Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வக்கிரகங்களில் தனியிடம் பெற்றவன் செவ்வாய். இவனுக்கு 'குஜன்’ என்றும் பெயர் உண்டு. 'கு’ என்றால் பூமி; 'ஜன்’ என்றால் பிறந்தவன் எனப் பொருள்; பூமி புத்திரன் என்பார்கள். பூமி, வெப்பத்துடன் இணைந்திருக்கும். இவனிடமும் வெப்பம் உண்டு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூமியில் விதைக்கப்படும் விதையானது, நீரின் துணையோடு அதிலிருக்கும் வெப்பத்தால் முளைவிடும். படைப்புக்கு வெப்பத்தின் துணை அவசியம். பிரம்மன், ரஜோகுண சேர்க்கையில் படைப்பை நிகழ்த்துகிறார் என்கிறது புராணம். இந்த ரஜோகுணத்துடன் இணைந்தவன் செவ்வாய். அதன் நிறம் சிவப்பு. இதை வைத்து, செவ்வாயின் நிறமும் சிவப்பு என்கிறது சாஸ்திரம். 'அக்னிர்மூர்த்தா’ என்ற மந்திரத்தை அவனை அழைப்பதற்காக பயன்படுத்தச் சொல்கிறது வேதம். இதில் வரும் 'அக்னி’ எனும் சொல், வெப்பத்தைச் சுட்டிக் காட்டும். செவ்வாய்க்கு அதிதேவதை- பூமி; பிரத்யதி தேவதை- க்ஷேத்ரபாலன். க்ஷேத்ரம் என்றால் பூமி; பாலன் என்றால், காப்பாளன் எனப் பொருள். இப்படி, பூமியின் சம்பந்தம் செவ்வாய்க்கும் அதன் அதிதேவதைகளுக்கும் உண்டு.

##~##
சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் சந்திரசாரப்படி சம்பந்தம் இருக்கும் தறுவாயில், பெண்களில் மாதவிடாய் தோன்றும் என ஜோதிடம் சொல்கிறது. 'ரஜஸ்’ என்றால், மாதவிடாயின் வெளிப்பாடு எனச் சொல்லும் தர்மசாஸ்திரம், 'ரஜ:ப்ரவிருத்தி’ என்று மாதவிடாயைக் குறிப்பிடுகிறது. சரியான வேளையில் போதுமான ரத்தத்துடன்... அளவோடு 3 தினங்கள் ரத்தத்தை (ரஜஸ்யை) வெளியேறச் செய்யும் வேலையை செவ்வாயின் சந்திப்பு நிகழ்த்துகிறது. சந்திரன்- மனம்; செவ்வாய்- ரஜோகுணம். ரஜோ குணத்துடன் மனம் இணையும்போது, வெப்பம் மேலிட்டு ரத்தம் வெளியேறுகிறது என விளக்குகிறது ஆயுர்வேதம்.

அரக்கு வண்ணத்தில் வெளியேறும் அந்த ரத்தம், ரஜோகுணத்தின் அடையாளம். அதன்பிறகே, மனதில் எண்ணங்கள் உருவாகும். ரிதுவான பிறகு, மனதில் எண்ணங்கள் உதயமாகி, படிப்படியாக வளர்ந்து, எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள இணையைத் தேடும். ஆக, இணையோடு இணையவைத்து மகிழ்ச்சியை ஊட்டுபவன், செவ்வாய். உடலுறவை நிறைவு செய்யவும் செவ்வாயின் பங்கு வேண்டும்.

உறைந்த நெய்க்குடம் போன்றவள் பெண். கடுமையான வெப்பம் போன்றவன் ஆண். இவர்களது சந்திப்பில் இன்பம் பிறக்கும் என்பார்கள். நெருப்பின் தாக்கத்தில் நெய் உருகியோடும். அதேபோல், எண்ணங்கள் உருமாறி இன்ப வடிவத்தை அடையும் என்கிறது தர்மசாஸ்திரம் (கிருதகும்பஸமாநாரீ தப்தாங்கார ஸம:புமான்). சந்திரனைப் பெண்ணாகவும், செவ்வாயை ஆணாகவும் சொல்லும் ஜோதிடம். 'அங்கார’ என்றால் நெருப்புத் தணல். வேதம், நெருப்புத் தணலை அங்காரம் என்கிறது. அதிக வெப்பம் தணலில் இருக்கும்; ஜ்வாலையில் இருக்காது (தேப்யோங்காரேப்யோர் சிருதேதி). அந்த வெப்பத்தைச் சுட்டிக் காட்டி, செவ்வாயை அங்காரகன் என்றார்கள்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

தாம்பத்யத்தின் முழுத் திருப்திக்கு அவன் பங்கு வேண்டும். 'சும்மா இருக்கும் சிவனை செயல்பட வைத்தவள் பார்வதி’ என்பார் ஆதிசங்கரர் (சிவ: சக்த்யா.) சுறுசுறுப்பு, செயல்பாடு, சிந்தனையோட்டம், தன்மானம், வீரம், தைரியம், கண்டிப்பு, ஆர்வம், பிடிப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய அனைத்தும் செவ்வாயின் சேர்க்கையில் முழுமை பெற்று விளங்கும்.

அத்யுச்சம், உச்சம், மூலத்ரிகோணம், ஸ்வக்ஷேத்ரம், ஸீஹ்ருத்க்ஷேத்ரம் போன்ற பலம் பெற்ற செவ்வாய், வாழ்க்கையில் தடையில்லா மகிழ்ச்சியை அளிப் பான். அதிநீசம், நீசம், சத்ருக்ஷேத்ரம், மௌட்யம், அஸ்தமனம்... போன்ற பலமிழந்த நிலையில், இன்னல்களுக்கு இரையாக்கி சங்கடத்தைச் சந்திக்கவைப்பான் என ஜோதிடம் விளக்கும்.

விண்வெளியில் சூரியனுக்கும் குருவுக்கும் இடையில் செவ்வாயின் ஓடுபாதை அமைந்துள்ளது. சூரிய னுடன் இணைந்தால்... வெப்பம் மேலிட்டு, சாகஸ வேலைகளில் ஆராயாமல் ஈடுபடவைத்து துயரத்தில் ஆழ்த்துவான். ஆன்மகாரகன் சூரியனை, 'ஆக்னேய க்ரஹம்’ என்கிறது ஜோதிடம். செவ்வாயும் ஆக்னேய க்ரஹம். இரண்டும் வெப்பத்தை உமிழும். இவர்களது சேர்க்கையில், வெப்பம் உச்சக்கட்டத்தை அடைந்து விபரீத விளைவுகளை உருவாக்கும். சூரியக் கிரணங்களை உள்வாங்கும் பூமி, இரட்டிப்பாக வெப்பத்தை வெளியிடும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

சந்திரனுடன் செவ்வாய் இணையும்போது, செவ்வாயின் வெப்பம் தணிந்து, மிதமான- இதமான சூழலை உருவாக்கி, மனதை ஆனந்தத் தில் ஆழ்த்துவான். இதை, 'சசிமங்கள யோகம்’ என்று பெருமையாகச் சொல்கிறது ஜோதிடம். சந்திரனில் இருக்கும் நீர், சூரியனிடமிருந்து பெற்ற வெப்பமான கிரணத்தை குளிரவைக்கிறது. தண்ணீருடன் இணைந்த சந்திரன், சூரியனிடம் இருந்து கிரணத்தைப் பெற்று படிப்படியாக வளர்கிறான் என்பது ஜோதிட விளக்கம் (ஸலிலமயேசசினிரவே: தீதிதய:...). வெப்பத்தைத் தணிக்க தண்ணீர் வேண்டும். சூரிய கிரணம், சந்திரனில் இருக்கும் தண்ணீரில் பட்டு வெளி வருவதால், நமக்கு குளிர்ச்சியை அளிக்கிறான் சந்திரன். அவனுக்கு சீதகிரணன் என்று பெயர் உண்டு. அதிக வெப்பத்தை அளவோடு நிறுத்த சந்திரனுக்கு தகுதி இருப்பதால், சசிமங்கள யோகம் அளவான வளமான வாழ்வைத் தரும் என வரையறுத்தது ஜோதிடம்.

வாழ்க்கைத் தரத்தை நிலைபெறச் செய்யவும் செவ்வாயின் பங்கு வேண்டும் என்கிறது ஜோதிடம். போர்வீரர்கள், வேட்டையாடுபவர்கள், மீன் பிடிப்பவர்கள், கசாப்புக் கடைக் காரர்கள், அறுவை சிகிச்சை செய்பவர்கள், அரசர்கள், நீதிபதிகள், வேள்வி செய்பவர்கள், மந்திரிகள், படைத்தலைவர்கள், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர்கள் ஆகியோரை உருவாக்கி, அவர்களது பணியில் வெற்றிபெற வைப்பதில், செவ்வாய்க்கு தனிப் பங்கு உண்டு. இவர்கள், கருணை உள்ளம் படைத்தவர்களாகவே இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு, இலக்கை நோக்கிச் செயல்படும் சுறுசுறுப்பை செவ்வாய் அளிப்பான்.

தேவஸேனாதிபதியை மகிழ வைத்தால், செவ்வாய் மனமிரங்கி அருள்வான் என்பார்கள். செவ்வாயின் இடையூறு விலக, முருகனை வழிபடுவர். அவர், தேவ ஸேனாதிபதியாக விளங்கி, மூவுலகையும் காப்பாற்றினார்.

புதனோடு இணைந்தால், சிந்தனையில் சுணக்கம் எழாமல் செய்து, உசுப்பி செயல்பட வைத்து, வெற்றி பெறவைப்பான். சிந்தனைத் திறன் குறையாமல் பாதுகாக்க வெப்பம் உதவும். ரஜோ குணம் சுறுசுறுப்பை ஏற்படுத்தி, சிந்தனையை வளரவிட்டு உதவி புரியும். செல்வாக்கும் செவ்வாயின் இணைப்பில் வளரும். அரசாணை நம்மை ஆட்கொண்டு பணிய வைக்கும் வல்லமையை நிலைக்கச் செய்ய, செவ்வாயின் பங்கு அவசியம். ஜமீன்தார்கள், பிரபுக்கள், மக்கள் தலைவர்கள் ஆகியோரது பெருமை நிலைத்திருக்க, செவ்வாயின் பங்கு வேண்டும்.

குருவோடு இணைந்தால் அறவழி சிந்தனைகள் வெளிப்பட, பொதுநலத் தொண்டில் இன்பம் காண்பவராக மாற்றிவிடுவான். இன்ப- துன்பங்களின் தரத்தை அறிந்து, பிறரது துன்பத்தை அழிப்பதில் முன்னின்று செயல்பட வைப்பான். பொருளில் இருக்கும் பற்றைத் துறக்கச் செய்து, வள்ளலாக மாற வைப்பான். குருவின் சேர்க்கை, அவனது ரஜோ குணத்தை முடக்கி, நல்ல வழியில்- அமைதியான முறையில் சுறுசுறுப்புடன் செயல்படவைக்கிறது.

சுக்கிரனுடன் இணைந்தால், உலக சுகத்தை சுவைத்து மகிழ வைப்பான். சுக்கிரன், பெண்மை பெற்ற கிரஹம் எனச் சொல்லும் ஜோதிடம், செவ்வாயை ஆண்மை பெற்றது என்கிறது. மாறுபட்ட இனத்தின் இணைப்பே உலக சுகம். 'சேர்க்கையில் விளைந்த செயற்கையான சுகம்- உலக சுகம்; சேர்க்கையைத் துறந்து, தனிமையில் கிடைக்கும் சுகம்- ஆன்ம சுகம்’ என்ற விளக்கமும் உண்டு. பொருளாதாரச் செழிப்பு, படாடோபமான வாழ்க்கை, அளவு கடந்த அலங்காரம், செல்வச் செருக்கு ஆகிய வற்றை சுக்கிரன் அளித்தாலும், செவ்வாயின் சேர்க்கையில் சிந்தனை திசைமாறி, வாழ்க்கை தடம் புரள, சோகத்தைச் சந்திக்க வைப்பான் அவன். வலுவான செவ்வாயுடன் வலுவான சுக்கிரன் இணையும் போது, புகழுடன் வாழ்வ துடன், இறந்த பிறகும் புகழுடன் திகழ்வான்.

சனியுடன் இணைந்தால், சனியிடமிருந்து வலுப்பெற்று, விபரீத விளைவுகளைச் சந்திக்க வைப்பான். சனி, சூரியனில் இருந்து வெளிவந்த கிரகம்; சூரியனின் புதல்வன் என்கிறது ஜோதிடம். சூரியன் ஆக்னேய கிரகம். சனியும் ஆக்னேய கிரகம். செவ்வாயும் ஆக்னேயம். மூவரது இயல்பும் ஒன்றாக இருக்கும். ஆனால் சனிக்கிரகம், வாயுவின் தன்மையைப் பெற்றிருக் கிறது. வாயுவும்... அதாவது காற்றும் நெருப்பும் இணைந்ததுபோல் ஆகிவிடும், சனி- செவ்வாய் சேர்க்கை. இதை, 'அக்னிமாருத யோகம்’ எனக்

குறிப்பிடுகிறது ஜோதிடம். நெருப்பு கொழுந்து விட்டு எரியும்போது, காற்று அதற்கு உதவி புரிந்து, நெருப்பை மேலும் மேலும் வளரச் செய்யும். அதேபோல் சனியின் சேர்க்கை, செவ்வாய்க்கு

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வலுவூட்டி, ரஜோகுணத்தைப் பெருக்கி, சிந்தனை செய்யவிடாமல் சடுதியில் செயல்பட வைத்து, துயரத்தை சந்திக்கவைக்கும். முற்றிலும் தீமையை விளைவிப்பதால், இதைக் கெடுதலான யோகமாகக் குறிப்பிடுகிறது ஜோதிடம்.

சனி, நம்புஸககிரஹம்; ஆண்மைக் குறைவால் செவ்வாய்க்கு அடிபணிந்து விடுகிறது. சனியை துக்ககாரகன் என்று குறிப்பிடும் ஜோதிடம். பிற கிரகங்களின் தாக்கத்தை சந்திக்காத வலுப்பெற்ற செவ்வாய், சனியின் சந்திப்பில் முழு பலத்துடன் செயல்படுவதால், அந்த ரஜோ குணம் எல்லையைத் தாண்டிக் கெடுதலைச் சந்திக்க வைக்கிறது. அதிகமானால் அமுதமும் விஷம் என்பது இங்கு பொருள் படைத்ததாகவே தென்படுகிறது.

ராகுவுடன் இணைந்தால்... இருளில் மூழ்கிவிடுவதால், செயல்பாடு சிறக்காமலோ, அரைகுறையாகவோ முடிவடைய வைப்பான். ராகுவை க்ரூர கிரகம் என்பர். கிரஹணத்தின்போது சந்திர- சூரியரைத் துன்புறுத்துபவன். அது அவனது இயல்பு. அவனது சேர்க்கையில்... சுறுசுறுப்பு துன்புறுத் தலுடன் இணையும்போது, துயரத்துக்கே வழிவகுப்பான்.

செவ்வாய், கேதுவுடன் சேர்ந்தால், நன்மையை விட தீமையைச் சந்திக்க வைப்பான். கேதுவும் ஆக்னேய கிரகம். 'சிகி’ என்று அவனுக்குப் பெயர் உண்டு. சிகி என்றால் நெருப்பு என்று பொருள். சிகி, நிழல் கிரகம். அதனுடன் இணைந்த செவ்வாய், தனது ரஜோ குணத்தை முற்றிலும் இழந்து, மனத்தெளிவை ஏற்படுத்தி வைப்பான். வலுவுடன் இணைந்த செவ்வாய்- கேதுவின் சேர்க்கையில், ஆசைகளை அழிக்கும் விஷயத்தில் சுறுசுறுப்பு பெற்று, கர்மவினை முழுவதையும் வெப்பத்தால் அழியவைத்து, அறிவாளியாக மாற வைப்பான். கேதுவை மோக்ஷகாரகன் என்கிறது ஜோதிடம். மோக்ஷம் என்றால் துயரத்திலிருந்து விடுதலை என்று பொருள்.

'அறிவு என்கிற நெருப்பு, எல்லா வினை களையும் அழித்து சாம்பலாக்கி விடும்’ என்று ஸ்ரீகண்ணன் சொல்வார். உலக சுகத்தில் சுறுசுறுப்பு இணையும்போது, இல் வாழ்க்கையில் திளைப்பான். உலக சுகத்தில் பற்றற்று செயல்படும்போது, அறிவைப் பெற முயற்சிகள் திருப்பிவிடப்பட்டு, மோக்ஷத்தை எட்டவைப்பான்.

ஆக, படைப்புக்கும் செவ்வாய் தேவை. இன்பத்தை சுவைக்கவும் அவன் தேவை. இன்பத்தைத் துறந்து வீடுபேறு பெறவும் அவன் தேவை. அவனின்றி அணுவும் அசையாது. அப்படி அசைவதற்கு ரஜோகுணம் தேவை. அது அவனிடம் இருக்கிறது.

செவ்வாய்க்கிழமையில் அவனை வழிபடவேண்டும். 'அம் அங்காரகாய நம:’ என்று சொல்லி, 16 உபசாரங்களைச் செய்ய வேண்டும். பூமி மாதா, அவனது அதிதேவதை. மந்திரம் தெரிந்தவர்கள், பூசூக்தம் சொல்லி வழிபட லாம். தெரியாதவர்கள், 'பிருதிவ்யை நம:’ என்று சொல்லி வழிபடலாம்.

காலையில் குளிர்ந்த நீரில் நீராடி உடையணிந்து, நெற்றித் திலகம் இட்டு, செவ்வாயின் திருவுருவத்தை வைத்து, 'அம் அங்காரகாய நம:’ என்று இரண்டு கைகளாலும் புஷ்பத்தை அள்ளிப்போட்டு வணங்குங்கள்.

ஆரக்தமால்ய வஸனம்
பாரத்வாஜம் சதுர்புஜம்
ஸ்கந்தாதிதைவதம் பௌமம்
க்ஷிதிப்ரத்யதி தைவதம் 

 - என்ற செய்யு ளைச் சொல்லி அடிபணிய வேண்டும். சிரமப் படாமல் எளிய முறையில் செயல்பட்டு, முழுமையைப் பெற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள் தற்காலத்தில் அதிகம். அதைப் பெறமுடியாமல் தவிப்பர்களும் உண்டு. சிரமத்தை ஏற்று, அதைச் சுமந்து சுணக்க முறாமல், சுறுசுறுப்புடன் இயங்க செவ்வாயின் திருவருள் துணைசெய்யும்.

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism