதானமும் நிம்மதியும் தருகிற பயிற்சிதான் இந்த மனவளக் கலை பயிற்சி. நான் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் இது'' என்றார் நாகராஜன்.

நம் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் தேடலும் இவைதானே?!

- வி.ராம்ஜி
படங்கள்: ரா.கலைச்செல்வன்