Published:Updated:

ராமநாதபுரம் திருவிளக்கு பூஜை

ராமநாதபுரம் திருவிளக்கு பூஜை

ராமநாதபுரம் திருவிளக்கு பூஜை

ராமநாதபுரம் திருவிளக்கு பூஜை

Published:Updated:
ராமநாதபுரம் திருவிளக்கு பூஜை

'சக்தி விகடன் நடத்தற விளக்கு பூஜைல ஒவ்வொரு முறை கலந்துக்கும்போதும் மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாவும் நிறைவாவும் இருக்கு!'' - ராமநாதபுரம் ஸ்ரீவழிவிடு முருகன் கோயிலில் சக்தி விகடன் நடத்திய 62-வது திருவிளக்கு பூஜையில், இப்படி நெக்குருகச் சொன்னார், மதுரை வாசகி சுமித்ரா.

''என் பொண்ணுக்குக் கல்யாணம் தள்ளிப் போய்க்கிட்டே இருந்துச்சு. 'ஒரு நல்ல வழி காட்டுப்பா’னு வேண்டாத தெய்வம் இல்லை. இதோ... அருமையான வரன் தகைஞ்சிருக்கு, இப்ப! அதான், மனம் குளிர விளக்கு பூஜைல கலந்துக்கிட்டேன். சக்தி விகடனுக்கு என் நன்றிகள்!'' என நெகிழ்ந்தார், பரமக்குடி வாசகி பாண்டியம்மாள்.

##~##
''கல்யாணமாகி ஆறு வருஷமாச்சு; ஆனா, குழந்தை பாக்கியம் மட்டும் இன்னும் கிடைக்கலை. அந்தக் குழந்தை வடிவேலவன்கிட்ட முறையிட்டா பலன் கிடைக்கும்னுதான், இந்த விளக்குபூஜைல கலந்துக்கிட்டேன். எனக்காகப் பிரார்த்தனை பண்ணுங்களேன்'' எனக் கண்ணீருடன் தெரிவித்தார், ராமநாதபுரம் வாசகி வெற்றிலட்சுமி.

''எங்க அப்பாவோட குடிப் பழக்கத்தால வீட்டுல நிம்மதியே இல்லை. எப்பப் பார்த்தாலும் சண்டை; அழுகை! எங்க அப்பா, குடிப்பழக்கத்துலேருந்து மாறணும்; தம்பியோட உடம்புக்கு ஒரு குறையும் வரக்கூடாது. எல்லாத்துக்கும் மேல, காசு- பணம் இருக்கோ இல்லியோ... வீட்லயும் மனசுலயும் நிம்மதியும் சந்தோஷமும் நிறைஞ்சிருக்கணும். அதுதான் என்னோட ஒரே பிரார்த்தனை!'' என்று சொல்லிவிட்டுக் குமுறிய பெண்ணை வந்திருந்தவர்கள் தேற்றினர்.

''பொறுப்பு இல்லாம திரியறாங்களே... சரி, ஒரு கால்கட்டு போட்டாலாவது திருந்த மாட்டாங்களான்னு நினைச்சு, என் மகன்களுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சேன். ஆனா, இப்பவும் அப்படியேதான் இருக்காங்க. மனசே பாரமாகிப் போச்சு! 'அப்பா, முருகா..! என் பசங்களுக்கு நல்ல புத்தியைக் கொடு; என் மருமகள்களை சந்தோஷமா வாழ வை’னுதான், விளக்குபூஜைல வேண்டிக்கிட்டேன்'' என்று சோகம் கலந்த குரலில் தெரிவித்தார் ராமநாதபுரம் வாசகி ராஜலட்சுமி.

''அப்படி இப்படின்னு ஏதேதோ பிரச்னைகள்ல மாட்டிக்கிட்ட என் பையன், இப்பத்தான் எல்லாத்து லேருந்தும் மீண்டு வந்திருக்கான். இனி, அவனோட எதிர்காலம் நல்லாருக்கணும்னு பிரார்த்தனை பண்றதைத் தவிர, வேற எனக்கு ஒரு குறையுமில்லை'' எனத் தழுதழுத்தார் வாசகி நல்லம்மாள்.

வழிவிடு முருகன், நமக்கெல்லாம் வழிவிடாமலா போய்விடுவார்?! 'யாமிருக்க பயமேன்’ என அருள்கிற முருகனைச் சரணடை வோம்; சந்தோஷம் நம் வீட்டில் குடியேறும்!

  - பூ.ஜெயராமன்
படங்கள்: உ.பாண்டி