Published:Updated:

நலம் தருவான் நந்தலாலா!

மயிலையில்... மதுரா!

நலம் தருவான் நந்தலாலா!

மயிலையில்... மதுரா!

Published:Updated:
நலம் தருவான் நந்தலாலா!
##~##
செ
ன்னை, மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில், டாக்டர் ரங்கா சாலையில் அமைந்துள்ளது நந்தலாலா ஆலயம். வட இந்திய மற்றும் தென்னிந்தியப் பாணியில் கோயில் கட்டப்பட்டு, வைஷ்ணவ சம்பிரதாயப்படி பூஜைகள் நடைபெறும் அற்புதமான ஆலயம் இது!

உள்ளே நுழைந்ததும், ஸ்ரீவிநாயகர் சந்நிதி. இவரின் திருநாமம்- ஸ்ரீபுவனராஜா கணபதி. சங்கடஹர சதுர்த்தி நாளில், இவருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் உண்டு. ஐந்து நாள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியில், தேங்காய் விளக்கேற்றி வழிபடுவது விசேஷம் என்கின்றனர், பக்தர்கள். கிட்டத்தட்ட, ஒரு ரதத்தைப் போன்று காட்சி தருகிறது நந்தலாலா திருக்கோயில். பசுவுடன், சலவைக் கல்லில் அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர். இவரின் திருநாமம்- ஸ்ரீநந்தலாலா. ஸ்ரீபுவனராஜா கணபதியும் ஸ்ரீநந்தலாலாவும் மூலவர்கள்; கிருஷ்ண சேனாதிபதி, ஜெயகமல நயனத் தாயார், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஅபராஜித பெருமாள் ஆகிய உற்ஸவ மூர்த்தியரையும் தரிசிக்கலாம்.

முன்மண்டபத்தில், எட்டுத் தூண்களில்... ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணெய் எடுத்தல், வசுதேவர் ஸ்ரீகிருஷ்ணரைத் தூக்கிச் செல்லுதல், கோபியருடன் ஸ்ரீகிருஷ்ணர் விளையாடுதல், ஸ்ரீகாளிங்க நர்த்தனர் எனப் பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் யாவும் கலை அற்புதம்!

நலம் தருவான் நந்தலாலா!

வைகாசி பௌர்ணமியில் மாங்கனி விழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகையில் தீப விழா, கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்காபிஷேகம் என ஸ்ரீபுவனராஜா கணபதிக்கு விழாக்கள் ஏராளம், இங்கே!  

நலம் தருவான் நந்தலாலா!

ஸ்ரீநந்தலாலாவுக்கு, வைகுண்ட ஏகாதசி நாளில் சிறப்பு வழிபாடு உண்டு. அன்றைய நாளில் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு, மாலையில் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் விமரிசையாக நடந் தேறும். நான்கு நாள் விழாவாகக் கொண்டாடப்படும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழாவில் பஜனை, வேத கோஷ முழக்கம், குழந்தை ஸ்ரீகிருஷ்ணரை தொட்டிலில் இடுதல் என ஆலயம் அமர்க்களப்படும். அப்போது தோசை, சப்பாத்தி, தால் என விதவிதமாக உணவுகள் படைக்கப்படும். இங்கே, கொடியை ஏற்றி, நந்தலாலாவை வணங்கினால், நினைத்ததெல்லாம் நடக்கும் என்பது நம்பிக்கை!

பிள்ளை வரம் கிடைக்கவும், அந்தப் பிள்ளைகளின் கல்வி செழிக்கவும், உறவுகளிடம் அந்நியோன்யமாக இருக்கவும் வியாழக்கிழமைகளில் வேண்டிக்கொண்டு, வெண்ணெய், கல்கண்டு கலந்து, வெற்றிலையில் வைத்து அன்பர்களுக்கு விநியோகித்தால், விரைவில் சந்தோஷம் பெருகும் என்கின்றனர், பக்தர்கள்! அதேபோல், வெள்ளிக்கிழமையன்று, தீபமேற்றி வணங்கினால், நம் வாழ்க்கை பிரகாசமாகும்; ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் என்பது நம்பிக்கை. தடைப்பட்ட திருமணத்தால் கலங்குவோர், பால் பாயசம் நைவேத்தியம் செய்து நந்தலாலாவை

வணங்கினால், விரைவில் மாங்கல்ய பாக்கி யம் கிடைக்குமாம்! வியாச பூஜை, பீஷ்ம ஜயந்தி, சாவித்ரி நோன்பு, குழந்தைகளின் கிருஷ்ணபாத பூஜை ஆகிய வைபவங்கள், இந்தக் கோயிலின் சிறப்பம்சம்!

வருகிற ஜூலை 3-ஆம் தேதி ஸ்ரீநந்தலாலா கோயிலில் கும்பாபிஷேகம்! இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீநந்தலாலாவை வழிபட்டு வாருங்கள்; நல்வாழ்வு நிச்சயம்!

- க.நாகப்பன்
படங்கள் : அ.ரஞ்சித்