'அக்டோபர் 1-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்னிக்குக் கடைக்கு வந்த சக்திவிகடன்ல, 'குருவருள்... திருவருள்’ தொடர் ஆரம்பமாச்சு! மறுநாள், பிரதோஷம். அன்னிக்குச் சாயந்திரம், எங்க கோயில் வாசல்ல இருபத்தஞ்சு கார்களுக்கு மேல வந்து நின்னதும், எங்களுக்கு ஆச்சர்யமா போச்சு! வந்தவங்க எல்லாரும், சக்திவிகடன்ல படிச்சுட்டு, விஷயம் தெரிஞ்சு வந்ததாச் சொன்னாங்க. எங்களுக்குத் தெரிஞ்சு இந்தக் கோயில்ல, இதுநாள் வரைக்கும் இவ்ளோ வாகனங்கள் நின்னதே இல்லை!'' என்று கண்ணீரும் ஆனந்தமும் பொங்கச் சொல்கிறார்கள், கோயில் திருப்பணியாளர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் இருந்து வாலாஜாபாத் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ. தொலைவில், இடது பக்கமாகச் செல்லும் உள்வழிச் சாலையில் சுமார் 2 கி.மீ. பயணித்தால், எழுச்சூர் என்கிற அழகிய கிராமத்தை அடையலாம். இந்தக் கிராமத்தின் கடைசியில், திருக்குளத்துடன் கூடிய அற்புதமான கோயிலில் குடிகொண்டி ருக்கிறார் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர்.

15, 20 வருடங்களுக்கு முன்பு வரை, முற்றிலுமாகச் சிதிலம் அடைந்துகிடந்த கோயில் இது. அன்றைக்கு இந்தக் கோயிலைப் பார்த்தவர்கள், இப்போது கோயிலைப் பார்த்து, வியந்து போகிறார்கள்.

''முன்மண்டபத்தில் உள்ள தூண்கள் சிற்ப நுட்பங்கள் வாய்ந்தவை. இந்தத் தூண்களில் ஸ்ரீவிஷ்ணு பகவான், ஸ்ரீராமபிரான், ஸ்ரீஅனுமன், ஸ்ரீவேணு கோபால் ஆகியோரின் திருமேனிகள், சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. எனவே இந்தச் சிவாலயம், சிவாலயமாக மட்டுமே இல்லாமல், சைவ- வைணவ ஆலயமாகவும் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது'' என்கிறார்கள் பக்தர்கள்.

கோயிலுக்கு முன்னே உள்ள திருக்குளம் கொள்ளை அழகு! இதை 'கமலப் புஷ்கரணி’ என்கிறார்கள். குளத்தின் அமைப்பில் திளைத்தபடியே உள்ளே வந்தால், அழகே உருவெனக் கொண்டு அமர்ந்திருக்கும் நந்தி. அடடா... இத்தனை நேர்த்தியான, அழகான, அம்சமான நந்தியைப் பார்ப்பது அரிதிலும் அரிது! அந்த நந்தி எப்போது வேண்டுமானாலும் எழுந்துகொண்டு விடும்போல், அத்தனைத் துடிப்புடனும் உயிர்ப்புடனும் இருக்கிறது. ஸ்வாமிக்கு முன்னே ஒரு பக்தர் எப்படி ஆழ்ந்த ஈடுபாட்டுடனும், மிகுந்த பவ்யத்துடனும் இருப்பாரோ, அப்படியரு பவ்யத்துடனும், பக்தியுடனும், ஈடுபாட்டுடனும் முழு தேஜஸுடன் காட்சி தருகிற நந்தியைப் பார்த்தாலே பரவசமாகிப் போவோம்.

இப்படியொரு அமைதி, குளிர்ந்த நீர்நிலை, உயிருடன் இருப்பது போலான நந்தி இவற்றுடன் கூடிய சாந்நித்தியமான ஆலயத்தை, காஞ்சி மடத்தின் 54-வது பீடாதிபதி ஸ்ரீவியாஸாசல சுவாமிகளுக்கு, விஜயநகரப் பேரரசை ஆட்சி செய்த மன்னர் தானமாக எழுதிக் கொடுத்ததில், கோயிலின் சாந்நித்தியம் இன்னும் கூடிற்று.

தாமிரப் பட்டயமாக வடித்துக் கொடுத்த விஜய நகரப் பேரரசின் அந்த உத்தரவு நகல், காஞ்சி சங்கர மட நிர்வாகத்திடம் இன்றைக்கும் உள்ளது.

அதன்படி, எழுச்சூருக்கு வந்த காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவியாஸாசல சுவாமிகள், கோயிலைக் கண்டார்; ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர் லிங்கத் திருமேனியாக இருக்கும் அழகு கண்டு சிலிர்த்தார்; நந்தியின் அழகிலும், ஸ்ரீதெய்வநாயகி அம்பாளின் கருணைப் பார்வையிலும் சொக்கிப் போனார். 'அடடா... சக்தி, சக்தி, சக்தி!’ என்று கண்கள் மூடி, கைகூப்பி வணங்கினார். கோயிலைச் சுற்றி வந்தார். ஒவ்வொரு தூணாக, சிற்பமாகத் தொட்டுத் தடவிப் பார்த்தார். கருவறைக்கு வந்தவர், அங்கிருந்து கோயில் வாசலைப் பார்த்தார். பிறகு, வாசலில் நின்றுகொண்டு, மொத்தக் கோயிலையும் பார்வையில் துழாவினார். 'இது சொர்க்க பூமி! கடவுள் உறைந்திருக்கும் திருத்தலம். இறை எனும் சக்தி, சூட்சுமமாக நிறைந்திருக்கும் இடம் இது!’ என்று மடத்தின் சிப்பந்திகளிடம் தெரிவித்தார்.

''லோக க்ஷேமத்துக்காக இங்கே சில நாட்கள் தங்கியிருந்து, நித்தியப்படி அனுஷ்டானங்களைப் பண்ணலாம்னு உத்தேசம்! பகவான் அப்படித்தான் இருக்கச் சொல்றார்'' என்றார். பிறகு அங்கேயே எழுச்சூர் ஆலயத்தில் இருந்தபடி, தன் அனுஷ்டான பூஜைகளைச் செய்தார்.

அத்தனை பெருமைமிக்க எழுச்சூர் திருத்தலம், காலப்போக்கில் சிதிலம் அடைந்தது. பிராகாரங்களும், சந்நிதிகளும் சின்னாபின்னமாகிப் போயின. பூஜை செய்யவும் ஆளில்லை; வழிபடுவதற்கும் பக்தர்கள் வரவில்லை.

முன்னொரு காலத்தில் கும்பாபிஷேகம் நடந்ததுடன் சரி. அதன் பிறகு, 50, 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆலயம் வெறிச்சோடியும் முள்ளும் புதருமாகவே இருந்தது. சில வருடங்களுக்கு முன்புதான், பக்தர்களின் முயற்சியால் பிரமாண்டமான உழவாரப் பணி நடந்தது. அப்போதுதான், அங்கே அதிஷ்டானம் அமைந்திருப்பது தெரியவந்தது.

''கோயிலில் அதிஷ்டானம் இருப்பதை அறிந்து, இது பற்றி ஊருக்குள் விசாரித்தும், யாருக்கும் எதுவும் தெரியவில்லை. வயதில் மூத்த பெரியவர்கள் சிலர், '54-வது பீடாதிபதியான ஸ்ரீவியாஸாசல சுவாமிகளுக்கு, தாமிரப் பட்டயத்தில் எழுதி இந்த ஊரையே தானமாகத் தந்திருக்கிறார், அன்றைக்கு ஆட்சி செய்த மன்னர்; காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி இங்கே வந்து அடிக்கடி தங்குவார்’ என்கிற தகவல்களையெல்லாம் சொன்னார்கள். காஞ்சி புரம் சென்று, மடத்தில் விஷயம் சொல்லி, ஸ்ரீஜெயேந்திரரையும் ஸ்ரீவிஜயேந்திரரையும் தரிசித்து, விஷயம் சொன்னோம். கேட்டதும் சிலிர்த்துப் புன்னகைத்தார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

'''ஆமாம். நம்ம மடத்து ரிக்கார்டுலகூட, அந்தத் தாமிரப் பட்டயம் இருக்கே! நல்லது... ரொம்ப நல்லது!’ என்று சொல்லி ஆசீர்வதித்தார். திருப்பணிகள் குறித்து விவரம் கேட்டார். ''பேஷாப் பண்ணுங்கோ! உங்க திருப்பணி முயற்சிக்கு, மடத்தோட ஆதரவும் அருளும் எப்பவும் உண்டு!'' என்று உற்சாகப்படுத்தி, அருளாசி வழங்கி அனுப்பி வைத்தார்.'

இதோ... சிவ சந்நிதிக்கு அடுத்தாற்போல் அந்த அதிஷ்டானம் உள்ளது. ஒரு சந்நிதி போல சிவலிங்கம் அமைக்கப்பட்டிருந்தாலும், உள்ளே சரீரமற்று, சூட்சுமமாக இருந்தபடி, சங்கர மடத்தின்மீது அபிமானம் கொண்ட அன்பர்களுக்கும், இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்பவர்களுக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீவியாஸாசல சுவாமிகள்.

குரு என்பவர் அப்படித்தான்; சிஷ்யர்கள் ஒருக்கால் குருவை மறந்தாலும் மறக்கக்கூடும்; ஆனால் அன்பர்களையும், அடியவர்களையும் ஒருபோதும் மறக்கமாட்டார்கள், குருமார்கள்.

- அருள் சுரக்கும்

படங்கள்: ரா.மூகாம்பிகை