Published:Updated:

கேரள தேவாலயங்களில் ஆடை கட்டுப்பாடு

Vikatan Correspondent
கேரள தேவாலயங்களில் ஆடை கட்டுப்பாடு
கேரள தேவாலயங்களில் ஆடை கட்டுப்பாடு
கேரள தேவாலயங்களில் ஆடை கட்டுப்பாடு

கேரள மாநிலத்தில் உள்ள தேவாலயங்களில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளன.

கேரளாவில் திருமணத்தன்று கிறிஸ்துவ மணமகள், மேலைநாட்டு கலாசாரத்தின்படி வெள்ளை கவுன்களை அணிவது வழக்கம். இந்நிலையில், அதிகமான கிறிஸ்துவர்களை கொண்ட கேரளாவில் பல ஆண்டுகளாக இந்த முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கேரளாவில் உள்ள பல பாரம்பரிய தேவாலயங்களில் மணமகள் வெள்ளை கவுன் அணிந்து வர தடைவிதிக்கப்பட்ட உள்ளது. இதற்கு பதிலாக, மணமகள் இந்திய பாரம்பரியப்படி சேலை அணிந்து தான் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கேரள கோயில்களில் பக்தர்களுக்கு பாரம்பரிய ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும் என, ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த மாநிலத்தில் உள்ள தேவாலயங்களில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.