Published:Updated:

அன்னாபிஷேக நாளில்... அன்னம்புத்தூர் வாருங்கள்!

ஓம் நமசிவாய...

அன்னாபிஷேக நாளில்... அன்னம்புத்தூர் வாருங்கள்!

ஓம் நமசிவாய...

Published:Updated:
##~##

ப்பசி அன்னாபிஷேகம்! வருகிற 18.10.13 பௌர்ணமி அன்று, சிவாலயங்களில் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படும் வைபவம் இது. குறிப்பாக, ராஜராஜ சோழன் எழுப்பிய தஞ்சை பெரிய கோயிலிலும், அவரின் மைந்தன் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்திலும் வெகு விமரிசையாக நடைபெறும், அன்னாபிஷேகத் திருவிழா!

குபேரனுக்கு நிதி வழங்கி அருளிய சிவபெருமானுக்கு மாமன்னன் ராஜராஜ சோழப் பெருந்தகை கட்டிய ஆலயம் ஒன்று, விழுப்புரம் மாவட்டம்- திண்டிவனம் அருகில் உள்ள அன்னம்புத்தூரில் உள்ளது. சென்னை- விழுப்புரம் சாலையில், திண்டிவனத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், திண்டிவனம்- புதுச்சேரி சாலையில், வரகுப்பட்டு எனும் ஊரில் இருந்து உள்ளே சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது அன்னம்புத்தூர். இங்கே ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீநிதீஸ்வரர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருகாலத்தில், இந்தப் பகுதியில் உள்ள விஸ்தாரமான ஆலயம் என்று பேரெடுத்த கோயில், முழுவதுமாகச் சிதிலமுற்று, பிரமாண்டமான சிவலிங்கத் திருமேனி மட்டுமே காணக் கிடைக்க... சக்திவிகடன் வாசகர்களின் முயற்சியாலும், திருப்பணிக் கமிட்டி அன்பர்களின் உழைப்பாலும் தற்போது முழுக்க முழுக்கக் கருங்கல்லால் கட்டப்பட்டு வருகிறது ஆலயம்.

அன்னாபிஷேக நாளில்... அன்னம்புத்தூர் வாருங்கள்!

துலா மாதம் எனப்படும் ஐப்பசியில், சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த மாதத்தில், பிரபஞ்ச சக்தியின் குறியீடான சிவலிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்வதும், அதனை எல்லோர்க்கும் அன்னதானமாக வழங்குவதும் விசேஷம்! அதிலும், அன்னம்புத்தூர் எனும் ஊரில், பெயருக்குத் தக்கபடி அன்னாபிஷேக விழாவில் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவு அரிசியுடனும் காய்கறிகளுடனும் சென்று ஸ்வாமியைத் தரிசிப்போம். கோயில் திருப்பணிக்கும் இயன்றதை வழங்கி, குபேரனைப் போல் நாமும் சிவ கடாட்சத்துக்கு ஆளாவோம்!

சகல ஐஸ்வரியங்களையும் நமக்குத் தந்தருளி, நமது ஏழேழு ஜென்மத்துச் சந்ததியினரும் சந்துஷ்டியுடன் செழித்து வாழ வழி செய்வார் ஸ்ரீநிதீஸ்வரர்.

- ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism