Published:Updated:

அபூர்வ கிரகணம் ஆனந்த வழிபாடு!

அபூர்வ கிரகணம் ஆனந்த வழிபாடு!

அபூர்வ கிரகணம் ஆனந்த வழிபாடு!
அபூர்வ கிரகணம் ஆனந்த வழிபாடு!
அபூர்வ கிரகணம் ஆனந்த வழிபாடு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''எதுக்கெடுத்தாலும் வெளிநாட்டையும் வெளிநாட்டு விஞ்ஞானிகளையுமே பாராட்டிப் பேசறதை வழக்கமாக்கிட்டோம். ஆனா, நம்ம ஆரியபட்டர்லேர்ந்து ஸ்ரீஆதிசங்கரர் வரைக்கும் நமக்குச் சொல்லாத வானியல் சாஸ்திரங்களே இல்லைங்கறது, நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

ப்ருத்வி என்றால் பூமி; அபான சக்தி என்றால் ஆகர்ஷண சக்தி. பூமியின் ஆகர்ஷண சக்தியானது, மேலிருந்து வருவதை இழுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனை வராகமிஹிரர் 'ப்ருஹத் சம்ஹிதை’யில் தெளிவுறத் தெரிவித்துள்ளார். ஸ்ரீஆதிசங்கரரும், 'ப்ரச்னோபநிஷத்’ எனும் நூலில், 'ப்ருத்வியின் தேவதையே, மனுஷ சரீரத்தில் அபானனை இயக்குகிறது’ என்று ஸ்லோகத்தில் (3:8) விவரிக்கிறார். இதைத்தான், நியூட்டன் விதி என்றெல்லாம் படிக்கிறோம்.

ரிக் வேதத்தில், ஐத்ரேய பிரம்மாணத்தில், 'சூரியன் உதிப்பதுமில்லை; அஸ்தமிப்பதும் இல்லை’ன்னு தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கு. பூமிக் கும் சூரியனுக்கும் நடுவே சந்திரன் வந்து விட்டால், அப்போது சூரியனின் கதிர்கள் பூமியில் விழாது. அதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம்.

இயற்கை, மனிதர்கள், தாவரங்கள், விலங்கினங்கள் என எல்லாமே சூரியக் கதிர்களில் இருந்து பரவுகிற சக்தியால் இயங்குகின்றன. இதனால்தான்,  சூரியனின் திசை பார்த்து, காலையிலும் மத்தியானத்திலும் மாலை யிலும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கச் சொல்கிறது சாஸ்திரம்; சூரிய நமஸ்காரம் செய்வதை வலியுறுத்துகின்றன புராணங்களும், சாஸ்திரங்களும்.

நம்முடைய இன்ப- துன்பங்களுக்கு, நமது சிந்தனை களும் செயல்பாடுகளுமே காரணம். சிந்தனையில் மாற்றங் களும் செயல்பாட்டில் வேறுபாடுகளும் வருவதற்குச் சூரிய- சந்திரக் கதிர்களின், சக்திகளின் பங்கு வெகுவாக உள்ளது. சூரிய- சந்திரக் கதிர்களின் தாக்கங்கள் நிறைந்திருக்கும் தருணத்தை கிரகணம் என்கிறோம். அந்தக் கிரகணத்தில்... அதாவது, அப்போது பூமியில் வியாபிக்கிற கதிர்களின் தாக்கம், கர்ப்பப்பையில் இருக்கிற சிசுவைக்கூட பாதிக்கவல்லது என்கின்றன வானியல் சாஸ்திரங்கள்.

இதோ... வருகிற 15.6.11 அன்று முழுச் சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. இதனை, இந்த 21-ஆம் நூற்றாண்டின், அடர் இருள் சந்திர கிரகணம் என்கின்றனர். 1971-ஆம் வருடம், ஆகஸ்ட் 6-ஆம் தேதியன்று, இதேபோன்ற சந்திர கிரகணம் ஏற்பட்டதாம்.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது நிகழ்வதே சந்திர கிரகணம். பூமியின் நிழலானது சந்திரனின் மீது விழுவதால், அது மறைக்கப்படுகிறது. அந்த நிழலில் சந்திரன் மெள்ள மெள்ள நகரும்போது, இளம் சிவப்பு நிறத்தில் இருப்பதாகச் சொல்வர்.

இந்த நாளில், கதிரியக்கத்தின் பாதிப்பு ஏற்படாம லிருக்க, அப்போது உணவு ஏதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்த உணவில் தாக்கம் ஏற்பட்டு, அதனை உட்கொள்வதன் மூலமாக நோய் ஏற்படலாம். அதேபோல், மௌனம் அனுஷ்டிப்பதும்,  அநாவசிய பயணங்களைத் தவிர்த்து வீட்டிலேயே இருப்பதும் நன்று. கிரகணக் கதிர்வீச்சுகள், நம் தோல் பகுதியைத் தாக்காமல் இருக்க அது உதவும்.

அபூர்வ கிரகணம் ஆனந்த வழிபாடு!

வீட்டில், தண்ணீர்ப் பாத்திரங்களில் ஒரு தர்ப்பையை எடுத்துப் போட்டுவிடுவது நல்லது. எப்பேர்ப்பட்ட தாக்குதலையும் எதிர்க்கிற, அதனைத் தவிடுபொடியாக்குகிற சக்தி தர்ப்பைக்கு உண்டு. அதனால்தான் ஆற்றங்கரை- குளக்கரைகளில் மௌனமாக அமர்ந்து, தர்ப்பையைக் கொண்டு ஜபதபங்களில் ஈடுபட்டனர், முன்னோர்கள்.

##~##
சந்திர கிரகணம், 15.6.11 புதன் கிழமை அன்று, இரவு 11:53 மணிக்குத் துவங்கி, 16-ஆம் தேதி அதிகாலை 3:32 மணிக்கு முடிகிறது. வீட்டில் உள்ள பொருள்களில் கிரகணத் தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம். அதனால்தான் விடிந்ததும், அணிந்திருந்த உடைகள், பாய், போர்வை என அனைத்தையும் நனைத்து, நீராடிய பிறகே, காபி- டீ ஆகியன உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள். கிரகண தோஷங்கள் ஏதும் நிகழாமல் இருக்க, நம் இஷ்ட தெய்வங்களை, குலதெய்வங்களை மனதாரப் பிரார்த்தனை செய்வது நற்பலனைத் தரும்!

குறிப்பாக, 'ததி சங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்: நமாமி சம்போர் மகுட பூஷணம்’ எனும் சந்திர பகவானுக்கு உரிய ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டால் சந்திர பலம் கிடைக்கும்; சந்தோஷம் பெருகும்; சங்கடங் கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!

குறிப்பாக, மூல நட்சத்திரக்காரர்கள், அதற்கு முந்தைய கேட்டை நட்சத்திரக்காரர்கள், பிந்தைய பூராட நட்சத்திரக்காரர்கள் ஆகியோர் இந்த ஸ்லோகத்தை எழுதி, நெற்றிப் பட்டமாகவோ அல்லது கையில் கங்கணமாகவோ கட்டிக்கொண்டு, மனதார ஸ்லோகத்தைச் சொல்லி, பகவானைப் பிரார்த்திக் கவும். பிறகு அதனைக் கழற்றிவிட்டு, அத்துடன் தேங்காய், பழம், தட்சணை ஆகியவற்றை எவருக்கேனும் வழங்கி, சாந்தி செய்துகொள்வது, கிரகண தோஷத்தில் இருந்து பாதுகாக்கும்; பலம் சேர்க்கும். சந்திர பகவானை மனம் நிறையப் பிரார்த் தனை செய்யுங்கள்; அவனது மனமும் குளிர்ந்து போகும்; உங்களையும் குளிரச் செய்து, ஆனந்தத்தைத் தருவான்!